Tamilarul Media Network

Tamilarul Media Network Tamil News | Tamil Daily News Website | Tamil News Paper | Tamil Nadu Newspaper Online | Breaking Ne

மறைக்கப்பட்ட உச்சிஷ்ட கணபதி மந்திரம்விநாயகப் பெருமானின் 32 வடிவங்களில் ஒன்று உச்சிஷ்ட கணபதி. அவர் பிரம்மச்சாரி என்று ஒரு...
21/11/2025

மறைக்கப்பட்ட உச்சிஷ்ட கணபதி மந்திரம்

விநாயகப் பெருமானின் 32 வடிவங்களில் ஒன்று உச்சிஷ்ட கணபதி. அவர் பிரம்மச்சாரி என்று ஒரு தகவல் இருக்க, ஒரு பெண்ணை ஆலிங்கனம் செய்தபடி உள்ள கோலம் அபூர்வமானது. இதுவே உச்சிஷ்ட கணபதி வடிவமாகும்.

உச்சிஷ்ட கணபதி பற்றிய அபூர்வ தகவல்கள்
வழிபாடு:
தியானம்:
மூல மந்திரம்:
குறிப்பு :
உச்சிஷ்ட கணபதிக்கான தனிக்கோயில்கள்:
கோவில் தல வரலாறு:
16 விநாயகர்கள்
மறைக்கபட்ட உச்சிஷ்டகணபதி மந்திரம்:
உச்சிஷ்ட கணபதி பற்றிய அபூர்வ தகவல்கள்

தந்திர சாஸ்திரத்தில் மகா காளி போல உச்சிஷ்ட கணபதிக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

மற்ற தெய்வங்களுக்கு இல்லாத தனிச்சிறப்பு உச்சிஷ்ட கணபதிக்கு நிறைய உண்டு.

வடமாநிலங்களில் உச்சிஷ்ட கணபதிக்கு விளக்கம் தரும் போது, “பெண்ணின் உபஸ்தத்தில்
(யோனியில்) தும்பிக்கையை வைத்தவர்’ என்பர்.

இவரை வணங்கினால் குழந்தையில்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும் என்பது ஐதீகம்.

விநாயகருடைய 32 வடிவங்களில் உச்சிஷ்ட கணபதி விசேஷமானது. உச்சிஷ்டம் என்றால் ‘எச்சில் படுத்துதல்’ என்று பொருள்.

யாத-யாமம் கத-ரஸம் பூதி பர்யுஷிதம் ச யத்உச்சிஷ்டமபி சாமேத்யம் போஜனம் தாமஸ ப்ரியம் ||

இங்கே ‘ உச்சிஷ்டம்’என்பது மீந்து போனது எச்சில் பட்டது என்ற பொருள்படவே பேசப்படுகிறது.சுத்தம், அசுத்தம் ஆகிய இரண்டையும் மனிதன் கடக்க வேண்டும்.

பிராமணி அம்மாள் பகவான் ராமகிருஷ்ணருக்கு இதைத்தான் அடிக்கடி கூறுவார். தந்திர சாஸ்திரம் இடது கை உபாசனை , எச்சில், தீட்டு (எதுவாயினும்) இவற்றை புறக்கணிப்பது இல்லை.

இதைக்கருத்தில் கொண்டே உச்சிஷ்ட கணபதி வழிபாடு உருவானது.இதை சரியாகப் பரிந்து கொண்டவர்களே தந்திர சாதனத்திற்கு தகுதியுள்ளவர்கள்.

இவர் தனது சக்தி தேவியான வல்லபையின் குஹ்யத்தில் தனது தும்பிக்கையை வைத்துள்ள நிலையில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இதன் மூலம், எதுவும் ஏற்றுக்கொள்ளத் தக்கதே, எதுவும் நிசித்தமில்லை என்பது உணர்த்தப்படுகிறது. சாக்தத்தில் ‘யோனி பூஜை’ என்றொரு சம்பிரதாயம் உண்டு என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இங்கு தெரிய வேண்டியது கிரியா சக்தியை தனது இச்சா சக்தியால் இவர் ஸ்பரிசிப்பதால் ஞான சக்தி தானே உதயமாகி பக்தர்களை ஆட்கொள்கிறது.

விநாயகப் பெருமான் ஒரு பெண்ணின்உபஸ்தத்தில்
(யோனியில்) தும்பிக்கையை வைத்து காட்சியளிக்கிறார்.

இதற்கு உரிய விளக்கமாக ஒரு பெண், குழந்தை பெற்று தாய்மையடைவதை பெருமையாகக் கருதுகிறாள். தாய்மைக்குப் பிறகு, அந்தக் குழந்தை நல்லவனாக, வல்லவனாக, பெற்றோருக்கு கீழ்ப்படிந்தவனாக நடக்க ஆசை கொள்கிறாள்.

விநாயகர்,பெண்ணின்உபஸ்தத்தில்
(யோனியில்) தும்பிக்கையை வைத்திருப்பதை தரிசிப்பதன் மூலம், அசுர குணமுள்ள குழந்தைகள் பிறப்பது தடை செய்யப்படுகிறது என்பது ஐதீகமாகிறது.

(சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலிலும் ,மதுரை மீனாட்சி அம்மன் சன்னதி உட்பிரகாரத்தி்ல் கன்னிமூலையிலும் இத்தகைய அமைப்பில் விநாயகர் சிலைகள் இருக்கிறது).

