Allikkarai Restaurant Irakkamam

Allikkarai Restaurant Irakkamam Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Allikkarai Restaurant Irakkamam, rs. com, Dubai.

யூசுப் நபியின் வரலாறு இஸ்லாமியர்களால் போற்றப்படுகிறது. இது குர்ஆனின் 12வது அத்தியாயமான "ஸூரத்து யூசுஃப்"-இல் தெளிவாகக் க...
09/07/2025

யூசுப் நபியின் வரலாறு இஸ்லாமியர்களால் போற்றப்படுகிறது. இது குர்ஆனின் 12வது அத்தியாயமான "ஸூரத்து யூசுஃப்"-இல் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
நபி யூசுப், நபி யாகூப் (அலை) அவர்களின் மகனாவார். அழகும், நல்லொழுக்கமும் மிக்கவராக அவர் திகழ்ந்தார். அவரது வாழ்க்கையில் நடந்த சோதனைகள், நம்பிக்கைகள், மற்றும் இறைவனின் தீர்ப்பு ஆகியவை இதில் விவரிக்கப்பட்டுள்ளன.

நபி யூசுப் (அலை) அவர்களின் வரலாறு:

குர்ஆனில் 12வது அத்தியாயம் ஸூரத்து யூசுஃப்-இல் யூசுப் நபியின் வரலாறு கூறப்பட்டுள்ளது.

குடும்பம்:

யூசுப் நபியின் தந்தை நபி யாகூப் அலைஹிஸ்ஸலாம் ஆவார். அவருக்கு 12 மகன்கள் இருந்தனர். யூசுப் நபி மற்றும் புன்யாமின் ஆகியோர் ராயீல் அம்மையாரின் புதல்வர்கள்.

அழகும் நற்குணமும்:

யூசுப் நபி அழகும் நற்குணமும் மிக்கவராக திகழ்ந்தார். இதனால் அவரது தந்தை அவரை அதிகம் நேசித்தார்.

சோதனைகள்:

யூசுப் நபி பல்வேறு சோதனைகளை சந்தித்தார். அவரது சகோதரர்களால் கிணற்றில் போடப்பட்டார். பின்னர் எகிப்தில் அடிமையாக விற்கப்பட்டார். அங்கு அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இறைவனின் தீர்ப்பு:

யூசுப் நபியின் கனவுகள் மற்றும் இறைவனின் உதவியுடன் அவர் எகிப்தின் பிரதம மந்திரியாக உயர்ந்தார். அவரது குடும்பத்தினர் அனைவரும் அவரைத் தேடி வந்தனர்.

நீதி மற்றும் மன்னிப்பு:

யூசுப் நபி தனது குடும்பத்தினரையும், எகிப்தியர்களையும் மன்னித்து அவர்களை அரவணைத்தார்.

இறைவனின் வார்த்தை:

அல்லாஹ் யூசுப் நபியின் வரலாற்றை "மிக அழகான வரலாறு" என்று குறிப்பிடுகிறான்.
நபி யூசுப் நபியின் வரலாறு இஸ்லாமியர்களுக்கு ஒரு சிறந்த படிப்பினையாகும். இதில் இறைவனின் தீர்ப்பு, பொறுமை, மன்னிப்பு, மற்றும் இறைநம்பிக்கை ஆகியவற்றின் முக்கியத்துவம் வலியுறுத்தப்படுகிறது.

