CINI SPOT

CINI SPOT தமிழில் கோலிவுட் செய்திகள், சின்னத்திரை செய்திகள் வெளியாகும் தளம்..

14/11/2022
14/11/2022
*WE ARE HIRING**YouTube (Tamil)**NEWS PRODUCER**Job Description*-We are looking for a skilled YouTube video producer to ...
14/11/2022

*WE ARE HIRING*

*YouTube (Tamil)*

*NEWS PRODUCER*

*Job Description*-We are looking for a skilled YouTube video producer to coordinate and lead the team of content creator, script writer, cameraman, reporter, Anchor, Voice over artists, Video Editor & graphic designer.

*Required skills* - Experienced in Print, Visual, Digital media. Excellent verbal & written communication skills (Tamil & English).

*Video subject* - Politics, Cinema, Television shows and serials and Current Affairs

*Eligibility* - Graduates in Journalism and Mass communications with relevant experience.

*Send your CV to us on WhatsApp*- 8754400344

🎬 ஊடகத் தொழில்முறையில் அனுபவம் உள்ள 'ரியல் ஒன் மீடியா' நிறுவனம் தமிழ்நாட்டில் தடம் பதிக்கிறது. கீழ்காணும் பதவிகளுக்கு வா...
11/11/2022

🎬 ஊடகத் தொழில்முறையில் அனுபவம் உள்ள 'ரியல் ஒன் மீடியா' நிறுவனம் தமிழ்நாட்டில் தடம் பதிக்கிறது. கீழ்காணும் பதவிகளுக்கு வாய்ப்புகளை வழங்குகிறது. துடிப்பான, மீடியாவில் சாதிக்கத் துடிக்கும் இளைஞர்கள், யுவதிகள், முன் அனுபவம் உள்ள முதுநிலையாளர்கள் எங்களுடன் கரம் கோர்க்க அழைக்கிறோம். அரசியல், சினிமா, அன்றாட நிகழ்வுகள், நாட்டு நடப்புகளை (political, cinema & current Affairs) உள்ளீடாகக் கொண்டு எழுதவோ, பதிவு செய்யவோ, வெளிப்படுத்தவோ தெரிந்த ஊடகவியலாளர்களுக்கு முன்னுரிமை தரப்படும். எங்களுக்கு உங்கள் தற்குறிப்பு (CV) கிடைத்தவுடன் நேர்காணலுக்கு அழைக்கப்படுவீர்கள். தொடர்புக்கு: 📞 @ 875 44 00 344

மீண்டும் பேசு பொருளாகி இருக்கும் பொன்னியின் செல்வன்..! +++++++++CINI SPOT++++++      🙅மருதநாயகம். தி.😎மீண்டும் பேசு பொரு...
28/09/2022

மீண்டும் பேசு பொருளாகி இருக்கும்
பொன்னியின் செல்வன்..!
+++++++++CINI SPOT++++++
🙅மருதநாயகம். தி.😎

மீண்டும் பேசு பொருள் ஆகியிருக்கிறது. இதற்கு முன்னும் சில வரலாற்று திரைப்படங்கள் நினைவு தெரிய வந்திருக்கிறது.

அதில் ராஜ ராஜ சோழன் திரைப்படம்..அவன் காலத்தில் தோன்றிய கல்வெட்டுகள் குடவோலை என பல வரலாற்றில் பதிந்த செய்திகள்..
அதிலும் அவன் கல்வெட்டை அறிமுகப்படுத்தி மெய் கீர்த்திவர்மன் என வரலாறு இன்றளவும் அவனை புகழ்கிறது .. அவனுடைய முன்னோடிகள் கல்லணை கட்டிய நிகழ்வுகளும் நடைபெற்றன.

இதில் வருந்தத்தக்க செய்தி என்னவெனில் ராஜ ராஜ சோழன் திரைப்பட கதாபாத்திரம் குடும்பத்தை மையமாக்கி மட்டுமே அந்த மாபெரும் சோழ சக்ரவர்த்தியை குறுகிய வட்டத்துக்குள் அடைத்ததாக கருத இடம் கொடுத்ததாகி விட்ட திரைப்படமாக அமைந்து போனது..படமும் தோல்வியை தழுவியது..

பிறகு மகாபாரத கர்ணன் அதில் ஓரளவு மகாபாரத கதாபாத்திரம் எந்தவித சிதைவும் இல்லாமல் படம் வெளி வந்து வெற்றியும் பெற்றது.

