நாம் மனிதர்கள் பத்திரிகை

நாம் மனிதர்கள் பத்திரிகை மனிதர்களாய் இணைவோம் வாசியுங்கள்... நேசியுங்கள்... யோசியுங்கள்.

17/11/2025

சீன பெண்ணின் பக்தி பாடல்
குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் என்கிற பாடலை பாடி அசத்துகிறார் சீன பெண்.

பூனை அயலவரின் வீட்டுக்கு சென்றதால் அபராதம்பிரான்ஸ் நாட்டில் வளர்ப்பு பூனை ஒன்று பெண்ணுக்கு, வீட்டுக்காரரின் வீட்டுக்குள்...
17/11/2025

பூனை அயலவரின் வீட்டுக்கு சென்றதால் அபராதம்

பிரான்ஸ் நாட்டில் வளர்ப்பு பூனை ஒன்று பெண்ணுக்கு, வீட்டுக்காரரின் வீட்டுக்குள் அடிக்கடி சென்று வந்த நிலையில் அதன் உரிமையாளரான பெண்ணுக்கு,€1,250 அபராதம் விதிக்கப்பட்டது.

பூனைகள் சுதந்திரமாக நடமாடும் விலங்குகள். மனிதர்களின் விதிகளைப் பற்றித் தெரியாது. ஆனால் சில நேரங்களில், அவற்றின் செயல்களுக்கு உரிமையாளர்களே பணம் செலுத்த வேண்டி வருகிறது.

இதுதான் Dominique என்ற பெண்ணுக்கு ஏற்பட்டது. அவரது பூனை Rémi, அண்டை வீட்டுக்காரரின் வீட்டுக்குள் சென்று, சுவற்றில் கால் தடங்களை பதித்தும், போர்வையில் சிறுநீர் கழித்தும், தோட்டத்தில் மலம் கழித்தும் என்று சேதம் மற்றும் சிரமம் ஏற்படுத்தியது.

அயல் வீட்டாரின் முறைப்பாட்டின் அடிப்படையிலான வழக்கில் நீதிமன்றம் Dominique இற்குஅபராதம் விதித்ததுடன் பூனை மீண்டும் வேலி தாண்டினால் கூடுதல் அபராதம் செலுத்த நேரிடும் என்று எச்சரித்தது.

இந்த தீர்ப்பை பெற்றபோது தலையில் பலத்த அடி விழுந்தது போல உணர்ந்தார் என்று Dominique கூறினார். தண்டனைக்கு பிறகு Rémi-யை முழுவதுமாக வீட்டுக்குள் வைத்திருக்கிறார். அதனால் பூனை எடை கூடிவிட்டது.

Dominique மேலும் கூறுகையில் அந்த பூனை அவரது Rémi என நிரூபிக்க முடியாது, அங்கு பல பூனைகளும், தெரு பூனைகளும் உள்ளன, ஆனால் நீதிபதி இதை ஏற்கவில்லை என்றார்.

இது இங்கேயே முடிவடையவில்லை. எதிர்வரும் டிசம்பரில் மீண்டும் நீதிமன்றம் செல்ல அவருக்கு நேர்ந்துள்ளது. ஏனெனில் Rémi மீண்டும் வேலி தாண்டியதாக கூறப்படுகிறது. இது நிரூபிக்கப்பட்டால், Dominique இற்கு கூடுதல் €2,000 அபராதமும், தினமும் €150 அபராதமும் விதிக்கப்படலாம்.

இந்த விஷயம் பிரான்சின் விலங்கு உரிமை அமைப்புகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. பூனைகள் இயற்கையாகவே சுற்றி பார்க்கும் பழக்கமுள்ளவை, இதை கட்டுப்படுத்துவது அவற்றின் இயல்புக்கு எதிரானது என்று அவர்கள் கூறுகிறார்கள்.

அண்டை வீட்டுக்காரரின் சேவல் அதிகமாக கூவியது என்று குற்றம் சாட்டி பிரான்ஸில் வழக்கிடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

ஜப்பான் நாட்டு சரஸ்வதி தேவிபௌத்தம் ஆசியா முழுவதும் பரவும்போது, இந்து மதத்தின் பல கூறுகளைத் தன்னுடன் கொண்டு சென்றது. மகாய...
15/11/2025

ஜப்பான் நாட்டு சரஸ்வதி தேவி

பௌத்தம் ஆசியா முழுவதும் பரவும்போது, இந்து மதத்தின் பல கூறுகளைத் தன்னுடன் கொண்டு சென்றது.

