Vizhi valaioli

Vizhi valaioli Informations de contact, plan et itinéraire, formulaire de contact, heures d'ouverture, services, évaluations, photos, vidéos et annonces de Vizhi valaioli, Société de médias/d’actualités, Paris.

நெடுந்தீவில் ஐவர் படுகொலையில்  படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 100 வயது மூதாட்டி உயிரிழப்பு!யாழ்ப்பாணம் நெடுந்தீவில் ஐந்து மு...
27/04/2023

நெடுந்தீவில் ஐவர் படுகொலையில் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 100 வயது மூதாட்டி உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் நெடுந்தீவில் ஐந்து முதியவர்கள் படுகொலையான சம்பவத்தில் படுகாயங்களுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

நெடுந்தீவை சேர்ந்த க.பூரணம் (வயது 100) எனும் மூதாட்டியே இன்றைய தினம் வியாழக்கிழமை மாலை உயிரிழந்துள்ளார்.

நெடுந்தீவு இறங்கு துறைக்கு அருகில் உள்ள வீடொன்றில் இருந்த 06 முதியவர்கள் மீது நடாத்தப்பட்ட தாக்குதலில் ஐந்து முதியவர்கள் உயிரிழந்த நிலையில் , 100 வயதான மூதாட்டி படுகாயங்களுடன் மீட்கப்பட்டு யாழ்,போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் இன்றைய தினம் வியாழக்கிழமை மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக யாழ்.போதனா வைத்திய சாலை தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

இதேவேளை குறித்த சம்பவத்தில் வீட்டின் வளர்ப்பு நாய் மீதும் கொலையாளி தாக்குதல் நடாத்தி இருந்ததில் , காயங்களுக்கு உள்ளான நாயும் நேற்றைய தினம் புதன்கிழமை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவங்களுடன் தொடர்புடையவர் எனும் சந்தேகத்தில் வெளிநாடொன்றில் இருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்ட 51 வயதான புங்குடுதீவு வாசி ஒருவர் பொலிஸாரினால் கடந்த சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்ட நிலையில் , குறித்த சந்தேக நபர் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற உத்தரவில் எதிர்வரும் 09ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

 #கொழும்பில் பதற்ற நிலை அரசுக்கு எதிராக பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் தாக்குதல்
07/03/2023

#கொழும்பில் பதற்ற நிலை அரசுக்கு எதிராக பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் தாக்குதல்

கொழும்பில் அரசுக்கு எதிராக கொழும்பில் அனைத்துப் பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பா...

 #கொழும்பில் போராட்டக்காரர்களை கலைக்க நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் 26/02/2023 தொடரும் போராட்டம் 🔴 LIVE 👇👇
26/02/2023

#கொழும்பில் போராட்டக்காரர்களை கலைக்க நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் 26/02/2023 தொடரும் போராட்டம்
🔴 LIVE 👇👇

​ ​ ​ ​NewsToday ...

எவ்வாறாயினும்  #இலங்கைக்கு
18/11/2022

எவ்வாறாயினும் #இலங்கைக்கு

02/11/2022

கொழும்பில் இன்று (02.11)இடம்பெற்ற அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிரான எதிர்ப்புப் பேரணியில்
பொலிஸாரால் இடையூறு விளைவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ நேற்றிரவு   துணைவியார் சகிதம் நாடு திரும்பினார், ஆதரவாளர்கள் கூடி வரவேற்புஇலங்கை முன்...
03/09/2022

முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ நேற்றிரவு துணைவியார் சகிதம் நாடு திரும்பினார், ஆதரவாளர்கள் கூடி வரவேற்பு

இலங்கை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தாய்லாந்தில் இருந்து நாடு திரும்பியுள்ள நிலையில் விமான நிலையத்தில் அவரது ஆதரவாளர்கள் கூடி அவரை வரவேற்றனர்.

அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எம்.பி.க்கள் சிலர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கோட்டாபயவை வரவேற்றனர்.
இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்ட நிலையில் மக்களின் கடும் எதிர்ப்பால் தப்பியோடிய கோட்டாபய ராஜபக்ச, மாலைதீவு சென்றார்.

பின்னர் அங்கிருந்து தாய்லாந்து சென்று தங்கியிருந்தார். பாதுகாப்பு காரணங்களுக்காக தாய்லாந்தில் அவர் தங்கியிருந்த விடுதியில் இருந்து வெளியேற அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.

இவ்வாறான நிலையிலேயே சுமார் 7 வாரங்களுக்குப் பின்னர் கோட்டாபய இன்று நாடு திரும்பினார்.

31/08/2022
31/08/2022
13/08/2022

பாராளுமன்றத்தில் கஜேந்திரகுமார் இன்று (12.08.2022) ஆற்றிய உரை! Gajendrakumar parliamentSpeech |tamilmp 🔴காணொளி முழுமையாக இணைக்கப்பட்டுள்ளது (vi...

13/08/2022

2000 நாட்களை கடந்தது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளது தொடர் போராட்டம் ​ ​ ​ .....

Adresse

Paris

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Vizhi valaioli publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Souligner

Partager