Seidhi Idhazh - செய்தி இதழ்

  • Home
  • Seidhi Idhazh - செய்தி இதழ்

Seidhi Idhazh - செய்தி இதழ் BREAKING NEWS | NEWS UPDATES | TAMIL

ஜி.கே.ஆர். சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில், நோவா ஆம்ஸ்ட்ராங் இயக்கத்தில், தருண் விஜய், சேஷ்விதா கனிமொழி, மதுசூதனன் ராவ், பிரியத...
30/08/2025

ஜி.கே.ஆர். சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில், நோவா ஆம்ஸ்ட்ராங் இயக்கத்தில், தருண் விஜய், சேஷ்விதா கனிமொழி, மதுசூதனன் ராவ், பிரியதர்ஷினி ராஜ்குமார், மற்றும் ராம்ஸ் நடிப்பில் வெளியாகியுள்ளது, குற்றம் புதிது (Kutram Pudithu) திரைப்படம். ஒரு மணிநேரம் 57 நிமிடம் ஓடும் இப்படம், கிரைம் திரில்லர் வகையைச் சேர்ந்தது. படத்தின் கதை, ஒருநாள் காவல்துறை உதவி ஆணையர் மதுசூதனன்ராவின் மகள் சேஷ்விதா கனிமொழி திடீரென இரவில் கடத்தப்பட்டு, கொல்லப்படுகிறார். உணவு விநியோகம் செய்யும் தருண் விஜய் மீது சந்தேகம் எழுகிறது. பின்னர், ஆட்டோ ஓட்டுநர் ராம்ஸ்தான் உண்மையான கொலையாளி என்று தருண் விஜய் விடுவிக்கப்படுகிறார்....

ஜி.கே.ஆர். சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில், நோவா ஆம்ஸ்ட்ராங் இயக்கத்தில், தருண் விஜய், சேஷ்விதா கனிமொழி, மதுசூதனன் ராவ், ...

ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, பிரதமர் மோடி சீனாவிற்குச் சென்றுள்ளார். இந்த நிலையில், அந்நாட்டின் டிக்டாக் செயலி இந்தியாவிற்க...
30/08/2025

ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, பிரதமர் மோடி சீனாவிற்குச் சென்றுள்ளார். இந்த நிலையில், அந்நாட்டின் டிக்டாக் செயலி இந்தியாவிற்குள் மீண்டும் நுழைய வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக ஜப்பான் சென்றிருந்தார். தலைநகர் டோக்கியோவில் அவருக்கு அந்நாட்டின் சார்பில் சகல மரியாதைகளும் அளிக்கப்பட்டன. ஜப்பான் பிரதமர் மற்றும் 16 மாகாண ஆளுநர்கள், தலைநகர் டோக்கியோவில் மோடியைச் சந்தித்துப் பேசினர். மோடி சீனா பயணம் இதையடுத்து தனது ஜப்பான் பயணத்தை முடித்துக் கொண்டு அங்கிருந்து சீனாவின் தியான்ஜின் நகருக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார் மோடி. அங்கு நாளை நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் (எஸ்.சி.ஓ) மோடியும் பங்கேற்கிறார்....

ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, பிரதமர் மோடி சீனாவிற்குச் சென்றுள்ளார். இந்த நிலையில், அந்நாட்டின் டிக்டாக் செயலி இந...

அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளில் சஸ்பெண்ட் செய்யப்படுவதைத் தவிர்க்கும் வகையில் விதிகளைத் திருத்தி, தமிழக அரசு அரசாணை வெ...
30/08/2025

அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளில் சஸ்பெண்ட் செய்யப்படுவதைத் தவிர்க்கும் வகையில் விதிகளைத் திருத்தி, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பொதுவாகக் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகும் அரசு ஊழியர்களை, அவர்கள் ஓய்வுபெறும் நாளில் சஸ்பெண்ட் செய்து, ஓய்வுப் பலன்களைக் நிறுத்தி வைக்கும் நடவடிக்கை தமிழ்நாட்டில் தொடர்ந்து வந்தது. இந்த நிலையில் 2021 இல் நடந்த சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில், விதி 110-இன் கீழ் வெளியான அறிவிப்பின்படி, சஸ்பெண்ட் நடவடிக்கை விதிகளைத் திருத்தி, தமிழக அரசு தற்போது அரசாணையை வெளியிட்டுள்ளது. அதன் முக்கிய விவரங்கள்: + குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர்கள் இனிமேல் உரியத் தேதியில் ஓய்வுபெற அனுமதிக்கப் படுவார்கள்....

அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளில் சஸ்பெண்ட் செய்யப்படுவதைத் தவிர்க்கும் வகையில் விதிகளைத் திருத்தி, தமிழக அர...

பொறாமைப்படும் அளவிற்கு ஒளிர்ந்த அ.தி.மு.க. இன்றைக்குப் பலரால் ஏளனம் பேசுகிற அளவுக்கு உள்ளது என்று சசிகலா வேதனை தெரிவித்த...
30/08/2025

பொறாமைப்படும் அளவிற்கு ஒளிர்ந்த அ.தி.மு.க. இன்றைக்குப் பலரால் ஏளனம் பேசுகிற அளவுக்கு உள்ளது என்று சசிகலா வேதனை தெரிவித்து இருக்கிறார். எனவே சிதறிக் கிடக்கும் அ.தி.மு.க.,வினர் அனைவரும் ஒன்று பட்டால் மட்டுமே எதிரியை வீழ்த்தி வெற்றிப் பாதையில் பயணிக்க முடியும் என்று அவர் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் அ.தி.மு.க.,வினருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்: + தொண்டர்களுக்கான இயக்கமாகவும் எழை, எளிய மக்களுக்கான இயக்கமாகவும், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க. சிறப்பாகச் செயலாற்றி வந்துள்ளது. இவற்றிலெல்லாம் எனது தன்னலமற்றப் பங்கும் அடங்கியிருக்கிறது என்று நினைக்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது....

பொறாமைப்படும் அளவிற்கு ஒளிர்ந்த அ.தி.மு.க. இன்றைக்குப் பலரால் ஏளனம் பேசுகிற அளவுக்கு உள்ளது என்று சசிகலா வேதனை ....

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை ஐரோப்பிய நாடுகளுக்குப் புறப்படுவதற்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பல...
30/08/2025

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை ஐரோப்பிய நாடுகளுக்குப் புறப்படுவதற்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். குறிப்பாக தமது வெளிநாட்டுப் பயணம் குறித்து, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி முன்வைத்து வரும் குற்றச்சாட்டுகளை விமர்சித்தார். எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்தபோது எப்படி வெளிநாடுகளுக்குச் சென்றாரோ, அப்படிதானே நானும் செல்வேன் என்றார். ஒருவேளை, அவரதுப் பயணத்தைப் போல எனது பயணமும் இருக்கும் என்று எடப்பாடி எண்ணுகிறாரோ என்று விமர்சித்த ஸ்டாலின், தனது கையெழுத்தின் மூலம் பல ஒப்பந்தங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன என்றார்....

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை ஐரோப்பிய நாடுகளுக்குப் புறப்படுவதற்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசினார....

தமிழ்நாட்டுக்குத் தொழில் முதலீடுகளை ஈர்க்க, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 7 நாள் பயணமாக ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்குப் ப...
30/08/2025

தமிழ்நாட்டுக்குத் தொழில் முதலீடுகளை ஈர்க்க, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 7 நாள் பயணமாக ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்குப் புறப்பட்டுச் சென்றார். அவரை, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், தி.மு.க. எம்.பி.,க்கள் ஆ.ராசா, தயாநிதி மாறன் உள்ளிட்டோர் உடன் சென்று வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர். இன்று காலை 9 மணி அளவில் சென்னை விமான நிலையத்தில் இருந்து ஸ்டாலின் புறப்பட்டார். முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் பேசியதில் சில முக்கிய விவரங்கள்: இந்தப் பயணத்தில் தொழில் முதலீடுகளை ஈர்க்கவும், புதியப் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடவும் திட்டமிடப்பட்டுள்ளது....

