Devendrakulavelalar.com

Devendrakulavelalar.com தேவேந்திரகுல வேளாளர்களின் வரலாறு

வரலாற்றுப் பொக்கிஷம்: 1738-இல் எழுதப்பட்ட திருச்செந்தூர் கோயில் செப்புப் பட்டயம்! தென்கரை நாட்டுக்குடும்பர்களின் நிலவுடை...
09/02/2026

வரலாற்றுப் பொக்கிஷம்: 1738-இல் எழுதப்பட்ட திருச்செந்தூர் கோயில் செப்புப் பட்டயம்! தென்கரை நாட்டுக்குடும்பர்களின் நிலவுடைமை உரிமைகள் - 288 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றுச் சான்று!

-----------------------------------------------------------------------------
18-ஆம் நூற்றாண்டில் திருச்செந்தூர் கோயில் நிலத்தை கிரையம் வாங்கிய குடும்பங்கள்
​செப்புப் பட்டயத்தில் தகவல்
​பழனி, பிப் 8: திருச்செந்தூர் கோயில் நிலத்தை தென் இருகரை நாட்டுக்கும்பர்களுக்கு 18-ஆம் நூற்றாண்டில் கிரையம் செய்து வழங்கப்பட்ட செப்புப் பட்டயம் கண்டறியப்பட்டது.
​தூத்துக்குடி மாவட்டம், ஆதிநாதபுரத்தைச் சேர்ந்த கைலாசக்குடும்பர், அவரது முன்னோர்கள் பாதுகாத்து வைத்திருந்த செப்புப் பட்டயத்தை பழனியைச் சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தியிடம் கொடுத்து படித்து விளக்கமளிக்குமாறு கோரினார்.
​இதுகுறித்து ஆய்வு செய்த தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி கூறியதாவது:
​இந்த செப்புப் பட்டயம் 18-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இந்தப் பட்டயம் 28.7 \times 17.5 செ.மீ அளவில் 352 கிராம் எடையுடன் உள்ளது. அன்றைய திருச்செந்தூர் கோயில் நிலத்தை தென் இருகரை நாட்டுக் குடும்பர்களுக்கு கிரையம் செய்து கொடுக்கப்பட்டதாக பட்டயத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டயத்தின் இருபுறங்களிலும் 61 வரிகளில் இந்தச் சாசனம் எழுதப்பட்டுள்ளது. இந்தப் பட்டயம் 29-08-1738-ஆம் ஆண்டு எழுதப்பட்டது.
​அன்றைய திருச்செந்தூர் முருகன் கோயில் நிர்வாகிகளாக இருந்த பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த 12 பேர் கோயில் நிலத்தை தென் இருகரை நாட்டுக் குடும்பர்கள் 9 பேருக்கு கிரையம் செய்து கொடுத்துள்ளனர்.
​இதை எழுதிய 12 கோயில் நிர்வாக அதிகாரிகள், நிலத்தைப் பெற்றுக்கொண்ட 9 குடும்பர்கள், சாசனத்தில் கையொப்பமிட்ட 11 பேர், சாசனத்துக்கு சாட்சிகள் 5 பேர் என அனைவரின் பெயர்களும் அவர்களின் ஜாதி பெயர்களுடன் சாசனத்தில் இடம் பெற்றுள்ளது. இது 18-ஆம் நூற்றாண்டில் தமிழ் சமூகத்தில் நிலவிய ஜாதி கட்டமைப்பை உணர்த்துகிறது.
​குடும்பர்களுக்கு கிரையம் செய்யப்பட்ட நிலத்தின் 4 எல்லைகளை செப்பேடு விரிவாகக் கூறுகிறது. பட்டயத்தை ஆய்வு செய்யக் கொடுத்த கைலாசக் குடும்பர், பட்டயத்தில் முதலில் குறிப்பிடப்படும் தென்கரை காட்டுப் பச்சேரி சித்திரபுத்திரக் குடும்பன் மகன் மாடக் குடும்பன் வழி வந்தவர் என்று நிரூபிக்க தன்னிடம் ஆவணங்கள் உள்ளதாகவும் தெரிவித்தார்.
​செப்புப் பட்டயத்தில் திருச்செந்தூர் முருகனை இளைய நயினார் என்றும், முருகன் கோயில் நிலத்தை திருவிளையாட்டம் என்றும், திருச்செந்தூரை மாகாளி சதுர்வேதமங்கலம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
​இந்தப் பட்டயம் சந்திர கிரகணம் சூழ்ந்த பௌர்ணமி நாளில் எழுதப்பட்டுள்ளது. தற்காலத்தில் கிரகண நாளில் நல்லகாரியங்கள் செய்ய உகந்ததல்ல என கருதப்படுகிறது.
​ஆனால், பண்டைய கல்வெட்டுகள் கிரகண நாளை புண்ணிய காலம் என்று கூறுகின்றன. பொதுவாக கிரகண நாள்களில் கொடை அளிப்பது, கொடை பெறுவது பல மடங்கு புண்ணியம் தரும் என்பது பண்டைய தமிழர்களின் நம்பிக்கையாக இருந்தது. அதனடிப்படையில் சந்திர கிரகண நாளை முன் கூட்டியே தேர்ந்தெடுத்து, செப்புப் பட்டயத்தை எழுதியதன் மூலம் பழந்தமிழர்கள் பெற்றிருந்த வானியல் அறிவையும், அவர்களின் நிபுணத்துவத்தையும் உணர முடிகிறது என்றார் அவர்.

