Clown Media

Clown Media Support & Subscribe the Youtube Channel

"குறிப்பிட்டவர்களுக்கு மட்டும்"
21/10/2020

"குறிப்பிட்டவர்களுக்கு மட்டும்"

வங்கியில் அடகு வைத்த நகை எப்படி தரம் குறைந்தது... கடையநல்லூர் தக்க வியாபாரிகள் சங்கம் நியாயமான கோரிக்கை...
20/10/2020

வங்கியில் அடகு வைத்த நகை எப்படி தரம் குறைந்தது...

கடையநல்லூர் தக்க வியாபாரிகள் சங்கம் நியாயமான கோரிக்கை...

 #தரம்_குறைந்த_நகையும்,  #தரம்_கெட்ட_பாலிமர்_செய்தியும்!!அக்டோபர் 17, 2020 (நேற்று) புளியங்குடியில் இருந்து சில நகை வியா...
18/10/2020

#தரம்_குறைந்த_நகையும், #தரம்_கெட்ட_பாலிமர்_செய்தியும்!!

அக்டோபர் 17, 2020 (நேற்று) புளியங்குடியில் இருந்து சில நகை வியாபாரிகள் விவசாயி ராமர் என்பவரை கடையநல்லூர் AIK Gold என்ற நகைக்கடைக்கு அழைத்துச் சென்று அவர் 2017 ஆம் ஆண்டு நகை வாங்கி இருப்பதாகவும், அந்த நகை தரம் குறைந்தது என்றும் ஒரு குற்றச்சாட்டு வைத்த செய்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பு ஆனதை அறிவோம்.

இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து தமுமுக நிர்வாகிகள் சம்பந்தப்பட்ட நகைக்கடையில் கள ஆய்வை மேற்கொண்டனர். இந்த ஆய்வில் விவசாயி ராமர் என்பவர் நகை வாங்கியதாக கட்டிய ரசீதில் 22 கிராம் என்றும், அவர் கொண்டு வந்த நகை 19 கிராம் என்று இருந்ததும் தெரிய வந்தது. மேலும் கொண்டு வந்த நகையை சோதித்து பார்த்ததில் நகையானது தரம் குறைந்தது என்றும், நகையில் பாதிக்கப்பட்டுள்ள கடையின் சீல் தவிர மற்ற பாகங்கள் புதியதாக இணைக்கப்பட்டு இருந்ததும் தெரிந்தது.

நகையின் தரம் குறைந்தது என்று புகார் அளிக்க வந்த நபர்கள் தங்களோடு பத்திரிகை நபர்களை அழைத்து வந்ததும், விவசாயி ராமர் தனது பேட்டியில் முன்னுக்கு பின் முரணாக பேசியதும், நகை ரசீதில் உள்ள எடைக்கும், நகையின் எடைக்கும் வித்தியாசம் இருப்பதும் பலத்த சந்தேகத்தையும், இது திட்டமிட்ட சதியோ என்றும் நினைக்க தோன்றுகிறது.

இரவு நேரம் என்பதால் இந்த செய்தியை ஒளிபரப்பு செய்யும் முன்பாக வந்திருந்த ஊடகவியலாளர்கள், பத்திரிகையாளர்களுக்கு தொலைபேசி மூலம் நடந்த சம்பவத்தில் இருக்கும் ஐயங்கள் பற்றியும், இரு தரப்பினரிடமும் விசாரணை செய்து செய்தி ஒளிபரப்பு செய்யும் படி தமுமுக மாவட்ட துணைத்தலைவர் அப்துர் ரஹூமான் கேட்டுக் கொண்டார். இந்த வேளையில் பாலிமர் நியூஸ் தவிர மற்ற அனைத்து முன்னணி ஊடகங்களும் இந்த செய்தியில் உள்ள ஐயங்களின் அடிப்படையில் செய்தியை ஒளிபரப்பு செய்ய வில்லை.

மேலும் கடையநல்லூர் நகை வியாபாரிகளின் மீது தரம் குறைந்த நகை விற்கப்படுவதாக போலி பிம்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்ததை அறிந்த கடையநல்லூர் நகை வியாபாரிகள் சங்கம் அவசர கூட்டம் கூட்டி தவறான செய்தியை ஒருதலை பட்சமாக வெளியிட்ட பாலிமர் செய்திகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடிவெடுத்துள்ளது. இந்த கள ஆய்வில் தமுமுக மாவட்ட துணைத்தலைவர் அப்துர் ரஹ்மான், மமக பாசித் & SDPI மாவட்ட தலைவர் ஜாபர் அலி உஸ்மானி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கெடுத்தனர்.