மகாயான பௌத்தத்தை உருவாக்கிய ஆசாரியர்கள், உதாரணமாக நாகார்ஜுனர், பௌத்தத்தை மீண்டும் இந்து தத்துவத்துக்கு அருகில் கொண்டு வந்தனர்.

மகாயான பௌத்தம் பின்னர் சீனா, கொரியா, ஜப்பான், வியட்நாம் போன்ற நாடுகளுக்கு பரவியது. இதனால் ஜப்பானிலுள்ள சில பழைய பௌத்தப் பள்ளிகள் இந்து தேவதைகளையும் ஏற்றுக்கொண்டன.

மகாயான நூல்கள் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டதால், ஜப்பான் கோவில்களிலும் மலைப்பாறைகளிலும் சமஸ்கிருத கல்வெட்டுகளை இன்னும் பார்க்கலாம்.

ஜப்பானின் மக்கள் வழிபாட்டில் பல இந்து தேவதைகள் முக்கியமான இடம் பெற்றனர். உதாரணமாக அங்கு புத்தாண்டில் மக்கள் வழிபடும் “ஏழு அதிர்ஷ்டத் தெய்வங்களில்” மூன்று இந்து தேவதைகள் – தைகோகு (மகாகாளி), பிஷமோன் (வைஸ்ரவணர்), பென்டென் அல்லது பென்டென் (சரஸ்வதி).

இந்திய சரஸ்வதி தேவியை ஜப்பானில் பென்டென் என அழைக்கிறார்கள். அவள் பொதுவாக சீன அரச குடி உடை அணிந்த அழகிய பெண்ணாக, லூட் எனப்படும் இசைக்கருவியை வாசிப்பதாக காட்சிப்படுத்தப்படுகிறாள்.

இசை, கலை, கல்வி, ஆறுகள், நீர் போன்றவற்றின் தெய்வமாக அவள் மதிக்கப்படுகிறாள். பெரும்பாலான பென்டென் கோவில்கள் தீவுகள், ஏரிகள், குளங்கள் போன்ற நீர்நிலைகளின் அருகில் இருக்கின்றன. அவள் பாம்பு மற்றும் டிராகன் உருவங்களோடும் தொடர்புடையவர்.

ஜப்பானின் முக்கிய பென்டென் கோவில்கள் எனோஷிமா, இட்சுகுஷிமா (மியாஜிமா) மற்றும் சிகுபுஷிமாவில் உள்ளபோதிலும் ஜப்பான் முழுவதும் பல சிறிய கோவில்களிலும் அவள் வழிபடப்படுகிறாள்.

இன்று வரை கலை, இசை, கல்வி, அதிர்ஷ்டம் மற்றும் வளம் ஆகியவற்றுக்காக மக்கள் பென்டெனை வணங்குகிறார்கள். இந்தியாவில் பிறந்த ஒரு தேவதை ஜப்பானில் பெரிய பங்கு பெற்றுள்ளதை இது காட்டுகிறது.

மனைவியின் பெயரை குண்டு என்று பதிந்திருந்த கணவருக்கு எதிராக தீர்ப்புதுருக்கியில் நடந்த ஒரு விசித்திரமான வழக்கில் கணவன் தன...
15/11/2025

மனைவியின் பெயரை குண்டு என்று பதிந்திருந்த கணவருக்கு எதிராக தீர்ப்பு

துருக்கியில் நடந்த ஒரு விசித்திரமான வழக்கில் கணவன் தனது மனைவியின் எண்ணை தனது கைபேசியில் “Chubby” என சேமித்திருந்ததால், மனைவிக்கு பொருளாதாரமும், மனஉணர்ச்சி சார்ந்ததுமான இழப்பீடுகளை வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

பல தம்பதிகள் ஒருவருக்கொருவர் பாசமான புனைப்பெயர்களை வைத்திருப்பார்கள். ஆனால் அவை அரிதாகவே விவாகரத்திற்கான காரணமாக மாறும்.
ஆனால் இந்த துருக்கிய தம்பதிகளின் விவகாரத்தில், கணவன் தனது மனைவியை எந்த பெயரில் சேமித்திருந்தான் என்பதே பிரிவுக்குக் காரணமானது.

நீதிமன்ற விசாரணைகளின் போது, ‘டோம்பெக்’ (துருக்கியில் ‘Chubby’ என்பதைக் குறிக்கும்) என்ற பெயர் வெளியானது.

