09/08/2024
*மரணத்தைவிட கொடூரமான விஷயம் என்னவென்று தெரியுமா?*
*கவிஞர் வாலி அவர்கள் சொன்னது கீழே...*
*வாழ்ந்து கெட்டவர்கள். வாழ்வைத் தொடர நேரும் அவலம். அதைவிடக் கொடூரமான விசயம் எதுவுமில்லை.*
*கவிஞர் வாலி பதிந்த சில சம்பவங்கள்.*
*"அடக்கமாகும் வரை அடக்கமாக இரு" என்று உணர்த்தும் நினைவுச் சின்னங்கள்.*
👌இந்தக் கடிதம் கொண்டுவரும் பையனிடம் இருபதோ முப்பதோ கொடுத்து அனுப்பினால் நலமாயிருக்கும்..!’
👌இப்படி ஒரு கடிதத்துடன் என் வீட்டிற்கு ஒரு பையன் வரும் போதெல்லாம், எனக்கு வியர்த்துக் கொட்டும்.....
👌எவ்வளவு பெரிய எழுத்தாளர்....
👌எப்படியிருந்தவர்.. அவருக்கா இப்படி ஒரு சிரமம்..?
👌ஒரு கம்பெனியில் பாட்டு 'கம்போஸிங்’. எம்.எஸ்.வி-யுடன் அமர்ந்திருக்கிறேன்....
👌கம்பெனி மாடியில் குடியிருக்கும் ஒருவர் 'ஹாய் வாலி ..!’ என்று இறங்கி வருகிறார்....
👌சிரிக்கச் சிரிக்க அளவளாவி விட்டு.....
👌வாலி..! உன் டிரைவரை விட்டு, ஒரு பாக்கெட் 'பர்க்லி’ சிகரெட் வாங்கிண்டு வரச் சொல்லேன்.....
👌என்னோட பிராண்ட் 555 வாங்க இப்பெல்லாம் வசதியில்லே என்றார் ..!''
👌எவ்வளவு பெரிய நடிகர்..!
👌எம்.ஜி.ஆர், சிவாஜி படங்களில் ....
👌அவர்களை விட அதிகம் சம்பளம் வாங்கியவர்!
👌படுக்கையறைக்கே கார் வருகிற மாதிரி பங்களா கட்டியவர்!
👌எங்கே போனது அந்த வாழ்வும் வளமும்..?
👌என் வீட்டு வாசலில் ஒரு டாக்ஸி.
ஒரு நடிகை.
👌ஒரு காலத்தில் தமிழ்த் திரையுலகின் முடிசூடா அரசி.
👌என்னைப் பார்க்க வந்தவர்,...
👌'வாலி சார்.. எனக்கு ஒரு நாடகம் எழுதிக் கொடுங்க. ஒரு ட்ரூப் வெச்சு, நடத்தலாம்னு இருக்கேன்' என்று மெல்லிய குரலில் சொன்னார்....
👌சென்னை எழும்பூர் ரயில் நிலையம். சிமென்ட் பெஞ்சில் ஒருவர் அமர்ந்திருக்கிறார்.
👌இன்றைய தலைமுறைக்கு அவரைத் தெரியவில்லை. நான் கவனித்து விட்டேன்.
👌ஓடிப் போய் அவரருகே சென்று, 'நமஸ்காரம் அண்ணா..! நானும் உங்க மாதிரி திருச்சிக்காரன்தான்.'
👌'இப்போ, சினிமாவில பாட்டு எழுதிண்டிருக்கேன். என் பேரு வாலி’ என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, அவரை வணங்குகிறேன்.
👌ஓ நீங்கதான் அந்த வாலியா..?’ என்று என் கைகளைப் பற்றுகிறார்.
👌அவர் தொடமாட்டாரா என்று தமிழர்கள் ஏங்கித் தவமிருந்த காலம் ஒன்று உண்டு.
👌இன்று அவர் என்னைத் தொடுகிறார்.
👌நான் சிலிர்த்துப் போகிறேன்.
👌அவர் தொட்டதால் அல்ல.
👌எந்த ரயில் நிலையத்தில் அவர் ரயிலிலிருந்து இறங்க விடாமல் மக்கள் அலை மோதினார்களோ...
👌அங்கே கவனிக்க ஆளில்லாமல் தனியாக அவர் அமர்ந்திருந்த நிலையைப் பார்த்து....
👌காலம் எப்படியெல்லாம் தன் ஆளுமையைக் காட்டுகிறது...
*எண்ணிப் பார்க்கிறேன் அந்தப் பழைய நிகழ்வுகளை:-*
👌கடிதம் அனுப்பிப் பணம் கேட்டவர் யார் தெரியுமா?
👌கண்ணகிக்கு உயிர் கொடுத்த, உலகப் புகழ் உரையாடல்களை எழுதிய, திரு.இளங்கோவன்.
👌என்னிடம் சிகரெட் கேட்டவர் யார் தெரியுமா?
👌மாடி வீட்டு ஏழையான திரு.சந்திரபாபு அவர்கள்.
👌நாடகம் எழுதித் தரக் கேட்டவர் யார் தெரியுமா?
👌நடிகையர் திலகம் திருமதி.சாவித்திரி அவர்கள்.
👌எழும்பூர் ரயில் நிலையத்தில் எவர் கவனத்தையும் ஈர்க்காமல் அமர்ந்திருந்தவர்
யார் தெரியுமா?
👌தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் டூப்பர் ஸ்டார் -
திரு. எம்.கே. தியாகராஜ பாகவதர்.
👌இவர்களை விடவா நான் மேலானவன்?
👌அன்று முதல் நான்,
*"நான்" இல்லாமல் வாழப் பயின்றேன்.!*
👌எதுவும் மரணம் வரைதான்.
👌இதுதான் மனித வாழ்க்கை.*
👌இருந்தாலும் வாழ்ந்து கெட்டவர்களின் துயரம் மரணத்தைவிடக் கொடூரமானது.
👌சமயங்களில் மரணம்தான் விடுதலையோ என்று ஏங்க வைத்து விடுமளவு குரூரமானது....
*ஆம் வாழ்ந்தவனின் நினைவுகள்போதும் அவனை வறுமையில் கொல்ல....*
👌இருக்கும் வரை ......
👌பிறர் மனம் வருந்த நடக்காதீர்கள்...
👌முடிந்தவரை உதவி செய்யுங்கள்...
👌முதியவர்களிடம் கனிவு காட்டுங்கள்...
👌இன்று நாம் செய்வது நாளை நமக்கு கிடைக்கும்...
👌மனதில் கொள்ளுங்கள்....
👌மகிழ்ச்சியாக வாழுங்கள்....
👌என்றும் உங்கள் நண்பன்....