குறிப்பு : அந்தக் குறிப்பிட்ட நகைக்கடையில் எடுத்த நகையில் தரத்தில் 916 ஹால்மார்க் குறியீடு இருந்தும், அதில் ஏதாவது குறை இருந்தால் நுகர்வோர் சட்ட நடவடிக்கை எடுக்கலாம்.

படம்: பாலிமர் செய்தி கொடுத்த இலவச விளம்பரம் காரணமாக இன்று AIK GOLD கடையில் நல்ல வியாபாரம்.

- தமுமுக ஊடகப் பிரிவு

10/10/2020

#முஸ்லீம் #அரசியல் #தலைவர்களுக்கு

ஒரு வேண்டுகோள்!

09/10/2020
இது போன்ற ஒரு அறிவிப்பை தான் அனைத்து இஸ்லாமிய இயக்கங்களிடமிருந்தும் எதிர்பார்க்கிறோம்!
09/10/2020

இது போன்ற ஒரு அறிவிப்பை தான் அனைத்து இஸ்லாமிய இயக்கங்களிடமிருந்தும் எதிர்பார்க்கிறோம்!

இன்று..."சே" அவர்கள் "விதைக்கப்பட்ட" நாள்."இனம்,மொழி,சாதி,மதம்" பாராத மனிதநேயப்போராளி.அவனின் ஆயுதப்போராட்டம் ,ஒவ்வொரு கட...
09/10/2020

இன்று...

"சே" அவர்கள் "விதைக்கப்பட்ட" நாள்.

"இனம்,மொழி,சாதி,மதம்" பாராத மனிதநேயப்போராளி.

அவனின் ஆயுதப்போராட்டம் ,ஒவ்வொரு கட்டத்திலும் "எதிரிகளை" வீழ்த்தியது, "பாதிக்ப்பட்டவர்களை உயர்த்தியது".

உலகத்தை சுற்றி பார்த்தவரின் கண்ணில் "பாதிக்கப்பட்டவர்கள்" மட்டுமே தென்பட்டார்கள்,என்பது "பாதிக்கப்பட்டவர்களின்" அதிர்ஷ்டம்.

பயணங்கள் பயணங்களாக "உழைத்தான்"... ஒன்றும் இல்லாதவர்களுக்காக.

கியூபா சிதைக்கப்பட்டிருந்தது,சீர்படுத்தினார்... முழுமையாக...

அடுத்து? "சே" வை காணவில்லை.

சே கண்டு வியந்த சேவின் நண்பர் "பிடல் காஸ்ட்ரோவிடம்" கேள்வி எழுப்பினார்கள், சே எங்கே?

பிடல் சொன்னார்,

அவர் எங்கே என்று தெரியவில்லை, ஆனால் எங்கோ அவர் "போராடிக் கொண்டிருக்கிறார்".

சே + Way = சேவை.

"மனிதத்துக்காக மரணிக்க துணிந்தவன்".

மிகச் சிறந்த முயற்சிபக்கத்தில் இருந்து பார்த்த அனைவருக்குமே!  இந்த குடும்பத்தின் கஷ்டம் தெரியும்...உதவ முன்வந்த "அறம்" க...
09/10/2020

மிகச் சிறந்த முயற்சி

பக்கத்தில் இருந்து பார்த்த அனைவருக்குமே! இந்த குடும்பத்தின் கஷ்டம் தெரியும்...

உதவ முன்வந்த "அறம்" கட்டளைக்கு நன்றியை தாண்டிய "ஒன்று".

*அறம் செய் - மருத்துவ தேவை*

*👁️பார்வை இல்லாத குடும்பத்திற்காக நமது கருணை பார்வை தேவை 👁️*

🛎️உதவி எண்: *MH/10/001*

📆பதிவு நாள்:
8️⃣.1️⃣0️⃣.2️⃣0️⃣2️⃣0️⃣

💊உதவி: *மருத்துவ செலவு*

🧍🏻பெயர் : *கன்னி மாரியப்பன்*

வயது: 1️⃣2️⃣

👩‍👩‍👦‍👦குடும்ப விபரம் :

🧍🏻‍♀️தாய் : *கண் பார்வை இல்லை* (37 வயது)

🧍🏻தந்தை : *இல்லை*

🙎🏻‍♂️மூத்த சகோதரன் : *கண் பார்வை இல்லை*
(14 வயது)

🙎🏻‍♂️இளைய சகோதரன் :
*கண் பார்வை இல்லை*
(8 வயது)

👵🏻பாட்டி : *கண் பார்வையும் இல்லை , மனநலமும் சரியில்லை*

🌡️மருத்துவ விபரம்: *💪ஒரு விபத்தில் இடது கை முறிந்து அறுவை சிகிச்சைக்கு*

இந்த முழு குடும்பத்திற்கும் இவன் *ஒருவனுக்குத்தான் 👁️கண் தெரியும்* , இவனும் தற்போது பெரிய சோதனையில் நமது உதவியை நாடி.....



