12/17/2023
இந்த வருடத்தின் ஆரம்பத்தில், மகிந்த ராஜபக்ச, கோத்தபாய ராஜபக்ச உட்பட நான்கு இலங்கை அதிகாரிகள் மீது கனடிய அரசாங்கம் பொருளாதாரத் தடைகளை விதித்தது.
இலங்கையில் பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனையின் பிடியிலிருந்த விலக்களிக்கப்படுவதை கனடா ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது என்பதற்கான உறுதியான செயல்பாடு இந்த தடை என கனடிய வெளிவிவகார அமைச்சர் Melanie Joly அந்நேரம் தெரிவித்திருந்தார்.
இது நடைபெற்று ஒரு வருடத்திற்குள் கனடாவை தளமாக கொண்டியங்கும் கனடிய தமிழர் பேரவை - CTC -
கனடிய மத்திய அரசாங்கத்தால் தடை விதிக்கப்பட்ட மகிந்த ராஜபக்சவை சந்தித்து இமாலயப் பிரகடனத்தின் பிரதியை கையளிக்கிறோம் என்ற பெயரில் கனடிய அரசாங்கத்தின் முகத்தில் கரியை பூசி உள்ளது.
Global Tamil Forum - GTF - முன்னின்று நகர்த்தும் "இமாலயப் பிரகடனம்" பிரதியை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மகிந்த ராஜபக்சவிடம் கையளிக்கும் நிகழ்வில் கனடிய தமிழர் பேரவையின் முன்னாள் தலைவர் ராஜ் தவரட்ணசிங்கம் பங்கேற்றதை CTC எவ்வாறு நியாயப்படுத்தும்?
.. எழுதிக் கொண்டிருக்கும் கட்டுரையில் இருந்து
- கட்டுரை விரைவில் தேசியம் இணையத்தில் -