04/06/2025
பெங்களூரு பெருந்துயரம்
ஆர்சிபி அணியோட வெற்றிக் கொண்டாட்டம் பெருந்துயரத்துல முடிஞ்சிருக்கு. பெங்களூரு சின்னசாமி மைதானம் கிட்ட ஏற்பட்ட நெரிசல்ல சிக்கி பலர் இறந்துட்டாங்க. பலர் காயமடைஞ்சிருக்காங்க. இத எழுதும்போது 11 பேர் இறந்துட்டாங்கன்னு தகவல்.
18 வருஷ போராட்டத்துல கிடைச்ச கப் அப்படின்றதால, விராட்கோலி அழ, அதபார்த்து உணர்ச்சிவசப்பட்ட கர்நாடக அரசாங்கம், அவருக்கு பாராட்டு விழா நடத்த ஒரே நாள்ல முடிவெடுத்து, அதே நாள் மாலையில ஏற்பாடு செஞ்சது பெரிய தப்பு
ஒரு நாள் கூட முழுசா இல்லாத நிலையில, என்ன ஏற்பாட்ட போலீசால செஞ்சுட முடியும்? மக்கள் எவ்வளவு பேர் வருவாங்கன்னு திட்டமிட முடியாது, மைதானத்துக்கு முன்னாடி தடுப்புகள் ஏதும் தேவையான்னு செய்ய முடியாது, இப்படி பல முடியாதுகள் இருக்கு இதுல.
அதையெல்லாம் தாண்டி, ஒரு தனியார் அணி, ஆர்சிபி ஜெயிச்சதுக்காக, ஒட்டுமொத்த பெங்களூருகாரங்களும் ஒரே இடத்துக்கு வந்தா என்னாகும்.. ரொம்ப கஷ்டம். க்ரிக்கெட் மேல விருப்பம் இருக்கலாம், ஆனா இவ்வளவு வெறி இருக்கக்கூடாதுன்னு பிசிசிஐ சொல்லுது. பிரபலமானா இதுமாதிரியான பின்விளைவுகள் இருக்கும்னும் சுட்டிக்காட்டுது. க்ரிக்கெட் வீரர்கள் மேல அளவு கடந்த வெறி தேவையான்னு யோசிக்கனும்
ஆர்சிபிய பாராட்ட போயி உயிர விட்ட 11 பேர் குடும்பத்துக்கும் 10 லட்சம் ரூபாய் நிவாரணம் தர்றாங்க. அது போதுமா... ஒரு குடும்பத்தோட வருமானம் ஈட்டுற நபர் இறந்திருப்பார், ஒரு சிறுமி இறந்திருக்காங்க... இதையெல்லாம் ஈடு செய்ய முடியாது.
அதிக கூட்டம் இருக்கற இடத்துக்கு ஏன் போறாங்கன்னும் தெரியல.. தன் உயிர் மேல தனக்கே அக்கறை இல்லாதபோது பெரிசா பிறருக்கு என்ன அக்கறை வந்துட போகுது.. ஏறி மிதிச்சிட்டு போயிட்டே இருப்பான்.
இதுக்கு யார் காரணமும்னு அரசாங்கம் ஆராயும், அரசுதான் காரணமுன்னு எதிர்க்கட்சிகள் சொல்லும். ஆனா போனது சாமானியன் உசுரு. அதனால கவனமாக இருக்க வேண்டியது மக்கள்தான்.