25/04/2024
நடிகர் விக்ரமுக்கு ஒரு ராசி இருக்கு.. அது என்னன்னா செம சூப்பரா, அட்டகாசமா ஒரு அறிமுக இயக்குனர் ஒரு படத்தை கொடுப்பாரு. அவர தேடி கண்டுபிடிச்சு "எனக்காக மாஸா ஒரு கதை பண்ணுங்க"ன்னு சொல்லி, அவரை சீரழிச்சு துரத்தி விட்டுருவாரு..
அதுக்கு முன்னாடி, எந்த ஹீரோவோட பின்புலமே இல்லாம, சூப்பர் ஹிட் கொடுத்த அந்த இயக்குனர்கள் எல்லாம், விக்ரம் படம் பண்ணதுக்கு அப்புறம் எங்க போவாங்கன்னே தெரியாது.. அதுக்கு உதாரணமா சில லிஸ்ட் கொடுக்கிறேன்.. பார்த்து தெரிஞ்சுக்கங்க..
ரன், சண்டக்கோழி அப்படின்னு உச்சத்துல இருந்த லிங்குசாமியை தேடி பிடிச்சு, பீமா'ன்னு ஒரு மாஸ் படம் பண்ண சொல்லி தல குப்புற கவுத்து விட்டாரு..
"திருட்டுப் பயலே" ன்னு ஒரு டீசன்டான ஹிட்டு கொடுத்த சுசிகணேசன்'ங்கிற இயக்குனரை தேடி கண்டுபிடிச்சு, எனக்கு மாஸா ஒரு படம் பண்ணுன்னு சொல்லி, கந்தசாமி'ங்கிற குப்பையை எடுத்து, அவர் வாழ்க்கையை ஒழுச்சி கட்டினாரு..
"வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல, அப்படின்னு சின்ன பட்ஜெட்ல மிரட்டுற மாதிரி படங்கள் கொடுத்த சுசீந்திரன தேடி கண்டுபிடிச்சு, தனக்கு மாஸா ஒரு படம் பண்ண சொல்லி, ராஜபாட்டை'ங்கிற குப்பையான படத்தை கொடுத்து,சுசீந்திரன் லைஃப்பையும் காலி பண்ணாரு...
நாலு சின்ன பசங்கள வச்சுக்கிட்டு கோலிசோடா'ன்னு இண்டஸ்ட்ரி'யே அலற அளவுக்கு ஒரு ஹிட்டு கொடுத்த விஜய் மில்டன கூப்பிட்டு, தனக்கு மாஸா ஒரு படம் பண்ண சொல்லி, "10 எண்றதுக்குள்ள" ன்னு ஒரு கேவலமான படத்தைக் கொடுத்து விஜய் மில்ட்டன் கரியர் காலி பண்ணாரு.
சைத்தான் அப்படிங்கற பிளாக்பஸ்டர் ஹிட் படம் கொடுத்த பிஜோய் நம்பியாரை கொண்டு வந்து டேவிட்னு ஒரு படம் எடுக்க வச்சு காலி பண்ணினாரு..
அரிமா நம்பி'ன்னு டீசண்டா ஒரு ஹிட்டு கொடுத்த ஆனந்த் சங்கர கூட்டிட்டு வந்து, தனக்கு மாஸா ஒரு படம் வேணும்ன்னு "இருமுகன்"ன்னு ஒரு குப்பை கதையை எடுக்க வச்சு அவர் லைஃப்பையும் காலி பண்ணாரு..
சிம்புவை வச்சி வாலு அப்படின்னு சுமாரான படத்தை கொடுத்த விஜய் சந்தரை கூட்டிட்டு வந்து, தனக்கு மாஸா ஒரு படம் எடுன்னு சொல்லி, ஸ்கெட்ச்'ன்னு ஒரு படம் எடுக்க வச்சு, அவர் லைப்பையும் காலி பண்ணாரு
சாமி மாதிரியே தனக்கு ஒரு படம் வேணும்னு சாமி ஸ்கொயர்'ன்னு ஹரியை ஒரு படம் எடுக்க வச்சு ஊரே சிரிப்பா சிரிச்ச கதையை நான் சொல்லி உங்களுக்கு தெரியணும்னு அவசியம் இல்லை
தூங்கா நகரம்னு ஓரளவுக்கு ஒரு நல்ல படம் கொடுத்த ராஜேஷ் எம் செல்வா'வ கூட்டிட்டு வந்து தனக்கு மாஸா ஒரு படம் வேணும்ன்னு "கடாரம் கொண்டான்" ன்னு ஒரு படம் எடுக்க சொல்லி, அவர் வாழ்க்கையும் குப்புற கவுத்த பெருமை நம்ம சியான் விக்ரனுக்கே சாரும்...