இந்த அவமதிப்பான பெயர் திருமண உறவிற்கு தீங்கானது மற்றும் தன்னை மனவருத்தத்துக்குள்ளாக்கியதாக மனைவி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

துருக்கிய செய்தி ஊடகமான Haberler தெரிவித்ததாவது:
உஷாக் நகரில் நடந்த விவாகரத்து வழக்கில் கணவன் தனது மனைவியை ‘chubby’ என பதிவு செய்ததற்காக அவர் தவறு செய்ததாக நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பு இப்போது ஒரு சட்ட முன்னுதாரணமாகவும் இருக்கும். எனவே துருக்கிய கணவர்கள் தங்கள் மனைவிகளின் எண்ணை கைபேசியில் எந்த பெயரில் சேமிக்கிறார்கள் என்பதை கவனமாக நினைக்க வேண்டிய நிலையில் உள்ளனர்.

இந்த விசித்திரமான விவாகரத்து வழக்கில் நீதிமன்றத்தின் தீர்ப்பு சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சிலர் இந்தத் தீர்ப்பை பாராட்டவும், சிலர் ‘Chubby’ என்ற புனைப்பெயர் பாசமான ஒன்றாக இருந்திருக்கலாம் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.

பருமனாக இருப்பது தவறல்ல; ‘chubby’ என்று அழைப்பதும் அவமதிப்பல்ல.அது சில நேரங்களில் அழகாகவே இருக்கும்,என ஒருவரின் கருத்து பதிவாகியது.

கணவன் தீங்கிழைக்கும் நோக்கில் அழைக்கவில்லை என்று நினைக்கிறேன், மனைவியும் அதை தவறாக எடுத்துக்கொள்ளாமல் இருந்தால் நல்லது, இவ்வளவு சிறிய விஷயங்களுக்காக கூட மக்கள், குறிப்பாக குடும்பத்தினர், சிறைக்கு செல்ல வேண்டிய நிலை வருவதற்கு வருந்துகிறேன் என்றும் அவர் கருத்து கூறியிருந்தார்.

மெச்சிக்கோ நாட்டின் பட்டங்கள்மெக்சிகோவின் யூகத்தான் மாநிலம், புர்டோ புரோக்ரெசோ பகுதியில் பட்ட திருவிழாவில் மக்கள் திரளாக...
15/11/2025

மெச்சிக்கோ நாட்டின் பட்டங்கள்

மெக்சிகோவின் யூகத்தான் மாநிலம், புர்டோ புரோக்ரெசோ பகுதியில் பட்ட திருவிழாவில் மக்கள் திரளாக கலந்து கொண்டு பண்டிகை கால தொடக்கத்தை வரவேற்பது வழக்கம்.

பட்ஜெட்டை நிராகரித்த அஸ்ரப் தாஹிர் எம்.பி 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக அகில இலங்கை மக்கள் காங்க...
15/11/2025

பட்ஜெட்டை நிராகரித்த அஸ்ரப் தாஹிர் எம்.பி

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஸ்ரப் தாஹிர் வாக்களித்தமை குறித்து பாராளுமன்றத்தில் விவரித்திருந்தார்.

நிந்தவூர் அஷ்ரப் ஞாபகார்த்த கலாச்சார மண்டபத்திற்கு 300 மில்லியன் ரூபாய் நிதியை ஒதுக்கி தந்தமைக்காக 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக தாஹிர் எம் பி வாக்களிப்பாரா...? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இவ்வாறான கேள்விகளை தொடுக்கின்ற சகோதரர்களை பார்த்து பின்வரும் கேள்விகளை கேட்கின்றேன்.

கடந்த 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அம்பாறை, மட்டக்களப்பு திருக்கோணமலை ஆகிய மாவட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்படவில்லை.

சிறுபான்மைச் சமூகத்தினர் வாழ்கின்ற இந்தப் பிரதேசங்களுக்கு போதிய அளவு நிதி ஒதுக்கீடு அபிவிருத்திக்காக ஒதுக்கீடு செய்யப்படவில்லை என அன்று சுட்டிக்காட்டிய போது இந்தியாவில் இருந்து நிதி வருகின்றது அந்த நிதி வந்ததும் உங்களுடைய பிரதேசங்களில் தேவையான அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என வாக்குறுதி அளித்தார்கள்.

ஆனால் இன்னும் ஒரு மாத காலத்தில் 2025 ஆம் ஆண்டு நிறைவடைய போகின்ற நிலையில் இதுவரை அந்த நிதி இந்தியாவில் இருந்து இன்னும் வந்து சேர்ந்ததாக தெரியவில்லை.

அதுமட்டுமல்லாமல் ஒலுவில் துறைமுக நிர்வாக பணிகளால் அம்பாறை மாவட்டத்தில் சுமார் 120 ஹெக்டயர்க்கும் மேற்பட்ட நிலம் கடல் அரிப்பினால் காவு கொள்ளப்பட்டுள்ளது.