பெண்கள் சமுதாயத்தின் ஒளிக் கண்கள்​​​“இன்னும் அவர்களில் ஒருவன் பெண் குழந்தை (பிறந்திருப்பது) கொண்டு சுபச் செய்தி கூறப்பட்...
07/07/2025

பெண்கள் சமுதாயத்தின் ஒளிக் கண்கள்

​​​“இன்னும் அவர்களில் ஒருவன் பெண் குழந்தை (பிறந்திருப்பது) கொண்டு சுபச் செய்தி கூறப்பட்டால், கோபத்தை அடக்கி விழுங்கியவனாக அவன் இருக்க, அவனுடைய முகம் (துக்கத்தால்) கறுத்ததாக ஆகிவிடுகிறது” அல் குர்ஆன் (16: 58)

‘பெண்கள் சமூகத்தின் விளிப்புண்கள்’ எனக் கருதி வந்த காலத்தில் ‘அவர்கள் சமுதாயத்தின் ஒளிக் கண்கள்’ என இஸ்லாம் கூறி நிரூபித்தது, ஆம், ஒளியும் கருவிழியும் அவர்களே! அ(க)க் கண்களை கக்கும் இமையாக, இமயமாக ஒவ்வொருவரும் இருப்பது அவசியம். எனவேதான் பெண்கள் விஷயத்தில் பொறுப்போடு நடந்து கொள்ளும் படி நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் தமது இறுதி நாளில் கூட உறுதியாகக் கூறிச் சென்றார்கள். அந்தோ பரிதாபம்! அந்தக் கண்களுக்கு மைதீட்டி அழகு பார்க்க வேண்டாம்!, குறைந்த பட்சம் அவைகளைக் குத்திக் கோரப்படுத்தி குருடாக்காமலிருந்தாலே நன்றல்லவா!

சீதனப் பெரும் புயலில் சிக்குண்டு தம் வசந்தமிகு இளமைச் சிறகுகளை இழந்து தவிக்கும் இந்த கன்னி பறவைகள், பாதுகாப்புடன் தங்குவதற்குரிய கூடு ஒன்றை கட்டுவதற்குக் கூட யாரும் ஒன்று கூடவில்லையே! தன் வாசத்தையும் இமையென காக்க வல்ல நம் மீது வைத்திருந்த விசுவாசத்தையும் இழந்து, சிறுகச் சிறுக எஞ்சிய தன் சுவாசத்தையும் இழந்து கொண்டிருக்கும் இந்த கண்ணிகளை ஆசுவாசப்படுத்த எவ்விதப் பிரயத்தனமும் யாரும் எடுக்காமலிருப்பதின் மர்மம் தான் என்னவோ! எவ்விதத்திலும் ஒவ்வாத நம் திருமண நடைமுறை நிபந்தனைகள் எனும் பேரலைகளுக்குத் தாக்குப் பிடிக்க இயலாமல் தத்தளிக்கும் அவர்களின் வாழ்க்கைப் படகை அக்கறையுடன் கரை சேர்த்து, சூழ்ந்துள்ள அபாயம் நீக்கி அபயம் நல்கி ஆறுதல் அளித்திடும் நாள் என்றுதான் விடியுமோ!

கைகூலி எனும் இந்த சீதன அரக்கனின் அக்கினிப் பார்வையால் அக்கன்னிப் பாவைகளின் வால்வுகள் எரிந்து, கருகி சருகாகி விட்டதால், காலக் கைதிகளாகி, இருட்டு உலகின் கதாநாயகிகளாகி விட்ட நிலையில் உள்ளார்கள். இவர்களின் பலர், திருமணத்தை நுகர்ந்திடும் வாய்ப்பில்லாமலேயே விதவைக் கோலம் பூண்டு நித்திய காலமும் இத்தாவில் இருப்பவர்கள் போல் வாழ்கையை மேற்கொள்கிரார்கள். இந்நிலை எண்ணி, தன் நிலை மறந்து, மன நிலை பாதித்து பைத்தியமாகி விட்டவர்களுமுண்டு. குமுறிய இதயத்துடன் மரணத்தைத் தழுவி மண்ணுக்குள் குமர்களாகவே புதைந்து விட்டவர்களுமுண்டு.

