26/08/2023
நிலாவில் கால்பதித்த சந்திராயான் - 3 தரை இறங்கியதும் இந்திய தேசிய சின்னத்தை பதித்ததாக பரவும் புகைப்படம் உண்மையா?
இஸ்ரோ-வின் சந்திரயான்-3 லேண்டர் வெற்றிகரமாக, நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியது. சந்திரயான்-3 சந்திரனில் தரையிறங்கிய சிறிது நேரத்திலேயே, பிரக்யானின் சக்கரத்தில் இருந்து தேசிய முத்திரை நிலப்பரப்பில் பொறிக்கப்பட்டது என்று ஒரு படம் வைரலானது. இதை பல பிரபலங்களும் பகிர்ந்தனர்.
ஆனால், இப்படம் லக்னோவைச் சேர்ந்த விண்வெளி ஆர்வலர் ஒருவர் அடோப் போட்டோஷாப் பயன்படுத்தி உருவாக்கிய விளக்கப்படம் என்று தெரிய வந்துள்ளது.
இந்தியா டுடே இப்படத்தை முதலில் பகிர்ந்த கிரிஷன்ஷு கர்க்கை தொடர்புகொண்டு கேட்டபோது, லக்னோவைச் சேர்ந்த அவர், இஸ்ரோவின் வீடியோவால் ஈர்க்கப்பட்டு இந்த படத்தை உருவாக்கியதாக கூறினார். அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரிஸிலும் படத்தைப் பகிர்ந்துள்ளார். தற்போது வைரலாகும் படத்தை உருவாக்க அடோப் போட்டோஷாப் பயன்படுத்தியதாக அவர் கூறினார்.
எனவே, இந்தியாவின் தேசிய சின்னம் மற்றும் இஸ்ரோவின் லோகோவைக் கொண்ட நிலவின் மேற்பரப்பில் உள்ள பதிவு என்று வைரலாகும் படம் ஒரு விண்வெளி ஆர்வலரின் டிஜிட்டல் உருவாக்கம் மற்றும் பிரக்யானின் சக்கரத்தின் உண்மையான முத்திரை அல்ல என்பது தெளிவாகிறது.