வழிபாடு:
உச்சிஷ்ட கணபதிக்கு முதுகைக் காட்டி தோப்புக்கரணம் இடுவது மரபாக உள்ளது. முதுகு காட்டுவது என்பது ஒருவரை புறக்கணிப்பதாகக் குறிக்கும்.

ஆனால்,
கடவுளுக்கு முகம், முதுகு என்ற பாகுபாடு கிடையாது. வெற்றி, தோல்வியை சமமாகப் பாவிக்கும் நிலைக்கு மனம் உயர வேண்டும் என்பதற்காக உச்சிஷ்டகணபதிக்கு முதுகு காட்டி வழிபடுகின்றனர்.

உச்சிஷ்ட கணபதி மந்திரத்தை எப்போது வேண்டுமானாலும் ஜபிக்கலாம். குறிப்பாக, காலையில் படுக்கையில் இருந்து எழுந்ததும், படுக்கையில் இருந்தபடியேகூட ஜபிக்கலாம். நாம் எவ்வளவுக்கு எவ்வளவு ஜபிக்கிறோமோ, அந்த அளவுக்கு விரைவாக நமக்கு வெற்றி கிடைக்கும்.

தாம்பூலம் தரித்த வாயுடன் இவருடைய மூல மந்திரம் ஜபித்து வந்தால் சீக்கிரம் மந்திரம் சித்தியாகும். பரீட்சித்து பாருங்கள்.இதில் ஐயமில்லை.

தியானம்:
நீலாப்ஜம் தாடீமீ வீணா சாலீகுஞ்ச அட்ச சூத்ரகம் ததது உச்சிஷ்ட நாமாயம் கணேச பாது மே சக||

மூல மந்திரம்:
ஓம் நமோ பகவதே ஏகதம்ஷ்ட்ராய
ஹஸ்தி முகாய,லம்போதராய
உச்சிஷ்ட மகாத்மனே ஆம் ஹ்ரேம் ஹ்ரீம் கம் கேகே ஸ்வாஹா

( ஒரு லட்சம் தடவை ஜபிக்கவும் )

குறிப்பு :
வேப்பங்குச்சி, ஊமத்தம்பூ,நெய் இவைகளால் இவருக்கு ஹோமம் செய்ய சிறந்த பலன்கள் கிடைக்கும். கார்ய சித்தி உண்டாகும்.

கீழ்க் கண்ட விநாயகர் துதிப்பாடலை தினமும் 1000 முறை பக்திபூர்வமாக பாடி உச்சிஷ்ட கணபதியை வழிபட்டால், தொடங்கும் அனைத்து காரியங்களிலும் வெற்றியே கிட்டும் என்பது திண்ணம்!

“உச்சிஷ்ட கணபதி விநாயக
என் விக்னமெல்லாம் நீ தீர்ப்பாய்
தும்பிக்கையால் என்னை நீ அணைக்க
என் அஞ்ஞானம் தீர்ந்து நான் எனை மறக்க
எப்போதும் அருள் செய்வாய் விநாயகா
எல்லோரும் போற்றும் விநாயகா!

தம்பதிகள் சண்டை சச்சரவின்றி கருத்தொருமித்து மிக மிக அன்னியோன்யமாக வாழ உதவுகிறது உச்சிஷ்ட கணபதி உபாசனை.

உச்சிஷ்ட விநாயகரை வழிபட்டால், கணவன் மனைவி இடையே உள்ள கருத்து வேற்றுமை நீங்கி பரஸ்பர வசியம் ஏற்பட்டு தம்பதி ஒற்றுமை பலப்படும்.

தாம்பத்திய உறவு மேம்படும்.குழந்தை பாக்கியத்திற்காக ஏங்கும் தம்பதிகள், இந்த விநாயகரை வணங்கினால், வீட்டில் மழலை தவழும் யோகம் விரைவில் கூடி வரும் என்பது ஐதீகம்.

கணபதி உபாசகர்கள் கருப்பு, நீலம் போன்ற வண்ண ஆடைகளை அணிவதைத் தவிர்க்க வேண்டும்.

பொன் வண்ண உடைகள் மிகவும் ஏற்றவை. துளசியை இவர்கள் கிள்ளக் கூடாது. விநாயகருக்கு (விநாயக சதுர்த்தி தவிர்த்து மற்ற நாட்களில்)
துளசி அணிவிக்கக்கூடாது.

உச்சிஷ்ட கணபதிக்கான தனிக்கோயில்கள்:
1,.திருவாரூர் கோவில் மூலஸ்தானத்திற்குள் நுழைவதற்கு முன்பாக உள்ள மூர்த்தம்.

2.நெல்லை சந்திப்பில் இருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் திருநெல்வேலி-வண்ணார்பேட்டை பைபாஸ் ரோட்டில் மணிமூர்த்தீஸ்வரம் என்ற இடத்தில் ராஜகோபுரத்துடன் கூடிய உச்சிஷ்ட கணபதியின் தனி கோயில் அமைந்துள்ளது.

தாமிர பரணி ஆற்றின் கரையோரத்தில் அமைந்து உள்ள இந்தக் கோவிலின் மூலவரான விநாயகப்பெருமான், நீல சரஸ்வதியை தன் மடியில் அமர்த்தி வைத்தபடி காட்சி தருகிறார்.

