ESBN 24X7

ESBN 24X7 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ESBN 24X7, News & Media Website, Sri Lanka and, .

🌐 ESBN 24X7 Express News – Your trusted source for breaking news, in-depth analysis, and updates from around the world.

📢 Stay Informed: Bringing you the latest in politics, business, sports, entertainment, and more—24 hours a day, 7 days a week.

டில்ஷி அம்ஷிகாவின் மரணத்திற்கு நீதி கோரி இடம்பெறும் பெற்றோரின் ஆர்ப்பாட்டத்திற்க்கு நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ள  பொலிஸ...
08/05/2025

டில்ஷி அம்ஷிகாவின் மரணத்திற்கு நீதி கோரி இடம்பெறும் பெற்றோரின் ஆர்ப்பாட்டத்திற்க்கு நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ள பொலிஸார் தயாராகியுள்ளனர்.



இரண்டாம் இணைப்பு

கொழும்பு - கொட்டாஞ்சேனை பகுதியில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்ட சிறுமி அம்ஷிக்கு நீதிகோரி நடத்தப்படும் ஆர்ப்பாட்டத்தில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெற்றோர் ஒருவருக்கும் ஏனைய போராட்டக்காரர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

குறித்த பாடசாலையை காட்ட வேண்டாம் என்று குறித்த நபர் கோரியதால் குழப்ப நிலை ஏற்பட்டது.

முதலாம் இணைப்பு

கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் கடந்த 29ஆம் திகதி தவறான முடிவெடுத்த மாணவி டில்ஷி அம்ஷிகாவிற்கு நீதி கோரி கொழும்பில் இன்று(8) மாபெரும் போராட்டமொன்று ஆரம்பமாகியுள்ளது.

குறித்த போராட்ட பேரணி ,பம்பலப்பிட்டி இராமநாதன் மத்திய கல்லூரியிலிருந்து கொட்டாஞ்சேனை வரை செல்லவுள்ளது.

இந்த போராட்டத்தில் பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துக்கொண்டுள்ளனர்.

டில்ஷி அம்ஷிகாவின் மரணத்திற்கு நீதி கோரி இடம்பெறும் பெற்றோரின் ஆர்ப்பாட்டத்திற்க்கு நீர்த்தாரை பிரயோகம் மே.....

பூசா சிறைச்சாலையில் கைதிகளுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் கைதியொருவர் உயிரிழந்துள்ளார்.உயிரிழந்த கைதியோடு அதே அறையிலிருந்த...
04/04/2025

பூசா சிறைச்சாலையில் கைதிகளுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் கைதியொருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த கைதியோடு அதே அறையிலிருந்த வேறு சில கைதிகள் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கூரிய ஆயுதத்தால்...
குறித்த கைதி கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதிலேயே உயிரிழந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.சம்பவத்தில் உயிரிழந்த கைதியின் சடலம் காலி தேசிய வைத்தியசாலையில் பிரேதப் பரிசோதனைகளுக்காக வைக்கப்பட்டுள்ளது.

பூசா சிறைச்சாலையில் கைதிகளுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் கைதியொருவர் உயிரிழந்துள்ளார்.

27/02/2025

தி செல்லார் (The Cellar) – 2022 திரைப்படத்தின் கதை

தி செல்லார் என்பது பிரண்டன் முல்டோனி (Brendan Muldowney) இயக்கிய ஒரு அமானுஷ்ய திகில் திரைப்படம். இதில் முக்கிய கதாபாத்திரங்களாக எலிஷா கத்பர்ட் (Elisha Cuthbert) மற்றும் யோயின் மாக்கன் (Eoin Macken) நடித்துள்ளனர்.

27/02/2025

தி செல்லார் (The Cellar) – 2022 திரைப்படத்தின் கதை

தி செல்லார் (The Cellar) என்பது பிரண்டன் முல்டோனி (Brendan Muldowney) இயக்கிய ஒரு அமானுஷ்ய திகில் திரைப்படம். இதில் முக்கிய கதாபாத்திரங்களாக எலிஷா கத்பர்ட் (Elisha Cuthbert) மற்றும் யோயின் மாக்கன் (Eoin Macken) நடித்துள்ளனர்.

27/02/2025

அஞ்சாமை ..பார்க்க வேண்டிய அற்புதமான படம் மிக சிறந்த இயக்கம் நடிகர்கள் தேர்வு இயக்குனர் சுப்புராம் அவர்களுக்கு வாழ்த்துகள் ❤❤❤❤❤❤

தமிழின் முன்னணி ஊடக குழுமங்களில் ஒன்றான விகடன் குழுமத்தின் இணையதளம் மத்திய அரசால் முடக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி...
16/02/2025

தமிழின் முன்னணி ஊடக குழுமங்களில் ஒன்றான விகடன் குழுமத்தின் இணையதளம் மத்திய அரசால் முடக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்குப் பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

விகடன் குழுமத்தின் இணைய தளமான விகடன்.காம்-ஐ சனிக்கிழமை இரவிலிருந்து வாசகர்கள் பலரால் அணுக முடியாத நிலை ஏற்பட்டது. அந்த நிறுவனத்தின் செயலியும் பெரும்பாலான செல்போன்களில் செயல்படவில்லை.