அங்குள்ள ஏழை எளிய மக்களின் தென்னம் தோட்டங்கள், குடியிருப்புகள் மற்றும் மீனவர்களின் வாடிகள் முதலானவை அனைத்தும் கடலினால் அள்ளுண்டு போய் உள்ளதுடன் மீனவர்களின் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஒலுவில் பிரதேசத்தில் மீன்பிடி, மற்றும் வர்த்தகம் சார்ந்த இரண்டு துறை சார்ந்த துறைமுகங்கள் அங்கு இயங்க முடியாத நிலையில் மூடப்பட்டுள்ளது.

வர்த்தகத் துறைமுகத்தை அபிவிருத்தி செய்யாவிட்டாலும் மீன்பிடி துறைமுகத்தை கவனத்தில் கொள்ளாமல் கைவிட்டமை கவலைக்குரியதாகும்.

ஏனெனில் அம்பாறை மாவட்டத்தில் நேரடியாக மீன்பிடித் துறையில் ஈடுபடுகின்ற சுமார் 5,000க்கு மேற்பட்ட குடும்பங்கள் மட்டுமின்றி, மறைமுகமாக மீன் தொழிலில் தங்கி வாழ்கின்ற சுமார் 15,000 மேற்பட்ட மீனவ குடும்பங்கள் இதன் மூலம் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த துறைமுகத்தின் அபிவிருத்தி காரணமாக பாதிக்கப்பட்ட காணிச் சொந்தக்காரர்களுக்கு இதுவரையும் முறையான நஷ்ட ஈடுகள் வழங்கப்படவும் இல்லை.

கடல் அரிப்பினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் இதுவரை எந்தவிதமான நிவாரணமும் இந்த அரசினால் வழங்கப்படவில்லை.

இவற்றுக்கான முன்மொழிவுகள் எதுவுமே இந்த வரவு செலவுத் திட்டத்தில் மூலம் முன்வைக்கப்படவில்லை. இதற்கான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படாத நிலைமை காணப்படுகின்றது.

அவ்வாறே தென்கிழக்கின் முக வெற்றிலையாக திகழும் கல்முனை மாநகரில், சுமார் 50 வருடங்களுக்கு மேலாக பழமை வாய்ந்த வர்த்தக சந்தை கட்டிடத் தொகுதி இன்று பயன்படுத்தப்பட முடியாது, இடிந்து விழக்கூடிய அபாயகரமான நிலையில் காணப்படுகின்றது.

நாளாந்தம் சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இங்கு வியாபார நடவடிக்கைகளுக்காக சென்று வருகின்ற அந்த வர்த்தக கட்டிடத் தொகுதி பாவனைக்கு பொருத்தமற்ற நிலையில் காணப்படுகின்றது.

அது மட்டுமல்லாமல் கல்முனை மாநகர சபை கட்டிடத் தொகுதி கூட சுமார் 80 வருடங்கள் பழமை வாய்ந்த கட்டடத்திலேயே இன்னும் இயங்கி வருகின்றது.

ஒரு காலத்தில் பட்டின சபையாகவும் பின்னர் பிரதேச சபையாகவும், இருந்து நகர சபையாக மாறி இன்று மாநகர சபையாக திகழ்கின்ற இந்த கல்முனை மாநகர சபைக் கட்டடம் மிகவும் பழமை வாய்ந்ததாக காணப்படுகின்றது.

இவ்வாறான விடயத்தில் அந்தப் பிரதேசத்தை சேர்ந்த பாராளுமன்ற பிரதிநிதிகளும் மௌனம் காத்து வருகின்ற போது நாம் அதனை கண்டும் காணாமல் இருக்க முடியாது.

எனவேதான் இந்த விடயம் குறித்தும், கல்முனை மாநகர அபிவிருத்தி தொடர்பிலும் இந்த வரவு செலவுத் திட்டத்தில் எதுவுமே குறிப்பிடப்படவில்லை.

இவ்வாறான நிலையில் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க அவர்கள் பாராளுமன்றத்தில் உரையாற்றுகையில்…

இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் துறை சார்ந்த நிபுணர்களை இந்த நாட்டுக்கு மீள திரும்பி வருமாறு அழைப்பு விடுக்கின்றார்.

ஆனால் இந்த நாட்டிலே வாழ்கின்ற துறை சார்ந்த நிபுணர்கள், வைத்தியர்கள் பல்கலைக்கழக பேராசிரியர்கள் முதலான கல்விச் சமூகத்தினருக்கு தேவையான சலுகைகளோ, சம்பளம் அதிகரிப்புகளோ, போதிய ஊதியங்களோ வழங்கப்படாத நிலையில் அவர்களுக்கு தேவையான பொது வசதிகள் கூட முறையாக ஏற்படுத்திக் கொடுக்கப்படாதுள்ளது.