தன்னுடைய 32 தோற்றங்களில் 8–வது வடிவமாக போற்றப்படும் உச்சிஷ்ட கணபதியாக இத்தலத்தில் விநாயகப்பெருமான் அருள்பாலித்து வருகிறார்.

சுமார் 800 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்தக் கோவில், ஆசியாவிலேயே ராஜகோபுரத்துடன் தனி மூலவராக விநாயகர் வீற்றிருக்கும் ஒரு சில ஆலயங்களில் ஒன்றாகும்.

8 நிலை மண்ட பங்கள், 3 பிரகாரங்கள், கொடிமரத்துடன் கூடிய அமைந்திருக்கிறது இந்த ஆலயம்.

இந்தக் கோவிலில் சிவலிங்கம், காந்திமதி அம்மன், 16 சோடஷ கணபதிகள், கன்னி மூல கணபதி, வள்ளி–தெய்வானை சமேத சுப்பிரமணியர், சொர்ண ஆகர்ஷண பைரவர் ஆகியோருக்கும் தனித்தனி சன்னிதிகள் இருக்கின்றன.

இந்த ஆலயத்திற்கு ரிஷி தீர்த்தம், ருத்ரபாத தீர்த்தம் என்ற இரண்டு தீர்த்தங்கள் உள்ளன. வன்னிமரம், பனைமரம் ஆகிய இரண்டும் தல விருட்சங்களாக உள்ளன.

கோவில் தல வரலாறு:
முன்னொரு காலத்தில் வித்யாகரன் என்ற அரக்கன் பிரம்மாவை நினைத்து கடுந்தவம் புரிந்தான். பிரம்மாவும், வித்யாகரனுக்கு காட்சி அளித்து வரம் தருவதாக கூறினார். அப்போது வித்யாகரன், ‘என்னைப் போரில் வெல்லக்கூடியவன் மனிதனாகவோ, மிருகமாகவோ இருக்கக்கூடாது. அகோரமானவனாகவும் இருக்கக்கூடாது. தேவ அசுர சபைகளின் முன்பு யாருடைய உதவியும் இல்லாமல் என்னுடன் போரிட வேண்டும். அந்த சமயம் அவன், தனது சக்தியுடன் இணைந்த கோலத்தில் இருக்க வேண்டும்’ என தன்னை யாரும் அழிக்க முடியாத ஒரு அரிய வரத்தை கேட்டான்.

பிரம்மாவும் வித்யாகரன் கேட்ட வரத்தை வழங்கினார். வரம் பெற்ற வித்யாகரன், தன்னை வெல்ல யாரும் இல்லை என்ற அகங்காரத்துடன் தேவர்கள், முனிவர்கள் அனைவரையும் அடிமைப்படுத்தி, அவர்களுக்கு பல்வேறு துன்பங்களைக் கொடுத்தான். இதனால் பாதிக்கப்பட்ட அனைவரும் ஒன்றுகூடி மும்மூர்த்திகளிடம் சரண் அடைந்தனர்.

மும்மூர்த்திகள் ஒன்று சேர்ந்து பராசக்தி மாதாவான ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரியை மனதில் நினைத்து மிகப்பெரிய யாகத்தினை நடத்தினர். மேலும் வித்யாகரனை அழிக்க விநாயகரை வேண்டினர். விநாயகரும் ஒப்புக்கொண்டு யாகத்தின் முடிவில் யாகத்தீயில் இருந்து அஷ்டமி திதியில் வெளிப்பட்டார். அதேபோல் பிரம்மாவின் ஏற்பாட்டால் பதங்க முனிவர் வேள்வி நடத்த, அதில் இருந்து பிரம்மாவின் மகளாக நீல சரஸ்வதி வெளிப்பட்டாள். விநாயகருக்கு நீல சரஸ்வதி தேவியை நவமி திதியில் திருமணம் செய்து வைத்தனர்.

மும்மூர்த்திகளும் இந்திரனிடம், வித்யாகரனை போருக்கு அழைக்குமாறு கூறினர். வித்யாகரனும் கோபத்துடன் போரிட வந்தான். அவன் கர்ஜனையுடன் வரும்போது உச்சிஷ்ட கணபதி, தனது மனைவியான நீல சரஸ்வதி தேவியை தனது இடது தொடையில் அமர செய்து, தன் இரு கைகளால் அணைத்த வண்ணம் துதிக்கையை தேவியின் மடியில் வைத்து அதே கோலத்துடன் பாசம், அங்குசம் இருக்கும் கைகளில் வில்லும், அம்பும் ஏந்தியபடி இருந்தார்.

அப்போது விநாயகர் ஒரு கோடி சூரியனுடன் இணைந்து வந்தது போல் ஒளிப் பிரகாசமாக காட்சியளித்தார்.

விநாயகரை பார்த்த வித்யாகரன், அவருடைய ஒளிக்கதிர் வீச்சு தாங்காமல் அவன் நாக்கை அவனே கடித்துக்கொண்டு வலியால் துடித்து இறந்து போனான். அவன் வாங்கிய வரத்தின்படியே அசுரர்கள், தேவர்கள் கூடிய சபையிலே உச்சிஷ்ட கணபதி யாருடைய உதவியும் இல்லாமல், தேவியுடன் இருக்கும்போது போரிடாமல் விநாயகருடைய பார்வையினாலேயே அவனை வதம் செய்தார்.

