Thamizh App

Thamizh App உத்வேகம், தன்னம்பிக்கை , சிரிப்புடன் சேர்ந்து சிந்திக்க வைக்கும் கதைகள்
(1)

29/10/2025

பொறாமையால் போட்டுக் கொடுக்கப்பட்ட அமைச்சர்...

28/10/2025

மனைவியின் நாய்...

27/10/2025

பால் குடிக்க சென்று மாட்டிக்கொண்ட எலிகள்...

தோட்டக்காரனின் அடி.............ஒரு ஜென் ஆசிரமம். பல மாணவர்கள் அங்கே தங்கிப் பயின்று வந்தார்கள். தினமும் காலை 11 மணிக்குத...
26/10/2025

தோட்டக்காரனின் அடி...
.
.
....
.
.
..

ஒரு ஜென் ஆசிரமம். பல மாணவர்கள் அங்கே தங்கிப் பயின்று வந்தார்கள். தினமும் காலை 11 மணிக்குத் தியான வகுப்பு. சுமார் ஐம்பது மாணவர்கள் ஒரு பெரிய மண்டபத்தில் அமர்ந்து கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் தியானம் செய்வார்கள். இந்த வகுப்பின் போது சில மாணவர்கள் தூங்கி விடுவது உண்டு. எப்போதாவது குறட்டைச் சத்தம் கூடக் கேட்கும். இதனால் எரிச்சலடைந்த குருநாதர், தன்னுடைய தோட்டக்காரனை அழைத்தார். அவன் கையில் ஒரு சின்னக் குச்சியைக் கொடுத்தார். தம்பி, உன்னுடைய வேலை, இந்த மாணவர்களைக் கவனிப்பது. யாராவது தூங்கி வழிவது போல் தெரிந்தால், அவர்களுடைய முதுகில் இந்தக் குச்சியால் ஒரு முறை தட்டு. விழித்துக் கொள்வார்கள், தியானத்தைத் தொடர்வார்கள். புரிந்ததா? புரிஞ்சதுங்கய்யா என்றான் அந்தத் தோட்டக்காரன். அதன்படி தினந்தோறும் மாணவர்களைக் கூர்ந்து கவனித்து, தூங்குபவர்களை உடனுக்குடன் எழுப்பி விட்டுக் கொண்டிருந்தான் அவன். வருடக்கடைசியில், அந்த ஐம்பது மாணவர்களின் படிப்பு முடிவடைந்தது. எல்லோரையும் வழியனுப்பும் நேரம். அப்போது ஒரு மாணவன் கேட்டான். குருவே, எங்கள் வகுப்பில் தியானத்தில் அதிகக் கவனமும் தேர்ச்சியும் பெற்றது யார்? குருநாதர் அரை விநாடியும் யோசிக்காமல் பதில் சொன்னார். சந்தேகமென்ன? அந்தத் தோட்டக்காரன் தான் என்றார்

26/10/2025

தோட்டக்காரனும் மாணவர்களும்...

26/10/2025

பூப்பூக்கும் காய் காய்க்கும் ஆனால் பழம் பழுக்காது.
fans

10 பேர் சேர்ந்து செய்த காரியம்......................ஒரு ஊரில் பத்து விவசாயிகள் இருந்தார்கள். ஒரு நாள் அவர்கள் தத்தம் நில...
25/10/2025

10 பேர் சேர்ந்து செய்த காரியம்...
.
.....
.
...
.......
..

