News Tamil 24 Europe

  • Home
  • News Tamil 24 Europe

News Tamil 24 Europe Current and important news

13/07/2024

#ஜூலை_14_பிரெஞ்சு_மக்களின்_வாழ்வில்_ஒரு_மாபெரும்_விடியல்_பிரெஞ்சுப்புரட்சி_1789
ஐரோப்பிய அரசியல் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய தினம் இன்றாகும் . மிக நீண்டதொரு கொடுங்கோன்மை மன்னராட்சி முற்றுப்பெற்று மக்கள் ஜனநாயக நீரோட்டத்தில் தம்மை இணைத்து கொண்ட பெருமை இம் மாபெரும் மக்கள் புரட்சியான பிரெஞ்சுப் புரட்சியையே சாரும் மனித குல வரலாற்றில் ஜூலை14,1789 மிகவும் முக்கியமான ஒரு தினமாகும் . பாரிஸ் நகர மக்கள் பாஸ்டில் சிறைக் கதவுகளை உடைத்து அரசியல் கைதிகளை விடுவித்த தினம். பிரெஞ்சு புரட்சியின் குறிப்பிடத்தக்க நிகழ்வுகளில் இது ஒன்றாகும்.

1789 இல் அரங்கேறிய பிரெஞ்சு புரட்சி முக்கியத்துவம் வாய்ந்த நவீன கால புரட்சியாகும்.அனைத்து மக்களும் சமம் என்று அது முழங்கியது. “சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்” என்ற முழக்கங்களை முன்வைத்தது. இது மானுட சிந்தனை வரலாற்றில் ஒரு மிகப் பெரிய முன்னேற்றம். ஆகவே, இன்றும் நம்மைப் போன்ற ஜனநாயக இயக்கங்கள் பிரெஞ்சு புரட்சியையும் , அதன் நிகழ்வுகளில் ஒன்றான பாஸ்டில் சிறை தகர்ப்பு நாளையும் நினைவு கூறுகிறோம்.

அதே சமயம் பிரெஞ்சு புரட்சியின் வரம்புகளையும் வர்க்கத்தன்மையையும் நமது ஆசான்கள் மார்க்சும், எங்கல்சும், லெனினும் சரியாகவே சுட்டிக்காட்டினார்கள்.

“பிரெஞ்சு புரட்சி ஒடுக்கப்பட்ட போதிலும், வரலாற்றை படிக்கும் ஒவ்வொருவரும் அதை வெற்றிகரமானதேன்றே கருதுகின்றனர். இந்த பிரெஞ்சு புரட்சி பூர்ஷ்வா ஜனநாயகம் மற்றும் பூர்ஷ்வா சுதந்திரத்திற்கு அடித்தளம் இட்டது.” என்று கூறினார் லெனின்.

“பிரெஞ்சு புரட்சி ஒரு பூர்ஷ்வா புரட்சி என்பதி ஐயமில்லை. அதனுடைய தன்மை பூர்ஷ்வா அடிப்படையில் அமைந்தது. பூர்ஷ்வா தன்மை கொண்டதாக இருந்ததால், சமூகத்தின் உழைக்கும் மக்களை அது சுரண்டலிலிருந்து விடுவிக்க வில்லை.” என்று தெளிவாக சொன்னார் மார்க்ஸ்

பாஸ்டில் தினம்-பின்னணி

பாஸ்டில் சிறை என்பது பாரிஸ் நகரின் கிழக்கு பகுதியில் உள்ள ஒரு கோட்டை மட்டுமல்ல. அந்நாட்டின் பிரதான சிறையும் ஆகும். அரசியல் கைதிகளை அடைக்கும் இடம் என்பதுடன் மன்னராட்சியின் அடையாளமாகவும் அது கருதப்பட்டது.