வித்யாகரன் இறந்ததும் அனைவரும் மகிழ்ந்து விநாயகரை வணங்கினார்கள். முனிவர்கள், விநாயகரிடம் பராசக்தியின் அவதாரமான நீல சரஸ்வதி தேவியை தனது மடியில் இருத்திய கோலத்துடன், பூமியில் தாமிரபரணி நதிக்கரை ஓரம் ரிஷி தீர்த்தக்கட்டம் அருகே வீற்றிருந்து அனைவருக்கும் அருள்பாலிக்க வேண்டினார்கள்.

விநாயகரும் அதற்கு இசைந்து, சூரிய பகவானின் தேரில் ஏறி தாமிரபரணி நதிக்கரையில் மணிமூர்த்தீஸ்வரத்தில் முனிவர்களுக்கு காட்சியளித்து அருளினார்.

சூரிய பகவான், விநாயகரை வணங்கி, ‘நான் ஒவ்வொரு சித்திரை மாதமும் முதல் நாள் அன்று தங்கள் மேல் எனது ஒளியை விழச்செய்து வணங்கி ஆசி பெறுவேன். அன்றைய தினம் தங்களை உள்ளன்போடு வழிபடுகின்றவர்களுக்கு, சகல செல்வங்களையும் தந்தருள வேண்டும்’ என்று வேண்டினார். உச்சிஷ்ட கணபதியும் அவ்வாறே அருளினார் என்கிறது, இந்த ஆலயத்தின் தல வரலாறு.

உச்சிஷ்ட கணபதி மூலவராக, மூர்த்தி விநாயகர் என்ற பெயரில் அமர்ந்த நிலையில் நான்கு கரங்களுடன் காட்சியளிக் கிறார். அவர் தனது மனைவியான நீல சரஸ்வதி தேவியை மடியில் வைத்தபடி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் சுற்றிலும் கோட்டைச்சுவருடன் கம்பீரமாக அமைந்து உள்ளது இந்தத் திருக்கோவில். கோபுரத்தின் முன்புறமும், பின்புறமும் 16 வகையான விநாயகர் உருவங்கள், அமர்ந்த மற்றும் நின்ற கோலங்களில் சுதைச் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளன.

சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தக் கோவில் எட்டுநிலை மண்டபங்கள், மூன்று பிரகாரங்கள் உயர்ந்த கொடி மரம், பலி பீடத்துடன் அமைந்துள்ளது. கொடி மண்டபத்திற்கு வடக்கு பக்கம் சொர்ண ஆகர்ஷன பைரவர் சன்னிதியும், அதற்கு முன்பாக பைரவ தீர்த்தம் உள்ள கிணறும் இருப்பது சிறப்பு வாய்ந்ததாகும்.

விநாயகர் தன் தேவியுடன் இருந்து அருள்பாலிப்பதால் கணவன்–மனைவி ஒற்றுமை, சந்தோஷம், திருமணத்தடை நீக்குதல், பிரிந்த கணவன்–மனைவி ஒன்று சேர்தல் ஆகிய வேண்டுதல்கள் உடனடியாக நிறைவேறுகிறது என்பது இக்கோவிலின் சிறப்பாகும்.

16 விநாயகர்கள்
தேவியை மடியில் அமர்த்தி, தன் துதிக்கையை தேவியின் மீது வைத்திருக்கின்ற கோலம், பல கோவில்களில் சிற்பங்களாக வடிவமைக்கப்பட்டிருப்பதைக் காணமுடியும். ஆனால் அந்த உருவம் மூலவராக இருக்கின்ற இடம் இந்த ஆலயம் ஒன்றுதான் என்பது குறிப்பிடத்தக்கது. ஆலயத்தின் உள்பிரகாரத்தில் மூலவரை சுற்றி வல்லப கணபதி, சக்தி கணபதி, ருணஹரண கணபதி, ஹரித்ரா கணபதி, சித்திபுத்தி கணபதி, சர்வசக்தி கணபதி, குஷி கணபதி, சந்தான லட்சுமி கணபதி, சுவர்ண கணபதி, விஜய கணபதி, அர்க கணபதி, வீரகணபதி, சங்கடஹர கணபதி, துர்கா கணபதி, ஹேரம்ப கணபதி, குரு கணபதி என 16 வகையான விநாயகர்கள் அருள்புரிகின்றனர் என்பதும் கூடுதல் சிறப்பாகும்.

தேவியை மடியிலே வைத்து அருள் பாலிக்கின்ற வடிவம் உள்ள விநாயகர் திருஉருவங்கள் உள்ள வல்லப கணபதி, சக்தி கணபதி, சந்தான லட்சுமி கணபதி, சங்கடஹர கணபதி மற்றும் இரு தேவியரை மடியிலே வைத்துள்ள சித்தி, புத்தி கணபதி ஆகிய 5 விநாயகர் பெருமான் திருஉருவ சிலைகள் உள்ள ஒரே கோவில் இதுவாகும்.

இவரை நன்கு வணங்கி , மந்திர உபதேசம் பெற்று வேண்டிய வரம் பெற்று வாழவும்.

மறைக்கபட்ட உச்சிஷ்டகணபதி மந்திரம்:
ஒரு சொல் உச்சிஷ்ட கணபதி மந்திரம் ஓன்று உள்ளது.

இதுமறைக்கபட்டது ,
வாமாச்சரம் மந்திரத்தின் ஒரு வகை.

இதற்கு இயமம் நியமம் தேவை இல்லை.

இந்த மந்திரத்தை எந்த நிலையிலும் எல்லா நேரத்திலும் உச்சரிக்கலாம்.

