News4 Tamil

News4 Tamil Indian news இந்திய செய்தி

04/06/2021

உதயநிதி ஸ்டாலின் அவர்களின் உதவி மக்களின் சந்தோஷம்

2021.06.04( முதல் அமைச்சர் இன்று முக்கிய ஆலோசனைதமிழகத்தில் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு வர...
04/06/2021

2021.06.04
( முதல் அமைச்சர் இன்று முக்கிய ஆலோசனை

தமிழகத்தில் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு வரும் 7 ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. )

கொரோனா பரவலை தடுக்க பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. தமிழ்நாட்டிலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மே 10-ந் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. எனினும் கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வராததையடுத்து கடந்த மே 24-ந் தேதி முதல் 31-ந் தேதி வரையில் தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

தொற்று பரவல் கட்டுக்குள் வராததையடுத்து, மீண்டும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு ஒருவாரம் நீட்டிக்கப்பட்டது. அதாவது ஜூன் 7 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு முடிய இன்னும் சில தினங்களே உள்ளதால், ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முடிவெடுக்க முதல் - அமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

சென்னை தலைமை செயலகத்தில் இன்று காலை 11.30 மணியளவில் நடைபெற உள்ள ஆலோசனை கூட்டத்தில் தலைமைச் செயலாளர், சுகாதாரச் செயலாளர், டிஜிபி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு மற்றும் அரசு மேற்கொண்ட நோய்த் தடுப்பு நடவடிக்கைகளால் தமிழகத்தில் தற்போது கொரோனா பரவலின் வேகம் குறைந்து படிப்படியாக குறையத்தொடங்கியுள்ளது. இதனால், ஊரடங்கு தளர்வுகள் இன்றி நீட்டிக்கப்படுமா? அல்லது சில தளர்வுகள் அளிக்கப்படுமா? என்பது குறித்து மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

2021.06.04( உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17.28 கோடியாக உயர்வு )உலகம் முழுவதும் கொரோனா வைரசால் ப...
04/06/2021

2021.06.04
( உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17.28 கோடியாக உயர்வு )

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை உருவாகி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17.28 கோடியை தாண்டி உள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 17,28,87,569 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 15,58,14,643 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 37 லட்சத்து 16 ஆயிரத்து 345 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்றுக்கு தற்போது 1,33,56,581 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 89,366 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா - பாதிப்பு - 3,41,74,252, உயிரிழப்பு - 6,11,576, குணமடைந்தோர் - 2,80,25,497
இந்தியா - பாதிப்பு - 2,85,72,359, உயிரிழப்பு - 3,40,719, குணமடைந்தோர் - 2,65,88,808
பிரேசில் - பாதிப்பு - 1,68,03,472, உயிரிழப்பு - 4,69,784, குணமடைந்தோர் - 1,52,28,983
பிரான்ஸ் - பாதிப்பு - 56,94,076, உயிரிழப்பு - 1,09,857, குணமடைந்தோர் - 53,78,370
துருக்கி - பாதிப்பு - 52,70,299, உயிரிழப்பு - 47,882, குணமடைந்தோர் - 51,39,993

தொடர்ந்து கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் விவரம்:-

ரஷ்யா - 50,99,182
இங்கிலாந்து - 44,99,878
இத்தாலி - 42,25,163
அர்ஜென்டினா- 38,84,447
ஜெர்மனி - 37,01,690
ஸ்பெயின் - 36,93,012
கொலம்பியா - 34,88,046
ஈரான் - 29,45,100
போலந்து - 28,74,092
மெக்சிக்கோ - 24,23,928

2021.06.03( காவல் துறையினருக்கு ரூ.5000 ஊக்கத்தொகை.. முதல்வர் ஸ்டாலின் அதிரடி )கொரோனா தொற்று காலத்தில் களப்பணியாற்றி வரு...
03/06/2021

2021.06.03
( காவல் துறையினருக்கு ரூ.5000 ஊக்கத்தொகை.. முதல்வர் ஸ்டாலின் அதிரடி )

கொரோனா தொற்று காலத்தில் களப்பணியாற்றி வரும் காவலர் முதல் ஆய்வாளர் வரையிலான ஒட்டுமொத்த காவல்துறையினருக்கும், தமிழக அரசு ஊக்க தொகையாக 5000 ரூபாய் அறிவித்துள்ளது.

இன்று முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாள்.. இதனை தமிழகம் முழுவதும் திமுக சார்பில் கொண்டாடி வருகின்றனர்.

மேலும், கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு திமுக அரசு பல்வேறு நலதிட்டங்களையும், சிறப்பு அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளது.

அதன்படி, காவல்துறைக்கு ஸ்பெஷல் அறிவிப்பு வெளியிட்டுள்து.. கொரோனா முதல் அலையில் இருந்து முன்களப்பணியாளர்களாக அரும்பணியாற்றி வரும் அனைத்து காவல்துறையினருக்கும் ஊக்கத்தொகையை அறிவித்துள்ளது... இதுகுறித்து தமிழக அரசு சார்பில் ஒரு அறிக்கையும் வெளியாகி உள்ளது.

அதில், ''கோவிட்-19 பெருந்தொற்று, உலகளவில் மட்டுமல்ல இந்தியாவில், தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் கோவிட் தொற்றின் முதல் மற்றும் இரண்டாம் அலையின் காரணமாக காவல்துறைப் பணியாளர்கள் உட்பட பல்வேறு முன்களப் பணியாளர்கள் தங்களது இன்னுயிரையும் பொருட்படுத்தாது கடமையாற்றி வருகின்றனர்.

அவர்களது இன்றியமையாத பணியினை அங்கீகரிக்கும் விதமாகவும், அவர்களது பணியினை ஊக்குவிக்கும் விதமாகவும் காவல்துறையைச் சேர்ந்த இரண்டாம் நிலைக் காவலர் முதல் ஆய்வாளர் வரையிலான 1,17,184 காவல் துறையினருக்கு ரூ.5,000/- (ரூபாய் ஐந்தாயிரம் மட்டும்) வீதம் ஊக்கத் தொகை வழங்க முதல்வர் ஆணையிட்டுள்ளார்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதவியேற்றது முதல், ஏராளமான திட்டங்களை, அறிவிப்புகளை வெளியிட்டு பல்வேறு தரப்பினரை முதல்வர் மகிழ்ச்சி ஏற்படுத்தி வருகிறார்.. மற்றொரு பக்கம் கொரோனா தடுப்பு பணிகளையும் சிறப்பாக கையாண்டு வருகிறார்.. இப்படிப்பட்ட சூழலில், காவல்துறைக்கும் முக்கியத்துவம் தந்து, இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது, கூடுதல் மகிழ்ச்சியை போலீசாருக்கு ஏற்படுத்தி வருகிறது.

Address

Chennai
600040

Opening Hours

Monday 7am - 8pm
Tuesday 7am - 8pm
Thursday 7am - 8pm

Alerts

Be the first to know and let us send you an email when News4 Tamil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share