
03/06/2025
பாரிஸ் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற இமானே கெலிஃப்புக்கு பாலின சோதனை விவகாரம் பாரிஸ் ஒலிம்பிக்கில் குத்துச்சண்டை போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற அல்ஜீரிய வீராங்கனை இமானே கெலிஃப், கட்டாய மரபணு அடிப்படையிலான பாலின பரிசோதனையை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். இது, உலக குத்துச்சண்டை அமைப்பின் புதிய நிர்வாக குழுவால் எடுக்கப்பட்ட கொள்கை முடிவாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதைப் பற்றி விரிவாக பார்க்கலாம். சுவிட்சர்லாந்தில் உள்ள லோசான் நகரில் தலைமையிடம் கொண்ட உலக குத்துச்சண்டை அமைப்பு (World Boxing) இந்த அறிவிப்பை வெள்ளிக்கிழமை வெளியிட்டது. அதன்படி, அனைத்து போட்டியாளர்களுக்கும் மரபணு அடிப்படையிலான பாலின சோதனை அவசியமாகும் என தெரிவிக்கப்பட்டது. அல்ஜீரிய வீராங்கனை இமானே கெலிஃப்பின் விவகாரம் குறிப்பாக குறிப்பிடப்பட்டது. நெதர்லாந்தில் வரும் மாதம் நடைபெறவுள்ள போட்டியில் பங்கேற்பதற்கு முன், இமானே இந்த சோதனையை அனுபவிக்க வேண்டும் என உலக குத்துச்சண்டை அமைப்பு அறிவித்துள்ளது....
பாரிஸ் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற இமானே கெலிஃப்புக்கு பாலின சோதனை விவகாரம்