கனடா தமிழ்.com

கனடா தமிழ்.com Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from கனடா தமிழ்.com, Toronto, ON.

🔴BREAKING NEWSகட்டாரில், இஸ்ரேலிய மொஸாட் தாக்குதலில் ஹமாஸ் அரசியல் பீட தலைவர்  #கலீல் அல் ஹய்யா கொல்லப்பட்டுள்ளார்.
09/09/2025

🔴BREAKING NEWS
கட்டாரில், இஸ்ரேலிய மொஸாட் தாக்குதலில் ஹமாஸ் அரசியல் பீட தலைவர் #கலீல் அல் ஹய்யா கொல்லப்பட்டுள்ளார்.

இலங்கை தமிழர்கள் சட்டப்பூர்வமாக தங்குவதற்கு இந்திய மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளதாக பிரதியமைச்சர் எல்.முருக...
09/05/2025

இலங்கை தமிழர்கள் சட்டப்பூர்வமாக தங்குவதற்கு இந்திய மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளதாக பிரதியமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

இந்திய மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் தொடர்பான பிரதியமைச்சர் எல்.முருகன் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவொன்றையிட்டு இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் நீண்ட காலமாக உள்நாட்டு போர் நீடித்து வந்ததால், உயிர் பிழைக்கவும், வாழ்வாதாரம் தேடியும் இலங்கை தமிழர்கள் ஆயிரக்கணக்கானோர் தமிழ்நாட்டில் அகதிகளாக தஞ்சம் அடைந்தனர். இவ்வாறு தமிழகத்தில் தஞ்சம் அடைந்தவர்கள் இலங்கை அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என கோரி வருகிறார்கள்.

இதற்கு முதல்படியாக, கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரி 9 ஆம் திகதிக்கு முன்னர் உரிய ஆவணங்கள் இன்றி இந்தியாவுக்குள் வந்த, அரசிடம் அகதிகளாக பதிவு செய்த இலங்கை தமிழர்கள் சட்டப்பூர்வமாக தங்குவதற்கு இந்திய மத்திய உள்துறை அமைச்சகம் கருணையுடன் அனுமதி அளித்துள்ளது.

இந்த வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கையால் நமது இலங்கை தமிழ் சொந்தங்கள், இனி சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டிய அவசியம் இருக்காது.

இதற்காக பிரதமர் மோடிக்கும், இந்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் தமிழக மக்களின் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

முன்னணி தொழில்நுட்ப நிறுவன சி.இ.ஓ.க்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் விருந்தளித்த நிலையில் அந்த விருந்திற்கு எலான் மாஸ்...
09/05/2025

முன்னணி தொழில்நுட்ப நிறுவன சி.இ.ஓ.க்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் விருந்தளித்த நிலையில் அந்த விருந்திற்கு எலான் மாஸ்க் அழைக்கபப்டவிவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்காவின் தொழில்நுட்ப ஜாம்பவான்களுக்கு ஜனாதிபதி டிரம்ப் இரவு விருந்து வைத்து, பல்வேறு விவகாரங்கள் குறித்து கலந்துரையாடினார்.

எலான் மஸ்க் இதில் பங்கேற்கவில்லை

வெள்ளை மாளிகையில் நடைபெற்ற விருந்தில் மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ், ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக், மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த விருந்து நிகழ்ச்சியில் டெஸ்லா சி.இ.ஓ. எலான் மஸ்க் இதில் பங்கேற்கவில்லை.

அவருக்கு அழைப்பே விடுக்கப்படவில்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது. விருந்தில் பங்கேற்றவர்களிடம் செயற்கை நுண்ணறிவு மற்றும் அமெரிக்காவில் எவ்வளவு முதலீடு செய்வீர்கள் என்பது குறித்து டிரம்ப் கேட்டறிந்த பின்னர் , அமெரிக்காவின் உண்மையான பொருளாதார வளர்ச்சி ஒரு வருடம் கழித்து தெரியும் என கூறினார்.

அதேவேளை நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த டிரம்ப், உக்ரைன் போர் தொடர்பாக விரைவில் புதினுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரிவித்தார்.

