Nebula Filmotainment

Nebula Filmotainment We NEBULA speaks everything that you see! No Human will be harmed by the content! Sorry If happened!

மதியின் மாதவன் என்பது, கபிலன் பாண்டியனால் எழுதப்பட்ட வரலாற்றுப் புனைவு நாவல். இந்தக் கதையில் இடம்பெற்றுள்ள யாவும் கற்பனி...
04/01/2025

மதியின் மாதவன் என்பது, கபிலன் பாண்டியனால் எழுதப்பட்ட வரலாற்றுப் புனைவு நாவல். இந்தக் கதையில் இடம்பெற்றுள்ள யாவும் கற்பனியானவை. அவர்களின் சூழல்கள் யாவும் கற்பனையானவை! ஆனால், கதை நிகழும் இவ்வுலகில் நுழைந்து, அவர்களது உணர்வுகளோடு ஒன்றி வாழ, உங்களுக்கு ஒரு அழைப்பை விடுக்கிறோம்! மனிதர்கள் தோன்றியக் காலம் தொட்டு அழியாதது என்றாலும், மாறாதது என்றாலும் அது உணர்வுகள்தான். கோவமும், காதலும், அக்கறையும், பரிவும், துரோகமும், வன்மமும், இன்பமும், மரணமும் எந்தக் காலத்திலும் மாறப்போவதும் இல்லை. உண்மையில், எல்லாவற்றையும் போல இவைகளும் பரிணமித்திருக்கிறது. எல்லாவற்றையும் போல இவைகளும் உருமாறி இருக்கிறது....

மதியின் மாதவன் என்பது, கபிலன் பாண்டியனால் எழுதப்பட்ட வரலாற்றுப் புனைவு நாவல். இந்தக் கதையில் இடம்பெற்றுள்ள யா....

அற்புதமான அந்திமாலைப் பொழுது. ஆதவன் அஸ்தமித்துக் கொண்டிருக்கிறான். கடற்கரை மணலில் இருந்த வெப்பம் மெல்ல மெல்ல தாளத் துவங்...
04/01/2025

அற்புதமான அந்திமாலைப் பொழுது. ஆதவன் அஸ்தமித்துக் கொண்டிருக்கிறான். கடற்கரை மணலில் இருந்த வெப்பம் மெல்ல மெல்ல தாளத் துவங்கியது, அந்த மணல் பரப்புக்கு வாட்டிடும் காதலுக்கு ஒப்பான அந்த வெப்பத்தில் இருந்து விடுதலைத் தந்ததுப் போல ஆனது. கடல் நீரில் தன் சாயத்தைக் கதிரவன் கரைத்துச் சென்றதால் அந்த ஆழி சிவப்பாகப் போகிறதும் அந்த குங்குமக் கரைசல் போலத் தரும் காட்சியும் அழகிய நிகழ்வு. நண்டுகள் நிகழ்த்திய நாட்டியமும் வண்டுகள் விடுத்த ரீங்காரமும் அடடா! பலவண்ணப் பட்சிகள் வானில் கானம்பாடி தாந்தம் கூடு நோக்கி சென்றுக் கொண்டிருக்கின்றன....

               அற்புதமான  அந்திமாலைப் பொழுது. ஆதவன் அஸ்தமித்துக் கொண்டிருக்கிறான். கடற்கரை மணலில் இருந்த வெப்பம் ....

“ஆம்! சொப்பனம் தான்!” “அதற்கு ஏன் தீப ஜோதியை நோக்க வேணும்?” என்கையில், “காதல் கனவா என்ன? சீக்கிரம் சொல்லேன்!” என்று ஆர்வ...
04/01/2025

“ஆம்! சொப்பனம் தான்!” “அதற்கு ஏன் தீப ஜோதியை நோக்க வேணும்?” என்கையில், “காதல் கனவா என்ன? சீக்கிரம் சொல்லேன்!” என்று ஆர்வத்தால் பீரிட்டாள் கவியரசி. அது அனைவர் கவனத்தையும் தன்பால் ஈர்த்ததாய் உணர்ந்தாள். "காதல் கனவா? என்று யதார்த்தமாய்த் தான் கேட்டேன்!” என்று ஒரு வகையாய் மழுப்பினாள் கவியரசி. “அப்படித் தெரியவில்லையே கவி!” “சரி! சரி! ஒத்துக் கொள்கிறேன்! காதல் கனவாய் இருந்தால் சுவாரஸ்யம் அதிகம் இருக்கும் என்று நினைத்தேன்! “ “ஆகப் பொழுதுப் போக்கிக் கொள்ளப் பார்க்கிறாய்? அப்படித்தானே?”...