இதனுடய பெருமை பயன்படுத்தி பார்த்தால்தான் தெரியும்.

காரிய தடை விலக

காரிய சித்தி

இஷ்டசித்தி கொடுக்க வல்ல அற்புதமான மந்திரம்

பிரிந்த தம்பதிகள் ஓன்று சேர

மூலாதாரம் சரிவர இயங்க

அனைத்து ஐஸ்வரியமும்,
சுபிட்சமும் உண்டாக

மனதிற்குள் ஜெபித்து வர குடும்ப வாழ்வில் அமைதி கிடக்கும்

“ஓம் ஹஸ்தி பிசாச்சி லிகே சுவாகா”

(உரு 16000)

அனைவருக்கும் தெரிந்த உச்சிஷ்ட கணபதி மந்திரம்.

ஓம் நமோ பகவதே ஏகதம்ஷ்ட்ராய
ஹஸ்திமுகாய,
லம்போதராய
உச்சிஷ்ட மகாத்மனே ஆம் ஹ்ரோம் ஹ்ரீம்
கம் கேகே ஸ்வாஹா...
குரு முகமாக தீட்சை பெற்று ஜெபிப்பது உத்தமம்
..

20/11/2025

எங்க #கருப்பசாமி...🖤🙏🏻

40 வயதிற்குப் பிறகு Metabolism ஏன் மந்தமாகிறது. அதை மீண்டும் எரிய வைக்கும் 5 ஆயுர்வேத ரகசியங்கள்!**சகோதரிகளே, உங்களுக்கு...
19/11/2025

40 வயதிற்குப் பிறகு Metabolism ஏன் மந்தமாகிறது. அதை மீண்டும் எரிய வைக்கும் 5 ஆயுர்வேத ரகசியங்கள்!**

சகோதரிகளே,

உங்களுக்குள் மறைந்திருக்கும் சக்தியை இன்று நாம் மீண்டும் எழுப்புவோம்

அன்புள்ள சகோதரிகளே,

இன்று நான் உங்களிடம் பேசும் இந்த விஷயம்.
உங்கள் உடலை மட்டுமல்ல, உங்கள் மனதை, உங்கள் உணர்ச்சியை, உங்கள் பெண்மையின் ஆழ்மன ஒலியைத் தொடும் ஒரு சத்தியம்.

40 வயதிற்குப் பிறகு பெண்களின் உடலில் அமைதியாக, யாருக்கும் தெரியாமல் ஒரு மாற்றம் ஆரம்பிக்கிறது.

அது ஒரு சிறிய அலை அல்ல.
அது ஒரு பெரிய அலை அல்ல.
அது ஒரு அமைதியான புரட்சி.

இந்த புரட்சியின் பெயர் —
மந்தமான Metabolism. (Metabolism slowdown)

எத்தனை பெண்கள் தினமும் என்னிடம் வந்து அழுகிறார்கள் தெரியுமா?

“Guruji… முன்னாடி மாதிரி சாப்பிட்டா போதும், இப்போ சாப்பிடாமலேயே எடை கூடுது…”
“Guruji… digestion அப்படியே விழுந்துருச்சு…”
“Guruji… வயிற்றுப்பகுதியில் மட்டும் கொழுப்பு அதிகமா குவிகுது…”

ஆனால் நான் எப்போதும் சொல்வது ஒன்றே ஒன்று:

உடல் மாறுவது உங்கள் தவறு அல்ல.
உங்கள் metabolism மெதுவாகிறது — ஆனால் அது மீண்டும் எரிய முடியும்.

🌕 I. 40 வயதிற்குப் பிறகு Metabolism ஏன் குறைகிறது?

🌼 1️⃣ Agni (ஜீரண நெருப்பு) குறைகிறது

ஆயுர்வேதம் சொல்வது மிகவும் எளிதான ஒரு சத்தியம்:

Agni இருக்கும் வரை உயிர் இருக்கும்.
Agni பலஹீனம் ஆனால் அனைத்து நோய்களும் வரும்.

40 வயதிற்குப் பிறகு உடலின் Agni 20–30% வரை குறைகிறது.

Agni குறைந்தால்:

உணவு முழுமையாக செரிக்காது

பாதியாக செரிந்த உணவு Ama (நச்சு) ஆகிறது

Ama → கொழுப்பு சேமிப்பு

குடல் செயல்பாடு மந்தமாதல்

bloating

acidity

constipation

heavy feeling

இதனைத் தான் ஆயுர்வேதம் Manda Agni என்று அழைக்கிறது.

🌼 2️⃣ Hormones மாறுகின்றன

40 வயதிற்குப் பிறகு:

Estrogen ↓

Progesterone ↓

Thyroid hormones ↓

Cortisol ↑

இந்த மாற்றங்கள் metabolism-ஐ நேரடியாக பாதிக்கும்.

Estrogen குறைவால்
✔ fat distribution மாறுகிறது
✔ வயிற்றுப்பகுதியில் கொழுப்பு குவிகிறது

Thyroid குறைவால்
✔ digestion slow
✔ metabolism sluggish
✔ fatigue அதிகம்

Cortisol அதிகம்
✔ belly fat
✔ cravings
✔ mood swing
✔ sleep issues

இந்த நான்கு காரணிகளும் சேர்ந்து metabolism-ஐ “slow-motion” இல் தள்ளிவிடுகின்றன.