மேலும் அவர்களுக்கான தீர்வையற்ற வாகன இறக்குமதிகள் கூட தடை செய்யப்பட்டுள்ள நிலையில் அதற்கான முறையான திட்டங்கள் எதுவும் இந்த வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்படவும் இல்லை.

அதுமட்டுமல்லாமல் மின்சாரம், குடிநீர், எரிபொருள் முதலானவற்றுக்கான கட்டணங்களை குறைப்போம். வாழ்க்கைச் செலவு உயர்வை கட்டுப்படுத்தி மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவோம் என கூறிய இந்த அரசாங்கத்தின் வாக்குறுதிகள் எதுவுமே நடந்தாக இல்லை.

அதற்கான திட்டங்களும் இந்த வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழிவுப்படவும் இல்லை.

இந்த நிலையில் கலாச்சார மண்டபத்துக்கு மாத்திரம் 300 மில்லியன் ரூபாய் நிதியினை ஒதுக்கி தந்தமைக்காக இந்த வரவு செலவுத் திட்டத்திற்கு நாங்கள் எவ்வாறு ஆதரவாக வாக்களிப்பது என்பது குறித்து சிந்திக்க வேண்டும்.

தங்கப் பாதணிகளை தருகின்றோம் உங்கள் கால்களை வெட்டித் தாருங்கள் என்று கேட்கின்ற அரசியல்வாதிகள் இருக்கின்ற இந்த காலகட்டத்தில் நாங்கள் எங்களுடைய கௌரவத்தையும் மானத்தையும் இழந்து, வெறும் 300 மில்லியன் ரூபாய் பணத்தை ஒதுக்கீடு செய்தமைக்காக, இந்த வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிப்பதானது, எங்களை நம்பி வாக்களித்த மக்களுக்கு செய்கின்ற துரோகமாக அமையாதா?

சாய்ந்தமருது வைத்தியசாலையில் சர்வதேச நீரிழிவு தின விழிப்புணர்வுஉலகளவில் ஆண்டுதோறும் நவம்பர் 14ஆம் திகதி அனுசரிக்கப்படும்...
15/11/2025

சாய்ந்தமருது வைத்தியசாலையில் சர்வதேச நீரிழிவு தின விழிப்புணர்வு

உலகளவில் ஆண்டுதோறும் நவம்பர் 14ஆம் திகதி அனுசரிக்கப்படும் சர்வதேச நீரிழிவு தினத்தை முன்னிட்டு, சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் விழிப்புணர்வு நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

பிரதேச வைத்தியசாலை பொறுப்பு வைத்தியர் டாக்டர் எம்.கே. சனூஸ் காரியப்பர் தலைமையில் வைத்தியசாலை நீரிழிவு கட்டுப்பாட்டு பிரிவு மருத்துவ குழுவின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஸஹீலா இஸ்ஸதீன், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை அதிகாரிகள், மருத்துவ அதிகாரிகள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், உள்ளிட்ட பலர் பங்கேற்று, பொதுமக்களுக்கு நீரிழிவு நோயின் அபாயங்கள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

நிகழ்வில் மருத்துவர்கள் மற்றும் தாதியர்கள், “நீரிழிவு நோய் உலகளாவிய சுகாதார சவால்களில் ஒன்றாக உள்ளது. வாழ்க்கை முறையில் மாற்றங்கள், ஆரோக்கியமான உணவு, தினசரி உடற்பயிற்சி, மற்றும் தற்காலிக மருத்துவ பரிசோதனைகள் மூலம் இதைத் தவிர்க்கலாம்” என்று வலியுறுத்தினார்.

இதன் தொடர்ச்சியாக, பங்கேற்பாளர்களுக்கு இலவச இரத்த சர்க்கரை பரிசோதனை, உடல் எடை மற்றும் BMI பரிசோதனை, உணவியல் ஆலோசனை, முதன்மை அடையாள அறிகுறிகள் பற்றிய விளக்கவுரை, மற்றும் நோயாளிகள் எதிர்கொள்ளும் தினசரி சவால்கள் தொடர்பான கலந்துரையாடல் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டன.

நீரிழிவு கட்டுப்பாட்டு பிரிவினரால் நீரிழிவு நோயின் காரணங்கள், அறிகுறிகள், தடுப்பு வழிமுறைகள் குறித்து பிரசுரங்களின் வாயிலாக விரிவான தகவல்கள் வழங்கப்பட்டன. பல பொதுமக்கள் மற்றும் மூத்த குடிமக்கள் இந்நிகழ்வில் பங்கேற்று பயனடைந்தனர்.