    “ஆம்! சொப்பனம் தான்!”          “அதற்கு ஏன் தீப ஜோதியை நோக்க வேணும்?” என்கையில், “காதல் கனவா என்ன? சீக்கிரம் சொல்ல...

“ஏன்?” “பின்னென்ன மதி? நம்மூர் ஆண்கள் கரைத் திரும்பிக் கொண்டிருப்பார்கள். இந்த வேளையில் குளிக்கக் கடலுக்கு சென்றால், அந்...
04/01/2025

“ஏன்?” “பின்னென்ன மதி? நம்மூர் ஆண்கள் கரைத் திரும்பிக் கொண்டிருப்பார்கள். இந்த வேளையில் குளிக்கக் கடலுக்கு சென்றால், அந்நேரம் பார்த்து அவர்கள் வந்துத் தொலைத்தால் என்ன செய்வது?” என்றால் மல்லிகா. “அதுவும் சரிதான் மதி! அப்படி அவர்கள் வந்துவிட்டால் ஆடை மாற்றக் கூட அவகாசம் இருக்காது!” என்று மணிமேகலை அதைத் தடுக்க, மதியழகியின் விழிகள் கொஞ்சம் கொஞ்சலாகப் பார்க்கிறது. கல்லையும் கரைக்கும் அந்தக் கண்களால் இந்தப் பெண்களைக் கரைக்க முடியாதா என்ன? கரைந்துதான் போயினர். நீரிலிட்ட உப்பு போலவும் கரைந்தனர், காற்றிலிட்ட கற்பூரம் போலவும் கரைந்தனர்....

         “ஏன்?”          “பின்னென்ன மதி? நம்மூர் ஆண்கள் கரைத் திரும்பிக் கொண்டிருப்பார்கள். இந்த வேளையில் க…

அவள் கண்டதாய் சொல்லியக் கனவு, அவள் கண்ணெதிரே நடக்கிறது. ஒரு வெள்ளைக் குதிரையோடு, கருநிற தேகத்தோடு பொன்னாலான ஆபரணங்கள் சி...
04/01/2025

அவள் கண்டதாய் சொல்லியக் கனவு, அவள் கண்ணெதிரே நடக்கிறது. ஒரு வெள்ளைக் குதிரையோடு, கருநிற தேகத்தோடு பொன்னாலான ஆபரணங்கள் சில அணிந்த ஒரு வீரன், தன் கைகளில் உதிரம் சிந்தும் ஈட்டியுடன் வேகமாக சென்றான். அவனது அந்த வேகமும் பாவனையும் வீரத்தின் உருவமாய் சென்றான் என்றே சொல்லத் தூண்டுகிறது. மின்னலோடுப் போட்டியிட்டு வெல்லும் அளவுக்கு அவன் வேகம் இருந்ததாய் அவர்களுக்கு எண்ணம். அவர்களின் கண்களை விட்டு மறையும் வரை நீரில் இருந்தவர்கள், திமிங்கலம் மூச்சு வாங்க மேலெழும்புவதுப் போல மேலே வந்து இளைப்பாறினர். கடல் கன்னிகள் நீரிலிருந்து எழுந்து தரிசனம் தந்ததுப் போலவும் இருந்தது....

              அவள் கண்டதாய் சொல்லியக் கனவு, அவள் கண்ணெதிரே நடக்கிறது. ஒரு வெள்ளைக் குதிரையோடு,  கருநிற தேகத்தோடு பொ...