தமிழ்நாட்டுக்குத் தொழில் முதலீடுகளை ஈர்க்க, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 7 நாள் பயணமாக ஜெர்மனி, இங்கிலாந்து நாடுக.....

அமெரிக்க அதிபராகக் கடந்த ஜனவரி மாதம் பொறுப்பேற்றுக் கொண்ட டொனால்டு டிரம்பின் வயது 79. அவர் பதவியேற்றதில் இருந்தே பொருளாத...
29/08/2025

அமெரிக்க அதிபராகக் கடந்த ஜனவரி மாதம் பொறுப்பேற்றுக் கொண்ட டொனால்டு டிரம்பின் வயது 79. அவர் பதவியேற்றதில் இருந்தே பொருளாதாரம் மற்றும் சீர்திருத்தங்கள் தொடர்பாக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் அவரது உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் கிளம்பின. குறிப்பாக, அவரதுக் கையில் சிராய்ப்புக் காயங்கள் இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகின. இதுகுறித்துக் கடந்த மாதமே வெள்ளை மாளிகைத் தரப்பில் இருந்து விளக்கம் தரப்பட்டது. நாள்பட்ட நரம்பியல் பாதிப்பு டிரம்புக்கு உள்ளதாகவும், கைக் குலுக்கும்போது அவருக்கு லேசான எரிச்சல் ஏற்படுவதாகவும், மற்றபடி பெரியப் பிரச்சனைகள் எதுவும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது....

மேலும், துணை அதிபராக இருக்கும் ஜே.டி.வான்ஸ், விரைவில் அதிபராகப் பதவியேற்க இருக்கிறார் என்றுகூட தகவல் பரவியது.

தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய 2,152 கோடி ரூபாய் சமக்ர சிக்‌ஷா அபியான் (SSA) திட்ட நிதியை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க ...
29/08/2025

தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய 2,152 கோடி ரூபாய் சமக்ர சிக்‌ஷா அபியான் (SSA) திட்ட நிதியை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி, திருவள்ளூர் காங்கிரஸ் எம்.பி சசிகாந்த் செந்தில், தனது அலுவலகத்தில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளார். 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தின் மூலம், மழலையர் பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளிகள் வரை சமமான, தரமான கல்வியை வழங்க மத்திய அரசு நிதி ஒதுக்குகிறது. ஆனால் 2024 – 25 ஆம் ஆண்டுக்கான நிதி, பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுவிட்ட நிலையில், எதிர்க்கட்சிகள் ஆளும் தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் மாநிலங்களுக்கு மட்டும் இன்னும் வழங்கப்படவில்லை....

தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய 2,152 கோடி ரூபாய் சமக்ர சிக்‌ஷா அபியான் (SSA) திட்ட நிதியை மத்திய அரசு உடனடியாக விடுவி.....

ஒன்றிய மற்றும் மாநில அரசு அதிகாரங்களை மறுபரிசீலனை செய்து உண்மையான கூட்டாட்சியை வலுப்படுத்தும் எதிர்கால கட்டமைப்பை உருவாக...
29/08/2025

ஒன்றிய மற்றும் மாநில அரசு அதிகாரங்களை மறுபரிசீலனை செய்து உண்மையான கூட்டாட்சியை வலுப்படுத்தும் எதிர்கால கட்டமைப்பை உருவாக்குவது காலத்தின் கட்டாயம் என்று அனைத்து மாநில முதலமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். கடிதத்தின் முக்கிய அம்சங்கள்: ஒன்றிய–மாநில அதிகாரங்களை மறுபரிசீலனை செய்து, சமநிலையை மீண்டும் நிறுவ வேண்டும். வலுவான ஒன்றியமும், வலுவான மாநிலங்களும் ஒருவருக்கொருவர் துணை நிற்கும் கட்டமைப்பு அவசியம். 1967 இல் இந்தியப் பாதுகாப்புக்கு ஒன்றியம் வலுவாக இருக்கட்டும்; ஆனால் கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளில் மாநில சுயாட்சியை பறிக்கக் கூடாது என்று அண்ணா கூறினார். ...

