Writer RJRAM

Writer RJRAM Writer RJ Ram �
Stories that touch your heart �
Tamil Writing & Reels

7.இரத்த குடி காலை 8 மணி.Government hospital முன் bench லமுருகன் உட்கார்ந்திருந்தான்.கையில் பணம் இல்லை.குடிக்க ஆசை மட்டும...
16/04/2026

7.இரத்த குடி
காலை 8 மணி.
Government hospital முன் bench ல
முருகன் உட்கார்ந்திருந்தான்.
கையில் பணம் இல்லை.
குடிக்க ஆசை மட்டும் இருந்தது.
Reception ல announcement:
“Rare blood group urgent தேவை…”
முருகன் மெதுவா எழுந்தான்.
Doctor கேட்டார்:
“Why donate?”
முருகன் சிரிச்சான்.
“Humanity காக இல்ல டாக்டர்…
₹500 கிடைக்குமா?”
Blood donation முடிந்தது.
ஒரு பணக்கார வீட்டுக் குழந்தை உயிர் தப்பியது.
அவர்கள் கண்ணீர் மல்க பணம் கொடுத்தார்கள்.
முருகன் hospital gate வெளியே வந்ததும்—
நேரா TASMAC.
காலை குடி.
மதியம் குடி.
மாலை உலகமே slow motion.
அதே மாலை…
Phone call.
“அண்ணா… உங்க பொண்ணு accident…”
கண்ணு தெளிவில்லாம hospital ஓடினான்.
Emergency ward.
Doctor அவசரமாக:
“Immediate blood தேவை…
same rare group!”
அனைவரும் அவனை பார்த்தார்கள்.
முருகன் கையை நீட்டினான்.
Doctor smell பார்த்தார்.
மெதுவா சொன்னார்:
“Impossible… body alcohol full…
இப்போ blood எடுக்க முடியாது.”
முருகன் சிரிக்க முயன்றான்.
“Morning தான் kuduthen doctor…”
Doctor அமைதியா சொன்னார்:
“அதான் பிரச்சனை…”
Monitor sound நீளமான ஒரு கோடா மாறியது.
அவன் மகள்… போயிட்டாள்.
சில நிமிடங்கள் கழித்து.
Hospital corridor.
அதே பணக்கார குடும்பம் ஓடி வந்தது.
அவர்கள் முருகன் காலில் விழுந்தார்கள்.
“நீங்க தெய்வம் சார்…
காலை எங்கள் குழந்தையை காப்பாத்தினீங்க…”
அதே second…
பின்னாலிருந்து அவன் மனைவி வந்தாள்.
கண்ணீர் + கோபம்.
செருப்பை கழற்றி
அவன் முகத்தில் அடித்தாள்.
“உலகத்த பிள்ளை காப்பாத்தற ஹீரோ…
உன் பொண்ணை குடிச்சதாலே கொன்றுட்டேடா!”
ஒரே frame.
ஒரு பக்கம் —
நன்றி சொல்லி காலில் விழும் பணக்காரர்கள்.
மற்றொரு பக்கம் —
செருப்பால் அடிக்கும் மனைவி.
நடுவில் முருகன்.
Hero ஆகவும்…
Villain ஆகவும்…
ஒரே நாளில் முடிந்த வாழ்க்கை.
அந்த நாள் இரவு—
முருகன் குடிக்கவில்லை.
ஆனா…
அவன் காப்பாத்த வேண்டிய உயிர்
திரும்ப வரவில்லை.

5. என் பத்தினின் தாமரைஇரவு 1 மணி.வேகமாக ஓடும் ரயில்.கதவு அருகில் நின்று வெளியைக் கண்டு ரசித்துக் கொண்டிருந்தாள் சீதா.ஏரி...
13/04/2026