அந்த நாவாயில் இருந்தாரெல்லாம் புங்கைப்பட்டினத்து ஆண்கள்தான். அந்த படகு ஒன்றன்பின் ஒன்றாக வந்துக் கொண்டிருந்தது. முன்னிரு...
04/01/2025

அந்த நாவாயில் இருந்தாரெல்லாம் புங்கைப்பட்டினத்து ஆண்கள்தான். அந்த படகு ஒன்றன்பின் ஒன்றாக வந்துக் கொண்டிருந்தது. முன்னிருந்தப் படகில் இருந்துக் கரையை நோட்டமிட்டபடி அமர்ந்திருந்தான் ஒரு வாலிபன். அவன் பெயர் கடலரசன். இயல்பாகவே இருக்கும் அவனிடம் மாலுமிக்கு ஒப்பான சுபாவங்களை எளிதில் காண முடிந்தது. அவன் கண்களில் விழுந்தாள் மதி. “ராஜேந்திரா… அங்குப் பார்! உன் அற்புதக் கடல்கன்னி கரை ஒதுங்கிக் காத்திருக்கிறாள்! வால் எதுவும் இல்லையே! எப்படி அவள் உன் கண்ணுக்கு மட்டும் கடல் கன்னியாக விழுகிறாள் என்று குழம்பிப் போறேன்!” என்றான். “கத்திதொலைக்காதேடா! தலைவர் காதில் விழுந்தால், எந்த சுறாவிடமிருந்து உன்னைப் போராடி மீட்டேனோ, அதே சுறாவிற்கு நம்மை இரையாக்கிவிடுவார்!” என்றான் …...

               அந்த நாவாயில் இருந்தாரெல்லாம் புங்கைப்பட்டினத்து ஆண்கள்தான். அந்த படகு ஒன்றன்பின் ஒன்றாக வந்துக் ....

மற்றோருப்பக்கம் விஜயனும், மாறனும் குதிரையில் சென்றுக்கொன்டிருந்தனர். முற்றிலுமாகத் தங்கள் வேகத்தைக் குறைத்துக் கொண்டனர்....
04/01/2025

மற்றோருப்பக்கம் விஜயனும், மாறனும் குதிரையில் சென்றுக்கொன்டிருந்தனர். முற்றிலுமாகத் தங்கள் வேகத்தைக் குறைத்துக் கொண்டனர். ஏதோ சிந்தனையிலேயே வந்துக் கொண்டே இருக்கும் விஜயனை கவனித்தான் மாறன். அவன் மனதில் உள்ளதை கேட்பதா வேண்டாமா? என்றே அவனுக்கு விளங்கவில்லை. தன் மனதில் இருந்த உறுத்தலை வெளிப்படையாகக் கேட்க எண்ணினான். “நெடுநேரமாக கவனிக்கிறேன்! வழக்கத்தைவிட இன்று அமைதியாக இருக்கிறாயே? என்ன யோசனை?” “உண்மைதான் மாறா! நேற்றையக் கனவை நினைத்துதான் யோசனையாக இருக்கிறது! என்றான் விஜயன். “கனவா? விவரித்தால் தெரியப்போகிறது!” என்றுக் கேட்க, அவனும் மெல்ல அமைதி ஆனான். ‘சொல்வது நல்லதுதான்!’ என்ற எண்ணத்தோடு சொல்ல ஆயத்தமானான்....

              மற்றோருப்பக்கம் விஜயனும், மாறனும் குதிரையில் சென்றுக்கொன்டிருந்தனர். முற்றிலுமாகத் தங்கள் வேகத்த.....

சிந்தாமணி ரத்தினாபுரி சாம்ராஜ்யத்தினை ஆட்சி செய்து வந்த சீவலப்பேரிகன் என்பாரின் மகள். சீவலப்பேரிகனை மணம் புரிந்தவள் தமயந...
04/01/2025

