தமிழ் சந்தி

தமிழ் சந்தி உலகத்தின் செய்திகளை உங்கள் உள்ளங்கைக்கு கொண்டு வருகிறோம் !

22/10/2025

கடும் மழையால் ஏற்பட்ட அனர்த்தங்களில் 3 பேர் உயிரிழப்பு - 12 மாவட்டங்களில் 9392 பேர் பாதிப்பு - 377 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிப்பு

22/10/2025

மட்டக்களப்பு - ஏறாவூரில் வர்த்தக நிலையமொன்றில் அனுமதிப்பத்திரம் இன்றி விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 1000க்கும் மேற்பட்ட போதை லேகியங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன

மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வை நினைவுப்படுத்தி நாடாளுமன்றம் இன்று ரோஸ் நிறத்தில் மாறியதுஉலகளாவிய மார்பகப் புற்றுநோய் ...
22/10/2025

மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வை நினைவுப்படுத்தி நாடாளுமன்றம் இன்று ரோஸ் நிறத்தில் மாறியது

உலகளாவிய மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதம் அல்லது இளஞ்சிவப்பு மாதமாகக் கருதப்படும் ஒக்டோபர் மாதத்தில் மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வூட்டலுக்கான சின்னம் மற்றும் கைப்பட்டி அணிவிக்கும் நிகழ்வு இன்று (22) பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.

உலகம் முழுவதிலும் பெண்கள் மத்தியில் பொதுவாகக் காணப்படும் புற்றுநோயாக மார்பகப் புற்றுநோய் காணப்படுகிறது. இதற்கு அமைய இலங்கையில் நாளாந்தம் 15 புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்படுவதாகவும் இதில் மூவர் உயிரிழப்பதாகவும் இங்கு கருத்துத் தெரிவித்த வைத்தியர்கள் தெரிவித்தனர். ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளித்தால் மார்பகப் புற்றுநோயை முழுமையாக குணப்படுத்த முடியும் என்றும், இதற்காக 20 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மாதத்திற்கு ஒரு முறை சுய மார்பகப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

22/10/2025

இன்று காலை அடையாளம் தெரியாதோர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்த வெலிகம பிரதேச சபையின் தலைவர் லசந்த விக்ரமசேகர வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் காட்சிகள் வெளியாகியுள்ளது

22/10/2025

வெலிகம பிரதேச தவிசாளரை சூட்டு விட்டு மோட்டார்சைக்கிளில் துப்பாக்கிதாரிகள் தப்பிச் சொல்லும் Cctv காணொளி வெளியாகியுள்ளது

22/10/2025

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிவரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் வாய்ப்பு இல்லை என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

கல்முனை பிரதேச செயலகத்திற்கு புதிய  உதவித் திட்டமிடல் பணிப்பாளராக ஏ.எல்.ஏ. மஜீட் நியமனம்கல்முனை பிரதேச செயலக உதவித் திட்...
22/10/2025

கல்முனை பிரதேச செயலகத்திற்கு புதிய உதவித் திட்டமிடல் பணிப்பாளராக ஏ.எல்.ஏ. மஜீட் நியமனம்

கல்முனை பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளராக ஏ.எல்.ஏ. மஜீட் இன்று(22) தனது கடமைகளை கல்முனை பிரதேச செயலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் உதவித் திட்டமிடல் பணிப்பாளராக கடமையாற்றிய நிலையில் வருடாந்த இடமாற்றம் அடிப்படையில் இன்று (22) அவர் தனது கடமையை கல்முனை பிரதேச செயலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார்.

1999.08.16 இல் கல்முனை பிரதேச செயலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக நியமிக்கப்பட்டு அரச சேவையை ஆரம்பித்த இவர் 2009.06.22 இல் வரையறுக்கப்பட்ட போட்டிப் பரீட்சை மூலம் இலங்கை திட்டமிடல் சேவைக்கு தெரிவு செய்யப்பட்டு உதவித் திட்டமிடல் பணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டு
2010.08.16 தொடக்கம் 2016.01.19 வரை சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் உதவித் திட்டமிடல் பணிப்பாளராக கடமையாற்றினார்.

இதன் பின்னர் 2016.01.20 தொடக்கம் 2022.06.15 வரை சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் உதவித் திட்டமிடல் பணிப்பாளராக கடமையாற்றிய இவர்
2022.06.16 தொடக்கம் தற்போது வரை அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் உதவித் திட்டமிடல் பணிப்பாளராக கடமையாற்றிய நிலையில்
தற்போது முதல் உடனடியாக செயற்படும் வண்ணம் கல்முனை பிரதேச செயலகத்திற்கு உதவித் திட்டமிடல் பணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தென்கிழக்கு பல்கலைக்கழக வணிக நிர்வாக இளங்கலை பட்டதாரியான (BBA) இவர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் அபிவிருத்தி ஆய்வுகளில் முதுகலை டிப்ளோமா (PgDDS), கொழும்பு பல்கலைக்கழகத்தில் பிராந்திய அபிவிருத்தி மற்றும் திட்டமிடலில் முதுகலை (MRDP), தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் ஆங்கில டிப்ளோமா ஆகியவற்றை பூர்த்தி செய்துள்ளதுடன் தற்போது இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் சட்டமாணி பட்டப்படிப்பைப் (LLB) பயின்று வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