💵வீட்டு வருமானம்: *இல்லை*

🏠வீட்டின் நிலை: *கூரை மற்றும் வாடகை வீடு*

👨‍👩‍👦‍👦குடும்ப உறுப்பினர்கள் விபரம்: *2 பெண் , 3 குழந்தைகள்*

ஊர்: *கடையநல்லூர்*

தேவையின் விபரம்: *Rs.110000*

மருத்துவர் மற்றும் மருத்துவமனை பங்களிப்பு :
*Rs.60000*

சொந்த பங்களிப்பு: *இல்லை*

மற்ற அமைப்புகளின் பங்களிப்பு: *முயற்சி*

🚨மீதமுள்ள தேவை :
*5️⃣0️⃣0️⃣0️⃣0️⃣*

குறிப்பு:
1️⃣ தங்களால் முடிந்த பொருளாதார உதவியை செய்ய கீழே உள்ள எண்ணை தொடர்பு கொள்ளவும்.

2️⃣ தெரிந்த நல் உள்ளங்களுக்கு இந்த செய்தியை கொண்டு சேர்க்கவும்

📞தொடர்பு:

*அறம்செய்* (கடையநல்லூர்)

*📱737373 5891*
*📞790412 5969*

💯 *% VERIFIED* BY
*அறம் மருத்துவ குழு*

அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர்கள் குழு, நாசா நடத்திய சர்வதேச போட்டியில் விருது வென்றுள்ளதாக அந்த பல்கலைக்கழக இணையதள...
07/10/2020

அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர்கள் குழு, நாசா நடத்திய சர்வதேச போட்டியில் விருது வென்றுள்ளதாக அந்த பல்கலைக்கழக இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

"Space Apps Challenge" என்ற பெயரில் நான்கு விண்வெளி மையங்களுடன் இணைந்து வருடா வருடம் இப்போட்டியை நடத்துகிறது நாசா. இவ்வருடம் 150 நாடுகளை சேர்ந்த 26,000+ மாணவர்கள் இப்போட்டியில் பங்கேற்றனர்.

அக்டோபர் 2-டிலிருந்து நான்காம் தேதி வரை நடைபெற்ற இப்போட்டியில், முதலாம் ஆண்டு மருத்துவம் பயிலும் ஆயிஷா சம்தானி தலைமையிலான அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக குழு (பார்க்க படம்), நடுவர் விருப்பத்தேர்வு விருதை வென்றுள்ளது.

கங்கை மற்றும் சிந்து நதிகள் பாயும் வட இந்திய பகுதிகளில், கொரோனா ஊரடங்கிற்கு முந்தைய மற்றும் பிந்தைய காலக்கட்டங்களில் காற்றின் தரம் குறித்த ஆய்வை மேற்கொண்டிருந்தனர் இக்குழுவினர். காற்றின் தரம் உயர்வதால் ஏற்படும் உடல்நல ஆரோக்கியம் குறித்து விரிவாக பேசுகிறது இவர்களின் ஆய்வறிக்கை.

இதுமட்டுமல்லாமல், இவர்கள் உருவாக்கியுள்ள காற்று தர குறியீடு யுக்தியின் மூலம், ஒரு பகுதியில் நிலவும் காற்று மாசு குறித்து அப்பகுதி மக்களை எச்சரிக்கை செய்வதுடன், உடல்நல வழிகாட்டல்களையும் கொடுக்க முடியும். இத்தகைய ஆய்வுக்காகவே அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர் குழுவிற்கு நாசா விருது கிடைத்திருக்கிறது.

வாழ்த்துக்கள். சமூகத்திற்கு பயன்தரும் மேலும் பல ஆய்வுகளை முன்னெடுக்க பிரார்த்தனைகள்.

படம்: விருது வென்ற மாணவர் குழு

செய்திக்கான ஆதாரம்:
1. Aligarh Muslim University Website. https://www.amu.ac.in/about3.jsp?did=2007

2. NASA Space Apps Challenge. https://www.spaceappschallenge.org/about/when-and-where/

நன்றி : ஆஷிக் அஹமத

 அதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி கே.பழனிசாமி அறிவிப்பு!Clown Media |   |   |
07/10/2020



அதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி கே.பழனிசாமி அறிவிப்பு!

