19/09/2024
#வரிக்குதிரைகளும்_வறியவர்களும்.
GST வரிகளுக்கு பின் உள்ள சூழ்ச்சி அரசியலை அறிமுகப்படுத்தப்பட்ட போதே நிபுணர்கள் எச்சரித்தனர். ஆயினும் அன்றைய அரசின் மிருக பலத்திற்கு முன், அது அமல் ஆவதை யாராலும் தடுக்க முடியவில்லை.
இந்த GST, மாநிலங்களை நசுக்கி, வரிகளை மத்திய அரசிடம் குவிக்கிறது. இதில் உள்ள Tracking mechanism நேரடி வரிகளையும் (Income tax) சிந்தாமல் சிதறாமல் வழித்தெடுத்து, வரிசெலுத்தும் அப்பாவி தொழிலாளர்கள் மற்றும் நிறுவனங்களின் இரத்தத்தை உறிஞ்சி, விரைவில் நோஞ்சான் ஆக்குகிறது.
முன்பு பாஜக ஆட்சியில் நிதி அமைச்சராக இருந்த திரு. ஜஸ்வந்த் சிங் அவர்கள் சொன்னது இது தான். "மக்களின் கைகளில் சேமிப்பு இருந்துகொண்டே இருக்க வேண்டும். அதுவே மக்களுக்கு பாதுகாப்பு உணர்வையும் அமைதியான நலவாழ்வையும் அளிக்கும்."
தொடர்ந்து வரி, வரிக்கு வரி, செஸ் என்று போட்டுக்கொண்டு இருந்தால், அதை சமாளிக்க மனித இயந்திரங்கள் வரிச்சுழலில மாட்டி இன்னும் அதிகமாக Stress ஆகி உழைத்து, அதிகப்பொருள் ஈட்டி, அதிக வரி கட்டி மடிகின்றன.
வரிகள் இல்லாமல் அரசு இயங்காது, மறுக்கவில்லை!
ஆனால் Role of State Governments என்பது சுருங்கிக் கொண்டே வருகிறது மிகவும் கவலைக்குரிய விஷயம். "ஒரு நாடு ஒரு வரி" என்பது மாநிலங்களுக்கான இயற்கையான சம நீதியை ஒழித்து, ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள தனித்தன்மை, வளங்கள், ஏற்றத்தாழ்வுகள் ஆகியவற்றை புறக்கணித்து, எல்லாருக்கும் ஒரு உணவு, ஒரே மொழி, ஒரு கல்வி, ஒரே கடவுள் என்று ஆக்கிட வழிவகுக்கிறது. ஏற்கனவே இதில் பாதிக்கனவு நிறைவாகி விட்டது.
முதலில் இந்த ஒரே நாடு என்பது கலாச்சார ரீதியாக சாத்தியமா என்று யோசிக்க வேண்டும்.
நமது நாட்டின் பன்முகத்தன்மை (Diversity) தான் சகிப்புத்தன்மைக்கு(Tolerance)க்கு அடிப்படை. Diversity வலுவிழந்தால், ஒவ்வொரு மனதரும் தன் இனம் மொழி மதம் சாதி என்று சிந்தனை குறுகி, சகிப்புத்தன்மை காணாமல் போகும். உள்நாடு காடாகும். ஒவ்வொரு மாநிலத்துக்குமான இயல் சூழல் சீர்குலைந்து (மத்திய அரசு) முதலாளி Vs (மாநிலங்கள்) அடிமை அளவுக்கு, மாநிலங்களை நசுக்கி கையேந்த, பிச்சை எடுக்க வைத்ததன் விளைவு, மாநிலங்கள் தங்கள் நிதி ஆதாரங்களை பெருக்க அவர்கள் பங்குக்கு மறைமுக வரிகளை போடுகிறார்கள் .
இதில் #மக்கள்சார்ந்தநிர்வாகம் மரித்து ஏற்கனவே அடக்கம் செய்யப்பட்டுவிட்டது.
சரி! இவ்வளவு வரி போட்டு என்ன செய்கிறார்கள்?
உதாரணமாக, தமிழகத்தில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட 6.18 கோடி மக்களில் சுமார் 90% மக்களுக்கு (5.60 கோடி) 😲😳 முத்ரா கடன் தந்ததாக மத்திய நிதியமைச்சர் சொல்கிறார். அத்தனை பேர் முத்ரா கடன் வாங்கி தொழில் செய்கிறார்களா? 10ல் ஒன்பது பேர் தமிழ்நாட்டில் கடன் வாங்கி தொழில் செய்யவதாக சொன்னால் நம்ப முடியவில்லை. அதிர்ச்சியாக உள்ளது. ஒரு ரூபாய் வரி குறைந்தாலும் குதிக்கும் அரசு, இத்தனை லட்சம் கோடிகளை எப்படி எளிமையாக வாரி இறைக்கிறது? யாருடைய பணம் இது? இது மனித இனம் காணாத மாபெரும் பொருளாதார விஞ்ஞான ஊழல்.
மக்களை கசக்கி பிழிந்து வரி வசூலித்து அதை FREE யாக மானியமாக, முத்ரா கடனாக தரும் ஓட்டு வங்கி அரசியல் கேவலத்தை, சர்வ வல்லமை பொருந்திய மகா யோக்கிய மத்திய அரசு செய்வது ஏன்?
மொத்தத்தில் மக்களிடம் திருடி வழிப்பறி செய்வது கிரிமினல்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகள் என்கிற தனிநபர்கள் என்றால் நீதிமன்றம் மூலம் தண்டிக்கலாம்.
மகா வல்லமை கொண்ட மத்திய அரசே ஒரு Organised திருட்டு வழிப்பறி நடத்தினால் பிறகு யாரை நீங்கள் அறிவுறுத்துவீர்கள்? யார், யாருக்கு ஒழுக்கம் போதிப்பீர்கள்?
சங்கிகள் மாபெரும் கிருமிகளாக உருவெடுத்து நாட்டை விழுங்கும் மலைப்பாம்புகளாக உருவாகிவிட்டார்கள் என்பது வேதனை.
மாநிலக் கட்சிகள் யோக்கியர்களா என்றால் அதை அந்த கட்சிகளின் நிர்வாகிகள் Defend செய்து கொள்ளட்டும். ஆனால் சிறு குழந்தைக்கும் கடைக்கோடி மனிதனுக்கும் உண்மை தெரியும்.
ஆனால், இந்த Hub & Spoke ஜனநாயகத்தில் மத்திய அரசே ஊழல் அராஜகம் பழிவாங்கல் அதிகார துஷ்பிரயோகம் ஆகியவற்றின் மையம் (Hub) ஆக மாறி சீரழிந்த பின் Spokes என்கிற மாநில குறுக்குக் கம்பிகளை யார் கேள்வி கேட்க முடியும்.
மக்களாகிய நாம், நமது மொழி மத சாதி உணர்வுகளை தங்கள் நாடக நாக்கால் தடவிக் கொடுக்கும் அரசியல் கட்சிகளை "நல்லவர்கள்" என்று மனதுக்கேற்ப சப்பைக்கட்டு கட்டி, மகிழ்ந்து, விவாதித்து, சாகவேண்டியது தான். வேறு வழி?