“தற்கொலைக்கு இஸ்லாம் அனுமதியளித்திருந்தால், இன்று கிணறுகள் பல முஸ்லிம் குமர்களால் நிறைந்திருக்கும்” என ஒரு சமுதாயக் கவிஞர் கூறினார். சில ஆண்டுகளுக்கு முன்பு இத்தகு சீதனக் கொடுமையில் சிக்குண்ட ஒரு முஸ்லிம் சகோதரியை நாம் கண்டு கொள்ளாமல் கண்களை மூடிக்கொண்டிருந்தால், மாற்று மதத்தைச் சார்ந்த இரு கண்களை இழந்த குருடர் ஒருவரை அப்பெண் திருமணம் செய்து கொண்டாள் என்ற திடுக்கிடும் சம்பவம், குமர்கள் விஷயத்தில் இன்னும் குருடர்களாகவே நம் சமுதாயம் இருக்கிறது என்ற நெருடலான உண்மையை வெளிச்சம் போட்டல்லவா காட்டிற்று.

பெண்களாகப் பிறந்துவிட்டால் திருமண எல்லையை அடைவதற்கு, வழியில் அவர்கள் மேகொள்ளும் முள் வேலிகளும் தடைக் கற்களும் தான் எத்துனை! எத்துணையுமின்றி நாடு வழியில் திகைத்து நிற்கும் அவர்களின் நெஞ்சங்களில் சுளன்று கொண்டிருக்கும் எரிமலை என்று வெடித்துச் சிதறுமோ? நாம் அறியோம்! பூமி மூச்சுவிட்டால் அது பூகம்பம், இப்பூவையர்களின் இதயங்கள் மூச்சு விட்டாலோ அங்கு பூகம்பத்துடன் எரிமலையும் சங்கமம். நடைபாதையில் தென்படும் இடர்தரும் கற்கள், முட்கள் போன்றவற்றை அகற்றுவது தருமம். இம்மாதர்களின் வாழ்க்கைப் பாதையில் மலையென குவிந்து கிடக்கும் சுடும் பாறாங் கற்களை அகற்றிட முனையாது பராமுகமாகவும், நாமே அவர்களுக்குப் பாரமாக இருப்பதும் எந்த தர்மத்தைச் சாரும்?

மிக எளிய முறையில் நடை பெறும் திருமணமே சிறப்பானதென இஸ்லாம் கூறியிருக்க, தட்சணையாக உயர் தங்க ஆபரணங்களும், வரதட்சணையாக பல லட்சங்களும் கேட்டு நிற்பது மிக கேவலத்துக்குரியதாக உள்ளது இதுபற்றியெல்லாம் கவலை கொள்ளாது, நம் முஸ்லிம் சகோதரர்கள் இருப்பது வேதனை, வேடிக்கை.

முஸ்லிம்கள் செறிந்து வாழும் நகரங்களில் கூட இதே கதிதான். உலமாக்களும் ஊர் பிரமுகர்கள் பலரும் இதுபற்றி அதிகம் அலட்டிக் கொள்ளாதது ஏனோ! வார, மாத தொடர் சொற் பொழிவுகளிலும் கூட சீதனக் கொடுமை பற்றி அலசாமலிருப்பது ஏனோ தெரியவில்லை. அங்கெல்லாம் குமர்கள் குறைவேதுமில்லா முழு வாழ்வு வாழ்கிறார்கள் என்ற மாய உணர்வையல்லவா தோற்றுவிக்கின்றது. ஆனால், உண்மை நிலை என்னவெனில் இதுபோன்ற சில கிராமங்களிலும் நகரங்களிலும் குமர்களும், அவர்களின் பெற்றோர்களும் அனுதினமும் இரத்தக் கண்ணீர் வடித்துக் கொண்டு, விடியலை நோக்கி விரக்திப் பார்வையைச் செலுத்திக் கொண்டுள்ளனர். இதற்கு ஒரு விடிவு காலம் பிறக்காததால் நாற்பது வயதை அடைந்தும் திருமணமின்றி தன் விதியை நொந்து தன் வயதையொத்த தோழிகள் (பேரப்) பிள்ளைகளைக் கொஞ்சி மகிழ, இவர்களோ தொலைந்து விட்ட தம் இளமைப் பருவத்தை மீண்டும் எதிர் நோக்கி ஏங்கி நிற்கின்றனர்.