Clown Media | | |

 #கார்பன்_பேப்பர்_கண்டுபிடிக்கப்பட்ட_நாள்_இன்று :வரலாற்றில் இன்று அக்டோபர் 7, 1806 -பிரதி எடுக்க உதவும் ‘கார்பன் பேப்பர்...
07/10/2020

#கார்பன்_பேப்பர்_கண்டுபிடிக்கப்பட்ட_நாள்_இன்று :

வரலாற்றில் இன்று அக்டோபர் 7, 1806 -பிரதி எடுக்க உதவும் ‘கார்பன் பேப்பர்’ கண்டுபிடிக்கப்பட்டது. இங்கிலாந்தைச் சேர்ந்த ரால்ஃப் வெச்வூட், ஒரு நாள் மெல்லிய காகிதத்தைத் தட்டச்சு மையில் முழுவதுமாக நனைத்தார். அதை மை ஒட்டும் காகிதங்களுக்கு இடையில் வைத்து உலர்த்தினார். ஒரு வெள்ளைக் காகிதம், அதன் மேல் கார்பன் தாள், அதற்கு மேல் டிஷ்யூ காகிதத்தைப் பரத்தி தன்னுடைய இரும்புப் பேனா கொண்டு அழுத்தி எழுதிப் பார்த்தார். அவர் மேலே எழுதியவை காகித அடுக்கின் அடியில் இருந்த வெள்ளைக் காகிதத்தில் அப்படியே பதிந்தன. அவ்வளவுதான் கார்பன் பேப்பர் அற்புதமாகத் தயாரானது! 1806 அக்டோபர் 7-ல் ரால்ஃப் வெச்வூட் ‘கார்பன் பேப்ப’ருக்குக் காப்புரிமை பெற்றார். பார்வை அற்றவர்களுக்கு உதவவே கார்பன் தாளை அவர் உருவாக்கினார்.

தகவல் : ஜெயராமன்

07/10/2020

ட்ரம்பின் கூத்துக்கள் :

கடந்த 24 மணி நேரங்களில் டிரம்ப் செய்த கூத்துகளை எழுதினால் பத்து பக்கம் நீளும். சுருக்கமாக

'நான் உற்சாகமாக உணர்கிறேன். இருபது வருடங்களுக்கு முன்பு இருந்தது போல எனர்ஜி இருக்கிறது!' என்று ட்வீட் செய்திருக்கிறார்.

கண்டிப்பாக எனர்ஜி அதிகரித்துதான் இருக்கும். காரணம், எளிது. அவருக்கு சிறப்பு சிகிச்சையாக கோவிட்டுக்கான இதர மருந்துகளுடன் சேர்த்து டெக்சாமிதசோன் (dexamethasone) என்ற ஒரு மருந்து அளிக்கப்பட்டுக் கொண்டு இருக்கிறது. இது சக்தி வாய்ந்த ஒரு ஸ்டீராய்ட் மருந்து. கண்டிப்பாக யாரும் படு உற்சாகமாக உணரவே செய்வார்கள். கோத்ரெஜ் பீரோவை தனி ஆளாக தூக்கி நகர்த்தி வைத்து விடலாம் என்ற அளவுக்குத் தோன்றும். ஆனால் அது உடலில் இருந்து வருவதல்ல; கோரோனா வைரஸ் இருப்பதால் வரும் எனர்ஜி அல்ல. அந்த மருந்து நிறுத்தப் பட்டதும் ஓரிரு நாட்களில் அந்த உற்சாகம் வடிந்து போய் விடும். அந்த உற்சாகத்தில் பீரோவை தூக்கினால் அதற்கு தனியாக ட்ரீட்மெண்ட் தேவைப்படும்.

இதெல்லாம் அறிவு இருப்பவர்களுக்கு புரியும். அறிவற்ற முரட்டு முட்டாள்களுக்கு புரிவது கடினம்தானே? விளைவு: மருத்துவமனையில் இருந்து தானே டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கும் வந்து விட்டார் டிரம்ப். ரொம்பத் தொல்லையாக இருந்த மாஸ்க்கையும் எல்லார் முன்னிலையிலும் கழட்டி விட்டார்.

மேலே சொன்ன அந்த ட்வீட்டுடன் நிறுத்தி இருந்தாலாவது பரவாயில்லை. இன்னொரு ட்வீட்டில் 'கோவிட் என்பது ஃப்ளூ மாதிரிதான்; அதை விட மென்மையானது!' என்று சொல்லி இருக்கிறார். இதையே முகநூலிலும் பதிந்து இருக்கிறார். அதிர்ந்து போன டிவிட்டர் அந்தப் பதிவை மறைத்து (disabled) விட்டிருக்கிறது. பேஸ்புக் அதனை நீக்கியே விட்டது.

இந்த ஆள் நெகட்டிவ் ஆகும் நாள் வரை இன்னும் என்னென்ன கூத்துகள் நடத்துவார் என்று யோசித்தால் பயந்து வருகிறது.

நன்றி : ஸ்ரீதர் சுப்பிரமனியன்

Address

Chennai

Alerts

Be the first to know and let us send you an email when Clown Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Clown Media:

Share