02/07/2025
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணித் தேர்வு குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பேட்டிங்கிற்குச் சாதகமான எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இன்று போட்டி தொடங்குகிறது.
இந்திய கேப்டன் கில், இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்க வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ரவீந்திர ஜடேஜா ஒரு சுழற்பந்து வீச்சாளர் என்பது உறுதியாகிவிட்ட நிலையில், இரண்டாவது சுழற்பந்து வீச்சாளர் யார் என்பதுதான் கேள்வி.
இங்கிலாந்தில் இருந்து கிடைக்கும் தகவலின்படி, வாஷிங்டன் சுந்தர் இரண்டாவது சுழற்பந்து வீச்சாளராகத் தேர்வு செய்யப்பட்டால் அது கேலிக்கூத்தாக அமைந்துவிடும் என ஆகாஷ் சோப்ரா எச்சரித்துள்ளார்.
பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ் ஆகிய இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களுடன் ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் இணைவது தவறான முடிவு எனவும், குல்தீப் யாதவைத்தான் இரண்டாவது சுழற்பந்து வீச்சாளராகக் களமிறக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
பேட்டிங் திறனை மட்டும் பார்த்துத் தேர்வு செய்தால் அது தவறு என்றும் சோப்ரா சுட்டிக்காட்டியுள்ளார்.
நண்பர்களே இத பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க ன்னு சொல்லுங்க?