03/11/2025
”அமெரிக்காவால் உலகை 150 முறை தகர்க்க முடியும்.” டிரம்ப்..யா அல்லாஹ் இவனுக்கு தற்பெருமை, அகங்காரம், பொய், புரட்டு எல்லாம் வைத்து பெருமை பேசிக்கொண்டு இருக்கிறான் இவனின் பேச்சை நீ..கேட்டுக்கொண்டு தானே இருக்கிறாய்..இவனுக்கு நீயே போதுமானவன்.
இந்த உலகை 150 முறை அழிப்பதற்குப் போதுமான அணு ஆயுதங்கள் நம்மிடம் உள்ளன!” என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் பேசிய டிரம்ப், “இது ஒரு போட்டி நிறைந்த உலகம். சீனா எப்போதுமே நம்மைக் கவனித்துக்கொண்டிருக்கிறது, நாமும் எப்போதுமே அவர்களைக் கவனித்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், ஒருவரையொருவர் வீழ்த்துவதற்குப் பதிலாக, நாம் இணைந்து செயல்பட்டால், இன்னும் பெரியவர்களாக, வலிமையானவர்களாக மாற முடியும் என்று நான் நினைக்கிறேன்,” என்றார்.
“அமெரிக்காவிடம் தான் அதிக அணு ஆயுதங்கள் உள்ளன. ரஷ்யா இரண்டாவது இடத்தில் உள்ளது. சீனா மூன்றாவது இடத்தில் இருந்தாலும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் அவர்கள் நம்மை சமன் செய்து விடுவார்கள். அவர்கள் மிக வேகமாக அணு ஆயுதங்களை உருவாக்குகிறார்கள்,” என்று கூறினார்.