வாழ்க்கையில் ஒரு பெண்ணின் பூரண மகிழ்வு உதயமாகும் நாள் மண நாளல்லவா! எத்தனை எத்தனை இன்பக் கற்பனைகள் அவள் இதயத்தைக் குளிரூட்ட, அவை வதனத்தில் புன்முறுவலாக பூத்துக் குலுங்கும் நாளல்லவா! இன்பக் கனவுகளில் திளைத்திருக்க வேண்டிய மணப் பெண்களில் சிலர் மண மேடையிலேயே கண்ணீர் சிந்திய நிகழ்வுகள் யாவும் சீதனப் பேயின் கோர விளையாட்டினாலன்றோ! சமுதாயக் காட்சிகளும், சமூக இயக்கங்களும், உலமாக்களும், ஊர் பிரமுகர்களும் இப்பிரச்சினைக்கு தீர்வுகான வரிந்து கட்டி வராவிட்டாலும், சரிந்து கிடக்கின்ற இவர்களின் நிலையை சரிசெய்து நிறுத்திட, குறைந்த பட்சம் குரலாவது கொடுக்கலாமல்லவா!

பெண் பிள்ளை பிறந்துவிட்டதென்றால் பல பெற்றோர்களின் உள்ளங்களில் இடி விழுந்தது போன்ற உணர்வு! இதயங்களில் இவள் பற்றிய பயங்கரமான அபாயக் கனவு! கவலையின் ரேகைகள் அவர்களது வதனத்தில் உடனே கூடு கட்ட ஆரம்பித்துவிடுகின்றன. நண்பர்கள், சுற்றத்தார் போன்றோரின் பரிதாபப் பார்வைகளே அவர்களைச் சூழ்ந்து சங்கடப்படுத்துகின்றன. இத்தகு சங்கடங்களில் உறைந்து போய், போலிப் புன்னகைப் போர்வைக்குள் தங்களைப் போர்த்திக் கொள்கின்றனர்.

இத்தகு பரிதாப நிலை இன்று ஏற்பட்டதல்ல. இஸ்லாம் தோன்றுவதற்கு முன்பே பெண்பிள்ளை பிறந்துவிட்ட சுபச் செய்தியை கேட்டதும், அபச் செய்தியாகக் கருதி தன்னை மக்களின் பார்வையிலிருந்து மறைத்துக் கொள்ளும் நிலையிலுள்ள பெற்றோரின் எண்ண உணர்வுகளை உலகிற்கு வெளிச்சமிட்டுக் காட்டிடும் முகமாகவே மேற்கண்ட இறைவசனம் இறங்கியது.

ஜிப்ரீல் (அலை) வேகமாக வந்த 4 சந்தர்ப்பங்கள்...❤❤❤~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ஒருநாள் பொழுதில் ரஸூலுல்லாஹி ﷺ அன்னவர்கள்...
07/07/2025

ஜிப்ரீல் (அலை) வேகமாக வந்த 4 சந்தர்ப்பங்கள்...❤❤❤
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ஒருநாள் பொழுதில் ரஸூலுல்லாஹி ﷺ அன்னவர்கள் ஹஸ்ரத் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் கேட்டார்கள், "நீங்கள் எப்போதாவது முழு வேகத்தோடு பயணித்து இருக்கிறீர்களா?"

ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் கூறினார்கள், "ஆம், நான்கு சந்தர்ப்பங்களில் பயணித்து இருக்கிறேன்."

ரஸூலுல்லாஹி ﷺ அன்னவர்கள் கேட்டார்கள், எவை அந்த நான்கு சந்தர்ப்பங்களும்?"