1688 முதல் 1783வரை பிரான்சும் பிரிட்டனும் ஐந்து நீண்ட போர்களில் ஈடுபட்டன. இதன் விளைவாக அரசு கஜானா காலியாகி இருந்தது. அரசின் வரிக் கொள்கையால் ஏற்கனவே கடும் சுமையாழ் பாதிக்கப்பட்டிருந்த மக்கள் மீது அரசு மேலும் கடும் சுமையை ஏற்றியது. 16ம் லூயி மன்னனின் வரிக்கொள்கையை எதிர்த்த நிதி அமைச்சர் ஜாக் நேக்கர் மக்கள் மத்தியில் பிரபலமானார்.அன்று மக்கள் மூன்று பிரிவாக (Three Estates) பிரிக்கப்பட்டிருந்தனர்.
அரசகுடும்பம் , அதன் ஆதரவாளர்களான பெரும் நிலக் கிழார்கள்
ரோமன் கத்தோலிக்க ஆலயத்தின் குருக்கள், அதிகாரம் செலுத்துவோர்,
சிறு வணிகர்கள், விவசாயிகள், உழைப்பாளிகள் என சாதாரண மக்கள்.
பிறப்பு அடிப்படயில் அனைத்து சலுகைகளும் தீர்மானிக் கப்பட்டதால், ஏழைகள் முன்னேற வழியே இல்லாத சூழல் நிலவியது.சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வுகளால், மக்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர். மன்னன் 19.5.1789 அன்று பொது குழுவை கூட்டினான். மூன்றாம் பிரிவு[மக்கள்] தேசிய அசெம்பிளியை உருவாக்குவதாக அறிவித்தனர். 11.7.1789 நிதி அமைச்சர் மன்னரால், பதவி நீக்கம் செய்யப்பட்டார். அதன் பின் மன்னரின் ராணுவம் தங்களை தாக்கக்கூடும் என்ற அச்சத்தில், மக்கள் கையில் கிடைத்த ஆயுதங்களை எடுத்துக் கொண்டு பாஸ்டில் சிறையை முற்றுகை இட்டனர். அந்த கலவரத்தில் பலர் உயிரிழந்தனர். இறுதியில் பாஸ்டில் சிறை மக்கள் வசம் வந்தது. இந்த சம்பவம் “மன்னராட்சியின் நிறமான வெள்ளையை மக்களின் நிறங்களான நீளமும், சிவப்பும் சூழ்ந்தது” என்று வர்ணிக்கப்பட்டது.இன்றும் அந்நாட்டின் கோடியில் அந்த மூன்று நிறங்களும் இருப்பதை காண முடியும்.
4.8.1789 அன்று நிலபிரபுத்துவம் ஒழிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து, ‘மனித/குடிமக்களின் சாசனம்’ பிரகடனப்படுத்தப்பட்டது. 21.9.1792.அன்று பிரான்ஸ் குடியரசு என்று அறிவிக்கப்பட்டது.21.1.179 அன்று லூயி மன்னன் கழுவிலேற்றப்பட்டான். கில்லட்டின்[கழுவேற்றப் பயன்படுவது], பிஜியன் குல்லாய் [விடுதலையின் அடையாளம்] நீலம் சிவப்பு வெள்ளை நிறங்களைக் கொண்ட கொடி, தேசிய கீதம் ஆகியவை பிரெஞ்சு புரட்சியின் அடையாளங்களாக கருதப்படுகின்றன.
பூர்ஷுவா புரட்சியின் எல்லைகள்
பிரெஞ்சு புரட்சி “சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்” என்ற முழக்கங்களை ஒரு புறம் முன் வைத்தாலும், அந்நாட்டின் செல்வந்தர்கள், ஆளும் வர்க்கங்கள், கறுப்பின மக்களை அடிமைகளாக, அமெரிக்காவிற்கு அனுப்பிய வர்த்தக ஏற்பாட்டில் பங்குபெற்றது. பின்னர் ,19ம் மற்றும் 20ம் நூற்றாண்டுகளில் பிரெஞ்சு முதலாளித்துவம் ஏகபோக முதலாளித்துவமாக வளர்ந்து ஏகாதிபத்திய முகாமின் வலுமிக்க அங்கங்களில் ஒன்றாகவும் செயல்பட்டதையும் நாம் நினைவில் கொள்வோம். இந்தோ சீனத்தில், [வியத்னாம், லாவோஸ், கம்போடியா] , அல்ஜீரியாவில் இன்னும் பல ஆப்பிரிக்க , மேற்கு ஆசிய நாடுகளில் பிரெஞ்சு முதலாளி வர்க்கம் நடைமுறைப் படுத்திய சுரண்டலும், மனி த உரிமை படு கொலைகளும், ஒரு “பூர்ஷ்வா புரட்சியின்” வரலாற்று வரம்புகளை நமக்கு மீண்டும் மீண்டும் நினைவுபடுத்துகின்றன. இன்றும் பிரெஞ்சு ஏகாதி பத்தியம் உலகளவிலான சுரண்டலுக்கு பக்கபலமாக உள்ளது