சிந்தாமணி ரத்தினாபுரி சாம்ராஜ்யத்தினை ஆட்சி செய்து வந்த சீவலப்பேரிகன் என்பாரின் மகள். சீவலப்பேரிகனை மணம் புரிந்தவள் தமயந்தி. சிந்தாமணியைப் பிரசிவித்து ஆறு ஆண்டுகள் வரை வளர்த்த அவளால் மேல் வரும் காலத்தில் அவளை சீராட்டி வளர்க்க முடியவில்லை. கடுமையானக் குளிர்க் காய்ச்சலால் அவதிப் பட்டு, நாளுக்கு நாள் உடல் இளைத்து, மூச்சு விடுவதில் அவதிப் பட்டு, வலியோடு மண்ணை விட்டு சென்றாள். அது அவனுக்கு மிகப்பெரிய சோகத்தை அளித்தது. சிறு வயதிலேயே அன்னையை இழந்தவள்,முழுக்க முழுக்க அரண்மனைப் பெண்கள் மற்றும் தந்தையின் நேரடி அன்பிற்குள் வந்து விழுந்தாள்....

              சிந்தாமணி ரத்தினாபுரி சாம்ராஜ்யத்தினை ஆட்சி செய்து வந்த சீவலப்பேரிகன் என்பாரின் மகள். சீவலப்பேரிக....

சற்று நேரத்துக்கெல்லாம் சந்திரவர்மன் ஜோசியரை அழைத்துக் கொண்டு வந்தான். வாசலில் நின்றிருந்த அரசர், ஜோசிரைக் கண்டதும் வரவே...
04/01/2025

சற்று நேரத்துக்கெல்லாம் சந்திரவர்மன் ஜோசியரை அழைத்துக் கொண்டு வந்தான். வாசலில் நின்றிருந்த அரசர், ஜோசிரைக் கண்டதும் வரவேற்று வணங்கினார். “மங்களம் கொண்டு நீடூழி வாழ்க!” என்று வாழ்த்துரை சொன்னார். “அரசே! உமக்கும் இந்நாட்டுக்கும் ஒரு இளவரசன் கிடைத்ததில் மிகப் பெரிய மகிழ்ச்சி அடைந்தேன்! சிவனின் அருளால் காலம் மறக்காத மகனாக இவன் நிலைக்க வேணும்!” என்று ஆசி வழங்கினார். மனம் மகிழ்ந்து அவரை உள்ளே அழைத்து சென்றார். ஜோசியரைக் கண்டதும் எழுந்து மரியாதை செய்தாள் சிந்தாமணி. “மகளே! அமர்ந்துக்கொண்டு மரியாதை செய்தாலேப் போதுமம்மா! ஆண்டவனைத் தவிற இந்த உலகில் எல்லோரும் சமமே!” என்றார்.அவரதுக் கையில் உள்ளக் கமண்டலம், கண்ணில் உள்ள பக்தி, முகத்தில் உள்ள தேஜஸ், கருப்பு வெள்ளையில் நீண்டு வளர்ந்த தாடி என எல்லாமே அவருக்கு மிகக் கச்சிதமாய் இருந்தது....

             சற்று நேரத்துக்கெல்லாம் சந்திரவர்மன் ஜோசியரை அழைத்துக் கொண்டு வந்தான். வாசலில் நின்றிருந்த அரசர், ஜ....

இரவு வந்தது. மன்னனும் மகாராணியும் பஞ்சணையும் உறங்கிக் கொண்டிருந்தனர். இல்லை! இல்லை! சிந்தாமணி விழித்துதான் இருக்கிறாள். ...
04/01/2025

இரவு வந்தது. மன்னனும் மகாராணியும் பஞ்சணையும் உறங்கிக் கொண்டிருந்தனர். இல்லை! இல்லை! சிந்தாமணி விழித்துதான் இருக்கிறாள். எழுந்தாள். மன்னன் ஆழ்ந்து உறங்குவதைக் கண்டு சற்று ஆறுதல் அடைந்தாள். அந்த நிம்மதிப் பெருமூச்சின் ஆழம் நமக்கு நன்குப் புரியும். சத்தமில்லாது எழுந்து அந்தத் தொட்டிலில் இருந்தக் குழந்தையைப் பார்த்தாள். அந்தக் குழந்தை அழகாய் உறங்கிக் கொண்டிருக்கிறது. தூக்கிக்கொண்டு ஒரு பட்டுத்துணியால் போர்த்தி, தன் மார்போடு அணைத்துக் கொண்டாள். அப்போது அவன் நெளிந்த விதம் அவளுக்கு சுகத்தோடுக் கூடிய கஷ்டம் தந்தது. யாருக்கும் தெரியாமல் சத்தமின்றி கோட்டையை விட்டு வெளியேறினாள்....

