
13/09/2025
காவல் நிலையத்தில் பராமரிக்கப்படும் 38 பதிவேடுகள்
📒 காவல் நிலைய பதிவேடுகள் & அவற்றின் பயன்பாடு
1. பொது நாட்குறிப்பு (General Diary – GD)
➝ காவல் நிலையத்தில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும் (வந்த புகார், காவலர்கள் பணி, சோதனை, சம்பவம்) தினசரி இதில் பதிவு செய்யப்படும்.
2. முதல் தகவல் அறிக்கை தொகுப்பு (FIR Register)
➝ மக்கள் அளிக்கும் குற்றப்புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்படும் FIR-கள் இதில் எண் வாரியாக வைத்திருப்பார்கள்.
3. நிலைய குற்ற வரலாறு – பாகம் I
➝ காவல் நிலையத்தில் நடந்த குற்ற வழக்குகள் அனைத்தின் வரலாறு.
4. குற்ற வரைபடம் – பாகம் II
➝ குற்றங்கள் எங்கு அதிகம் நடக்கின்றன என்று பகுதிப்படியாக வரைபட வடிவில் பராமரிக்கப்படும்.
5. தண்டனை பதிவேடு – பாகம் III
➝ குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனைகள் இதில் பதிவாகும்.
6. கிராம சரித்திர பதிவேடு – பாகம் IV
➝ காவல் நிலைய எல்லைக்குள் உள்ள ஒவ்வொரு கிராமத்தின் விவரம் (மக்கள், வழக்குகள், பிரச்சினைகள்).
7. கெட்ட நடத்தைகாரர்கள் சரித்திரப் பதிவேடு – பாகம் V
➝ பழக்க வழக்கத்தால் அடிக்கடி பிரச்சினை செய்யும் குற்றவாளிகளின் சரித்திரம்.
8. கெட்ட நடத்தைகாரர்கள் தணிக்கைப் பதிவேடு
➝ அவர்களை அடிக்கடி கண்காணித்த விவரங்கள்.
9. பெயர் வரிசைப் பதிவேடு (Index Register)
➝ புகாராளர்கள்/குற்றவாளிகள் பெயர் அடிப்படையில் எளிதாக தேடிக் காண்பதற்கான பதிவு.
10. குற்ற செய்முறை தனித்தாள் தொகுப்பு (Case Diary)
➝ ஒவ்வொரு வழக்கிற்கும் விசாரணை அதிகாரி எழுதும் தினசரி முன்னேற்ற குறிப்புகள்.
11. முன் தண்டனை குற்றவாளிகள் பதிவேடு
➝ ஏற்கனவே தண்டிக்கப்பட்ட குற்றவாளிகளின் விவரம்.
12. விசாரணை படிவம் "அ"
➝ குற்றப்புலனாய்வு அதிகாரி நிரப்ப வேண்டிய விசாரணை படிவம்.
13. விசாரணை படிவம் "ஆ"
➝ கூடுதல் விசாரணை தொடர்பான படிவம்.
14. குற்றத் தொகுப்பு (Crime Abstract Register)
➝ குற்றங்களின் சுருக்கம் (காலாண்டு/ஆண்டு அடிப்படையில்).
15. கைது அட்டை (Arrest Card)
➝ கைது செய்யப்பட்டவர்களின் அடிப்படை விவரங்கள்.
16. கைதி பரிசோதனை பதிவேடு (Prisoner Search Register – PSR)
➝ காவலில் உள்ள கைதிகளிடம் எடுத்த சோதனை விவரங்கள்.
17. பிணைப் பத்திரம் (Bail Bond Register)
➝ ஜாமீனில் விடுபட்டவர்களின் விவரம்.
18. கட்டளைப் பதிவேடு (Order Book)
➝ மேலதிகாரிகளிடமிருந்து வந்த கட்டளைகள்.
19. கைவிரல் ரேகை பதிவுத்தாள் (Finger Print Register)
➝ குற்றவாளிகளின் கைரேகை பதிவுகள்.
20. சிறுவழக்கு பதிவேடு (Petty Case Register)
➝ சிறிய குற்ற வழக்குகள் (பிரிவு 75 CP Act போன்றவை).
21. சமுதாய பணிப் பதிவேடு (CSR Register)
➝ எளிய புகார்களை (சிவில் nature complaints) பதிவு செய்வதற்கான புத்தகம்.
22. மருத்துவமனை குறிப்பாணை (Hospital Memo Register)
➝ காயமடைந்தோர், சிகிச்சைக்கு அனுப்பியோர் தொடர்பான பதிவு.
23. போக்கிரி பதிவேடு (Rowdy Sheet Register)
➝ அடிக்கடி சண்டை/அச்சுறுத்தல் செய்யும் நபர்களின் விவரம்.
24. காவல்முறை மாற்றுப் புத்தகம் (Duty Relief Book)
➝ காவலர்கள் யார் பணி, யார் ஓய்வு என்பதற்கான பதிவு.
25. அலுவல் பதிவேடு (Office Register)
➝ அலுவலக ஆவணங்கள் வரவு/செலவு.
26. மிகைநேர அலுவல் படிப் பதிவேடு (Overtime Duty Register)
➝ கூடுதல் நேர பணியாற்றிய காவலர்கள் விவரம்.
27. நோட்டுப் புத்தகம் (Note Book)
➝ காவலர்கள் தனிப்பட்ட பணி குறிப்புகள்.
28. பணப் பதிவேடு (Cash Book – PSO 262)
➝ காவல் நிலைய நிதி வரவு-செலவு.
29. அஞ்சல் அனுப்புகை பதிவேடு (Despatch Register)
➝ அனுப்பிய கடிதங்கள், தகவல்கள்.
30. நடப்புத் தாள் பதிவேடு (Current Register)
➝ தற்போதைய செயல்பாடு சார்ந்த ஆவணங்கள்.
31. ஆயுத வழக்கு பதிவேடு (Arms Case Register)
➝ ஆயுத சம்பந்தப்பட்ட வழக்குகள்.
32. துப்பாக்கி உரிமப் பதிவேடு (Gun Licence Register)
➝ பொதுமக்கள் துப்பாக்கி வைத்திருக்கும் உரிமத்தின் பதிவு.
33. ஆயுத வைப்புப் பதிவேடு (Arms Deposit Register – PSO 332, Form 47)
➝ தேர்தல்/சிறப்பு காலங்களில் மக்கள் ஒப்படைக்கும் ஆயுதங்கள்.
34. கிராமப் பதிவேடு (Village Register)
➝ காவல் எல்லைக்குள் உள்ள ஒவ்வொரு கிராமத்தின் விவரங்கள்.
35. அரசு சொத்துப் பதிவேடு (Government Property Register)
➝ காவல் நிலைய உபகரணங்கள், அரசுச் சொத்துகள்.
36. காலமுறை தொகுப்புகள் (Periodical Returns Register)
➝ மேலதிகாரிகளுக்கு அனுப்பப்படும் காலமுறை அறிக்கைகள்.
37. உயர் அலுவலர்கள் பார்வை பதிவேடு (Visitation Register)
➝ SP, DSP போன்றோர் ஆய்வு செய்த விவரங்கள்.
38. Station Guard / Beat Book (அல்லது பாதுகாப்பு சம்பந்தப்பட்ட கூடுதல் பதிவு)
➝ காவல் நிலைய பாதுகாப்பு / பீட் டூட்டி தொடர்பான பதிவு.
அன்புடன்
#சுப_கார்த்திகேயன்