கனடாவில் துப்பாக்கிச் சூடுடன் தொடர்புடைய 14 வயது சிறுவனைத் தேடும் பொலிஸார்கனடாவின் டொரோண்டோவின் ஸ்கார்பரோ பகுதியில் இடம்...
09/05/2025

கனடாவில் துப்பாக்கிச் சூடுடன் தொடர்புடைய 14 வயது சிறுவனைத் தேடும் பொலிஸார்

கனடாவின் டொரோண்டோவின் ஸ்கார்பரோ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரண்டு இளைஞர்கள் படுகாயமடைந்தனர்.

14 வயது சிறுவன் டான்ஃபோர்த் வீதி மற்றும் எக்லின்டன் அவென்யூ ஈஸ்ட் அருகிலுள்ள ஒரு வீடிற்கு வந்து துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார்.

இதில் 21 மற்றும் 22 வயதுடைய இரண்டு இளைஞர்கள் காயமடைந்தனர்.

சம்பவத்தின் பின்னர் தாக:குதல் நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்ட சிறுவன் தப்பிச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இருவரும் தீவிர காயமடைந்திருந்தாலும், உயிருக்கு ஆபத்தில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இளைஞர் குற்றவியல் சட்டத்தின் கீழ் சிறுவர்களின் அடையாளம் வெளியிடப்படக்கூடாது. ஆனால் நீதிமன்ற அனுமதியுடன் பொலிசார் குறித்த சிறுவனின் பெயரும் படத்தையும் வெளியிட்டுள்ளனர்.

அவரின் பெயர் வாலென்டினோ பெத்தல் எனும் இவர் மீது கொலை முயற்சி இரண்டு குற்றச்சாட்டுகள், கொலை நோக்கத்துடன் துப்பாக்கி சூடு உள்ளிட்ட 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஆறு அடி ஒரு அங்குல உயரம், 150 பவுண்ட் எடை கொண்ட இவர் “ஆயுதம் ஏந்திய ஆபத்தான நபர்” என பொலிசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அவரின் இருப்பிடத்தைப் பற்றிய தகவல்கள் உள்ளவர்கள் 416-808-4300 என்ற எண்ணில் டொரோண்டோ பொலிசாரை அல்லது 416-222-TIPS (8477) என்ற எண்ணில் குற்றவியல் ரகசிய தகவல் மையத்தை தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Lorry இல் மறைத்து 08 பேரை பிரித்தானியாவிற்குள் நாடு கடத்த முற்பட்ட இருவர்வியட்நாமிய குடியேறிகளை சட்டவிரோதமாக பிரித்தானிய...
09/05/2025

Lorry இல் மறைத்து 08 பேரை பிரித்தானியாவிற்குள் நாடு கடத்த முற்பட்ட இருவர்

வியட்நாமிய குடியேறிகளை சட்டவிரோதமாக பிரித்தானியாவிற்குள் நாடு கடத்த முற்பட்ட இருவர் கைது செய்யப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

நியூடவுன்ஹாமில்டன், கவுண்டி, அர்மாவைச் சேர்ந்த டேனியல் லோக்ரான் (36), அய்ல்ஸ்பரி, பக்கிங்ஹாம்ஷையரைச் சேர்ந்த 51 வயதான இயோன் நோலன் (51) ஆகியோர் தேசிய குற்றவியல் நிறுவனம் (NCA) நடத்திய விசாரணையைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டு தற்போது அவர்கள் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஆறு மாத சிறைத்தண்டனை

கிரவுன் நீதிமன்றத்தில் ஆஜரான லோக்ரானுக்கு ஐந்து ஆண்டுகள் மற்றும் ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

நோலன் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றார், ஆனால் ஏற்கனவே காவலிலும் ஊரடங்கு உத்தரவிலும் தனது தண்டனையை அனுபவித்துவிட்டார்.