சோசலிசமே மானுட விடுதலையை நனவாக்கும்

பிரெஞ்சு புரட்சி மானுட விடுதலைக்கான நெடிய பயணத்தில் முக்கியமான மைல்கல். ஆனால், அப்பயணத்தை முன்பின் முரணற்று முன்னெடுத்து சென்று முழுமையான மானுட விடுதலையை சாதிப்பது தொழிலாளி வர்க்கத்தின் தலைமை யிலான சோஷலிச புரட்சியால் மட்டுமே நிகழும். பாஸ்டில் சிறை தகர்ப்பை மக்கள் எழுச்சி என்று போற்றுவோம். முதலாளி வர்க்கத்தின் ஆட்சியில் மானுட விடுதலை சாத்தியம் இல்லை என்ற தெளிவுடன் சோஷலிச புரட்சியை முன்னெடுத்து செல்லுவோம்.!

 #பிரான்சின்   #சட்டமன்றில்   #எழக்கூடிய  #பிரச்சனைகள்பாராளுமன்றம் என்பது மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளை கொண்ட...
10/07/2024

#பிரான்சின் #சட்டமன்றில் #எழக்கூடிய #பிரச்சனைகள்
பாராளுமன்றம் என்பது மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளை கொண்ட ஓர் சட்டத்துறையாகும். நாட்டு மக்களுக்கு தேவையான சட்டங்களை ஏற்றுவதே இதன் பிரதான பணியாகும். சட்டங்களை ஏற்றும்போது அதன் தன்மைக்கேற்ப சாதாரண சட்டம், விசேட சட்டம் என இரண்டு வகையாக பிரித்து கூறுகின்றனர். நாட்டினுடைய பொது நிதி, பாதுகாப்பு, நீதி, எல்லை பிரிவினை போன்ற பல விடயங்கள் விசேட சட்டங்களில் அடங்குகின்றன. ஏனைய பெரும்பாலானவை சாதாரண சட்டங்களாகவே கருதப்படுகின்றன. சட்டமன்ற மொத்த உறுப்பினர்களில் அரைவாசிக்கு மேற்பட்டோர் சம்மதத்துடன் சட்டம் நிறைவேற்றப்பட்டால் அதனை சாதாரண சட்டமாக கருதுகின்றனர். அதேவேளை மொத்த உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையோரின் ஆதரவு தேவைப்படும் எனில் அதனை விசேட சட்டம் என்கின்றனர்.

சட்டத்துறையில் அதன் தலைவர் சபாநாயகர், பிரதி தலைவர் உப சபாநாயகர் , சட்டமன்றில் அங்கத்துவம் பெறும் கட்சிகளின் குழுக்களின் தவிசாளர் என பலவகை பட்ட பதவி நிலை உறுப்பினர்கள் காணப்படுகின்றனர். சட்டங்களை நிறைவேற்றுகின்ற போது அதன் தலைவரான தவிசாளர் வாக்களிக்க மாட்டார். எனினும் இதற்கும் சில விதிவிலக்குகள் காணப்படுகின்றது.