பின்னர் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.திரைப்படம் அதுவும் முழுமையான முறையில் காட்டப்படாமல்..சுப்பிரமணியம் சிவா போன்ற விடுதலை போராட்ட தியாகிகளை சரியான முறையில் காட்ட தவறியது.. திரைப்பட தயாரிப்பாளர் பெருமளவு நஷ்டத்தை சந்தித்ததாக பேசப்பட்டது.
பின்னர் Hollywood படங்கள் வரிசையில் J.K. Rowling அவரின் கற்பனை கதையான Harry Potter உலகெங்கும் பெரும் வரவேற்பைப் பெற்றது.

Spielberg ன் Jurrasic Park James Cameroon ன் Titanic திரைப்படமும்
இன்றும் அதன் சுருதி குறையாமல் பெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படங்கள்..!

அந்த வரிசையில் சோழன் பொன்னியின் செல்வன் கல்கி கிருஷ்ண மூர்த்தி அவர்களின் கதை சிதைவுறாமல் படமாக்கப்பட்டிருந்தால் நம் இளைய சமூகம் இந்த காட்டிறைச்சலான திரைப்படங்கள் மத்தியில் பொன்னியின் செல்வன் வலம் வருவான்..!

தமிழர்களின் பாரம்பரியம் அடையாளம் வீரம் காதல் என அத்தனையும் உள்ளடக்கிய சோழர்களின் செல்வன்..
வலம் வரட்டும்.. உலகெங்கும்...!

28/09/2022

சினிமாவிலும் தொடங்கியது ஆரிய , திராவிட மோதல்!!
+++++ CINI SPOT++++++++
💁என்.செல்வராஜ்,😎

கவிஞர் வைரமுத்துவை சீண்டிய இயக்குனர் மணிரத்தினம்..!

திராவிட கொள்கையில் சமரசம் செய்து கொள்ளாத ஒரு கவிஞர் என்றால் அது வைரமுத்து தான். நண்பர்களே! சமீகாலமாக சினிமாவில் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகிறார் கவியரசு வைரமுத்து.

பாடகி சின்மயி சர்ச்சையில் தொடங்கி, பொன்னியின் செல்வன் வரை அது நீடிக்கிறது..

பொன்னியின் செல்வன் ஆடியோ வெளியிட்டு விழாவில் மணிரத்தினம் செயதியாளர்களை சந்தித்தார். அப்போது வைரமுத்து குறித்த ஒரு கேள்வி, அதை தவிர்த்து இருக்கலாம். அல்லது மவுனராகம் பாடியிருக்கலாம்..

ஆனால் மணியின் அந்த நயவஞ்சகம் வெளிப்பட்டது அப்போது தெரிந்த்து. வைரமுத்து பத்தோடு 11 ஆவது ஒரு கவிஞர் தானே என அலட்சியப்படுத்தி நமட்டு சிரிப்புடன் பதிலளித்தார், இது பெரும் புகைச்சலை சினிமா வட்டாரத்தில் கிளப்பியுள்ளது...

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் பல பாகங்களை அடங்கியுள்ளது. அதன் முடிவு பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது நம் அனைவரும் அறிந்த்தே!

தற்போது இதுபோன்ற வரலாற்று பிண்ணனி கொண்ட கதைகளை சில எழுத்தாளர்கள், தலைவர்கள் மட்டுமே நன்கு அறிந்துள்ளனர். அதில் வைகோ, வைரமுத்து போன்றோர் அடங்குவர்..

அவர்களை அனுகாத மணிரத்தினம், முழுக்க,முழுக்க ஆரிய வாசனையை தடவியே படம் பிடித்துள்ளாராம்..

இந்த கதையில் வசனம் ஒரு முக்கியத்துவம் வாய்ந்தது..அது அந்தந்த கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான வசனங்கள் தேவை...

ஆமா, இல்லை , புரியல , தெரியல, என வழக்கமாக மணிரத்தினம் படங்களில் வரும் வசனத்தை போல இருக்கலாம் என தோனுகிறது..

பாகுபலி போன்ற கற்பனை கதை அம்சமுள்ள படத்தில் வசனம் தீட்டிய வைரமுத்து மகன் மதன்கார்க்கி, இதுவே என் கட்டளை, கட்டளை எனது சாசனம் என்ற அவர் எழுதிய வசனம் பெரிதளவில் பேசப்பட்டது..

அவர்போன்ற அனுபவசாலிகளை திராவிடன் என கூறி புறக்கணிப்பு செய்யலாமா? மணி

என் மூத்தோர் சோழர் பண்பாடு, கலாச்சரம், உணவு , நடை, உடை பாவனைகளை ஆரியவம்சம் படத்தில் என்ன துவசம் பண்ணியிருக்கோ தெரியவில்லை...

