17/07/2025
# *நாம்_ஏன்_பிறந்தோம்* ?
நமது செயல்பாடுகள் புண்ணியங்களாகவும் பாவங்களாகவும் பதிவாகும் பரீட்சைகளமே இவ்வுலகம். அதில் நாம் வெற்றியடைவதே நம் வாழ்வின் நோக்கமாகும். அதற்காக இறைவன் தந்த கையேடுதான் திருக்குர்ஆன் ஆகும்.
*தீர்ப்பு நாள்:*
தேர்வு என ஒன்று நடத்தப்பெற்றால் அதற்கான தீர்ப்பு என்று ஒன்று உண்டல்லவா... அத்தீர்ப்பு பற்றி இவ்வாறு கூறுகிறான்:
3:185. _ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்; அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்;. எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ. அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்;. இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை._
ஆம், மரணத்தில் இருந்து எப்படி யாரும் தப்பமுடியாதோ அதைப் போலவே அதற்குப்பின் வருவதில் இருந்தும் யாரும் தப்பமுடியாது. இங்கு வினைகளை விதைத்த நாம் அவற்றின் விளைவுகளை அனுபவிக்காமல் போய்விடுவோமா? இவ்வுலகில் அநியாயங்கள் செய்தவர்கள் அதற்குரிய தண்டனைகள் பெறாமலே தப்பித்து விடுவதையும் பிறருக்காக தியாகங்கள் செய்தவர்கள் அதற்குரிய பரிசைப் பெறாமலே மறைந்து விடுவதையும் நாம் காண்கிறோம். இறைவன் அவற்றை அப்படியே விட்டு விடுவானா?
ஆம் அன்பர்களே, நீதியின் வேட்கையை நிறைவு செய்வதற்காகவே வருகிறது இறுதித்தீர்ப்பு நாள்! நாமும் நமக்கு முன்சென்றோரும் நமது பின்தோன்றல்களும் என அனைவரும் மரணத்திற்குப் பின் மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பபடுவோம். அதிலிருந்து யாரும் தப்பமுடியாது.
78:17,18. _நிச்சயமாகத் தீர்ப்புக்குரிய நாள், நேரம் குறிக்கப்பட்டதாகவே இருக்கிறது. ஸூர் (எக்காளம்) ஊதப்படும் அந்நாளில் நீங்கள் அணிஅணியாக வருவீர்கள்._
அந்நாளில் பயங்கரமான நிகழ்வுகள் நடக்கும் என்று திருக்குர்ஆன் எச்சரிக்கிறது.தன் பெற்றோர், பிள்ளைகள், உறவினர், வாழ்க்கைத்துணைகள், நண்பர்கள் என பலரும் இருந்தாலும் யாரும் யாருக்கும் உதவி செய்யமாட்டார்கள். அந்நாளின் அமளியில் இருந்து தன்னைத் தற்காத்துக்கொள்வதிலேயே ஈடுபட்டிருப்பார்கள்.
_80:33. _ஆகவே, (யுக முடிவின் போது காதைச் செவிடாக்கும் பெருஞ் சப்தம் வரும் போது -_
80:34. _அந்த நாளில் மனிதன் விரண்டு ஓடுவான் - தன் சகோதரனை விட்டும் -_
80:35. _தன் தாயை விட்டும், தன் தந்தையை விட்டும்;_
80:36. _தன் மனைவியை விட்டும், தன் மக்களை விட்டும்-__
80:37. _அன்று ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவன் (அவல) நிலையே போதுமானதாயிருக்கும்_ .
*பதிவேடுகள் சாட்சி கூறும் நாள்:*
நமது செயல்கள் அனைத்தும் இன்று பதிவாகின்றன. நம்மைச்சுற்றி எழும் ஒலி, ஒளி அலைகள் ஏற்படுத்தும் பதிவுகள் ஒருபுறம், நம்மைக் கேட்காமலே நமது மூளை செய்யும் பதிவுகள் ஒருபுறம் என பதிவுகளுக்குப் பஞ்சமில்லை என்பது தெளிவு. நமது ஒவ்வொருவரது வாழ்வின் அம்சங்களும் அணுவணுவாக அன்று வெளியிடப்படும்.
99:7,8. _எனவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அதனை அவர் கண்டு கொள்வார். அன்றியும், எவர் ஓர் அணுவளவு தீமை செய்திருந்தாலும், அதனையும் அவர் கண்டு கொள்வார்._
மேலும் அறிய
https://www.quranmalar.com/2014/05/blog-post_15.html
---------------+-------------
இஸ்லாம் என்றால் என்ன? முஸ்லிம் என்றால் யார்?
http://quranmalar.blogspot.com/2012/10/blog-post_25.html
அல்லாஹ் என்றால் யார்?
http://quranmalar.blogspot.com/2012/10/blog-post_8.html
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
http://quranmalar.blogspot.com/2012/11/blog-post_24.html
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!
http://quranmalar.blogspot.com/2015/07/blog-post_25.html
இதைப் படிக்காவிட்டால் இழப்பு! பேரிழப்பு!
http://quranmalar.blogspot.com/2012/10/blog-post_31.html