
20/08/2025
பூமிக்கிண்ணத்தில்,
சொட்டிக்கொண்டேயிருக்கும்
காலத்துளிகளின் ஓசைகள்.
ஒவ்வொரு துளியும் ஒரு கதை சொல்லும்,
கடந்த காலத்தின் ஏடுகளைப் கவனமாக புரட்டும்.
சிலநேரம் சிரிப்பும் வரும் அழுகையும் கலந்து வரும்,
இது வாழ்க்கை என்னும் நதியின் வற்றாத ஓட்டம்.
சில துளிகள் மெதுவாக விழும்,
விழுந்து சாதனைகளின் சாட்சியாக தெறிக்கும்.
சில துளிகள் வேகமாய் விழும்,
விழுந்து வேதனைகளின் நீட்சியாக தெறிக்கும்.
காலம் ஒரு மாயாஜாலம்,
மாற்றங்களை உருவாக்கும்.
இன்று இருக்கும் நிலை நாளை மாறும்,
இதுவே இயற்கையின் நியதி ஆகும்.
துளிகளின் ஓசை கேட்கும் வரை,
வாழ்க்கை பயணம் தொடரும்.
நம்பிக்கை என்னும் ஒளியை ஏற்றி,
நாளை நமக்காக விடியும்.
- RK
20/08/2025