Dharmathin Kural

Dharmathin Kural நடப்பு செய்திகளை உடனுக்குடன் நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தி நிறுவனம்

  | ஐ.ஐ.டி. மாணவிக்கு பாலியல் தொல்லை - ஈபிஎஸ் கண்டனம்!சென்னை ஐஐடி கேன்டீனில்  மாணவி பாலியல் தொல்லைக்கு ஆளானதாக வரும் செ...
15/01/2025

| ஐ.ஐ.டி. மாணவிக்கு பாலியல் தொல்லை - ஈபிஎஸ் கண்டனம்!

சென்னை ஐஐடி கேன்டீனில் மாணவி பாலியல் தொல்லைக்கு ஆளானதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை அமைக்க வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் தலையாய கடமை என்பதை உணர வேண்டும்.

பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளவன் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி

  | ரவுடி பாம் சரவணின் மனைவி - காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்!வடசென்னை பிரபல ரவுடி பாம் சரவணனை போலீசார் கைது செய்துள்ள...
15/01/2025

| ரவுடி பாம் சரவணின் மனைவி - காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்!

வடசென்னை பிரபல ரவுடி பாம் சரவணனை போலீசார் கைது செய்துள்ள நிலையில், என்கவுண்டர் செய்ய திட்டமிட்டு உள்ளதாக கூறி அவரது மனைவி மகாலட்சுமி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்..

  | ரவுடியை சுட்டு பிடித்த போலீஸ் -  ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதி!பல வழக்குகளில் தலைமறைவாக இருந்து வந்த ரவுடி பா...
15/01/2025

| ரவுடியை சுட்டு பிடித்த போலீஸ் - ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதி!

பல வழக்குகளில் தலைமறைவாக இருந்து வந்த ரவுடி பாம் சரவணனை, ஆந்திராவில் இருந்து சென்னை அழைத்து வரும்போது தப்பியோட முயற்சித்ததால், சுட்டு பிடித்த தனிப்படை போலீஸ்...

காலில் குண்டு காயத்துடன் ரவுடி பாம் சரவணன் - ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதி!

  | அடுத்த 2 மணிநேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்..🌧️வேலூர்🌧️திருவண்ணாமலை🌧️கிருஷ்ணகிரி🌧️தருமபுரி🌧️சேலம்🌧️நீலகிரி...
04/05/2024

| அடுத்த 2 மணிநேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்..

🌧️வேலூர்
🌧️திருவண்ணாமலை
🌧️கிருஷ்ணகிரி
🌧️தருமபுரி
🌧️சேலம்
🌧️நீலகிரி
🌧️கோவை
🌧️திருப்பூர்
🌧️திண்டுக்கல்
🌧️தேனி

23/08/2022

| வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை - கணவனை கைது செய்யக் கோரி உறவினர்கள் சாலைமறியல்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகராட்சி எல்லைக்கு உட்பட்ட சந்தைப்பேட்டை தெற்கு தெருவை சேர்ந்தவர் அப்சா (25) இவர் கடந்த ஆண்டு அதே பகுதியை சேர்ந்த தஸ்தகீர் (27) என்கின்ற இளைஞரை காதலித்து தனது பெற்றோர்களின் சம்மதத்தோடு திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் திருமணமான சில மாதங்களிலேயே கருத்து வேறுபாடு காரணமாகவும், தனது கணவர் தஸ்தகீரும் அவரது குடும்பத்தினரும் வரதட்சணை கொடுமை செய்வதாக கூறி தனது தாய் வீட்டிற்கு திரும்பி உள்ளார்.

இதனைத் தொடர்ந்து, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் அப்சாவிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில், நேற்று காலை தனக்கு தூக்கம் வருவதாக கூறிவிட்டு வீட்டின் மேல் அறையில் ஓய்வெடுக்க செல்வதாக தாயிடம் கூறி சென்ற அப்சா மாலை தாயிடம் வந்து தனக்கு தூக்கம் வரவில்லை என்றும் நான் எலி பேஸ்ட் சாப்பிட்டு விட்டேன் என்றும் கூறியுள்ளார்.