5. என் பத்தினின் தாமரை
இரவு 1 மணி.
வேகமாக ஓடும் ரயில்.
கதவு அருகில் நின்று வெளியைக் கண்டு ரசித்துக் கொண்டிருந்தாள் சீதா.
ஏரிக்குள் நிலவொளியில் ஒரு தாமரை மொட்டு மெதுவாக அசைந்தது.
சீதா குழந்தை போல சொன்னாள்:
“அது எனக்கு வேணும்…”
ராம் சிரித்தான்.
அவன் சாதாரண கணவன் இல்ல.
நகை திருட்டில் பெயர் பெற்ற ரயில் குற்றவாளி.
“இதுவா பெரிய விஷயம்?” என்றான்.
அந்த நேரம் அருகில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் தங்க செயின்.
அதில் தாமரை டாலர்.
சீதா அதை பார்த்து மெதுவாக:
“அந்த மாதிரி தாமரை…”
அதுக்கு அடுத்த நொடி —
ராம் செயினை பறித்தான்.
ரயிலிலிருந்து நேராக ஏரிக்குள் குதித்தான்.
அலாரம்.
ரயில் நிறுத்தம்.
போலீஸ் ஓட்டம்.
“திருடன் ஏரிக்குள் குதிச்சான்!”
போலீசும் நீரில் இறங்கினர்.
ஆனா ராம் தெரியவில்லை.
ஐந்து மணி நேரம்…
ராம் நீருக்குள்
தாமரை தண்டு பிடித்து சுவாசித்துக் கிடந்தான்.
விடியல்.
சூரியன் மெல்ல எழுந்தது.
அந்த தாமரை மொட்டு… மெதுவாக மலர்ந்தது.
ராம் சிரித்தான்.
அதை பறித்து வெளியே வந்தான்.
போலீஸ் பிடித்தார்கள்.
“செயின் எங்கே?”
ராம் அமைதியா சொன்னான்:
“எனக்கு தெரியாது சார்…
என் பொண்டாட்டி கேட்ட தாமரை தான் எடுக்க குதிச்சேன்.”
அவர்களை ஏமாற்றி தப்பித்தான்.
சீதாவிடம் தாமரை கொடுத்தான்.
அவள் குழந்தை போல மகிழ்ந்து வாங்கினாள்.
இருவரும் அமைதியாக நடந்து சென்றார்கள்.
சில நிமிஷம் கழித்து சீதா கேட்டாள்:
“செயின் எங்க?”
ராம் சிரித்தான்.
அடுத்த நாள் காலை 6 மணி.
அதே ஏரி.
மீண்டும் ஒரு தாமரை மலர்ந்தது.
ராம் அதை பறித்தான்.
அந்த தாமரை தண்டில்…
👉 தங்க செயின் சுற்றி இருந்தது.
சீதா சிரித்தாள்.
ராம் சொன்னான்: போலிஸ் எப்படியும் பிடித்து விடுவார்கள் நாளை மலரும் தாமரை மொட்டின் அடியில் செயினை சுற்றி விட்டேன்....
“நான் திருடன் இல்ல…
உன் இதயத்துக்காக எதை வேண்டுமானாலும் கவரும் கள்வன் "

#என்பத்தினியின்தாமரை
#தமிழ்கதை























4.அப்பாவின் ஏக்கம் இரவு 11:45.ஒரு நடுத்தர வயது அப்பா, பழைய keypad phone கையில் வைத்து உட்கார்ந்திருந்தார்.Contact listல ...
12/04/2026

4.அப்பாவின் ஏக்கம்
இரவு 11:45.
ஒரு நடுத்தர வயது அப்பா, பழைய keypad phone கையில் வைத்து உட்கார்ந்திருந்தார்.
Contact listல ஒரே பெயர் மீண்டும் மீண்டும் open பண்ணுறார்:
“மகன்”
Call button அழுத்த நினைக்கிறார்…
ஆனா ஒவ்வொரு முறையும் cancel.
அவருக்கு நினைவு வருகிறது.
Flashback…
சிறு வயதில் மகன் drawing காட்டினான்.
“அப்பா பாருங்க!”
அவர் சொல்லியது:
“இது வேணாம்… படிப்புல கவனம் வை.”
மகன் cricket விளையாட அழைத்தான்.
“Busy… வேலை இருக்கு.”
College day invitation கொடுத்தான்.
“Time இல்ல.”
வருடங்கள் கடந்து போனது.
மகன் வேறு நகரம் போயிட்டான்.
Calls குறைந்து போனது.
ஒருநாள் பெரிய சண்டை.
அப்பா கோபத்தில் சொன்னார்:
“எனக்கு நீ தேவையில்லை!”
அது தான் கடைசி பேச்சு.
இப்போது…
அப்பா phone screen பார்த்துக்கிட்டு இருக்கிறார்.
Message type பண்ணுகிறார்:
“சாப்பிட்டியா?”
Send பண்ணாமல் delete.
மீண்டும் type:
“மன்னிச்சிடு.”
Send.
Single tick.
Wait…
Wait…
Reply இல்லை.
அப்போதுதான் daughter வந்து மெதுவாக சொல்கிறாள்:
“அப்பா… அண்ணன் phone இன்னும் switch off தான்… accident க்கு பிறகு…”
அப்பா கையில் phone நடுங்குது.
Screen-ல அந்த message மட்டும்:
“மன்னிச்சிடு.”
Delivered ஆகாத message.
அவர் மெதுவாக அழ ஆரம்பிக்கிறார்
சில ‘மன்னிச்சிடு’ கள்…
சொல்ல தாமதமானால் வாழ்நாள் முழுக்க சுமை.

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Writer RJRAM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share