INTJ Kanchi Media - காஞ்சி மாவட்ட ஊடக பிரிவு

  • Home
  • India
  • Chennai
  • INTJ Kanchi Media - காஞ்சி மாவட்ட ஊடக பிரிவு

INTJ Kanchi Media - காஞ்சி மாவட்ட ஊடக  பிரிவு இந்திய தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மாவட்டத்தின் அதிகாரபூர்வ முகநூல் பக்கம்

நீங்கள் முன்னே சென்று விட்டீர்கள்.  நாங்கள் பின்னே வர இருக்கிறோம்.
21/06/2024

நீங்கள் முன்னே சென்று விட்டீர்கள்.

நாங்கள் பின்னே வர இருக்கிறோம்.

20/06/2024

சமூதாய தலைவர் எஸ் எம் பாக்கர் அவர்களின் ஜனாஸாவை மக்கள் பார்வைக்கு நாளை(21.06.24) வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை சென்னை மக்கா பள்ளிவாசலில் வைக்கப்படும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்திய தவ்ஹீத் ஜமாஅத்
மாநில தலைமையகம்.

20/06/2024

எஸ் எம் பாக்கர் அவர்கள் ஜனாஸா தொழுகை சென்னை நியூ காலேஜ் கல்லூரி வளாகத்தில்..

இன்ஷா அல்லாஹ் நாளை வெள்ளிக்கிழமை 21.06.2024 அஸர் தொழுகைக்கு பிறகு நடைபெறும்.

அதை தொடர்ந்து ஜனாஸா நல்லடக்கம் சென்னை இராயபேட்டை கபர்ஸ்தானில் நடைபெற உள்ளது..

இது ஓர் பாபரி மஸ்ஜித் மீட்பிற்கான போராட்டம் அல்ல....ஓராயிரம் பாபரி மஸ்ஜித்-களின் பாதுகாப்பிற்கான போராட்டம்...அணித்திரள்வ...
02/12/2022

இது ஓர் பாபரி மஸ்ஜித் மீட்பிற்கான போராட்டம் அல்ல....

ஓராயிரம் பாபரி மஸ்ஜித்-களின் பாதுகாப்பிற்கான போராட்டம்...

அணித்திரள்வோம் அநீதிக்கு எதிராக!

30/07/2022

இலவச கண் சிகிச்சை முகாம்..

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் குன்றத்தூர் நகரம் மற்றும் சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச கண் பரிசோதனை மற்றும் அறுவை சிகிச்சை முகாம்.

நாளை ஞாயிற்றுக்கிழமை 31/07/2022 காலை 9.30 மணி முதல் மதியம் 1 மணி வரை

இடம்: ஆயிஷா சித்தீக்கா மதரஸா&பெண்கள் தாஃவா சென்டர்

எண்.26 பெருமாள் கோவில் தெரு அரசு மருத்துவ மனை அருகில் குன்றத்தூர்

👉இலவச கண் பரிசோதனை

👉இலவச கண்புரை அறுவை சிகிச்சை

👉இலவச லென்ஸ்

ஆகிய சிகிச்சைகள் இலவசமாக செய்யப்படுகிறது.
பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்..

மாபெரும் இலவச மருத்துவ முகாம் - குன்றத்தூர்.இந்திய_தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மாவட்டம் குன்றத்தூர் நகரம் மற்றும் டாக்டர்ஸ் பி...
14/07/2022

மாபெரும் இலவச மருத்துவ முகாம் - குன்றத்தூர்.

இந்திய_தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மாவட்டம் குன்றத்தூர் நகரம் மற்றும் டாக்டர்ஸ் பிளாஸா இணைந்து நடத்தும் #மாபெரும்_இலவச_மருத்துவ_முகாம்

இடம்:
பூஜா அவென்யூ அனெக்ஸ், குன்றத்தூர்.

லேண்ட் மார்க்:
குன்றத்தூர் போஸ்ட் ஆஃபீஸ் அருகில்.

இந்திய தவ்ஹித் ஜமாஅத் காஞ்சி மாவட்டம் ECR கானத்தூா் கிளையின் சாா்பாக ஹஜ் பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது. இதில் கானத்த...
10/07/2022

இந்திய தவ்ஹித் ஜமாஅத் காஞ்சி மாவட்டம் ECR கானத்தூா் கிளையின் சாா்பாக ஹஜ் பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது.

இதில் கானத்தூா் கிளை தலைவா் S.G.முஹம்மத் உசேன் அவா்கள் இப்ராஹிம் நபி அவா்களிடம் இருந்து நாம் பெற வேண்டிய படிப்பினைகள் என்ற தலைப்பில் உறையாற்றினாா்! அல்ஹம்துலில்லாஹ்!

தியாக திருநாள் திடல் தொழுகை..இந்திய தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மாவட்டம் குன்றத்தூர் கிளை சார்பில் திடல் தொழுகை நடைபெற்றது. இத...
10/07/2022

தியாக திருநாள் திடல் தொழுகை..