பிரான்சினுடைய சட்டமன்றமான தேசிய பேரவையை பொறுத்தவரை 577 உறுப்பினர்கள் காணப்படுகின்றனர். இவர்களில் 289 பேர் சாதாரண சட்டம் ஒன்றை நிறைவேற்றுவதற்கான அங்கத்தவர்கள் ஆகும். ஆனால் நடந்து முடிந்த தேர்தல்களின் படி எந்த ஒரு கட்சிக்கும் தனித்து ஆட்சி அமைக்கக்கூடிய 289 ஆசனங்கள் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். பிரான்சில் முதன்மை பெற்ற கட்சிகள் தங்களின் கொள்கைகள் இடையே பாரிய வேறுபாடுகளை கொண்டுள்ளன. இதனால் ஒரு கட்சி இன்னொரு கட்சியுடன் சேர்ந்து ஆட்சி அமைக்கின்ற பட்சத்தில் எதிர்காலத்தில் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். உதாரணமாக இத்தேர்தலில் முதன்மை பெற்ற புதிய இடதுசாரி முன்னணி(182) ஜனாதிபதியின் மிதவாத கொள்கைகள் கொண்ட கட்சியுடன் ஆட்சி அமைக்குமானால், சட்ட நிறைவேற்றின்போது யாருடைய கொள்கைகளுக்கு முக்கியத்துவம் வழங்கி சட்டம் ஏற்றுவது என்பது தொடர்பான பிரச்சனைகள் எழும்பக்கூடும். இதனால் சட்டத்திற்கு தேவையான சாதாரண பெரும்பான்மையை கூட பெற முடியாத நிலை உருவாகிவிடும்.
பிரதான கட்சிகள் தேர்தல்கள் விஞ்ஞாபனத்தின் போது மக்கள் மத்தியில் தங்களால் முன்வைக்கப்பட்ட கொள்கைகளை சட்டங்களாக மாற்ற வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவர். உதாரணமாக தற்போது தேர்தலில் முன்னிலையில் உள்ள கட்சி பாடசாலை உபகரணங்களை இலவசமாக தருவதாகவும், பாடசாலை பிள்ளைகளின் சிற்றுண்டி சாலைகளை இலவசமாக்குவதாகவும், ஓய்வு பெறும் வயதை 60 ஆக குறைப்பதாகவும் முக்கிய கொள்கையாக வெளிப்படுத்தியுள்ளது. இவற்றை சட்டமாக நிறைவேற்ற முனைந்தால் தன்னோடு கூட்டு சேர்ந்து ஆட்சியமைக்கும் கட்சியின் அனுசரணையை பெற வேண்டியது அவசியமாகும். இதற்கு ஜனாதிபதி மைக்ரோன் தலைமையிலான மிதவாத தன்மையான கட்சி ஒருபோதும் ஆதரவளிக்க மாட்டாது காரணம் ஜனாதிபதி மக்ரோனி உடைய ஆட்சி காலத்தில் தான் ஓய்வு பெறும் வயதில்லையை 60 ஆகக் குறைக்க கூறி பல ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. அதற்கு அக்கட்சி ஒருபோதும் சம்மதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். இதனால் எதிர்காலத்தில் பாராளுமன்ற பெரும்பான்மை இழக்க கூடிய நிலை ஏற்படும். அவ்வாறான ஒரு நிலையில் பாராளுமன்றில் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் கட்சிக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் ஒன்றைக் கொண்டு வருவதன் மூலம் பாராளுமன்றத்தை கலைக்க கூடிய சூழல் ஏற்படும் இது நாட்டினுடைய பொருளாதார வளர்ச்சிக்கு ஆபத்தானதாகும் எனவே தற்போதைய சூழலில் பிரான்சில் ஏற்பட்டுள்ள இச்சிக்கலானது. பொருளாதார ரீதியாக நாட்டினை பின்னோக்கிய ஒரு நிலைக்கு கொண்டு செல்லும் என எதிர்ப்பு கூறப்படுகின்றது.

இக்கட்டுரை தொடரும்........

 #பிரான்ஸ்   #அரசில்   #ஏற்படப்போகின்ற   #பாரிய   #சிக்கல்கள் பிரான்சில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் அதிகப்படியான ஆசனங...
09/07/2024