             இரவு வந்தது. மன்னனும் மகாராணியும் பஞ்சணையும் உறங்கிக் கொண்டிருந்தனர். இல்லை! இல்லை! சிந்தாமணி விழித்.....

‘முன்னப் பின்ன செத்தால்தான் சுடுகாடுத் தெரியும்!’ என்றப் பழமொழித் தவறென்று அவளுக்குத் தோன்றியது. தவறு என்பதைக் காட்டிலும...
04/01/2025

‘முன்னப் பின்ன செத்தால்தான் சுடுகாடுத் தெரியும்!’ என்றப் பழமொழித் தவறென்று அவளுக்குத் தோன்றியது. தவறு என்பதைக் காட்டிலும் பொய் என்றேத் தோன்றியது. அப்பாதை அவளை சுடுக்காட்டுக்கே அழைத்து சென்றது. அப்போது அவள் அங்குக் கண்டக் காட்சியை எம்மால் விவரிக்காமல் இருக்க முடியாது. ஐம்பதுக்கும் மேற்பட்ட மண் மேடுகளும், நடுகைக் கல்லும் இருந்தது. அந்த நடுகைக் கற்களில் சில வார்த்தைகள் வெட்டப் பட்டும் இருந்தன. மற்றொருப் பக்கம் சாம்பல் மேடுகளும், விறகுக் கட்டைகளும் கிடந்தன. அங்கிருந்த மண்பரப்பில் சாணம் எல்லாம் வரட்டியாய்க் காய்ந்துக் கொண்டிருந்தது. மற்றொரு முனையில், ஒருத் தீ ஜுவாலை அவள் கண்ணில் பட்டது....

             ‘முன்னப் பின்ன செத்தால்தான் சுடுகாடுத் தெரியும்!’ என்றப் பழமொழித் தவறென்று அவளுக்குத் தோன்றியது. தவ....

அவள் ஏன் அப்படி ஓடினாள் என்பதும் விளங்கவில்லை. சிலநொடிக்குள்ளாகவே வெளியே வந்தாள் கல்யாணி. அவள் கைகளில் மஞ்சளும் குங்குமம...
04/01/2025

அவள் ஏன் அப்படி ஓடினாள் என்பதும் விளங்கவில்லை. சிலநொடிக்குள்ளாகவே வெளியே வந்தாள் கல்யாணி. அவள் கைகளில் மஞ்சளும் குங்குமமும் இருந்தது. “மகாராணி! நீங்கள் இந்த மஞ்சளையும், குங்குமத்தையும் குழந்தையின் நெற்றியில் சூட்டி, நல்லதொருப் பெயர் வைக்க வேணும்!” என்றாள். சிந்தாமணி மனம் உருகிப்போனாள். கல்யாணியின் இந்த நல்லவிதமான நடவடிக்கைகளும், வேலனிடம் இருந்த அளப்பறியா மரியாதையும் அவளுக்குத் தன் மகன் மீதான ஐயத்தை முற்றிலுமாகத் தகர்த்தது. குழந்தையின் அந்த சிறிய நெற்றியில் மஞ்சள் சூட்டி, மேலால் குங்குமம் வைத்து, மென்மையாய் அவன் செவிகளில், “வெற்றியைக் குவிக்கும் உதய சூரியானாய் இருக்கும் இவனுக்கு ஆண்டவனை வேண்டி வைக்கும் பெயர் - விஜயபிரபாகரன்.” என்றாள்....

          அவள் ஏன் அப்படி ஓடினாள் என்பதும் விளங்கவில்லை. சிலநொடிக்குள்ளாகவே வெளியே வந்தாள் கல்யாணி. அவள் கைகளில்...

Address

Nila Fusing Complex, Third Floor, Kumaran Colony
Anna Nagar
641602

Alerts

Be the first to know and let us send you an email when Nebula Filmotainment posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nebula Filmotainment:

Share