பிரதேச மக்களின் நலனை முன்னிறுத்தி பல்வேறு சுகாதார நிகழ்வுகளை நடத்துவதில் சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை தொடர்ந்தும் முன்னின்று செயல்படுகின்றது என பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர். இந்நிகழ்வு, நீரிழிவு நோய் குறித்த பொதுமக்களின் அறிவை மேம்படுத்தியதோடு, ஆரோக்கியமான வாழ்வியல் பழக்கங்களை கடைப்பிடிக்க வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தும் வகையில் சிறப்பாக நடைபெற்றது.

மனித ஆயுளை அதிகரிக்க செய்யும் சஞ்சீவி மருந்து150 வயது வரை வாழ வேண்டும் என்று கனவு கண்டிருக்கிறீர்களா? ஒரு சீன உயிரியல் த...
15/11/2025

மனித ஆயுளை அதிகரிக்க செய்யும் சஞ்சீவி மருந்து

150 வயது வரை வாழ வேண்டும் என்று கனவு கண்டிருக்கிறீர்களா? ஒரு சீன உயிரியல் தொழில்நுட்ப நிறுவனம், திராட்சை விதைச் சாற்றை அடிப்படையாக கொண்ட ஒரு மாத்திரை மனித வாழ்நாளை 100 ஆண்டுகளுக்கும் மேலாக நீட்டிக்கக்கூடியதென தெரிவித்துள்ளது.

ஷென்ழென் நகரைச் சேர்ந்த Lonvi Biosciences என்ற நீண்ட ஆயுள் ஆராய்ச்சியில் சிறப்பு பெற்ற நிறுவனம், ‘உடலுக்கு தீங்கு விளைவிக்கும் அழற்சியை ஏற்படுத்தும் — முதிர்ச்சியடைந்த செல்களை குறி வைக்கும் ஒரு புதிய மருந்தை உருவாக்கியதாக அறிவித்துள்ளது.

இது மனிதர்களை தார்மீக ரீதியில் 150 ஆண்டுகள் வரை வாழ வைத்திடலாம் எனக் கூறப்படுகிறது.
இது சாதாரண மாத்திரை அல்ல, இது ஒரு ‘புனிதக் கிண்ணம்’ போன்ற கண்டுபிடிப்பு என நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி இப் ஷூ கூறினார்.

இந்த அதிசய மாத்திரையின் முக்கிய மூலப்பொருள், நீண்ட ஆயுளை அதிகரிப்பதுடன், உடல்நலத்தை செல்கள் மட்டத்தில் வலுப்படுத்தி வயது சார்ந்த நோய்களைத் தணிக்கும் திறன் உடையது என்றும் அவர் விளக்கினார்.
150 வயது வரை மனிதர்கள் வாழ்வது நிச்சயமாக சாத்தியம், என்று நிறுவனத்தின் தொழில்நுட்ப அதிகாரி லூ கிங்குவா தெரிவித்தார்.

இந்த மருந்து திராட்சை விதைகளில் இருந்து பெறப்படுகின்ற Procyanidin C1 (PCC1) என்ற மூலக்கூறு அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இது முன்பு எலிகளின் ஆயுளை அதிகரிப்பதாக கண்டறியப்பட்டிருந்தது. நிறுவனத்தின் சொந்த ஆய்வுகளின்படி, இந்த மருந்தை பெற்ற ஆய்வக எலிகள் 9.4 சதவீதம் கூடுதல் ஆயுளையும், சிகிச்சை தொடங்கிய நாளில் இருந்து 64.2 சதவீதம் கூடுதல் வாழ்நாளையும் பெற்றுள்ளன.

2024 ஆம் ஆண்டில் சீனர்களின் சராசரி ஆயுள் 79 ஆண்டுகளாக இருந்தது — உலக சராசரியைவிட 5 ஆண்டுகள் அதிகம். அரசு மற்றும் பொதுமக்கள் இருவரிடமும் நீண்ட ஆயுள் தொடர்பான ஆர்வம் அதிகரித்து வருவதால், இந்த எண்ணிக்கை மேலும் உயரலாம்.

அன்னிய நாடுகளில் மட்டுமே பேசப்பட்டு வந்தஆயுள் நீட்டிப்பு தற்போது சீனாவில் பரவலாக பேசப்படுகிறது என்பது சுவாரஷியமாகும்.