டிமான்டி காலனி அப்படின்னு சின்ன பட்ஜெட்ல மிரட்டுற மாதிரி ஒரு படம் கொடுத்த அஜய் ஞானமுத்து'வ கூட்டிட்டு வந்து தனக்கு ஒரு மாஸா படம் பண்ண சொல்லி கோப்ரான்னு கேவலமா ஒரு படத்தை எடுக்க வெச்சி, அவர் வாழ்க்கையையும் குழி தோண்டி புதைச்ச பெருமையும் விக்ரம் அவர்களுக்கே சாரும்..
மகான் திரைப்படத்தைப்பத்தி நான் சொல்லவே தேவையில்லை.. கார்த்திக் சுப்புராஜ் அவர் வாழ்க்கையில மறக்க நினைக்கிற படம், அதுவாதான் இருக்கும்..
இதோ இப்போ சித்தா அப்படின்னு டீசன்டான ஒரு ஹிட் படத்தை கொடுத்த அருண்குமார கூட்டிட்டு வந்து மறுபடியும் தனக்கு மாஸா ஒரு படம் வேணும்'ன்னு எறக்கி விட்ருக்காரு..
இல்ல எனக்கு புரியாத ஒரு விஷயம் என்னன்னா, இவங்க எல்லாருமே தங்களோட படத்துல ஹீரோவை நம்பாம கதையை நம்பி ஜெய்ச்சவங்க...
இவங்களை கூட்டிட்டு வந்து தனக்கு மாஸ் கமர்சியலா ஒரு படம் பண்ண சொல்லி விக்ரம் கேட்கிறாரா? இல்ல... விக்ரமே நம்ம கைல கிடைச்சுட்டாரு அப்படின்னு சொல்லி இவங்க எல்லாம் மாஸ் படம் பண்றேன்னு குப்புற விழுறாங்களான்னு ஒண்ணுமே புரியல.. இவங்க எல்லாருமே வித்தியாசமான படம் கொடுத்துதான் ஜெயிச்சாங்க அப்படின்னு விக்ரம் நினைச்சிருந்தார்ன்னா, கண்டிப்பா தனக்கு படம் பண்ண சொல்லும்பொழுதும் அப்படி ஒரு வித்தியாசமான கதையைத்தான் விக்ரம் கேட்டிருப்பாரு... ஆனா விக்ரமோட குறுக்கு புத்தி எல்லாம், அந்த சமயத்துக்கு ஹிட் அடிச்ச அவங்களை கூட்டிட்டு வந்து, தனக்கு மாஸா ஒரு படம் வேணும்னு அவர் எதிர்பார்க்கிறதுதான்... கிட்டத்தட்ட ரஜினியோட பார்முலாதான்.. ஆனா ரஜினிகிட்ட இருந்த நேர்மை, விக்ரம்கிட்ட இல்ல.
விக்ரம் அவங்களோட முதல் படத்தோட வெற்றியை ஒழுங்கா கணிச்சி, அவங்க இயல்பிலேயே ஒரு படம் தன்னை வச்சு எடுக்க நினைச்சு இருந்தா எத்தனையோ அற்புதமான படங்கள் நமக்கு கிடைச்சிருக்கும்.. ஆனா விக்ரம் அவங்கள அப்படி இயங்க விடாம தன்னை மாஸா காட்டறதுலதான் குறியா இருந்திருக்காரு...
எனவே ஒரே ஒரு விஷயம் மட்டும் மனசுல வச்சுக்கோங்க வருங்கால இயக்குனர்களே.. நீங்க ஒரு நல்ல படம் பண்ணதுக்கு அப்புறம் கண்டிப்பா விக்ரம் உங்களை கூப்பிட்டு படம் பண்ண சொல்லுவாரு... அப்ப மட்டும் உஷாரா இருந்துக்கோங்க... ஏன்னா உங்க வாழ்க்கை, உங்களுக்கு ரொம்ப முக்கியம் இல்லையா.. ஏன்னா தமிழ் சினிமாவோட லெக் தாதா விக்ரம்தான்...