சில நாட்களுக்கு முன்பாக அந்தக் குழுமம் இந்திய பிரதமர் நரேந்திர மோதியை விமர்சித்து வெளியிட்ட ஒரு கார்ட்டூன் தொடர்பாக பா.ஜ.கவின் மாநிலத் தலைவர் கே.அண்ணாமலையால் சனிக்கிழமையன்று மத்திய அரசுக்குப் புகார் அனுப்பப்பட்ட நிலையில், அன்று மாலையே அந்தத் தளம் செயல்படவில்லை. எனினும் மத்திய அரசிடம் இருந்து இதுவரை தங்களுக்கு முறையான அறிவிப்பு ஏதும் வரவில்லையென விகடன் குழுமம் தெரிவித்துள்ளது.

ஆனால், அமெரிக்கா சென்ற பிரதமரைப் பற்றி இப்படி கார்ட்டூன் வெளியிட்டது தண்டிக்கப்பட வேண்டிய செயல்தானே என்கிறார் பாஜகவின் மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி.
இந்த விவகாரத்தில் என்ன நடந்தது? விகடன் தரப்பு கூறுவது என்ன?

தமிழின் முன்னணி ஊடக குழுமங்களில் ஒன்றான விகடன் குழுமத்தின் இணையதளம் மத்திய அரசால் முடக்கப்பட்டுள்ளதாக செய்த....

இந்தியாவின் டெல்லி ரயில்வே நிலையத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி சுமார் 18 பேர் உயிரிழந்துள்ளதுடன் சுமார் 10 பேர் காயமடைந்த...
16/02/2025

இந்தியாவின் டெல்லி ரயில்வே நிலையத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி சுமார் 18 பேர் உயிரிழந்துள்ளதுடன் சுமார் 10 பேர் காயமடைந்துள்ளனர்.

உலகின் மிகப்பெரிய ஆன்மீக திருவிழாவான மகா கும்பமேளாவில் கலந்துகொள்ளும் நோக்கில் டெல்லி ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருந்தவர்களிடையே இவ்வாறு சனநெரிசல் ஏற்பட்டுள்ளது.

முன்பதிவு செய்யப்படாத ரயில் டிக்கெட்கள் விற்பனை செய்யப்பட்டமை மற்றும் ரயில்களின் தாமதம் என்பன பயணிகளிடையே நெரிசல் ஏற்பட்டமைக்கான காரணமென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவின் டெல்லி ரயில்வே நிலையத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி சுமார் 18 பேர் உயிரிழந்துள்ளதுடன் சுமார் 10 பேர் க...

சென்னை: கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான இதையத்தை திருடாதே தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 2020ஆம் ஆண்டு வெளி...
16/02/2025

சென்னை: கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான இதையத்தை திருடாதே தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 2020ஆம் ஆண்டு வெளியான இத்தொடர் 2 பாகமாக ஒளிபரப்பானது. இதில், நடித்த நவீன் - ஹீமா பிந்து ஜோடியை எல்லோருக்கும் பிடித்து போனது. இதயத்தை திருடாதே தொடரில் இடம்பிடித்த சஹானா கதாபாத்திரம் பலரது மனதையும் கொள்ளையடித்தது என்றே தெரிவிக்கலாம். இதில் ஹீரோயினாக நடித்த ஹிமா பிந்து தற்போது காஞ்சனா 4 படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதயத்தை திருடாதே சஹானா: இதயத்தை திருடாதே சீரியலில் சஹானா என்ற கதாப்பாத்திரம் எனக்கு கிடைத்த அடையாளம் என நடிகை ஹீமா பிந்து அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.தினமும் புது புது விஷயங்களை கற்றுக்கொள்கிறேன் எனவும் அவர் தெரிவித்திருந்தார். இந்த சீரியலில் இடம்பிடித்த காதல் காட்சிகளை கண்டு நானே வியந்து ரசித்திருக்கிறேன் என தெரிவித்தார். அதன் பின்னர், சன்டிவியில் ஒளிபரப்பான இலக்கியா சீரியலில் லீட் ரோலில் நடித்து பிரபலம் ஆனார் பிந்து.

சென்னை: கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான இதையத்தை திருடாதே தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 2020ஆம் ஆண.....