வியட்நாமிய குடியேறிகளை சட்டவிரோதமாக லொறியொன்றில் மறைத்து வைத்து பிரித்தானியாவிற்குள் அனுப்ப அவர் திட்டமிட்டதாக கூறப்படுகிறது. இந்தக் கும்பல் ஒவ்வொரு புலம்பெயர்ந்தவரிடமும் £15,000 வசூலித்ததாக நம்பப்படுகிறது,

“பில்லி சூனியம்” ; ஸ்பெயின் சென்ற அகதிகள் நடுக்கடலில் கொலை செய்யப்பட்டார்களா?  ஸ்பெயினின் கேனரி தீவுகளை நோக்கி சென்ற படக...
09/03/2025

“பில்லி சூனியம்” ; ஸ்பெயின் சென்ற அகதிகள் நடுக்கடலில் கொலை செய்யப்பட்டார்களா?

ஸ்பெயினின் கேனரி தீவுகளை நோக்கி சென்ற படகில் 70 அகதிகள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என ஸ்பெயின் காவல்துறை தெரிவித்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்காப்பிரிக்காவிலிருந்து புறப்பட்ட இந்தப் படகில் சுமார் 320 பேர் இருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், கேனரி தீவுகளை 251 பேர் மட்டுமே அடைந்துள்ளனர்.
கைது செய்து விசாரணை

படகுப் பயணத்தின் போது, 70 பேர் மர்மமான முறையில் காணாமல் போயுள்ளனர் அல்லது இறந்துள்ளனர். அதேவேளை படகில் பயணித்த சிலர், மற்ற பயணிகளை “பில்லி சூனியம் செய்பவர்கள் எனக் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதன் காரணமாக, பாதிக்கப்பட்டவர்கள் துப்பாக்கியால் சுடப்பட்டோ அல்லது வலுக்கட்டாயமாக கடலில் தள்ளிவிடப்பட்டோ இருக்கலாம் என உயிர் பிழைத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

உயிர் பிழைத்தவர்களின் வாக்குமூலங்களின் அடிப்படையில், இந்தப் படகுப் பயணத்தில் திட்டமிட்ட கொலைகள் நடந்திருக்கலாம் என ஸ்பெயின் காவல்துறை சந்தேகம் தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, பலரை கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருவதாக ஸ்பெயின் தேசிய காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவம், அகதிகள் பயணம் எவ்வளவு ஆபத்தானது என்பதை மீண்டும் ஒருமுறை உலகிற்கு உணர்த்தியுள்ளது.

அதேவேளை இது போன்ற மனித கடத்தல் வழக்குகளில் பல குற்றங்கள் மறைக்கப்படுவதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன

பாகிஸ்தானில் மீண்டும் பரபரப்பு ; குண்டு தாக்குதலில் 22 பேர் உயிரிழப்புபாகிஸ்தானில் செவ்வாய்க்கிழமை (நேற்று) வெவ்வேறு இடங...
09/03/2025

பாகிஸ்தானில் மீண்டும் பரபரப்பு ; குண்டு தாக்குதலில் 22 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானில் செவ்வாய்க்கிழமை (நேற்று) வெவ்வேறு இடங்களில் நடத்தப்பட்ட மூன்று தாக்குதல்களில் குறைந்தது சுமார் 22 பேர் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதில், தென்மேற்கு மாகாணமான பலுசிஸ்தானில் ஒரு அரசியல் பேரணியை குறிவைத்து தற்கொலை குண்டுதாரி நடத்திய தாக்குதலில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த தாக்குதலில் மேலும் சுமார் 40 பேர் காயமடைந்துள்ளனர்.

ஈரான் எல்லைக்கு அருகிலுள்ள பலுசிஸ்தானில் செவ்வாய்க்கிழமை நடந்த மற்றொரு தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டனர்.