🌼 3️⃣ Muscle mass குறைகிறது

40 வயதிற்குப் பிறகு muscle mass இயற்கையாகவே குறைகிறது.
Muscle தான் metabolism-ன் stove.
Muscle குறையும்போது fat-burning rate 15% வரை குறைகிறது.

இது ஒரு முக்கிய காரணம்:
பெண்கள் எடை அதிகரிப்பது
மெதுவான energy
வீக்கம்
சோர்வு

🌼 4️⃣ Stress அதிகரிப்பு — Cortisol உயர்வு

40 வயதிற்குப் பிறகு:
குடும்ப பொறுப்புகள்
வேலை அழுத்தம்
குழந்தைகள்
சமூக எதிர்பார்ப்புகள்
உடல் மாற்றங்கள்

இதனால் Cortisol உயரும்.
Cortisol உயர்ந்தால் metabolism தானாகவே மந்தமாகிறது.

🌟 ஆனால் நல்ல செய்தி என்ன?

Metabolism 50, 55, 60 வயதிலும் மீண்டும் எரிய முடியும்!**

Ayurveda சொல்வது:

Agni once lost can always be rekindled.
(ஒருமுறை குறைந்த Agni மீண்டும் எரிய முடியும்.)

அதோடு,
உடலில் detox செய்யப்பட்டால் metabolism மீண்டும் இளம் வயதின் நிலைக்கு வர முடியும்.

இதற்கு நான் உங்களுடன் பகிர்கிறேன் 5 ஆயுர்வேத ரகசியங்களை.

🔥🌿 Metabolism-ஐ மீண்டும் எரிய வைக்கும் 5 ஆயுர்வேத ரகசியங்கள்

🔥 1️⃣ காலை எழுந்ததும் வெந்நீர் — Metabolism Booster

நான் எனது ஆயுர்வேத மருத்துவப் பயணத்தில் பார்த்த மிக சக்திவாய்ந்த ஒரு உண்மை:

Cold water = Metabolism off
Warm water = Metabolism on

வெந்நீர் ONLY:

ஜீரணத்தை வேகப்படுத்தும்
Ama-ஐ உருக்கி வெளியேற்றும்
காலையில் liver-ஐ activate செய்கிறது
bowel movement சரியாக்கும்

வெந்நீரில் கலந்து குடிக்க

✔ இஞ்சி
✔ குமினு
✔ ஓமம்
✔ லெமன்

இது உடலின் Agni-ஐ 20–30% வரை உயர்த்தும்.

🌿 மதிய உணவு Heavy — இரவு உணவு Light

40 வயதிற்குப் பிறகு முக்கிய

Eat with the Sun.
Surya கதிர் இருக்கும் பொழுது Heavy.
இரவு Light.

மதிய நேரத்தில் Agni மிக உச்சத்தில் இருக்கும்.
இரவில் Agni 40% வரை குறையேறும்.

அதனால்
✔ Lunch — full
✔ Dinner — soup / kichdi / greens

இது மட்டுமே weight gain-ஐ 40% கட்டுப்படுத்தும்.

🌶 Metabolism-ஐ Spice செய்யும் 5 ஆயுர்வேத மருந்துகள்

ஆயுர்வேத ஊட்டச்சத்து அம்மாவின் kitchen-லிருந்தே கிடைக்கும்.

இந்த 5 spices:

✔ இஞ்சி
✔ மஞ்சள்
✔ குமினு
✔ இலவங்கப்பட்டை
✔ மிளகு

இவை:

Ama-ஐ உருக்கும்
gut heat-ஐ அதிகரிக்கும்
Thyroid-ஐ support செய்கிறது
fat-burning-ஐ வேகப்படுத்தும்

🧘‍♀️ Hormone-Friendly” உடற்பயிற்சி — 20 நிமிடம் போதும்

40 வயதிற்குப் பிறகு HIIT, intense exercise வேண்டாம்.
அது cortisol-ஐ அதிகரிக்கும் → belly fat கூடும்.

அதற்கு பதில்

✔ brisk walk
✔ Surya Namaskar
✔ 10 நிமிடம் deep breathing
✔ light strength training

இதெல்லாம் metabolism-ஐ stress இல்லாமல் activate செய்யும்.

😴 தூக்கம் — metabolism-ன் மறைந்த மருந்து

இது மிகப் பெரிய ரகசியம்:

Sleep is the real fat-burning therapy.

Deep sleep-ல்:

cortisol குறையும்

thyroid reset ஆகும்

insulin sensitivity மேம்படும்

fat-burning hormones release ஆகும்

8 மணி நேர தூக்கம் = 30–40% weight loss support.

🌸 Gut Healing — Metabolism-ன் மையம்

40 வயதிற்குப் பிறகு gut health மிக முக்கியம்.

Gut clean இருந்தால்:

digestion வேகமாகும்

hormones balance ஆகும்

cravings குறையும்

belly fat உருகும்

ஒவ்வொரு 15 நாட்களுக்கும்:

✔ ஒரு நாள் லேசான detox
✔ fermented foods
✔ lime + ginger
✔ probiotics

Gut clean = metabolism clean.

🌺 Women’s Emotional Healing — Metabolism-ன் மறைந்த தூண்

நான் எப்போதும் சொல்வது ஒன்றே ஒன்று:
Women gain weight not because of food.
They gain weight because of stress.

