17/05/2020
* :*
➡️ 12 மாவட்டங்களில் எந்த மாற்றமும் இன்றி ஊரடங்கு தொடரும்
➡️பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் செயல்பட தடை நீடிப்பு
➡️வழிபாட்டு தளங்கள், மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை நீடிப்பு
➡️திரையரங்கு, மதுக்கூடம், உடற்பயிற்சி கூடம், கடற்கரை, பூங்காக்கள், விளையாட்டு அரங்கத்திற்கு தடை
➡️கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கரூர், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, தேனி, மதுரையில் புதிய தளர்வுகள்
➡️கன்னியாகுமரி, சிவகங்கை,விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல், திருச்சி, திருவாரூர், தஞ்சை, நாகையிலும் புதிய தளர்வுகள்
➡️தருமபுரி, வேலூர், நீலகிரி மாவட்டங்களிலும் புதிய தளர்வுகள் அமலாகும்
➡️மாவட்டங்களுக்குள் இ பாஸ் இல்லாமல் போக்குவரத்திற்கு அனுமதி
➡️சமய சமுதாய அரசியல், கல்வி, கலாச்சார விழாக்கள் நடைபெறாது
➡️விமானம், ரயில், பேருந்து இயங்காது - மாநிலங்கள் இடையே மற்றும் சென்னையில் இருந்து பிற பகுதிகளுக்கு ரயில் போக்குவரத்து இல்லை
➡️ஆட்டோ, டாக்சி, மெட்ரோ- மின்சார ரயில் போக்குவரத்து இல்லை
➡️அனுமதிக்கப்பட்ட, அத்தியாவசிய பணிகளுக்கும் மட்டுமே போக்குவரத்தை பயன்படுத்த வேண்டுகோள்
➡️தங்கும் விடுதி, ஓட்டல், சொகுசு விடுதி இயங்காதுதிருமண நிகழ்ச்சிக்கு தற்போது உள்ள நடைமுறை தொடரும்
➡️இறுதி ஊர்வலத்தில் 20 பேருக்கு மேல் பங்கேற்க கூடாது
➡️நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் எந்த தளர்வும் இல்லை - சென்னையில் நோய்க் கட்டுப்பாட்டு பகுதி தவிர பிற இடங்களில் அனுமதிக்கப்பட்ட பணி தொடரும்
➡️சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி...
➡️திருவண்ணாமலை, அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் எந்த தளர்வும் இல்லை
➡️நீலகிரி, கொடைக்கானல் மற்றும் ஏற்காட்டுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை
➡️முக கவசம் அணிய வேண்டும் - சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும் - அடிக்கடி கை கழுவ வேண்டும்
➡️பொது இடங்களில் 5 பேருக்கு மேல் கூட கூடாது
➡️நோய்த் தொற்று குறைய குறைய தளர்வுகள் அதிகரிக்கப்படும்
➡️வெளி மாநிலங்களில் தவிக்கும் தமிழர்களை அழைத்து வர விரைவான நடவடிக்கை
➡️டெல்லியில் இருந்து வாரம் 2 விரைவு ரயில் இயக்க மத்திய அரசிடம் கோரிக்கை
➡️மருத்துவ பயன்பாட்டுக்கு இ-பாஸ் மூலம் டாக்சி, ஆட்டோ சென்று வர அனுமதி
➡️அரசுப்பணிகள் மற்றும் தனியார் தொழிற்சாலைகளுக்கு சிறப்பு அனுமதியுடன் போக்குவரத்து இயக்கப்படும்
➡️மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல பழைய இ பாஸ் நடைமுறை தொடரும்
➡️100 நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தில் 100 % பணியாளர்களுக்கு அனுமதி
➡️தனியார் மற்றும் வியாபார நிறுவனங்கள் அத்தியாவசிய பராமரிப்பு பணிகளுக்காக
குறைந்த பணியாளர்களுடன் இயங்கலாம்
➡️அரசுப்பணிகள் மற்றும் தனியார் தொழிற்சாலைகளுக்கு சிறப்பு அனுமதியுடன் போக்குவரத்து இயக்கப்படும்
➡️ வேன்களில் 7 நபர்கள், பெரிய கார்களில் 3 நபர்கள், சிறிய கார்களில் 2 பேர் ஓட்டுநர் தவிர பயணிக்கலாம்
➡️100 பணியாளர்களுக்கு குறைவாக இருந்தால் தொழிற்சாலைகள் 100% பணியாளர்களுடன் இயங்கலாம்
➡️பணியாளர்கள் எண்ணிக்கை 100க்கு மேல் இருந்தால் 50% அல்லது 100 நபர்களுடன் இயங்க அனுமதி