சமரசம்

சமரசம் சொல்வதைத் தெளிவாக - நேரடியாகச் சொல்லுங்கள்!

இந்தச் சடங்கை நிறைவேற்றுவதற்காகப் பிரதமர் நரேந்திர மோடி இராமர் சென்றதா கச் சொல்லப்படும் கோயில்களுக்கெல்லாம் சென்று வழிபட...
18/02/2024

இந்தச் சடங்கை நிறைவேற்றுவதற்காகப் பிரதமர் நரேந்திர மோடி இராமர் சென்றதா கச் சொல்லப்படும் கோயில்களுக்கெல்லாம் சென்று வழிபட்டும், விரதம் மேற்கொண்டும் இந்தப் பணிக்குத் தன்னைத் தகுதியாக்கிக் கொண்டிருக்கிறார். அவர் முதலில் சென்று வழிபட்டது நாசிக்கிலுள்ள காலாராம் கோவில் இச்செய்தியைப் படித்த போது எனக்கு இது தொடர்புடைய ஒரு வரலாற்று நிகழ்ச்சி நினைவுக்கு வந்தது.

கட்டுரையை முழுமையாக வாசிக்க
https://www.samarasam.net/view-art.php?id=664

கருணை நபி(ஸல்) அவர்கள் மாற்றுத்திறனாளிகளின் திறமைகளையும் அங்கீகரிக்கக் கூடியவர்களாகவே இருந்தார்கள். பார்வையற்றவராக இருந்...
18/02/2024

கருணை நபி(ஸல்) அவர்கள் மாற்றுத்திறனாளிகளின் திறமைகளையும் அங்கீகரிக்கக் கூடியவர்களாகவே இருந்தார்கள். பார்வையற்றவராக இருந்த அப்துல்லா இப்னு உம்மி மக்தூம்(ரலி) அவர்களைப் பல்வேறு காரணங்களுக்காக 13 முறை மதீனாவின் பொறுப்பாளராக நபி(ஸல்) அவர்கள் நியமித்துள்ளார்கள்.

கட்டுரையை முழுமையாக வாசிக்க
https://www.samarasam.net/view-art.php?id=661

இராமர் கோவில் இடிக்கப்பட்டதாக வரலாற்றில் எந்த ஆதாரமும் இல்லை. ஆதாரம் இருந்தால் தினமணி ஆசிரியர் அதனை உடனே வெளியிட வேண்டும...
17/02/2024

இராமர் கோவில் இடிக்கப்பட்டதாக வரலாற்றில் எந்த ஆதாரமும் இல்லை. ஆதாரம் இருந்தால் தினமணி ஆசிரியர் அதனை உடனே வெளியிட வேண்டும். கி.பி 1510இல் குருநானக் இராமர் கோயிலுக்குச் சென்று வழிபட்டதை வரலாறு பதிவு செய்திருந்தால், 1528இல் மீர்பாகியால் இராமர் கோயில் இடிக்கப்பட்டதையும் வரலாறு நிச்சயம் பதிவு செய்திருக்கும். ஆனால் அப்படி எந்தப் பதிவும் இல்லை. அயோத்தியில் நூற்றுக்கும் மேற்பட்ட இராமர் கோயில்கள் அப்போது இருந்தன. அதில் ஏதாவது ஒன்றுக்கு குருநானக் சென்றிருக்கக் கூடும். ஏற்கனவே இருந்த கோயிலை இடித்துத்தான் அதன் மீது பாபரி மஸ்ஜித் கட்டப்பட்டது என்பதற்கு எந்த விதமான சான்றுகளும் இல்லை என உச்ச நீதிமன்றமே தனது தீர்ப்பில் தெளிவாகச் சொன்ன பிறகு, தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் ஏன் ஆதாரமில்லாமல் அதே வாதத்தை மீண்டும் முன்வைக்கிறார்? குறைந்தபட்சம் அவர் உச்சநீதிமன்றத் தீர்ப்பை ஒரு முறை படித்துப் பார்த்து விட்டுத் தனது கருத்துகளை வெளியிட்டிருக்க வேண்டும்.

கட்டுரையை முழுமையாக வாசிக்க
https://www.samarasam.net/view-art.php?id=667

#தினமணி

ஃபலஸ்தீனர்களுக்கும் யூதர்களுக்கும் தற்போது நடந்து வரும் யுத்தம் புதிதல்ல! நீண்ட காலமாக நடக்கும் யுத்தத்தின் தொடர்ச்சிதான...
15/02/2024

ஃபலஸ்தீனர்களுக்கும் யூதர்களுக்கும் தற்போது நடந்து வரும் யுத்தம் புதிதல்ல! நீண்ட காலமாக நடக்கும் யுத்தத்தின் தொடர்ச்சிதான். இந்தப் பூமியில் அதிகமாக இரத்தம் சிந்தப்பட்டிருக்கிறது என்றால் ஃபலஸ்தீனில்தான். இங்கிலாந்து 1948இல் யூதர்களுக்குத் தன் ஆளுகையில் இருந்த ஃபலஸ்தீனின் ஒரு பகுதியைப் பிரித்துக் கொடுக்க அதைத் தங்கள் நாடாக்கிக் கொண்டனர் யூதர்கள். தங்களுக்கென்று ஒரு நாடு உருவானவுடன் உலகெங்கிலும் இருந்து அங்கு வந்து சேரலாயினர்.