அதேநேரம், கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள அவர்களின் தளத்தின் மீது நடந்த தற்கொலைத் தாக்குதலுக்குப் பின்னர் ஆறு பேர் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

1400 பேர் பலி ; ஒரே இரவில் முழுமையாக அழிந்த கிராமங்கள்கிழக்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட வலுவான நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர...
09/03/2025

1400 பேர் பலி ; ஒரே இரவில் முழுமையாக அழிந்த கிராமங்கள்

கிழக்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட வலுவான நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,400 ஆக உயர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை இந்நிலநடுக்கத்தினால் 3,214க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும், 5,400 வீடுகள் இடிந்து சேதம் அடைந்துள்ளதாகவும் மீட்புக் குழுக்கள் இன்றும் அப்பகுதியில் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்கரியில் வீட்டு விற்பனையில் வீழ்ச்சிகல்கரியில் வீட்டு விற்பனையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.கல்...
09/03/2025

கல்கரியில் வீட்டு விற்பனையில் வீழ்ச்சி

கல்கரியில் வீட்டு விற்பனையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கல்கரியில் நகரில் ஆகஸ்ட் மாதத்தில் வீட்டு விற்பனை கடந்த ஆண்டை விட 8.8 சதவீதம் குறைந்துள்ளது என கல்கரி வீட்டு மனை சபை தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் 2024-இல் 2,182 வீடுகள் விற்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு அதே மாதத்தில் 1,989 வீடுகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன.

வீடு விற்பனை தொடர்பிலான புதிய அறிவிப்புகள் 3,478 ஆக இருந்தன, இது கடந்த ஆண்டை விட 1.7 சதவீதம் குறைவாகும். ஆனால் விற்பனைக்கு கிடைக்கக் கூடிய வீடுகள் 48.2 சதவீதம் உயர்ந்து 6,661-க்கு சென்றுள்ளன.

வீட்டு வழங்கல் அதிகரித்திருப்பது சந்தை இயக்கத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி, விலைகள் குறைய வழிவகுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆனால் CREB தலைமை பொருளாதார நிபுணர் ஆன்-மேரி லூரி தெரிவித்ததாவது, சமீபத்திய விலை குறைவுகள் கடந்த சில ஆண்டுகளில் ஏற்பட்ட அனைத்து உயர்வுகளையும் சமநிலைப்படுத்தவில்லை.

குறிப்பாக வரிசை வீடுகள் (row houses) மற்றும் அபார்ட்மெண்ட்கள் அதிக வழங்கலால் மிகுந்த விலை சரிவை சந்தித்துள்ளன.

அதேசமயம், தனி மற்றும் பகுதி இணைந்த வீடுகள் சில பகுதிகளில் சிறிய அளவில் விலை உயர்வையும், அதிக வழங்கல் உள்ள பகுதிகளில் விலை சரிவையும் சந்தித்து வருகின்றன.

சீனாவில் பிரம்மாண்ட இராணுவ அணிவகுப்பு  சீனாவில் இரண்டாம் உலகப்போர் வெற்றி மற்றும் ஜப்பான் சரணடைந்ததன் 80-ஆண்டு நிறைவையொட...
09/03/2025

சீனாவில் பிரம்மாண்ட இராணுவ அணிவகுப்பு

சீனாவில் இரண்டாம் உலகப்போர் வெற்றி மற்றும் ஜப்பான் சரணடைந்ததன் 80-ஆண்டு நிறைவையொட்டி பிரம்மாண்ட இராணுவ அணிவகுப்பு நடைபெற்றது.

பீஜிங் நகரில் உள்ள தியானன்மென் சதுக்கத்தில் நடைபெற்ற இராணுவ அணிவகுப்பை சீன ஜனாதிபதி ஜின்பிங்குடன், ரஷ்ய ஜனாதிபதி புட்டின், வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் உட்பட பலநாட்டு தலைவர்கள் பார்வையிட்டனர்.

இந்த அணிவகுப்பில் அதிநவீன போர் விமானங்கள், கண்டம் விட்டு கண்டம் பாயும் அணுஆயுத ஏவுகணைகள், புதிய நீர்மூழ்கி ட்ரோன்கள் உட்பட சீனாவின் இராணுவ வலிமையை உலகிற்கு பறைசாற்றும் ஆயுதங்களும் இராணுவ தளவாடங்களும் இடம்பெற்றிருந்தன.

Address

Toronto, ON

Alerts

Be the first to know and let us send you an email when கனடா தமிழ்.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share