ஜிப்ரீல் அலைஹஸ்ஸலாம் கூறினார்கள், "முதலாவது முறை, ஹஸ்ரத் இப்றாஹீம் عليالسلام நம்ரூதுடைய நெருப்பிலே வைக்கப்பட்டப்போது வந்தேன். அப்போது நான் அர்ஷின் அருகிலே இருந்தேன்.

அல்லாஹ் எனக்கு அந்தத் தீயை குளிர வைக்கும்படிக் கூறினான். நான் அர்ஷைவிட்டும் நீங்கி ஏழு வானங்களையும் கடந்து தருணத்திற்கு வந்து சேர்ந்தேன்.

#இரண்டாவது #முறை

மினாவில் வைத்து இப்றாஹீம் عليه السلام அவருடைய மகனார் இஸ்மாயீல் عليه السلام அவர்களை குர்பானி கொடுக்கப் போகப்போகும் தருணத்தில் வந்தேன். ஸையுதுனா இப்றாஹீம் عليه السلام தன்னுடைய கத்தியால் தாக்கி அறுக்குமுன் அதற்குப் பகரமாக ஒரு செம்மறி ஆட்டை கொடுக்குமாறு எனக்கு உத்தரவிட்டான்.

#மூன்றாவது #முறை,

நபி யூஸுfப் عليه السلام அவர்களை அவர்களின் சகோதரர்கள் பாழுங் கிணற்றினுள் வீசி எறிந்தப்போது வந்தேன். அப்போது வேகமாக வந்த நான் யூஸுப் عليه السلام அந்த (ஆழமான) கிணற்றின் அடியை அடைய முன்னர் என் சிறகுகளை அவர்களுக்கு கீழாக வைத்தேன்.

#கடைசியாக

யா ரஸூலல்லாஹ் ﷺ, உஹது யுத்தத்தின்போது உங்கள் முபாரக்கான பல் உடைப்பட்டு காயமுற்றப்போது உங்களுக்காக வந்தேன். அல்லாஹ் ஸுப்ஹானஹு வ த'ஆலா உங்களின் புனிதக் குருதி பூமியைத் தொடு முன்னர் அதைப் பிடியுங்கள் என்றுக் கூறினான். அப்படி அது தொடுமேயானால் இந்தப் பூவுலகம் அழியும்வரை அங்கு எத்தகைய புல், பூண்டு, தாவரமும் முளைக்காது என்றுக் கூறினான். இதைக் கேட்டவுடன், வேகமாக வந்தேன். என் சிறகுகளால் உங்கள் குருதியைத் தாங்கிக் கொண்டேன்

வெற்றிக்கு வழி என்ன???இரண்டே அடிகள்தான்.1. அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்வது. 2. முதல் அடி எடுத்து வைப்பது.உதாரணங்கள்:★...
07/07/2025

வெற்றிக்கு வழி என்ன???

இரண்டே அடிகள்தான்.
1. அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்வது.
2. முதல் அடி எடுத்து வைப்பது.

உதாரணங்கள்:
★ மூஸா அலைஹிஸ்ஸலாம்.
சூழ்நிலை: முன்னே கடல். பின்னே ஃபிர் அவுன். சொச்சமே நம்பிக்கையாளர்கள்.
முதல் அடி: தடியை எடுத்து கடல்நீரை அடித்தல்.
நெருக்கடியான சமயம். குழப்பமான இறை உத்தரவு....அடி பணிந்தார்கள். கடல் பிளந்தது.
வெற்றி: நம்பிக்கையாளர்கள் காப்பாற்றப்பட்டனர். ஃபிர் அவும் மூழ்கினான்.

★இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம்.
சூழ்நிலை: பல வருடங்களுக்குப் பின் பிறந்த பிள்ளை. இறை உத்தரவு.
முதல் அடி: பிள்ளைக்கு புரிய வைத்து, கழுத்தில் கத்தியும் இறங்கியது.
வெற்றி: இறைவன் சுவர்க்கத்திலிருந்து ஆட்டை இறக்கி பிள்ளையை காப்பாற்றினான். அவர்களின் வம்சத்தில் அடுத்தடுத்து நபிமாரை வரச் செய்தான். அவரின் அழைப்புக்கு பதில் கூறி, உலக இறுதி நாள் வரை மக்களை காபாவை வலம் வர வைத்தான்.

★மர்யம் அலைஹிஸ்ஸலாம்.
சூழ்நிலை: திருமணமாகாமலே பிள்ளை. தாயும், தந்தையுமில்லை.
முதல் அடி: நம்பிக்கை கொண்டு பிள்ளை கருவுற்றது. ஊரிலிருந்து வெளியேறியது.
வெற்றி: கைக்குழந்தை உண்மை பேசியது. நபி மட்டுமன்றி, எளியோருக்கும், வறியோருக்கும் குறைகளைத் தீர்க்கும் கருவியாயும் விளங்கியது.

★கதீஜா ரலியல்லாஹு அன்ஹூ.
சூழ்நிலை: ஊரே மெச்சிய தம் கணவர் மலக்கைக் கண்டேன் என போர்த்தச்சொல்லி நடுங்கியது. வஹீ வந்துவிட்டது, நான் இறைத்தூதர் என திடீர் அறிவிப்பு செய்தது. மக்கள் வெறுக்க ஆரம்பித்தது.
முதல் அடி: போர்வை போர்த்தியது மட்டுமல்லாமல் தேற்றியது. ஞானமுள்ளவரிடம் ஆலோசித்து நம்பிக்கை ஊட்டியது.
வெற்றி: அல்லாஹ்வின் ஸலாம் பூமியிலேயே கிடைத்தது. சுவர்க்கத்துப் பெண்களின் தலைவியாய் மணிமகுடம் சூட்டியது.

★முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.
சூழ்நிலை: மூவாயிரம் குறைஷ். முன்னூறு முஸ்லிம்கள். முதல் போர். தந்தைக்கும் தனயனுக்கும். அண்ணனுக்கும் தம்பிக்கும்.உறவுகளுக்குள்ளேயே அதிக எதிரிகள். வலிமையற்ற முஸ்லிம்கள்.
முதல் அடி: போருக்கு ஒப்புக்கொண்டது. தயார் ஆனது. போர்க்களம் வரை சென்றது.
வெற்றி: பத்ருப்போர் உலக வரலாற்றில் ஈடிணை இல்லாதது. இன்று வரை இஸ்லாம் பரவக் காரணமான முதல் வெற்றி. எவருக்கும் இல்லாத சிறப்புக்களை அல்லாஹ், பத்ருப்போரில் கலந்துகொண்டவர்களுக்கு அருள்பாலித்து, சிறப்பித்தது.

இன்னும் கூறலாம் ஆயிரம் உதாரணங்கள். பாடம் என்ன? அல்லாஹ்வை நம்புங்கள். முதல் அடி எடுத்து வையுங்கள். மீதம் அவன் நாடியவாறே வெற்றி....!!!!!! அல்ஹம்துலில்லாஹ்.

ஈரான் மீதான தாக்குதல்களை இந்தியா கண்டிக்க வேண்டும்!ஈரான் மீது இஸ்ரேல் கடந்த ஜூன் 13 முதல் தொடுத்த தாக்குதல்கள் சர்வதேச ம...
23/06/2025

ஈரான் மீதான தாக்குதல்களை இந்தியா கண்டிக்க வேண்டும்!

ஈரான் மீது இஸ்ரேல் கடந்த ஜூன் 13 முதல் தொடுத்த தாக்குதல்கள் சர்வதேச மரபுகளுக்கு முற்றிலும் எதிரானவை மற்றும் நாடுகளுக்கிடையேயான மோதல்களை உள்ளடக்கிய சர்வதேச சட்டங்களை மீறுவதாகும்.

