30/10/2024
பெரியார் அம்பேத்கர் கருத்தியல் பாதைக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்த *த வெ க தலைவர் விஜய்* அவர்களைப் பாராட்டி பகுஜன் திராவிட கட்சியின் தேசியத் தலைவர் *சர்தார் ஜீவன் சிங்* அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை... ( புதுடெல்லி அக்டோபர் 29, 2024).
*தமிழ் தேசியம் என்ற பெயரில் சமீப காலமாக சிந்திக்கும் திறனற்று இருந்த இளைஞர்களுக்கு, திடீரென ஒரு திருப்பு முனையாக* நடிகர் விஜயின் அரசியல் முன்னெடுப்பு இருக்கிறது...
இது மூலம் *பெரியார் - அம்பேத்கரின் கருத்தியல் பாதைக்கு* அடித்தளம் அமைத்து கொடுத்த விஜய்யை பாராட்டுகின்றேன், வழ்த்துகின்றேன்.
உணர்ச்சியின் அடிப்படையில் வழித் தவறிச் சென்ற *ஆட்டு மந்தைகளை, மீண்டும் தாங்கள் சிங்க கூட்டம் என அறிவதற்கான அங்கன்வாடிப் பள்ளியாகவே* தொடர்ந்து விஜயின் அரசியல் பள்ளி இருக்கும், முடிவில் நாங்கள் நடத்துகின்ற *பகுஜன் திராவிட அரசியல் பல்கலைக்கழகத்தில் சங்கமம் ஆவார்கள்* என்கின்ற முழுமையான நம்பிக்கை எனக்கு இருக்கின்றது
-சர்தார் ஜீவன் சிங்
தேசியத் தலைவர்
பகுஜன் திராவிட கட்சி