Lanka1st

Lanka1st News

புலமைப் பரிசில் பரீட்சையில்சாய்ந்தமருது அல்-ஹிலால் பாடசாலை மாணவன் எஸ்.எம். ஹாபில் சாய்ந்தமருது கோட்டத்தில் முதலிடம் பெற்...
06/09/2026

புலமைப் பரிசில் பரீட்சையில்
சாய்ந்தமருது அல்-ஹிலால் பாடசாலை மாணவன் எஸ்.எம். ஹாபில் சாய்ந்தமருது கோட்டத்தில் முதலிடம் பெற்றுச் சாதனை

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

சாய்ந்தமருது அல்-ஹிலால் பாடசாலையில் இம்முறை 46 மாணவர்கள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று தகைமை பெற்றுள்ளனர்.

இப்பாடசாலையானது 1913 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. அன்று தொடக்கம் இன்று வரை இப்பிராந்தியத்தில் தனக்கென தனியான ஒரு முத்திரையைப் பதித்த இப்பாடசாலையில் இம்முறை இடம்பெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய 249 மாணவர்களில் 46 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் எடுத்து தகைமை பெற்றுள்ள அதேவேளை, சித்தி வீதத்திலும் 94.38 சதவீதம் பெற்றுள்ளனர்.

அதேநேரத்தில் இப்பாடசாலையில் கற்ற எஸ்.எம். ஹாபில் என்ற மாணவன் 178 புள்ளிகளைப் பெற்று
சாய்ந்தமருது கோட்டத்தில் 1ஆம் இடத்தையும், கல்முனை வலயத்தில் 02ஆம் இடத்தையும் மாகாணத்தில் 03 ஆம் இடத்தையும் பெற்று வரலாற்றுச் சாதனை நிலை நாட்டியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதற்காக பாடுபட்ட அதிபர் கே.எல்.ஏ. ஜௌபர், பிரதி அதிபர்கள், பகுதித்தலைவர், தரம் 1 தொடக்கம் 5 வரை கற்பித்த ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திக் குழு என்பவற்றிற்கு பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

06/09/2026

Address

Abu Dhabi

Alerts

Be the first to know and let us send you an email when Lanka1st posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Lanka1st:

Share