ஈரான், இஸ்ரேலுக்கு எதிராக எந்தவித தூண்டுதலையும் செய்யவில்லை என்பது கவனிக்கத்தக்கது, ஆனால் இஸ்ரேல், காஸா, யேமன், சிரியா உள்ளிட்ட அண்டை நாடுகளில் மிகப்பெரிய இனப்படுகொலைகளை மேற்கொண்டு, அவர்களுக்கு உரிமையில்லாத நிலங்களை ஆக்கிரமித்து, இடைவிடாத தாக்குதல்களை நடத்தி வருகிறது. மேற்கு ஆசியாவில் இஸ்ரேல் ஒரு முரட்டு நாடாக அறியப்படுகிறது, கடந்த பல தசாப்தங்களாக அண்டை நாடுகளைத் தொடர்ந்து தாக்கி வருகிறது. இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபை போன்ற சர்வதேச அமைப்புகள் பல தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளன, மேலும் சமீபத்தில், ஹேக் நகரில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் மூத்த அதிகாரிகள் மீது காஸாவில் இனப்படுகொலை செயல்களுக்காக குற்றவியல் கைது வாரண்டுகளை வெளியிட்டது.

இஸ்ரேல், உலகளாவிய பொது கருத்துக்களைப் புறக்கணித்து, அமெரிக்காவின் ஆதரவுடன் இவ்வாறு நடந்து கொள்கிறது. உலகின் உண்மையான ஏகாதிபத்திய சக்தியான அமெரிக்கா, இஸ்ரேலின் குற்றச் செயல்களை ஆதரித்து வருகிறது. ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் முற்றிலும் நியாயமற்றவை என்றாலும், அமெரிக்கா ஈரானை பேச்சுவார்த்தை மேசைக்கு கொண்டுவர முயற்சிக்கும் அதே வேளையில் இஸ்ரேலை ஆதரிக்கிறது.

ஈரானின் அணுசக்தி திட்டங்கள் இஸ்ரேலின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று அமெரிக்காவும் இஸ்ரேலும் கூறுகின்றன, ஆனால் இஸ்ரேல் ஏராளமான அணு ஆயுதங்களை வைத்திருக்கும் நாடாகும். ஈரான் தனது அணுசக்தி திட்டங்கள் அமைதியான நோக்கங்களுக்காகவே என்று எப்போதும் வலியுறுத்தி வருகிறது. 2015இல், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் பதவிக்காலத்தில், அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய நாடுகள் ஈரானுடன் ஒரு ஒப்பந்தத்தை எட்டின, இதன்படி ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்காது என்பதையும், அதன் அணு உலை நிலையங்கள் சர்வதேச ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என்பதையும் உறுதி செய்தது.

ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் இயங்கும் சர்வதேச அணுசக்தி முகமை (IAEA), ஈரானின் அணு உலை நிலையங்களை காலமுறை ஆய்வு செய்ய நியமிக்கப்பட்டது, மேலும் ஈரான் தனது ஒப்பந்த கடமைகளை கண்டிப்பாக பின்பற்றியதாக அறிக்கை அளித்தது. இருப்பினும், 2016இல் ஆட்சிக்கு வந்த டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம், 2018இல் இந்த ஒப்பந்தத்திலிருந்து ஒருதலைப்பட்சமாக வெளியேறியது. இந்த முடிவுக்கு உள்நாட்டு அரசியல் மட்டுமே காரணம்—ட்ரம்ப் தனது முன்னோடிகளின் சாதனைகளை ஏற்க விரும்பவில்லை. இந்த ஒருதலைப்பட்ச நடவடிக்கைகள் ஈரானை கடினமான சூழலில் தள்ளியது, ஏனெனில் அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் மீண்டும் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்து, ஈரானின் எண்ணெய் மற்றும் பிற ஏற்றுமதிகளை உலக சந்தையில் விற்பதை கடினமாக்கின.