05 இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்ற குடிவரவு குடியகழ்வு அதிகாரி ஒருவர் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.சந்த...
01/02/2025

05 இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்ற குடிவரவு குடியகழ்வு அதிகாரி ஒருவர் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் கடந்த 20ஆம் திகதி பிற்பகல் குடிவரவு திணைக்களத்தின் வெலிசறை தடுப்பு முகாமில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

விசா இன்றி இலங்கையில் தங்கியிருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட முறைப்பாட்டாளரை வெலிசறை குடிவரவு குடியகல்வு நிறுவனத்திலிருந்து விடுவிக்க ஏற்பாடு செய்வதற்காக சந்தேகநபர் இந்த இலஞ்சப் பணத்தைப் பெற்றுக்கொண்டதாக யாழ்ப்பாணம் நல்லூர் வடக்கு பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் குடிவரவு திணைக்களத்தின் வெலிசர தடுப்பு நிலையத்தில் கடமையாற்றும் குடிவரவு அதிகாரி ஆவார்.

மேலும், சந்தேகநபர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
#உள்ளூர் #செய்திகள்

Important இலங்கை உள்ளூர் செய்திகள் இலஞ்சம் பெற்ற குடிவரவு குடியகழ்வு அதிகாரி கைது VMedia January 23, 2025 05 இலட்சம் ரூபா இலஞ்சம் பெ.....

கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று (23.01) மாலை வௌியாகின.WWW.DOENETS.L...
01/02/2025

கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று (23.01) மாலை வௌியாகின.

WWW.DOENETS.LK அல்லது WWW.RESULTS.EXAMS.GOV.LK எனும் இணையத்தள முகவரிக்குள் பிரவேசிப்பதனூடாக பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கடவுச்சொற்களை பயன்படுத்தி பரீட்சை பெறுபேறுகளை நாளை முதல் பதிவிறக்கம் செய்ய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.

புலமைப்பரிசில் பரீட்சையில் 323,900 மாணவர்கள் தோற்றியிருந்தனர்.

இவர்களில் 51,244 மாணவர்கள் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் புள்ளிகளைப் பெற்றுள்ளனர்.

புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் வினாத்தாளின் பல கேள்விகள் பரீட்சைக்கு முன்பதாகவே வௌியானதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் உயர்நீதிமன்றத்திலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இதற்கமைய வினாத்தாள் வௌியான சம்பவம் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட விசேட குழுவின் பரிந்துரைகளுக்கமைய விடைத்தாள் மதிப்பிட்டு பெறுபேறுகளை வெளியிடுமாறு பரீட்சைகள் திணைக்களத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
#உள்ளூர் #செய்திகள்

Important Popular இலங்கை உள்ளூர் செய்திகள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வௌியாகின VMedia January 23, 2025 கடந்த செப்டம்பர் ம...

மருந்துகளின் விலையைக் குறைப்பதற்கு புதிய விலைக் கட்டுப்பாட்டு பொறிமுறையை அறிமுகப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.புதிய மு...
01/02/2025

மருந்துகளின் விலையைக் குறைப்பதற்கு புதிய விலைக் கட்டுப்பாட்டு பொறிமுறையை அறிமுகப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

புதிய முறையின் கீழ் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் மருந்தை விற்பனை செய்யக்கூடிய அதிகபட்ச விலை வரம்புகள் வர்த்தமானியில் வெளியிடப்படும் என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜயமுனி தெரிவித்தார்.

இதன்படி, ஒரு ரூபாய்க்கு இறக்குமதி செய்யப்படும் மருந்தை அதிகபட்சமாக 1 ரூபா 65 சதத்திற்கு விற்பனை செய்ய முடியும்.

மருந்து விலைகளை ஒழுங்குபடுத்தும் அதிகாரங்களை தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்திற்கு மாற்றுவதற்கான விதிமுறைகள் இயற்றப்படும் என்று துணை அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புதிய விதிமுறைகள் விதிக்கப்படுவதால், மருந்துகளின் விலைகள் துறைமுகத்திலேயே நிர்ணயிக்கப்பட வேண்டியிருக்கும் எனவும் நாட்டிற்குள் கொண்டு வரப்படும் ஒவ்வொரு மருந்துப் பொருளுக்கும் விலை கட்டுப்பாடு மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
#உள்ளூர் #செய்திகள்

Important Popular இலங்கை உள்ளூர் செய்திகள் மருந்துகளின் விலையைக் குறைப்பதற்கு புதிய விலைக் கட்டுப்பாட்டு VMedia January 24, 2025 மருந்...

Address

Sri Lanka And

43000

Alerts

Be the first to know and let us send you an email when ESBN 24X7 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share