16/09/2024
தலைவர் 73 வயசு,
மஞ்சுவாரியர் 46 வயசு...
இந்த காசு பணம் இதெல்லாம் தாண்டி இயல்பாகவே நாம நம்மலோட உடல் ஆரோக்கியத்துக்கும் Fitness -க்கும்
முக்கியத்துவம் தர வேண்டியது ரெம்ப அவசியம்...
சும்மா நடிகன் நடிகை எத்தனை வயசானாலும் அப்படியே இருக்காங்கன்னு சொல்றமே தவிற,நாம ஏன் அப்படி இல்லன்னு யோசிக்குறது இல்ல...
முதல்ல இந்த மேக்கப் அந்த Concept குள்ளவே போகாதிங்க,
காசு இருக்கு எப்படி வேணா இருப்பாங்க,
கேமரா அப்படி காட்டுதுன்னும் நினைக்காதிங்க...
என்ன இருந்தாலும் இது எல்லாத்துக்கும் உடல் ஒத்துழைக்குதுல...
முப்பது வயசு மேல பாதி தூரம் நடந்தாலே நமக்குலாம் மூச்சு வாங்குது,
எழுபது வயசுல இப்படி ஆடனும்ல..?!
காரணம் உடல் ஆரோக்கியம் தான்.
குண்டா இருக்கவுங்க,
ஒல்லியா இருக்கவுங்க,
கருப்பா இருக்கவுங்க,
கலரா இருக்கவுங்கன்னுலாம் பிரிச்சி பாக்காம,
நாம நம்மோட உடல் நம்ம ஆரோக்கியம்னு பாருங்க.
Self care ரெம்ப ரெம்ப முக்கியம்...
நடிகர்,நடிகைகள் அப்படியே இருக்க காரணம் அவர்கள் அவர்களுடைய அழகுக்கும்,ஆரோக்கியத்திற்கும் தரும் முக்கியத்துவம் தான்...
நாமலும் நம்மல அழகா காட்டிக்கனும்னு நினைக்குறதுல தப்பே இல்ல அதும் ஒரு தன்னம்பிக்கை ...
See இதுல அழகுன்றது நிறம் சார்ந்தோ,முகம் சார்ந்தோ,
உருவம் சார்ந்தோ இல்ல...
நம்ம கண்ணுக்கு நாம ஆரோக்கியமா அழகா தெரிஞ்சாலே அதுவே பெரிய Confident...
உடை தேர்வு,
சரும பராமரிப்பு,
உடற்பயிற்சி,
யோகா,
நடை பயிற்சி,
உணவு கட்டுப்பாடு இவை எல்லாத்துக்கும் கண்டிப்பா முக்கியத்துவம் குடுக்கனும்...
இருக்குற நம்மல நாம அப்படியே இன்னும் மெருகேற்றி கொள்வதில் தவறே இல்லை...
இந்த வயசுல இது தேவையா..??
ஆமா கல்யாணம் ஆச்சு குழந்தை பிறந்தாச்சுன்னு நீங்களே உங்கள
குறைச்சு மதிப்பீடு செய்யாதிங்க...
எப்படி ஓடி ஓடி சம்பாதிக்குறிங்களோ,
அதுல பாதிய உங்க உடலுக்கும்,ஆரோக்கியத்துக்கும் நேரம் ஒதுக்குங்க...
வாழ்க்கைய அழகா என்றும் இளமையா வாழுங்க...
எல்லாத்துக்கும் மனசுதான் காரணம்...!!
❤❤❤