இதைக்கேட்டுப் பதறிப் போன அவரது தாய் அக்கம் பக்கத்தினர் உதவியோடு அவரை திருக்கோவிலூர் அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே அப்சா பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, தகவல் அறிந்த திருக்கோவிலூர் போலீசார் அப்சாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், உயிரிழந்த அப்சா எழுதி வைத்திருந்த கடிதம் சிக்கியது

தனது கணவர், மாமனார், மாமியார் உள்ளிட்ட 7 பேர் தன்னை வரதட்சணை கொடுமை செய்வதாகவும், பெண் பிள்ளை பெற்ற காரணத்தினால் என்னை வீட்டில் சேர்க்காமல், பெண் குழந்தையை கொல்லவும் சொல்கிறார்கள். பெண் குழந்தையை பெற்றெடுத்ததற்கு நான் என்ன செய்வேன். காலம் மாறிவிட்டது. பெண் பிள்ளையைப் பெற்ற காரணத்தினால் தன்னை அடிக்கடி தற்கொலை செய்து கொள்ள தூண்டியதாகவும் கடிதத்தில் எழுதியுள்ளார்.

மேலும், என் திருமண சீர் மற்றும் எனது போன் சான்றிதழ்கள் அனைத்தையும் பெற்று என் குடும்பத்தாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் நஷ்ட ஈடு இணை பெற்று என் குழந்தையின் வருங்காலத்தை பார்த்துக் கொள்ளுங்கள் என்றும் இந்த கடிதத்தில் அப்சா எழுதியுள்ளார். மேலும் இதனையே தான் வீடியோவாக பதிவு செய்துள்ளதாகவும் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அப்ஸாவின் தாயார் போலீசாரிடம் வரதட்சணை கொடுமை செய்து தனது மகளை தற்கொலைக்கு தூண்டிய அவரது கணவர் உள்ளிட்ட 7 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், திருமண நடந்த ஒரு வருடத்திற்குள் நடைபெற்ற சம்பவம் என்பதால் கோட்டாட்சியர் விசாரணைக்கு பரிந்துரை செய்துள்ளனர்.

  | கொரோனா பாதிப்பால் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த; நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் - சிகிச்சை ப...
28/06/2022

| கொரோனா பாதிப்பால் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த; நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் - சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்!

  | உதய்பூரில் பதற்றம்!நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசிய பாஜகவின் நூபுர் ஷர்மாவை ஆதரித்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட; ...
28/06/2022

| உதய்பூரில் பதற்றம்!

நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசிய பாஜகவின் நூபுர் ஷர்மாவை ஆதரித்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட; கன்ஹையா லால் என்பவர் வெட்டி படுகொலை - கொலையாளிகள் இருவர் கைது!

பதற்றமான சூழ்நிலையால் போலீசார் குவிப்பு, இணைய வசதி துண்டிப்பு; அணைவரும் அமைதி காக்க வேண்டும் என ராஜஸ்தான் முதல்வர் - அசோக் கெலாட் வலியுறுத்தல்!

  | ATMல் தவற விட்ட பணத்தை வங்கி மேலாளரிடம் - ஒப்படைத்த மருந்துக்கடை உரிமையாளர்!சென்னை : டாக்டர் பெசன்ட் ரோட்டில் மருந்த...
20/06/2022

| ATMல் தவற விட்ட பணத்தை வங்கி மேலாளரிடம் - ஒப்படைத்த மருந்துக்கடை உரிமையாளர்!

சென்னை : டாக்டர் பெசன்ட் ரோட்டில் மருந்து கடை நடத்தி வரும் நஜிமுத்தீன் என்பவர் இன்று காலை 9:00 மணிக்கு, ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள கனரா வங்கி ATM யில் தவறவிட்ட ரூபாய் 10,000ஐ இன்று காலை 10:30மணி அளவில் வங்கி மேலாளர் சதிஷ் குமார் அவர்களிடம், வங்கி முன்னாள் அமைந்துள்ள விநாயகர் கோவில் அர்ச்சகர் நடராஜன் முன் பணத்தை உரியவரிடம் சேர்க்க வேண்டும் என கூறி ஒப்படைத்தார்.

  | தமிழ்நாடு முழுவதும் 50  ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து - தமிழ்நாடு அரசு உத்தரவு!
12/06/2022

| தமிழ்நாடு முழுவதும் 50 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து - தமிழ்நாடு அரசு உத்தரவு!

Address

Thousand Lights
600006

Alerts

Be the first to know and let us send you an email when Dharmathin Kural posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dharmathin Kural:

Share