இந்நிகழ்வில் கல்முனை பிரதேச செயலாளர் சட்டத்தரணி அஷ்ஷெய்க் ரீ.எம்.எம்.அன்சார், சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல் முஹம்மது ஹனீபா, பிரதேச செயலக கணக்காளர் கே.எம்.எஸ். அமீர் அலி , பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் ஏ.சி.எம் .பளீல், பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் ஜனூபா நெளபர், சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர், அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் இருந்து நிர்வாக உத்தியோகத்தர் கே.பீ. சலீம் மற்றும் பல அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உட்பட காரியாலய உத்தியோகத்தர்கள் குடும்ப உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

மேலும் கல்முனை பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளராக ஏலவே கடமையாற்றிய எம்.ஜெளபர் அட்டாளைச்சேனை பிரதேச செயலக புதிய உதவித் திட்டமிடல் பணிப்பாளராக கடமையேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது

பாறுக் ஷிஹான்

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் ஒரு வாரத்தில் 29 பேர் கைது!யாழ்ப்பாணப் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுத...
22/10/2025

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் ஒரு வாரத்தில் 29 பேர் கைது!

யாழ்ப்பாணப் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த ஒரு வார காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, போதைப்பொருள் கடத்தல் மற்றும் கசிப்பு உற்பத்தியுடன் தொடர்புடைய 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒக்டோபர் மாதம் 14ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையின்போது, சட்டவிரோதப் பொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் இவர்கள் கைது செய்யப்பட்டதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர்.

கைப்பற்றப்பட்ட பொருட்கள்
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட சட்டவிரோதப் பொருட்களின் விபரங்கள்:

45 போத்தல்கள் கசிப்பு (சட்டவிரோத மதுபானம்)

90 லீட்டர் கோடா (கசிப்பு காய்ச்சப் பயன்படுத்தப்படும் மூலப் பொருள்)

கசிப்பு காய்ச்சுவதற்குப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள்

சாராயம்

பல்வேறு வகையான போதைப்பொருட்கள்

சட்ட நடவடிக்கை மற்றும் புனர்வாழ்வு
கைது செய்யப்பட்ட 29 பேரில், 11 பேர் புனர்வாழ்வு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். ஏனைய அனைவரும் நீதிமன்றத்தின் ஊடாகச் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்தும் நோக்குடன், பொலிஸாரின் இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் எனவும் யாழ்ப்பாணப் பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

22/10/2025

🐊 🐊
என்னையே வலைபோட்டு பிடிக்கையா இந்தா நில்லுடா வாறன் நீதான் சாப்பாடு எனக்கு இன்றைக்கு

ஆற்றில் வலைபோட்டுப் மீன் பிடித்த மீனவரை துரத்திச் செல்லும் முதலை

வெலிகம பிரதேச சபைத் தலைவரை குறிவைத்து இன்று நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் கைத்துப்பாக்கி வகை துப்பாக்கி பயன்படுத்தப்...
22/10/2025

வெலிகம பிரதேச சபைத் தலைவரை குறிவைத்து இன்று நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் கைத்துப்பாக்கி வகை துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. உள்ளூராட்சி மன்றத்திற்குள் நுழைந்த துப்பாக்கிதாரி, சபைக்குள் இருந்தபோது பாதிக்கப்பட்டவரைச் சுட்டுக் கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். - காவல்துறை

22/10/2025

காலி கரந்தெனிய பகுதியில் வீடொன்றின் மீது சரிந்து விழுந்த பாரிய பாறை

மட்டு வாகனேரி காட்டுப் பகுதியில் விபத்துக்குள்ளான லொறி #மட்டக்களப்பு பொலநறுவை பிரதான வீதியில் வாகனேரி காட்டுப் பகுதியில்...
22/10/2025

மட்டு வாகனேரி காட்டுப் பகுதியில் விபத்துக்குள்ளான லொறி

#மட்டக்களப்பு பொலநறுவை பிரதான வீதியில் வாகனேரி காட்டுப் பகுதியில்
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கனரக வாகனத்தோடு கொழும்பிலிருந்து கல்முனை நோக்கி வந்துகொண்டிருந்த லொறி மோதி விபத்துக்குள்ளான சம்பவம் நேற்றிரவு பதிவாகியுள்ளது

விபத்தில் லொறி சேதமடைந்துள்ள நிலையில் லொறியின் சாரதிக்கு சிறியளவிலான காயம் ஏற்ப்பட்டுள்ளது

Address

London

Alerts

Be the first to know and let us send you an email when தமிழ் சந்தி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share