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மாவட்டம் குன்றத்தூர் கிளை சார்பில் திடல் தொழுகை நடைபெற்றது. இதில் இஸ்லாமிய அழைப்பாளர் ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் உரை நிகழ்த்தினார்..
காஞ்சி மாவட்ட ஊடகப்பிரிவு

07/07/2022

சகோதரர் பயாஸ் அவர்களின் நல்லடகத்தில் மண்ணறை உரை..

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். கூட்டு குர்பானிக்காக மாடுகள் வாங்க சென்ற போது ஹை பிரஷர் கூடி  கீழே விழுந்து தலையில...
06/07/2022

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

கூட்டு குர்பானிக்காக மாடுகள் வாங்க சென்ற போது ஹை பிரஷர் கூடி கீழே விழுந்து தலையில் அடிபட்டு கீழ்பாக்கம் KMC மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த.

சமூதாய களத்தில் தன்னை முன்னிலை படுத்தி கொள்ளாமல் களமாடிய கள பணியாளர் தாஃவா களத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி கொண்டவர், தாஃவா களம் தான் ஒரே இலக்கு என அனு தினமும் இறை பணியை முழுமையாக செய்தவர் இயக்கங்கள் பயணத்தில் தென் சென்னை மாவட்டத்தில் நிகர் இல்லா பணிகளை செய்தவருமான....

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்ட பொருளாளர் சகோதரர் பையால் அவர்கள் வபாத்தாகி விட்டார்.

அவர் மறுமை வாழ்விற்கு அதிகம் அதிகம் துவா செய்யுங்கள்.

அவர் இழப்பு ஜமாஅத்திற்கு பேரிழப்பு ,தனது குடும்பத்தினருக்கு அடுத்து அவர் ஜமாஅத்தை தான் அதிகம் அதிகம் நேசித்தார்,ஜமாஅத் தான் அவருக்கு இன்னொரு குடும்பம் என பணியாற்றியவர், குடும்பத்தினருக்கு ஏற்பட்ட இழப்பு ஈடு செய்ய முடியாதது அதே போல் ஜமாஅத்திற்குக்கும் மிக பெரிய இழப்பு ஈடு செய்ய முடியாத இழப்பு.

எப்போதும் மார்க்கம், மார்க்க சார்ந்த பணிகளை செய்தவர் மரணம் தன்னை வந்து அடைவதற்கு முன்பு வரை நன்மையான பணிகளை செய்து கொண்டு இருந்தவர், கள பணி செய்யும் போதே மரணம் அவரை அடைந்து உள்ளது ,குடும்ப சூழ்நிலை எல்லாம் தாண்டி களத்தில் நின்ற கள போராளியான எங்கள் சகோதருக்கு யா அல்லாஹ் உயர்ந்த சொர்க்கத்தை வழங்குவாயாக.

*அதிகம் அதிகம் துஆ செய்யுங்கள்.* ஜமாஅத் பணியாக சென்று கொண்டிருந்தபோது திடீரென்று மூளையின் ரத்த குழாய்களில் பாதிப்பு ஏற்ப...
04/07/2022

*அதிகம் அதிகம் துஆ செய்யுங்கள்.*

ஜமாஅத் பணியாக சென்று கொண்டிருந்தபோது திடீரென்று மூளையின் ரத்த குழாய்களில் பாதிப்பு ஏற்பட்டு இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்ட பொருளாளர் அண்ணன் #பையால் அவர்கள் தற்போது கீழ்ப்பாக்கம் KMC மருத்துவ மனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டு உள்ளார்.

சமூதாயத்திற்காக எந்நேரமும் களத்தில் உள்ளவர் ,மார்க்க பணிகளில் மிகவும் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி கொண்டவர், தாஃவா களத்தில் தொடர்ந்து களமாடி கொண்டு இருப்பவர், அவர் சிந்தனை, பேச்சு, அனைத்தும் சமூதாயத்திற்காக மட்டுமே தினமும் எதாவது ஒரு வகையில் பயன் உள்ளதாக அமைத்து கொண்டவர்.

விரைவில் குணமடைந்து சமூதாய களத்தில் களமாட இறைவன் அருள் செய்ய அதிகம் அதிகம் துஆ செய்யுங்கள்.

اَللّهُمَّ رَبَّ النَّاسِ مُذْهِبَ الْبَأْسِ اِشْفِ أَنْتَ الشَّافِيْ لاَ شَافِيَ إِلاَّ أَنْتَ شِفَاءً لاَ يُغَادِرُ سَقَمًا

பொருள் : இறைவா! மனிதர்களின் எஜமானே! துன்பத்தை நீக்குபவனே! நீ குணப்படுத்து. நீயே குணப்படுத்துபவன். உன்னைத் தவிர குணப்படுத்துபவன் யாருமில்லை. நோயை அறவே மீதம் வைக்காமல் முழுமையாகக் குணப்படுத்து!

ஆதாரம்: புகாரி

04/05/2022

நோன்பு பெருநாள் உரை

இறுதி வெற்றி இஸ்லாத்திற்க்கே

S.M.Backer

Address

Ponniyamman Kovil Street
Chennai
600088

Alerts

Be the first to know and let us send you an email when INTJ Kanchi Media - காஞ்சி மாவட்ட ஊடக பிரிவு posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to INTJ Kanchi Media - காஞ்சி மாவட்ட ஊடக பிரிவு:

Share

Category