கட்டுரையை முழுமையாக வாசிக்க
https://www.samarasam.net/view-art.php?id=660

அண்மையில் நயன்தாரா நடிப்பில் வெளியான அன்ன பூரணி திரைப்படம் நெட்ஃபிலிக்ஸ் (Netflix) ஓடிடி தளத்திலிருந்து நீக்கப்பட்டது. ச...
14/02/2024

அண்மையில் நயன்தாரா நடிப்பில் வெளியான அன்ன பூரணி திரைப்படம் நெட்ஃபிலிக்ஸ் (Netflix) ஓடிடி தளத்திலிருந்து நீக்கப்பட்டது. சங்பரிவார்கள் தாம் நினைத்ததைச் சாதித்திருக்கிறார்கள். இதுவொரு தவறான முன்னுதாரணத்தைக் காட்டியிருக்கிறது. இதைவிடக் கொடுமை படத்தின் கதாநாயகி வருத்தம் தெரிவித்து ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று தலைப்பிட்டு அறிக்கை வெளியிட்டிருப்பதுதான்.

கட்டுரையை முழுமையாக வாசிக்க
https://www.samarasam.net/view-art.php?id=657

ஓர் இறைவிசுவாசி அவரது ஆன்மிக வாழ்க்கையிலே எதிர்கொள்கின்ற ஒரு முக்கியமான பிரச்னை தான் அவரை அவ்வப்போது பீடிக்கின்ற சோர்வு ...
12/02/2024

ஓர் இறைவிசுவாசி அவரது ஆன்மிக வாழ்க்கையிலே எதிர்கொள்கின்ற ஒரு முக்கியமான பிரச்னை தான் அவரை அவ்வப்போது பீடிக்கின்ற சோர்வு நிலை.

தொடரை முழுமையாக வாசிக்க
https://www.samarasam.net/view-ser.php?id=119

குழந்தைகளுக்காக அதிகமாகச் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக அவர்களைக் கவனிக்க நேரமின்றி ஹாஸ்டலில் சேர்க்கின்றனர். பின் இரவு...
11/02/2024

குழந்தைகளுக்காக அதிகமாகச் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக அவர்களைக் கவனிக்க நேரமின்றி ஹாஸ்டலில் சேர்க்கின்றனர். பின் இரவு பகலாகச் சம்பாதித்து ஓய்ந்து வயதாகும் காலத்தில் தம் பிள்ளைகள் உடன் இருக்க விரும்பு கின்றார்கள். ஆனால் பிள்ளைகள் சம்பாதிக்கும் வயதை அடையும் போது பெற்றோர்களை முதியோர் காப்பகத்தில் விட்டுவிடுகிறார்கள். பிள்ளைகள் இந்தப் பாடத்தைத் தங்களின் பெற்றோர்களின் செயல்பாடுகளின் வழியாகவே கற்றுக் கொள்கின்றனர்.

கட்டுரையை முழுமையாக வாசிக்க
https://www.samarasam.net/view-art.php?id=652

மாநிலம் முழுவதும் வெடித்த இந்த இன அழிப்பு நிகழ்வுகளைத் தொகுத்தால் இதயம் நொறுங்கிப்போகும். அத்தகைய பெருந் துயரின் அத்தாட்...
10/02/2024

மாநிலம் முழுவதும் வெடித்த இந்த இன அழிப்பு நிகழ்வுகளைத் தொகுத்தால் இதயம் நொறுங்கிப்போகும். அத்தகைய பெருந் துயரின் அத்தாட்சிகளில் ஒன்றுதான் நரோடா பாட்டியா படுகொலைகள். 2002ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதி அஹமதாபாத்தின் நரோடா பாட்டியா பகுதியில் 97 இஸ்லாமியர்கள் இந்துத்துவ அமைப்பினரால் கொல்லப்பட்டனர். வீட்டில் இருந்த பெண்கள் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டனர்.

முழுமையாக வாசிக்க
https://www.samarasam.net/view-hel.php?id=85

Address

138, Perambur High Road
Chennai
600012

Alerts

Be the first to know and let us send you an email when சமரசம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to சமரசம்:

Share