முன்பு சீனாவில் யாரும் நீண்ட ஆயுள் பற்றி பேசவில்லை, அதை பற்றி பேசுவது பணக்கார அமெரிக்கர்கள்தான், ஆனால் இப்போது பல சீனர்கள் தங்கள் வாழ்க்கையை நீட்டிக்க பணமும் ஆர்வமும் கொண்டுள்ளனர்,” என ஷாங்காயைச் சேர்ந்த ‘Time Pie’ நிறுவனத்தின் இணை நிறுவனர் கண்யு கூறினார்.

தங்க கடிதத்துக்கு நேர்ந்த கதிபர்மாவின் மன்னர் அழௌங்பாயா இங்கிலாந்தின் இரண்டாம் ஜோர்ஜ் மன்னருக்கு 1756 ஆம் ஆண்டு ரொம்பவே ...
13/11/2025

தங்க கடிதத்துக்கு நேர்ந்த கதி

பர்மாவின் மன்னர் அழௌங்பாயா இங்கிலாந்தின் இரண்டாம் ஜோர்ஜ் மன்னருக்கு 1756 ஆம் ஆண்டு ரொம்பவே விசேடமான பிரத்யேகமான இராஜதந்திர கடிதம் அனுப்பினார்.

அக்கடிதம் தூய தங்க தகட்டில் பொறிக்கப்பட்டு, மாணிக்க கற்களால் அலங்கரிக்கப்பட்டு, ஒரு யானைத் தந்தத்தில் வெட்டிய உள்துளைக்குள் வைக்கப்பட்டு அனுப்பப்பட்டது.

இரு நாடுகளுக்கும் இடையிலான நட்பு, வணிக உறவு ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான முன்மொழிவுகளை இது கொண்டிருந்தது.

ஆனால் அதன் ஆடம்பர வடிவமைப்பும், அலங்கார வேலைப்பாடுகளும் ஜோர்ஜ் மன்னரின் மேலான கவனத்தை ஈர்க்க தவறின. ஏனென்றால் அவர் போர்களில் ஈடுபட்டிருந்ததால் இக்கடிதத்துக்கு சிறிய முக்கியத்துவத்தை கொடுத்தார்.

அதுவும் இதை ஒரு இராஜதந்திர மடலாக கருதாமல் இதை ஒரு விநோத பொருளாகவே நோக்கினார். பின்னர் அது கனோவரின் அரச நூலகத்துக்கு அனுப்பப்பட்டது. சுமார் 250 ஆண்டுகள் மறக்கப்பட்டிருந்த நிலையில் 2000 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் மீண்டும் கண்டு பிடிக்கப்பட்டது.

சாய்ந்தமருதில் அன்னையர் ஆதரவு கூட்டம்சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள்...
13/11/2025

சாய்ந்தமருதில் அன்னையர் ஆதரவு கூட்டம்

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் ஆலோசனைக்கமைய, கல்முனை பிராந்திய தாய் சேய் நலப் பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் பி.ஜி.பி. டானியலின் ஏற்பாட்டில் “அன்னையர் ஆதரவு குழு கூட்டம்” இன்று இடம்பெற்றது.

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே.மதன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சாய்ந்தமருது விவசாய விரிவாக்கம் காரியாலய விவசாய போதனாசிரியர்களினால் வீட்டுத்தோட்ட செய்கையின் மூலம் குடும்பங்களின் வருமானத்தை உயர்த்துவது மட்டுமல்லாது, ஆரோக்கியமான உணவையும் தங்கள் குடும்பத்திற்கு உற்பத்தி செய்து வழங்க முடியும் என்பதையும் தேவையான பயிர் வகைகளையும் பெற்றுக் கொள்ளலாம் என்பதனையும் தெளிவுபடுத்தி அன்னையர் ஆதரவு குழு உறுப்பினர்களின் பொருளாதார முன்னேற்றத்தை மேம்படுத்தும் வழிகளையும் சுட்டிக்காட்டினர்.