ஒரு ஊரில் பத்து விவசாயிகள் இருந்தார்கள். ஒரு நாள் அவர்கள் தத்தம் நிலங்களில் உழவு வேலை செய்து கொண்டிருந்தார்கள். அப்பொழுது வானம் இருட்டிக் கொண்டு வந்தது. பயங்கர மின்னலுடன் இடி இடித்தது. பயந்து போன அவர்கள் பக்கத்தில் இருந்த ஒரு பாழடைந்த மண்டபத்தில் ஓடி ஒளிந்து கொண்டனர். வெகுநேரமாகியும் மின்னல் வெட்டுவதும் இடி இடிப்பதும் நிற்கவி ல்லை. அவற்றின் உக்கிரம் வேறு அதிகரித்துக் கொண்டே போனது. பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்த விவசாயிகளில் ஒருவன் 'நம்மிடையே ஒரு மகாபாவி இருக்கிறான். அவனைக் குறி வைத்துத்தான் கடவுள் இடியையும் மின்னலையும் ஏவியிருக்கிறார். அந்தப் பாவியை வெளியே அனுப்பிவிட்டால் மற்றவர்கள் பிழைத்துக் கொள்ளலாம்' என்று சொன்னான். மற்றவர்கள் இதனை ஆமோதித்தார்கள். இத்தனை பேரில் அந்தப் பாவியை எப்படி அடையாளம் கண்டு கொள்வது என்று விவாதம் நடந்தது. விவாதத்தின் முடிவில் தீர்ப்பைக் கடவுளிடமே விட்டு விடுவது என்று முடிவாயிற்று. அதன் படி அனைவரும் தத்தம் தொப்பிகளைக் கையில் பிடித்துக் கொண்டு தொப்பியை மழையில் நீட்டுவது என்று முடிவாயிற்று. அனைவரும் தத்தம் தொப்பிகளை மழையில் நீட்டினர். பயங்கரமான இடி முழக்கத்துடன் ஒரு மின்னல் வெட்டியது. அதில் ஒரு விவசாயியின் தொப்பி மட்டும் எரிந்து சாம்பலாகியது. மற்ற ஒன்பது விவசாயிகளும் ”இவன்தான் பாவி. இவனை முதலில் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளு" என்று கத்திக் கொண்டே அவன் மேல் பாய்ந்தனர். அந்த விவசாயி கெஞ்சிக் கதறி தான் அப்பாவி என்று மன்றாடினான். மற்றவர் யாரும் காதில் போட்டுக் கொள்ளவில்லை. அவனை பலவந்தமாகக் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளினர். அவன் கதறிக் கொண்டே மழையில் ஒடினான். அப்போது அதி உக்கிரமாக ஒரு மின்னல் தாக்கி இடி இடித்தது. ஒடிக்கொண்டிருந்த விவசாயி அதிர்ச்சியில் உறைந்து நின்று விட்டான். சற்று நேரத்தில் நிலைக்குத் திரும்பி மண்டபத்தைத் திரும்பிப் பார்த்தான். மண்டபத்தில் இடி விழுந்து நொறுங்கிக் கிடந்தது. ஒரு புண்ணியவானின் புண்ணிய பலத்தில் தப்பித்திருந்த ஒன்பது விவசாயிகளும் அவனை வெளியே தள்ளிப் பாதுகாப்பை இழந்து பரிதாபமாகக் கருகிச் செத்துப் போய் விட்டனர்

25/10/2025

ஒருவனை கொலை செய்ய எண்ணிய 9 விவசாயிகள்...

எல்லாவற்றையும் அனுபவித்து சலித்துப் போன இளைஞன்....,.........ஒரு இளைஞன், ஒரு ஜென் குருவிடம் வந்தான். அவன் எல்லாவற்றையும் ...
24/10/2025

எல்லாவற்றையும் அனுபவித்து சலித்துப் போன இளைஞன்..
..

,
......

..

.

