எழுத்தோலை !

எழுத்தோலை ! சிறு துளி மையினிலே, சிதறிய எழுத்துச் ?

தமிழனாய் பிறந்ததில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கிறேன்,
தமிழ் பால் கொண்ட அன்பின் காரணமாய், எனக்குள் இருக்கும் எழுத்து சித்திரங்களை, என் எண்ணத்தில் உதித்த சில கற்பனைகளை, இங்கே நான் எழுத்தோலையாய் சமர்பிக்கின்றேன்.

வாழ்க தமிழ்! வளர்க அதன் புகழ்!!

Coming soon
28/04/2025

Coming soon

🔥 Step into a world forged in fire and betrayal.⚔️ THRONE OF CINDERS — an original epic fantasy AI-generated movie — brings a breathtaking tale of kingdoms ...

https://youtu.be/k58wBC84Zt4?si=rhyhw63nZh4uzVkvELRecords
25/02/2025

https://youtu.be/k58wBC84Zt4?si=rhyhw63nZh4uzVkv

ELRecords

எத்தனை இடர் வந்தாலும், எத்தனை எதிரிகள் நின்றாலும், தமிழை அழிக்க தமிழனை தவிர...

https://youtu.be/l4WuI2zH8XEதல தீபாவளி வாழ்த்துகள்! #கடவுளேஅஜித்தே
01/11/2024

https://youtu.be/l4WuI2zH8XE
தல தீபாவளி வாழ்த்துகள்!
#கடவுளேஅஜித்தே

#கடவுளேஅஜித்தே DEDICATED TO ALL THALA BLOODSHi guys,In this video, we present an original AI-generated...

முசுமுசுக்கை இலையில முள்ளாபொசுக்குனு குத்துன புள்ள...
26/10/2024

முசுமுசுக்கை இலையில முள்ளா
பொசுக்குனு குத்துன புள்ள...

Hi guys,In this video, we present an original AI-generated song that blends soulful melodies with thought-provoking lyrics.The...

Counting listeners..New hope        link @ info
18/10/2024

Counting listeners..

New hope





link @ info

New hope        link @ info
18/10/2024

New hope





link @ info

எழுதி எழுதி மனம் ஒடிந்து,ஓயந்து, உறங்க செல்லும் முன் இறுதி வாய்ப்பாக ஒரு ஆறுதல். எழுதியது யாவும் இசையாக மாற்றகிடைத்த கடை...
18/10/2024

எழுதி எழுதி மனம் ஒடிந்து,
ஓயந்து, உறங்க செல்லும் முன்
இறுதி வாய்ப்பாக ஒரு ஆறுதல். எழுதியது யாவும் இசையாக மாற்ற
கிடைத்த கடைசி சந்தர்பம்.

இனி, நிம்மதி உறக்கம் கொள்வேன்.

எழுத்துக்களை இசையும் கேட்க, சொடுக்கவும்
👇

வணக்கம், மிக சிரமமான அதே சமயம், மிக நுட்பமான செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எனது பல வருட கனவை சா....

இம்முறை மீண்டும் ஏமாற மாட்டோம்!மாற்றமே என்றும்மாறாதது என்பர்,மாறுமா உன் நிலைபொருத்திருந்து பார்,ஐந்தாண்டுக் கொருமுறைநீ க...
17/04/2024

இம்முறை மீண்டும் ஏமாற மாட்டோம்!

மாற்றமே என்றும்
மாறாதது என்பர்,
மாறுமா உன் நிலை
பொருத்திருந்து பார்,

ஐந்தாண்டுக் கொருமுறை
நீ கையெப்பம் மிட்டு
மையிட்ட விரலால்
யாருக்கு வாக்களித்து
உன் நாட்டிற்கான
கடமையை செவ்வனே
செய்தாய்?

திரும்பி பார்தாயா
எந் நிலை மாறியதென்று?
தட்டி கேட்டாயா உன்
உரிமையை உறுதியோடு?

உறுதிமொழியில் நாம்
ஒவ்வொரும் சமம்,
ஏற்றத்தாழ்வு நமக்கிடையில்
எங்கும் இல்லை,
இந்தியானாய் இருப்பதில்
பெருமைக் கொள்,
என்பதெல்லாம் வெறும்
வெற்று மொழியாய்,
உறுதிமொழிக்கு மட்டுமே
உரித்த வரிகளாய்,
மாறியதை எங்கனம்
கவனிக்க மறந்தாய்?

ஆயிரம் ஆயிரம்
ஏழை மக்கள் நடையாய்
நடந்த கோவிட் நாட்கள்,

மாட்டுக்கறி எடுத்துச்
சென்றவனை இந்து விரோதி
என்றே கொன்ற மதவெறி,

ஏழை மகளை
கோயிலினுள் வைத்தே
கொடுறமாய் மானம்
கெடுத்ததும்,

ஐணூரு ஆயிர ரூபாய்
ஓரிரவில் ஏதும் செல்லாது
செய்து - எத்தனை
அரிசிப்பானை, ஐந்தரைப்
பெட்டி ஏழைத் தாய்களின்
தாலி அறுத்தது,

ஜி.எஸ்.டி வரி எனுப்பெயரில்
வெள்ளயனை மிஞ்சும் மிதப்பில்
வரி விதித்து சிறு, குறு
தொழில்களைச் சிதைத்து,

நீட் எனும் மாயை
தேர்வு அழித்தது எத்தனை
ஏழையின் கனவை?