#பிரான்ஸ் #அரசில் #ஏற்படப்போகின்ற #பாரிய #சிக்கல்கள்
பிரான்சில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் அதிகப்படியான ஆசனங்களை பெற்ற புதிய இடதுசாரி முன்னணி கூட்டுக் கட்சிகள் தங்களுக்கு இடையே யாரை பிரதமராக நியமிப்பது என்பது தொடர்பான பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்நிலையில் பிரெஞ்சு சோசியலிச தலைவர் Olivier Faure தன்னை பிரதமராக தெரிவு செய்வதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். எது அவ்வாறு இருப்பினும் இந்தத் தேர்தல் எமக்கு உணர்த்துவது என்ன என்பது தொடர்பான விரிவான ஆய்வொன்றை நாம் இப்போது பார்க்கலாம்
1958இல் டி கோலால் உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்பு விதைந்துரைப்பது யாதெனில். நாட்டின் தலைவராக ஜனாதிபதி காணப்படுகின்ற போதிலும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆசனங்களை பெற்ற ஒருவரே பிரதமராக தெரிவு செய்யப்பட வேண்டும் என கூறுகின்றது. அதன்படி நடந்து முடிந்த தேர்தலில் கூடுதலான ஆசனங்களை பெற்ற கட்சியின் தலைவரையோ அல்லது கட்சியிலிருந்து ஒருவரையோ ஜனாதிபதி மக்ரோன் பிரதமராக அறிவிக்க வேண்டும். அவ்வாறு அறிவிக்கப்படும் பிரதமர் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆசனங்களை நிரூபிக்க வேண்டும் என்பது யாப்பின் விதியாகும். எனினும் எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை ஆசனங்கள் கிடைக்காமல் பிரதமர் தெரிவு செய்யப்பட்ட போதிலும் ஆட்சி அமைப்பதில் சிரமங்களை காணப்படுகின்றது. 182 ஆசனங்களை பெற்ற புதிய இடதுசாரி முன்னணி ஆட்சி அமைப்பதற்கு மேலதிகமாக 107 ஆசனங்கள் தேவைப்படுகின்றது. இதற்காக தீவிர வலதுசாரி போக்குடைய Marine Le Pen தலைமையிலான வலதுசாரி கட்சிகளுடன் அவர்களால் இணைய முடியாது. காரணம் வலதுசாரி இடதுசாரி என்ற கொள்கை வேறுபாடுகள் ஆகும். எனவே ஆட்சியில் இருக்கும் ஜனாதிபதி மேக்ரோன்னுடைய மிதவாத போக்குடைய கட்சிகளுடனே கூட்டு சேர வேண்டியுள்ளது. அவ்வாறு கூட்டு அரசாங்கம் ஒன்றினை அமைப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டாலும் எதிர்காலத்தில் பாராளுமன்ற சட்ட நிறைவேற்றல்களின் போது பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியுள்ளது.
தொடரும்.......................

பிரான்சில் # தொங்கு # பாராளுமன்றம் #பிரான்சில் கடந்த ஞாயிறு நடைபெற்று முடிந்த இரண்டாவது கட்ட பாராளுமன்ற தேர்தல் முடிவுகள...
08/07/2024

பிரான்சில் # தொங்கு # பாராளுமன்றம் #

பிரான்சில் கடந்த ஞாயிறு நடைபெற்று முடிந்த இரண்டாவது கட்ட பாராளுமன்ற தேர்தல் முடிவுகளின் படி தொங்கு பாராளுமன்றம் ஒன்றை அமைப்பதற்கான சூழ்நிலையையே அது உருவாக்கியுள்ளது. 577 மொத்த ஆசனங்களை கொண்ட பாராளுமன்ற தேர்தலில் எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஒரு கட்சி பாராளுமன்றத்தில் தனித்து பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமெனில் 289 ஆசனங்களை அது தக்க வைக்க வேண்டும். ஆனால் நடந்து முடிந்த தேர்தல்களின் படி எந்த ஒரு கட்சிக்கும் அப் பெரும்பான்மையை நிரூபிக்க கூடிய ஆசனங்கள் கிடைக்கவில்லை. ஆளும் அரசை பிரதிநிதித்துவப்படுத்திய மையவாத கூட்டணி, தீவிர வலதுசாரி கொள்கையை கொண்ட தேசிய பேரணி கூட்டணி, அதேபோன்று இடதுசாரி கொள்கையை கொண்ட புதிய இடதுசாரி முன்னணி என மும்முனைப்போட்டி இடம் பெற்ற போதிலும் எந்த ஒரு கட்சிக்கும் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை ஆசனங்கள் கிடைக்கவில்லை. இதனால் தொங்கு பாராளுமன்றம் ஒன்றை அமைப்பதற்கான சூழ்நிலையை காணப்படுகின்றது.

Address


Alerts

Be the first to know and let us send you an email when News Tamil 24 Europe posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to News Tamil 24 Europe:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share