ஒரு இளைஞன், ஒரு ஜென் குருவிடம் வந்தான். அவன் எல்லாவற்றையும் அனுபவித்து சலித்து விட்டதால் ஜென் குருவிடம் வந்து, ஐயா எனக்கு உலகம் சலித்து போய் விட்டது. உங்களிடம் சீடனாய் சேர விரும்புகிறேன் என கேட்டான். குரு "எப்போதாவது நீ உன்னை முழுமையாக மறந்து போகும் அளவிற்கு ஆர்வத்துடன் ஆழமாக எதிலாவது ஈடுபட்டதுண்டா என கேட்டார். இளைஞன் சிந்தித்து விட்டு ஆமாம், சதுரங்கத்தில் மட்டுமே அது நடந்துள்ளது. சதுரங்க விளையாட்டில் எனக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. எனக்கு அது மிகவும் பிடிக்கும். எனக் கூறினான். குரு... "நீ காத்திரு" எனக் கூறி விட்டு அவர் தன் உதவியாளனை அழைத்து பணிரெண்டு வருடங்களாக மடாலயத்தில் தியானம் செய்து கொண்டிருக்கும் ஒரு துறவியை சதுரங்க அட்டையோடு அழைத்து வரும்படி கூறினார். சதுரங்க அட்டை கொண்டு வரப்பட்டது. துறவி வந்தார். அவருக்கு சிறிது சதுரங்கம் தெரியும், ஆனால் சதுரங்கம் அனைத்தையும் மறந்து விட்டார். குரு. அவரை பார்த்து "துறவியே கேள். இது ஒரு ஆபத்தான விளையாட்டாக இருக்கப் போகிறது. நீ இந்த இளைஞனால் தோற்கடிக்கப் பட்டால், இதோ இந்த வாளால் நான் உனது தலையை வெட்டி விடுவேன்" என்றவர். அவனிடம் திரும்பி. "இதோ பார். இது வாழ்வா சாவா என்பதற்கான போட்டி. நீ தோற்று விட்டால் நான் உன்னுடைய தலையை வெட்டி விடுவேன் என்பதை நினைவில் கொள்" என்றார். போட்டி தொடங்கியது. இளைஞனுக்கு முழு உடலும் நடுங்கியது. அது வாழ்வா, சாவா என்பதற்குரிய கேள்வியல்லவா? துறவி விளையாடத் தொடங்கினார். அவர் சாந்தமாகவும் அமைதியாகவும் காட்சியளித்தார். இளைஞன், அருமையாக விளையாடத் தொடங்கினான். அவன் அது போல இதுவரை விளையாடியதேயில்லை. ஆரம்பத்தில் துறவி வெற்றி பெற்றுக் கொண்டிருந்தார். ஆனால், இளைஞன் அதில் முழ்கிய ஒரு சில நிமிடங்களில் அருமையாக காய்களை நகர்த்த தொடங்கினான். துறவி தோற்றுப் போக ஆரம்பித்தார். அவனுடைய வெற்றி நிச்சயமாகி விட்டது. அவன் அந்த துறவியை பார்த்தான். அவர் மிகவும் வெகுளித் தனமாய் இருந்தார். பனிரெண்டு வருட தியானம் அவரை மலர் போல ஆக்கியிருந்தது. போட்டியில் தோற்று அவருடைய தலை வெட்டப்படுமே என்பதை நினைத்ததுமே அவர் பால் அவனுக்கு அன்பு ஏற்பட்டது. இந்த கருணையை உணர்ந்த அந்த கணமே அவனுக்கு, தெரியாத கதவுகள் திறந்தன. பிறகு அவன் தெரிந்தே காய்களை தவறாக நகர்த்தினான். ஏனெனி ல் நான் இறந்தால் எதுவும் இழப்படையப் போவதில்லை. ஆனால், இந்த துறவி கொலை செய்யப்பட்டால் அழகான ஒன்று அழிந்து விடும். ஆனால் நான் பயனற்றவன். துறவியை வெற்றி பெறச் செய்வதற்க்காக தெரிந்தே அவன் தவறாக காய்களை நகர்த்தத் தொடங்கினான். அந்த நொடியில் குரு மேசையை தலைகீழாக சுவிழ்த்து விட்டு சிரிக்கத் தொடங்கினார். அவர், "இங்கு யாரும் தோற்கவில்லை. நீங்கள் இருவரும் வென்று விட்டீர்கள்" எனக் கூறினார். குரு... "மகனே நீ வெற்றி பெற்று விட்டாய். உன்னுடைய வெற்றி இந்த துறவியின் வெற்றியை விடவும் பெரியது. நான் இப்போது உன்னை சீடனாக்கி கொள்கிறேன். நீ இங்கு இருக்கலாம். விரைவில் நீ ஞானமடைவாய்" எனக் கூறினார். இது தான் கருணை. உன்னை விட மற்றவர் முக்கியமாக படும் போது, நீ மற்றவருக்காக பிரதி பலனின்றி உன்னை தியாகம் செய்யும் பொழுது நீ கருணை உடையவனாகிறாய். அன்பு எப்போதும் கருணைமயமானது. அவை உனது இருப்பின் ஒரு இயல்பாகட்டும்