சோழவம்ச கட்டடங்கள் தமிழர் பண்பாட்டை அடையாளமாக காட்டும் தஞ்சை பெரிய கோயில் . அது போல் உள்ள அரண்மனைகளுக்கு பதிலாக ஜெயிப்பூர் அரண்மனையை காட்டி படம் எடுத்துள்ளார் மணி...

வசனம் இல்லாத ஒரு ட்ரைலர் விட்டு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளார் இந்த மகா இயக்குனர்..கடைசியாக வந்த இவரது படங்கள் நிலை என்ன என ரசிகர்களுக்கு தெரியாமல் இல்லை...

அதே போல் காதுவரை வாய் வைத்துள்ள அவரது மனைவி சுகாசினி இந்த படத்தின் திரைக்கதை அமைத்துள்ளாராம்.

ஹைதரபாத்தில் இந்த படம் குறித்து பேட்டி அளித்த அம்மணி, ஆந்திராவிலும், தெலுங்கானாவிலும் இந்த படம் முமுக்க, முழுக்க எடுக்கப்பட்டது என்று பெருமையாக கூறி, தமிழ்நாட்டில் வெறும் பத்துநாள் தான் சூட்டிங் என வாயை யூ சேப்பில் வைத்து பேசினாராம்..

ஆந்திராவில் பிச்சை எடுக்க தமிழர்களை கொச்சை படுத்தி பேசியுள்ளார் இந்த அம்மணி.

ஆக தமிழர் பண்பாட்டை ஒரு ஆரிய இயக்குனர் எப்படிஎல்லாம் சின்னாபின்ன படுத்தியுள்ளார் என்பது படம் திரைக்கு வந்தால் தெரியும். அதற்கு முன்பே ஆரிய, திராவிடர் மோதல் சினிமாவிலும் புகுந்து விட்டது என்பதை எவராலும் மறுக்க முடியாத உண்மை..!

எம்ஜிஆர் டைரக்ஷனில்  பொன்னியின் செல்வன்..!+++++++,CINI SPOT +++++கடந்த 1958-ம் ஆண்டு, 10 ஆயிரம் ரூபாய் கொடுத்து `பொன்னிய...
10/07/2022

எம்ஜிஆர் டைரக்ஷனில் பொன்னியின் செல்வன்..!
+++++++,CINI SPOT +++++

கடந்த 1958-ம் ஆண்டு, 10 ஆயிரம் ரூபாய் கொடுத்து `பொன்னியின் செல்வன்' கதையின் உரிமையைப் பெற்றார் எம்ஜிஆர்.

எம்.ஜி.ஆர் காலத்தில் காசு கொடுத்துக் கதை உரிமை பெறப்பட்டது. நடோடி மன்னன் பின் இதை படமாக்க நினைத்தார்.

அதன்பின், பொன்னியின் செல்வன் நாட்டுடைமையாக்கப்பட்டுவிட்ட காரணத்தால் தற்போது யார் வேண்டுமானாலும் அந்தக் கதையை திரைப்படமாக எடுக்கலாம். சட்டப்படி அதில் தவறில்லை. என்றாலும் தர்மப்படி கல்கியின் குடும்பத்திற்கு ஏதாவது கொடுக்கலாம் அல்லது கொடுக்காமலும் இருக்கலாம்.

பொன்னியின் செல்வனை' படமாக்க முயன்ற எம்.ஜி.ஆர், இந்தப் படத்தில் இரண்டு கேரக்டரில் நடிக்க இருந்தார். ஒன்று வந்தியத்தேவன். மற்றொன்று அருள்மொழிவர்மன். இந்தப் படத்துக்கு முன் வைஜயந்திமாலா எம்.ஜி.ஆருடன் ஒரே ஒரு படத்தில்தான் நடித்திருந்தார். அவரை பொன்னியின் செல்வனில் குந்தவை கேரக்டரில் நடிக்க ஒப்பந்தம் செய்திருந்தார் எம்.ஜி.ஆர். ஜெமினிகணேசன், பத்மினி, சாவித்ரி, நம்பியார், டி.எஸ்.பாலையா உட்பட பலர் நடிக்க இருந்தனர்.
முதலில் எம்.ஜி.ஆர் தனது எம்ஜியார் பிக்சர்ஸ் சார்பில் தயாரித்து, இயக்குவதாக இருந்தது. பிறகு தயாரிப்பு மற்றும் நடிப்பை மட்டும் பார்த்துக் கொண்டு வேறொருவர் இயக்குவற்கு முடிவு செய்யப்பட்டது.