40 வயதிற்குப் பிறகு emotional shift அதிகம்:

கவலை
திடீர் கோபம்
சோர்வு
தன்னம்பிக்கை குறைவு

இந்த உணர்வுகள் metabolism-ஐ பாதிக்கின்றன.

அதனால்:

✔ meditation
✔ pranayama
✔ journaling
✔ self-love practices

இவை metabolism-ஐ நிலைப்படுத்தும்.

🌸 Wellness Guruji’s Heart-Touching Message

உங்கள் metabolism குறைவது ஒரு தோல்வி அல்ல.

உங்களுக்குள் இருக்கும் Agni இன்னும் உயிருடன் உள்ளது.
இப்போதெல்லாம் அது ஒரு சின்ன சுடராய்தான் இருக்கிறது.

ஆனால் நீங்கள் அதைத் தூண்டினால் —
அது மீண்டும் ஜ்வாலையாக மாறும்.
உங்கள் உடலும் மனமும் மீண்டும் ஒளி பெறும்.

நான் உங்கள் பயணத்தில் உங்களுடன் நிற்கிறேன்.
உங்கள் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மாற்றத்திலும் உங்களை ஆதரிக்க நான் இருக்கிறேன்.

நீங்கள் தனியாக இல்லை.
நீங்கள் அழகாகவும் சக்திவாய்ந்தவர்களாகவும் இருக்கிறீர்கள்.
உங்கள் உடல் மீண்டும் ஜொலிக்க முடியும்.
உங்கள் வாழ்க்கை மீண்டும் இலகுவாக முடியும்.
அது சாத்தியம்.
அது உண்மை.
அது உங்கள் அடுத்த அதிகாரம்.

Wellness Guruji Dr Gowthaman
SHREEVARMA Ayurveda Hospitals
📱 9500946638

 #முருங்கை பிசின்;நல்லா முற்றிய நாட்டு முருங்கை மரத்தில் பிசினை எடுத்து சுத்தம் செய்து பசு நெய்விட்டு பொன் வறுவலாக வறுத்...
16/11/2025

#முருங்கை பிசின்;

நல்லா முற்றிய நாட்டு முருங்கை மரத்தில் பிசினை எடுத்து சுத்தம் செய்து பசு நெய்விட்டு பொன் வறுவலாக வறுத்து சூரணம் செய்து வைத்துகொண்டு காய்ச்சிய பசும்பாலில் இந்த சூரணத்தையும், நாட்டு சர்க்கரையும் கலந்து காலை, இரவு உணவுக்கு பின் பருகிவர உடல் வலுப்பெறும்,உடல் அழகாகும்,விந்து முந்துதல் குணமாகும்,விந்தணு குறைபாடு நீங்கும்,விந்து தண்ணீர்போல் வருவது நின்று கெட்டிபடும். #அகத்தியர் குணபாடம் எனும் பாடலில் உள்ள அற்புதமான எளியமுறை இது...

#சித்தர்பாடல்;

முந்து நீரைத்தடுத்து மோரைபோலே ஒழுகும்

விந்தினை தட்டிப்பித்து மேனிதரும்-தொந்த

கரியநிற வாயுதனை காதிவிடு நாளும்

பெரிய முருங்கை பிசின்.....

#சித்த மருத்துவம் காப்போம்

 #கண் திறந்த விநாயகர் சிலை!வவுனியா தோணிக்கல் பகுதியிலுள்ள ஆலடிப் பிள்ளையார் கோவிலில் பிள்ளையார் சிலையின் இரு கண் திறந்தத...
15/11/2025

#கண் திறந்த விநாயகர் சிலை!

வவுனியா தோணிக்கல் பகுதியிலுள்ள ஆலடிப் பிள்ளையார் கோவிலில் பிள்ளையார் சிலையின் இரு கண் திறந்ததாக வெளியாகியுள்ள தகவல் பக்தர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியா தோணிக்கல் பகுதியில் அமைந்துள்ள பிள்ளையார் ஆலயத்திலுள்ள அமைத்துள்ள பிள்ளையார் சிலையானது வழமையாக மூடிய நிலையிலுள்ள கண்களையுடைய சிலையாகவே காணப்பட்டு வந்தது.
இன்றைய தினம் பக்தர்கள் சென்று வழிபட்டு வந்திருந்தனர்.

இந்நிலையில் இன்றைய தினம் மாலை நேரம் திடீரென அந்த சிலையிலுள்ள இரு கண்களும் திறந்த நிலையில் மனித கண்களை ஒத்த நிலையில் தென்பட்டு காணப்படுகின்றது.
இதனை பிரதேசவாசிகள் அதிசயத்துடனும், பக்தி பரவசத்துடனும் பார்த்து வருகின்றனர்.

ஸ்தபதிஒரு இறைவனின்அம்சம்.           ஒரே கல்லில் செய்யப்பட்ட சங்கிலி, இரும்பில் வெல்டிங் செய்யாமல், ஒட்டு இல்லாமல், ஒரே க...
09/11/2025

ஸ்தபதிஒரு இறைவனின்அம்சம்.

ஒரே கல்லில் செய்யப்பட்ட சங்கிலி, இரும்பில் வெல்டிங் செய்யாமல், ஒட்டு இல்லாமல், ஒரே கல்லாலான சங்கிலி! எப்படி செய்திருப்பார்கள்??

இடம் : #காஞ்சிபுரம்!

