Hashtag Tamilnadu

Hashtag Tamilnadu Infotainment | News

விஜய் மட்டுமா எழுதிக் கொடுத்ததை படிக்கிறார்?கடந்த வியாழக்கிழமை நன்றாக ஏற்கெனவே தயார் செய்து வந்த உரையை பேரவையில் படித்த ...
07/09/2026

விஜய் மட்டுமா எழுதிக் கொடுத்ததை படிக்கிறார்?

கடந்த வியாழக்கிழமை நன்றாக ஏற்கெனவே தயார் செய்து வந்த உரையை பேரவையில் படித்த உதயநிதி ஸ்டாலின், முடிந்தால் உடனே பதில் சொல்லுங்கள் என முதலமைச்சர் விஜய்யை வம்பிழுத்தார். ஆவேசப்பட்டு எந்த வார்த்தையும் விடாமல், திங்கட்கிழமை பேசுகிறேன், எதிர்கட்சியினர் எழுந்து ஓடக் கூடாது என விஜய் கூறிவிட்டு சென்றார். இன்று பேரவையில் விஜய், சரியாக தயார் செய்யப்பட்ட உரையை வாசிக்க வாசிக்க, (விஜய் பேசிய அனைத்துமே சரியில்லை என வாதிட முடியாது..) திருடனுக்கு தேள் கொட்டியதைப் போல திமுகவினரால் உடனே வெளிநடப்பு கூட செய்ய முடியவில்லை. ஓடி விட்டார்கள் என்ற அவப்பெயர் வந்துவிடும் அல்லவா? 😂 ஒருவேளை உதயநிதிக்கு பேச வாய்ப்பு கொடுத்திருந்தால், முன் தயாரிப்பு இன்றி நீண்ட நேரம் தரவுகளுடன் பேசியிருக்க மாட்டார். உதயநிதி Expose ஆவதை சபாநாயகரே தடுத்துவிட்டார். தப்பித்தோம் பிழைத்தோம் என கடைசியாக திமுகவினர் வெளிநடப்பு செய்தனர். வெளிநடப்பு செய்த ஆவேசத்தில் பத்திரிகையாளர்களை உதயநிதி சந்தித்திருத்திருந்தால், அவர் நல்ல அரசியல் பேச்சாளர் என ஒப்புக் கொள்ளலாம். ஆனால், யாரே உரையை தயார் செய்யும் வரை காத்திருந்து வாங்கி வந்து, தாமதமாக செய்தியாளர்களிடம் படித்து விட்டு சென்றார். துண்டு சீட்டு இல்லாமல் பேச முடியாத ஸ்டாலினுக்கு, பேச்சாற்றல் இல்லையென, தத்தி என்ற சொல்லால், எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோதும், ஆட்சிக்கு வந்த புதிதிலும் கிண்டல் செய்யப்பட்டார். பின்னர், ஓரளவுக்கு மேனேஜ் செய்துவிட்டார் அல்லது மக்களுக்கு பழகிவிட்டது என சொல்லலாம். ஆகையால் கலைஞருக்கு பிறகு துண்டு சீட்டு இல்லாமல் அரசியல் செய்ய முடியாத ஸ்டாலின், உதயநிதி, அந்த விஷயத்தில் விஜய்யை விமர்சிப்பது நியாயமா?
ஸ்டாலின், உதயநிதியை போல விஜய்யும் செய்தியாளர்கள் கேட்கும் கேள்விக்கு Template ஆக சில பதில்களை வைத்துக் கொண்டிருந்தால், பத்திரிகையாளர்களை சந்திக்கவில்லை என்ற அவப் பெயரும் நீங்கிவிடும் போல...

01/09/2026

விஜய், மு.க.ஸ்டாலினை கிண்டல் செய்த சீமான்!

31/08/2026

எ.வ.வேலு, தங்கம் தென்னரசு பேச்சை அடுத்து சபாநாயகர் அடித்த கமெண்ட்!

29/08/2026

கலைஞர் பேனா சிலை திட்டம் கைவிடப்பட்டதற்கு காரணம் நிதி நெருக்கடியா? மக்கள் எதிர்ப்பா?

28/08/2026

நிதி நெருக்கடியிலும் கார் ரேஸ் நடத்தியதாக விமர்சனம் - உதயநிதி அளித்த விளக்கம்

27/08/2026

ஆதவ் பேசினாலே சண்டை தான் வருகிறது - பிரேமலதா விஜயகாந்த்

27/08/2026

திமுக ஆட்சியில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாதது ஏன்?

25/08/2026

சட்டசபை அலப்பறைகள் 😂

24/08/2026

கே.என்.நேரு அடித்த கமெண்ட் - ஆதவ் பின் மறைந்து கொண்டு சிரித்த கனிமொழி!

24/08/2026

தமிழ்நாட்டில் ஜாதியை ஒழித்த, திராவிட முன்னேற்றக் கழகம்! #பெரியார் #கலைஞர்

Address

Chennai
600087

Alerts

Be the first to know and let us send you an email when Hashtag Tamilnadu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share