அரசு அதிகாரங்களை மறுபரிசீலனை செய்து கூட்டாட்சியை வலுப்படுத்தும் எதிர்கால கட்டமைப்பை உருவாக்குவது கட்டாயம் - ...

ஆர்.எஸ்.எஸ். - பாரதிய ஜனதா இடையே மோதல் நிலவுவதாக வெளிவந்தத் தகவல்களை, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் மறுத்துள்ளார். ஆர்...
29/08/2025

ஆர்.எஸ்.எஸ். - பாரதிய ஜனதா இடையே மோதல் நிலவுவதாக வெளிவந்தத் தகவல்களை, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் மறுத்துள்ளார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நூற்றாண்டு விழா நாடெங்கும் ”ஆர்.எஸ்.எஸ்.-100” என்னும் தலைப்பில் நடந்து வருகிறது. டெல்லியில் நடந்த கருத்தரங்கில் கலந்துகொண்ட மோகன் பகவத், பல்வேறுப் புதிர்களுக்கு விடையளித்துள்ளார். குறிப்பாக, பா.ஜ.க.,வுடன் மோதல் என்ற பல தரப்புக் குற்றச்சாட்டுகளுக்கு அவர் விளக்கம் கொடுத்திருக்கிறார். அவர் கூறியதில் முக்கியமானவை: ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க. இடையே எந்த சண்டையும் இல்லை. சில தரப்புகள் மோதல் போக்கு உள்ளது போன்ற தோற்றத்தை உருவாக்குகின்றன....

இவ்வாறு மோகன்பகவத் தெளிவுபடுத்தி இருக்கிறார். மேலும் 75 வயது நிறைவடைந்தால் பதவிகளில் இருந்து விலகி விட வேண்டும...

சென்னை ஐஐடியில், தமிழக அரசுப் பள்ளி மணவர்கள் 28 பேர் சேர்ந்துள்ளதாக, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாம...
29/08/2025

சென்னை ஐஐடியில், தமிழக அரசுப் பள்ளி மணவர்கள் 28 பேர் சேர்ந்துள்ளதாக, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்ததற்கு, பா.ம.க. தலைவர் அன்புமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அந்த 28 பேரில் யாரும் IIT B.Tech படிப்பில் சேரவில்லை என்று கூறியுள்ளார். 4 மாணவர்கள் மட்டும் JEE Advanced - உயர்நிலைத் தேர்வுக்குத் தகுதி பெற்றவர்கள். மீதமுள்ள 24 பேர் அந்தத் தேர்வுக்கும் தகுதி பெறவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், 25 பேர் B.S - Data Science மற்றும் 3 பேர் B.S - Electronics System என்ற ஆன்லைன் படிப்புகளில்தான் சேர்ந்துள்ளதாக அன்புமணி கூறியுள்ளார்....

ஐஐடியில் அரசுப் பள்ளி மணவர்கள் 28 பேர் சேர்ந்துள்ளதாக, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்ததற்கு, அன்பும.....

2026 சட்டமன்றத் தேர்தலையொட்டி அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம் – தமிழகத்தை மீட்போம் என்ற ...
29/08/2025

2026 சட்டமன்றத் தேர்தலையொட்டி அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம் – தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் எழுச்சிப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார். இதையொட்டி அவர், அ.தி.மு.க. தொண்டர்களுக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். எடப்பாடி பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தின் முக்கிய அம்சங்கள் தி.மு.க. ஆட்சியில் ஒவ்வொருத் துறையிலும் அட்டூழியங்கள் நடக்கின்றன; பல நலத் திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளன; தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப் படவில்லை என்று மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். வெற்று விளம்பரங்கள், மாயாஜால அறிவிப்புகள் மூலமே ஸ்டாலின் அரசு இயங்குகிறது; அதனால் மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர்....

2026 சட்டமன்றத் தேர்தலையொட்டி அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம் – தமிழகத்தை மீட்போம்...

Address


Alerts

Be the first to know and let us send you an email when Seidhi Idhazh - செய்தி இதழ் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share