அப்போதுதான் ஒரு நாடகத்தில் நடிப்பதற்காக, எம்.ஜி.ஆர் சீர்காழி சென்றுகொண்டிருந்தபோது விபத்தில் சிக்கினார். 6 மாதம் ஓய்வு தேவைப்பட்டது. ஓய்வு முடிந்து குணமடைந்ததும், அவர் நடிப்பில் பாதியில் நின்றபோயிருந்த படங்களை நடித்துக் கொடுத்தார். இதனால் பொன்னியின் செல்வனை அவர் எடுக்க முடியாமல் போனது.

பூர்வீக கிராமத்தில் புதுவீடு கட்டி கிரஹப்பிரவேசம் செய்த சிவகார்த்திகேயன்...!++++++++CINI SPOT++++++தமிழ் சினிமாவின் முன்...
17/04/2022

பூர்வீக கிராமத்தில் புதுவீடு கட்டி கிரஹப்பிரவேசம் செய்த சிவகார்த்திகேயன்...!
++++++++CINI SPOT++++++
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன்.
இவர் தற்போது டான், அயலான் போன்ற படங்களில் நடித்து முடித்துள்ளார்.

இதில் சிபி சக்ரவர்த்தி இயக்கிய ‘டான்’ படம் வருகிற மே மாதம் 13-ந் தேதி திரைக்கு வருகிறது. இதன் வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலின் பெற்றுள்ளார்.

மற்றொரு படமான ‘அயலான்’ பட படப்பிடிப்பும் முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

இப்படத்திற்கு ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இதன்பின்னர் தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் உருவாகும் எஸ்.கே.20 படத்திலும் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இப்படம் மூலம் சிவகார்த்திகேயன் டோலிவுட்டில் அறிமுகமாகிறார்.

இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டு நடிகை நடிக்கிறார்.

இந்த நிலையில் தனது பூர்வீக கிராமம் திருவீழிமிழலையில் அழகான புது வீடு ஒன்றை கட்டியுள்ளார்.

இவரது தாத்தாக்களான கோவிந்தராஜப் பிள்ளை, தட்சிணாமூர்த்தி பிள்ளை ஆகியோர் நாதஸ்வர கலைஞர்கள் ஆவார்கள்.

அவர்கள் வாழ்ந்த அந்த கிராமத்தில் தான் தற்போது சிவகார்த்திகேயன் புதுவீடு கட்டி கிரஹப்பிரவேசம் நடத்தி இருக்கிறாராம்.

சில வருடங்களுக்கு முன் சென்னையிலும் ஓர் அழகான வீடு கட்டி கிரஹப்பிரவேசம் செய்திருந்தார் சிவகார்த்திகேயன் என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ்.ஏ. சந்திரசேகரின் நடைபாதை வாழ்க்கை ..! https://youtu.be/fsCkrUEKPdQ
08/03/2022

எஸ்.ஏ. சந்திரசேகரின் நடைபாதை வாழ்க்கை ..!
https://youtu.be/fsCkrUEKPdQ

Presenting the 1st Episode of 'Yaar Indha SAC' - "Platformil SAC"; where the man himself shares his starting point of his Cinema Life. Checkout the Video to ...

"இதுதான் ஜெயலலிதாவின் குடும்பம்"-அரிய புகைப்படம்+++++++CINI SPOT+++++++முகநூலில் கிடைத்த இந்த போட்டோவில் உள்ளவார்களின் ப...
24/02/2022

"இதுதான் ஜெயலலிதாவின் குடும்பம்"-அரிய புகைப்படம்

+++++++CINI SPOT+++++++
முகநூலில் கிடைத்த இந்த போட்டோவில் உள்ளவார்களின் பெயர்கள் முகநூல் போட்டோவில் குறிப்பிடப் படவில்லை.

அடியேன் நினைவில் உள்ளவரை படத்தில் இருப்பவர்களின் பெயர்கள்.

நிற்பவர்கள்; ஜெயலலிதா தாய் மாமாவின் மனைவி, ஜெயலலிதாவின் தாய் மாமா ஸ்ரீனிவாசன், ஜெயலலிதாவின் அம்மா சந்தியா,

நாற்காலியில் அமர்ந்திருப்போர்: ஜெயலலிதாவின் தாய்வழிப் பாட்டி கமலம்மா, ஜெயலலிதாவின் சித்தி பத்மவல்லி (என்ற) பத்மாசினி, ஜெயலலிதாவின் தாய்வழிப் பாட்டனார் ரங்கசாமி ஐயங்கார்,

தரையில் அமர்ந்திருப்போர்: ஜெயலலிதா, ஜெயலலிதாவின் சித்தி அம்புஜவல்லி (என்ற) வித்தியாவதி, ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமார் (என்ற) பப்பு.

Address

Chennai
600018

Alerts

Be the first to know and let us send you an email when CINI SPOT posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to CINI SPOT:

Share

Category