25/10/2025
ஆடையிழந்து தலைகுனிந்துபோன மரங்களில் இலை துளிர்காலத்து தளிர்களாய் தலையெடுத்த பச்சை வண்ண தேவதைகள்.. கோடைகால களிப்பில் திளைத்து குதூகலித்து
ஆவணியில் ஆர்ப்பரித்து புரட்டாசியில் பிறைதேய்ந்து காம்புடைந்து கிளையிழந்த பின்னும் மெருகேறும் உங்கள் அழகும் வர்ணங்களும் ஆறுமாத ஆயுளில் உணர்த்தும் உண்மை
அறுபது கடந்தும் ஏன் புரியவில்லை மானுடா.... உலகம் உருளும்வரை இயற்கை தன் கடமையை செவ்வனே செய்யும்..