24/10/2025

குருவிடம் சீடனாக சேர வந்த இளைஞன்...

பயம்........... ...........ஒரு ஞானியின் தியானம் கலைந்தபோது ஒரு சுண்டெலி ஞானி முன் வந்தது. சுண்டெலியை பார்த்து ஞானி, உனக்...
23/10/2025

பயம்...
.
.......
......

.....
ஒரு ஞானியின் தியானம் கலைந்தபோது ஒரு சுண்டெலி ஞானி முன் வந்தது. சுண்டெலியை பார்த்து ஞானி, உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். பூனையை கண்டு எனக்கு பயமாய் இருக்கிறது. என்னை ஒரு பூனையாக மாற்றிவிட்டால், உங்களுக்கு புண்ணியம் உள்ளது என்றது எலி. ஞானி, எலியை பூனையாக மாற்றினார். இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் அப்பூனை வந்தது ஞானி முன் நின்றது. பூனையை கண்ட ஞானி, இப்போது என்ன பிரச்சனை என்று வினவினார். என்னை எப்போதும் நாய் துரத்துகிறது. என்னை நாயாக மாற்றிவிட்டால் நன்றாக இருக்கும் என்றது பூனை. உடனே பூனையை, நாயாக மாற்றினார் ஞானி. சில நாட்கள் கழித்து அந்த நாய் வந்து ஞானியின் முன்பு நின்றது. இப்போது உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார் ஞானி. புலி பயம் என்னை வாட்டி எடுக்கிறது. தயவு செய்து என்னை புலியாக மாற்றிவிடுங்கள் என்றது நாய். ஞானி, நாயை புலியாக மாற்றினார். சில நாட்கள் கழித்து ஞானி முன் வந்து நின்ற புலி, இந்தக் காட்டில் வேடன் என்னை வேட்டையாட வருகிறான். தயவு செய்து என்னை வேடனாக மாற்றி-விடுங்கள் என்றது புலி. உடனே புலியை வேடனாக மாற்றினார் ஞானி. சில நாட்கள் கழித்து, வேடன் ஞானி முன் வந்து நின்றான். இப்போது உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார் ஞானி. எனக்கு மனிதர்களை கண்டால் பயமாக இருக்கிறது என்று சொல்ல ஆரம்பித்தான். உடனே இடைமறித்த ஞானி, சுண்டெலியே உன்னை எதுவாக மாற்றினால் என்ன? உன் பயம் உன்னை விட்டு போகாது. உனக்கு சுண்டெலியின் இதயம்தான் இருக்கிறது. நீ சுண்டெலியாக இருக்கத்தான் லாயக்கு என்று கூறிவிட்டார் அந்த ஞானி. ஆகையால், உள்ளத்தில் நம்பிக்கைகளையும், அச்சமற்ற தன்மையும் இல்லாத வரை நாம் எதையும் அடையவோ, சாதிக்கவோ முடியாது. உங்களைப் பற்றி நீங்கள் எப்படி எண்ணுகிறீர்களோ அப்படித்தான் ஆவீர்கள்

23/10/2025

ஞானியின் தவத்தை கலைத்த எலி...

Address

Chennai

Alerts

Be the first to know and let us send you an email when Thamizh App posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Thamizh App:

Share

Category