ஆனால், ஈரான் தனது பெருமைமிக்க மக்களின் எதிர்ப்பு மனப்பான்மையால் இந்த சவால்களை எதிர்கொண்டது. ஏகாதிபத்தியம் மற்றும் சியோனிசத்திற்கு அடிபணிய மறுத்த ஈரான் மக்கள், தங்கள் புரட்சியின் இலட்சியங்களுக்கு உறுதியாக இருந்தனர். இந்த சூழலில், நெதன்யாகு மிகவும் ஆபத்தான மற்றும் பொறுப்பற்ற இராணுவத் தூண்டுதல்களைத் தொடங்கியுள்ளார், அதற்கு ஈரான், தலைநகர் டெல் அவிவ், ஹைஃபா உள்ளிட்ட இஸ்ரேல் நகரங்களில் பேரழிவை ஏற்படுத்திய பாலிஸ்டிக் ஏவுகணைகளால் பதிலடி கொடுத்துள்ளது.

தோல்வி மற்றும் இழிவை உணர்ந்த அமெரிக்காவும் இஸ்ரேலும், ஈரானில் ஆட்சி மாற்றம் பற்றி பேசத் தொடங்கியுள்ளன. ஈரானின் உயர்ந்த தலைவர் ஆயத்துல்லா அலி காமெனியை படுகொலை செய்ய அச்சுறுத்தியுள்ளனர், இது எந்தவொரு நாட்டு தலைவர்களிடமிருந்தும் வரக்கூடிய மிகவும் பொறுப்பற்ற அறிக்கையாகும். ஈரானை யார் ஆள வேண்டும் என்பது ஈரான் மக்களின் முடிவு என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இந்த உலகளாவிய நெருக்கடியான தருணத்தில், இந்தியா இந்த பாடத்தைக் கவனத்தில் கொண்டு, நீதி மற்றும் மனித உரிமைகளை ஆதரிக்க வேண்டும். ஈரான் மற்றும் மேற்கு ஆசியாவின் பிற பகுதிகள் மீதான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை தெளிவாக கண்டிக்க வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசு, சர்வதேச விவகாரங்களில் நீதி மற்றும் கண்ணியத்தை ஆதரித்து வந்த இந்தியாவின் வரலாற்று பங்கை உணரவில்லை. தற்போதைய ஆட்சியில், ‘விஸ்வ குரு’ என்று தன்னை அறிவித்துக் கொள்ளும் இந்தியா, உலக மக்களின் நீதி மற்றும் கண்ணியத்தை உயர்த்துவதில் தோல்வியடைந்துள்ளது.

20/06/2025
நீங்க போட்ட குண்டு மத்தாக்கள் போட்டால் மசீரா
20/06/2025

நீங்க போட்ட குண்டு மத்தாக்கள் போட்டால் மசீரா

நான் மற்றவர்களிடமிருந்து எதிர்பார்ப்பதை நிறுத்தியதால் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
16/06/2025

நான் மற்றவர்களிடமிருந்து எதிர்பார்ப்பதை நிறுத்தியதால் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

அல்குர்ஆன் ஒரு நல்ல புத்தகம் உங்கள் உயிரைக் காப்பாற்றும்.
16/06/2025

அல்குர்ஆன் ஒரு நல்ல புத்தகம் உங்கள் உயிரைக் காப்பாற்றும்.

கடவுள் படைத்த அழகிய கவிதை பெண்!!அழகான பெண்னை படைத்ததேகடவுளுக்கு கிடைத்த பெருமை!!இதுதான் நிரந்தரமான உண்மை!!
16/06/2025

கடவுள் படைத்த அழகிய கவிதை பெண்!!

அழகான பெண்னை படைத்ததே

கடவுளுக்கு கிடைத்த பெருமை!!

இதுதான் நிரந்தரமான உண்மை!!

Address

Rs. Com
Dubai
0000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Allikkarai Restaurant Irakkamam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share