ஸ்தபதி ஒரு இறைவனின்அம்சம்~~~~~~~~~~~~~~~~~~~~~~கண்ணன் எட்டாத உயரத்தில் உறியில் இருக்கும் வெண்ணையை அரவைக் கல்லின் மீதேறி ...
09/11/2025

ஸ்தபதி ஒரு இறைவனின்அம்சம்
~~~~~~~~~~~~~~~~~~~~~~
கண்ணன் எட்டாத உயரத்தில் உறியில் இருக்கும் வெண்ணையை அரவைக் கல்லின் மீதேறி எக்கி நின்று எடுத்துக் கொண்டிருக்க...

எடுக்கும் போது பானைகள் உருண்டு சத்தம் செய்து விடாமல் இருக்க தன்னுடைய மறு கையை பானைகளுக்கு அடியில் தாங்கிப் பிடிக்க...

ஏற்கனவே சில பானைகளில் இருந்த வெண்ணையை உண்டு ருசி கண்ட அவனின் நண்பர்கள் "தயவுசெய்து எனக்கும் கொஞ்சம் கொடு கண்ணா" என்று ஏங்கியபடி காத்துக்கிடக்க...

அதிலும் வலது ஓரத்தில் மூன்றாவதாக இருக்கும் ஒருவன் முட்டிக் கால் போட்டு கொஞ்சிக் கொண்டிருக்க...

பானையில் இருந்து ஏதேனும் கீழே சிந்தாதா என ஒரு எலி? காத்துக் கிடப்பதைப் போன்று கல்லில் வடித்து அசத்தியிருக்கிறார்கள்...

அதுவும் கோபுரத்தின் மேலே!
யார் வந்து பார்க்கப் போகிறார்கள் என்ற அலட்சியம் துளியும் இல்லை!

இடம் : திருக்குறுங்குடி, திருநெல்வேலி.

 #தர்மம்_ராசிகள்மேஷம்சிம்மம்தனுசுகடமை, பரிணாம செயல்கள்.
09/11/2025

#தர்மம்_ராசிகள்

மேஷம்
சிம்மம்
தனுசு

கடமை, பரிணாம செயல்கள்.

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்குருவாய் வருவாய் அருள்வ...
09/11/2025

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!!

ஓம் நமோ குமாராய

இன்பத்தில் சுக்கிரன்! இன்பமே வீடு!இன்பமே வாழ்வு!உழைப்பு ஊதியம்!உழைப்பு உயர்வு! உழைப்பு உன்னதம்!உழைப்பே வெற்றி!குரு வாழ்க...
09/11/2025

இன்பத்தில் சுக்கிரன்!
இன்பமே வீடு!
இன்பமே வாழ்வு!

உழைப்பு ஊதியம்!
உழைப்பு உயர்வு!
உழைப்பு உன்னதம்!
உழைப்பே வெற்றி!

குரு வாழ்க! குருவே துணை!

குளியல் தியானம் செய்யுங்கள்.நீங்கள் குளிக்கும்போது ஒவ்வொரு முறையும், உங்கள் மன அழுத்தம் மற்றும் பதட்டம் நீங்குவதை கற்பனை...
09/11/2025

குளியல் தியானம் செய்யுங்கள்.

நீங்கள் குளிக்கும்போது ஒவ்வொரு முறையும், உங்கள் மன அழுத்தம் மற்றும் பதட்டம் நீங்குவதை கற்பனை செய்து பாருங்கள். உங்கள் சருமத்தில் உள்ள தண்ணீரின் உணர்வில் கவனம் செலுத்துங்கள். உங்கள் எதிர்மறை எண்ணங்களை கழுவும் தண்ணீரின் சக்தியை கற்பனை செய்து பாருங்கள். சோகம், வருத்தம், கோபம் மற்றும் மனச்சோர்வு ஆகியவை உடனடியாக நீங்குவதை உணருங்கள். இவை அனைத்தும் வடிகாலில் போய்விடும், நீங்கள் இலகுவாகவும் தெளிவாகவும் உணரத் தொடங்குவீர்கள்.

குரு வாழ்க! குருவே துணை!

ஒரு நாளை தொடங்கும் பொழுது நேற்றை விட இன்று சிறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன் தொடங்குங்கள்.. ஒரு நாளின் முடிவு என்பத...
09/11/2025

ஒரு நாளை தொடங்கும் பொழுது நேற்றை விட இன்று சிறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன் தொடங்குங்கள்.. ஒரு நாளின் முடிவு என்பது அந்த நாளின் முடிவு மட்டும் தான்.. நம் வாழ்வின் முடிவு அல்ல.. உங்கள் வாழ்க்கை புத்தகத்தின் மிகச் சிறந்த பக்கங்கள் இனி எழுதப்படலாம்.. பிரபஞ்சம் மிகப் பெரிய அதிசயத்தை உங்கள் வாழ்வில் நிகழ்த்தலாம்.. நம்பிக்கையுடன் இருங்கள்.. நல்லதே நடக்கும்.!

Adresse

Düsseldorf Straße
Düsseldorf
40100

Benachrichtigungen

Lassen Sie sich von uns eine E-Mail senden und seien Sie der erste der Neuigkeiten und Aktionen von Tamilarul Media Network erfährt. Ihre E-Mail-Adresse wird nicht für andere Zwecke verwendet und Sie können sich jederzeit abmelden.

Teilen

Tamilarul.Net

Tamil News | Tamil Daily News Website | Tamil News Paper | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines | Latest Tamil News | India News | World News | Tamil Film