மணிப்பூர் கலவரம்,
அருணாச்சல மாநில நிலங்களை
சீனருக்கு தாரைவார்த்து,

படேலுக்கு சிலை,
இராமருக்கு கோயில்,
பாராளுமன்ற வீன் விரிவாக்கம்,
மதுரை எய்ம்ஸ்க்கு
செங்கல் மட்டும்,

ஏழை, நடுத்தர, பாமர
விவசாயிகள் வயிறில் அடித்து
அம்பானி, அதானிக்கு மட்டும்
சக்கரையில் குளிப்பாட்டு,

கருப்பு பணம் மீட்டு வருவோம்,
பதினைந்து லட்சம் வங்கியில் தருவோம்,
லட்சம் பேருக்கு வேலை உறுதி
இத்தனை பொய்களும் மறந்தாவிட்டோம்?

வாக்களிக்க போகும் நாள்
நாளையோ, நாளை மறுநாளோ?
வாக்களிக்கும் முன் ஒரே
ஒரு முறை மட்டும்,

பெட்ரோல், டீசல்
சமையல் எரிவாயு விலை,
அரிசிப் பருப்பு
அத்தியாவசிய எண்ணை
விலைவாசியை ஒருமுறை
நினைத்துக்கொள்,

உன் முடிவில் நீ
தெளிவாய் நிற்பாய்
ஒளிரும் இந்தியாவை
ஆளும் இருக்கையில்
அமர வைப்பாய்.

நன்றி.

எழுத்தோலை!
தேச நலன் விரும்பி.

மீளத் துடிக்கும் இருளும், நீளத் தொடரும் குளிரும்,ஏழு சென்மம் துறத்தும்காதல் ஏழையென் கனவில்,காணக் கிடைக்காத கண்கள்கறுத்து...
09/04/2024

மீளத் துடிக்கும் இருளும்,
நீளத் தொடரும் குளிரும்,
ஏழு சென்மம் துறத்தும்
காதல் ஏழையென் கனவில்,

காணக் கிடைக்காத கண்கள்
கறுத்தும் ஒளிர்வீசும் மாயம்,
கரங்கள் நீளா கன்னம்
கிள்ளா சிவக்கும் காயம்,
இதழ்கள் முளரி இதழ்கள்
உளரி குவிக்கும் சொற்கள்,

நெடிக்கொரு முறையென் நெஞ்சில்
நெளிய வலிப்பதும் போதும்,
மீளத் துடிக்கும் இருளும்,
நீளத் தொடரும் குளிரும்,
ஏழு சென்மம் துறத்தும்
காதல் ஏழையென் கனவில்.

எழுத்தோலை!
10.04.2024/01.30am

ஏனிந்த வியப்பு என்றே எழுதி வைத்த கவிதை யாவும் எதிர் எதிர் நின்று வினவும் விடையே! நீயே கேள்,எட்டி பிடிக்கும் தூரம் நிற்கு...
02/08/2022

ஏனிந்த வியப்பு என்றே
எழுதி வைத்த கவிதை யாவும்
எதிர் எதிர் நின்று வினவும்
விடையே! நீயே கேள்,

எட்டி பிடிக்கும் தூரம் நிற்கும்
மழை வில்லும் மேகம் அருகே,
தொட்டு பார்க்கும் நெருக்கம் இருக்கும்
நிலவும், மின்னும் மின்னலும் பேசும் ,
ரகசிய மொழிகள் யாவும் கற்க
என்னையும் மேகத்துள் அழைத்து போ,

எட்டி நின்று ரசிக்கும் நெஞ்சம் - வானவில்
என்றது நின் இமைகள் காண,
அடிகள் இரண்டு ஆருகே வந்து - மேகம்
மிதப்பது நின் கருவிழிக்குள் என்றது,
ரகசிய மொழிகள் ஒன்றல்ல ஆயிரம் - அடங்கும்
பெட்டகம் நின் கண்களுக்குள் அடக்கம்.

ஏனில்லை வியப்பு இங்கே
எழுதியது எதுவும் கவி இல்லை,
எதிர் எதிர் நின்றது நின்
கண்ணே! கவியாக வீச.

#எழுத்தோலை
12.50AM
03.08.2022

கடந்து போகட்டும்.-----------------------------------------சுவை தெரியாத முத்தத்தை ஒத்திகையிலும் ஒத்தி பார்த்திடாத அவையமாம...
24/07/2022

கடந்து போகட்டும்.
-----------------------------------------
சுவை தெரியாத முத்தத்தை
ஒத்திகையிலும் ஒத்தி பார்த்திடாத
அவையமாம் இரண்டு எனக்கு,

உறங்கிட முனகல் முனையும்
பிதற்றலுக்கும் பதில் வராத
இதயமாம் உனக்கு ஒன்று,

எதிரெதிர் திசை காற்றை
எட்டி அணைக்கும் முயற்சியாம்
ஏனிப்படி எனக்கு மட்டும்?

பதில் தெரியாத பல
இரவுகளை போல் இன்றோர்
இரவும் கடந்து போகட்டும்.

#எழுத்தோலை

பின்னிரவு: 03.23
25.0.2022

Address

Chennai
600077

Website

https://www.youtube.com/@EzhutholaiLyricals

Alerts

Be the first to know and let us send you an email when எழுத்தோலை ! posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to எழுத்தோலை !:

Share

Our Story

கனவுக்குள் கனவைப் புணர்ந்து கருத்தரித்த கனவில் பிறக்கும், கனவின் கண்கள் தொட்டு. கனவின் விரல்கள் பிடித்து. கனவைக் கொஞ்சும் கனவின் கணவன் நான் கவிஞன்.