மேலும் சுயதொழில்களை ஊக்குவிக்கும் வழிகாட்டல்கள், சிறு அளவிலான தொழில் முயற்சிகள், மற்றும் பெண்கள் தன்னம்பிக்கையுடன் சமூக முன்னேற்றத்தில் பங்கு எடுக்க வேண்டிய அவசியம் போன்றவை குறித்து முக்கியமான வழிகாட்டல்கள் இதன்போது வழங்கப்பட்டதுடன் “வீட்டுத்தோட்டம் என்பது ஒரு குடும்பத்தின் பொருளாதாரத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் இரட்டை பலன்களை வழங்கும் சிறந்த வழி, வீட்டில் காய்கறி, பழம், கீரை போன்றவற்றை வளர்ப்பதன் மூலம் சத்தான உணவைப் பெற முடியும். இதுவே குழந்தைகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் சிறந்த வழிமுறையாகும்.”
என்பது பற்றியும் விளக்கங்கள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வின் போது, சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன், “அன்னையர் ஆதரவு குழுக்கள் சமூகத்தில் மாற்றத்தை உருவாக்கும் வலிமையான தளம். தாய்மார்கள் தங்கள் திறமைகளையும் முயற்சிகளையும் கொண்டு சுய நம்பிக்கையுடன் பொருளாதார வளர்ச்சியையும், குடும்ப ஆரோக்கியத்தையும் மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார். இக் கூட்டத்தில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட 9 அன்னையர் ஆதரவு குழுக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்

சாய்ந்தமருது பிரதேசத்துக்கு அனர்த்த நிவாரண குழுஅனர்த்தங்களை முறையாக கையாண்டு பாதிப்புக்களை குறைத்து  பாதுகாப்பான சாய்ந்த...
13/11/2025

சாய்ந்தமருது பிரதேசத்துக்கு அனர்த்த நிவாரண குழு

அனர்த்தங்களை முறையாக கையாண்டு பாதிப்புக்களை குறைத்து பாதுகாப்பான சாய்ந்தமருதை தக்கவைப்பதே எங்களுக்கு இலக்காக இருக்கிறது. கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் எங்களுக்குக் கடும் சோதனையாக இருந்தது. ஆனால் மக்களும் சமூக அமைப்புகளும் ஒன்றிணைந்து விரைவாக செயல்பட்டதால் பெரும் சேதத்தைத் தடுக்க முடிந்தது என சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆஷிக் தெரிவித்தார்.

சாய்ந்தமருது பிரதேச செயலக எல்லைக்குள் அனர்த்த முகாமைத்துவ செயற்குழு (Working Committee) ஒன்றை அமைப்பது தொடர்பான நிகழ்வு பிரதேச செயலாளர் எம்.எம். ஆஷிக் தலைமையில் 2025.11.12 ஆம் திகதி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் இங்கு கருத்து தெரிவிக்கையில், ஜனாசா சங்கங்கள், பள்ளிவாசல் நிர்வாகங்கள், பொது அமைப்புக்கள், வர்த்தக சங்கம், ஜமியத்துல் உலமா சபையினர், இளைஞர் அமைப்புக்கள், ஊடகவியலாளர்கள் என அனைவரின் ஒருங்கிணைந்த முயற்சியே சாய்ந்தமருதை கடந்த காலங்களில் இடம்பெற்ற அனர்த்த சேதங்களிலிருந்து பாதுகாத்தது.

“இனிமேலும் இதுபோன்ற அனர்த்தங்களுக்கு முன்னேற்பாடாக அரசு மற்றும் மக்கள் இணைந்து ஒருங்கிணைந்த செயற்குழு மூலம் செயல்படுவோம். இதன் மூலம் பிரதேசத்தின் பாதுகாப்பு மட்டுமல்ல, சமூக ஒற்றுமையும் வலுப்படும். எதிர்வரும் காலநிலை மாற்றங்களை கவனத்தில் கொண்டு சாய்ந்தமருதை ஊடறுத்து ஓடும் தோணா மற்றும் வடிகான்கள் சுத்தப்படுத்தப்படுவது அவசியம். கரையோரம் பேணல் திணைக்களம், கல்முனை மாநகர சபை, நீர்ப்பாசன திணைக்களம் ஆகியவை இணைந்து பணியாற்றினால் இப்பகுதி வெள்ளத்திலிருந்து முழுமையாக பாதுகாக்கப்படும்.

பிரதேசத்தின் இயற்கை பாதுகாப்பை உறுதிப்படுத்தும் மாஸ்டர் பிளான் ஒன்றை வடிவமைத்து, அதனடிப்படையில் அனைத்து அபிவிருத்தி நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என அவர் இதன்போது தெரிவித்தார். இந்த நிகழ்வின்போது பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு அதற்கு அங்கத்தினர்களும் நியமிக்கப்பட்டனர்.

Adresse

Zürich

Webseite

Benachrichtigungen

Lassen Sie sich von uns eine E-Mail senden und seien Sie der erste der Neuigkeiten und Aktionen von நாம் மனிதர்கள் பத்திரிகை erfährt. Ihre E-Mail-Adresse wird nicht für andere Zwecke verwendet und Sie können sich jederzeit abmelden.

Service Kontaktieren

Nachricht an நாம் மனிதர்கள் பத்திரிகை senden:

Teilen