இந்த மாதிரி எல்லாம் வருவீங்கன்னு தெரிஞ்சுதான்  மானுடவியல் ஆய்வு செய்து தேவேந்திரகுல வேளாளர்ன்னு  பெயர் மாற்றம் செய்ய 201...
08/02/2026

இந்த மாதிரி எல்லாம் வருவீங்கன்னு தெரிஞ்சுதான் மானுடவியல் ஆய்வு செய்து தேவேந்திரகுல வேளாளர்ன்னு பெயர் மாற்றம் செய்ய 2015 ஆம் ஆண்டில் மதுரையில் முதல் கையெழுத்து இட்டதே நான்தான்!!

என்னிடமே வந்து இந்த மனுவை கொடுக்கிறாயா!!!

நானே நினைத்தாலும் ஒன்னும் பண்ண முடியாது ப்பா!

தேவேந்திர குல வேளாளர்கள் எங்களை பட்டியலில் இருந்து வெளியேற்றம் பண்ணுங்கன்னு அடுத்த கட்ட நகர்வை நோக்கி போய்க் கொண்டிருக்கிறார்கள் !

நான் அந்த வேலைய பாக்கணும்!

ஐயா அமித்ஷா அவர்களின் மைண்ட் வாய்ஸ்😊

🪷🪷

ஆதிச்சநல்லூர் - தேவேந்திர குல வேளாளர்களின் வரலாற்று வேர்! ​நமது முன்னோர்களின் புகழுக்கும், பண்பாட்டிற்கும் சான்றாக விளங்...
01/02/2026

ஆதிச்சநல்லூர் - தேவேந்திர குல வேளாளர்களின் வரலாற்று வேர்!

​நமது முன்னோர்களின் புகழுக்கும், பண்பாட்டிற்கும் சான்றாக விளங்கும் ஆதிச்சநல்லூர், இன்று உலக அரங்கில் தலைநிமிர்ந்து நிற்கிறது!

​தாமிரபரணி ஆற்றின் இருபுறமும், ஆதிச்சநல்லூரைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் தொன்றுதொட்டு வாழ்ந்து வரும் தேவேந்திர குல வேளாளர் மக்கள், அந்த மண்ணின் உண்மையான வாரிசுகள்.

​ஆதிச்சநல்லூர் என்பது வெறும் மண் சார்ந்த அகழாய்வு அல்ல; அது உலகின் மூத்த விவசாய (மருத நில) நாகரிகம். அந்த நிலத்தின் உரிமையாளர்களாகவும், வேளாண்மைத் தொழிலைப் புனிதமாகக் கருதி வளர்த்தெடுத்த தேவேந்திர குல வேளாளர்களின் வரலாற்று ஆவணம் இது!

​அங்கு கண்டெடுக்கப்பட்ட நெற்கதிர்களும், இரும்பு வேலும் நமது மூதாதையரின் வீரத்தையும், விவசாய அறிவையும் பறைசாற்றுகின்றன.

ஆதிச்சநல்லூரை உலகத் தரம் வாய்ந்த சுற்றுலாத் தலமாகவும், அருங்காட்சியகமாகவும் மாற்ற மத்திய அரசு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி, சிறப்புத் திட்டத்தை அறிவித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

இது தேவேந்திர குல வேளாளர்களின் பெருமையை உலகறியச் செய்ய ஒரு மிகச்சிறந்த வாய்ப்பாகும்.

​நமது இனத்தின் தொன்மையை மீட்டெடுக்கவும், பாதுகாக்கவுமான இந்த முயற்சியை பாராட்டுகின்றோம்.

மத்திய அரசுக்கு Devendrakulavelalar.com இன் சார்பாக நன்றிகள்


01/02/2026
தைப்பூசத் திருநாள் வாழ்த்துக்கள்! ​"மருத நில வேந்தன் மைந்தனுக்கு அரோகரா!"​அனைவருக்கும் இனிய தைப்பூசத் திருநாள் நல்வாழ்த்...
01/02/2026

தைப்பூசத் திருநாள் வாழ்த்துக்கள்!
​"மருத நில வேந்தன் மைந்தனுக்கு அரோகரா!"

​அனைவருக்கும் இனிய தைப்பூசத் திருநாள் நல்வாழ்த்துக்கள்!

இந்த நன்னாளில் முருகப்பெருமானுக்கும் தேவேந்திர குல வேளாளர் மக்களுக்கும் இடையிலான புனிதமான உறவைப் போற்றுவோம்.

​இந்திரன் மகளான தெய்வயானையை மணம் முடித்ததன் மூலம் தேவேந்திர குலத்தின் மருமகனாக முருகப்பெருமான் திகழ்கிறார்.

தொல்காப்பியம் போற்றும் மருத நிலத் தெய்வம் 'வேந்தன்' (இந்திரன்) வழியில் வந்த மக்கள், இன்று முருகப்பெருமானை தங்கள் குலதெய்வமாக வழிபாட்டு வருகின்றனர்.

திருமுருகாற்றுப்படை மற்றும் பரிபாடல் வரிகள் இந்திரன்-முருகன் இடையிலான உறவையும் வீரத்தையும் பறைசாற்றுகின்றன.

​முருகப்பெருமானின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்!
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!

நன்றி,
Devendrakulavelalar.com

நிலவுடைமைச் சமூகமாக தேவேந்திரகுல வேளாளர்கள்!1923 ம் ஆண்டில் இன்றைய சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வருவாய் கிராமத்தின்  'ஏ-பத...
30/01/2026

நிலவுடைமைச் சமூகமாக தேவேந்திரகுல வேளாளர்கள்!

1923 ம் ஆண்டில் இன்றைய சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வருவாய் கிராமத்தின் 'ஏ-பதிவேடு' (A-Register), தேவேந்திரகுல வேளாளர் சமூகம் எத்தகைய நிலவுடைமைச் சமூகமாக வாழ்ந்தது என்பதற்கு காலத்தால் அழியாத சான்றாகும்.

​இந்த அரசு ஆவணத்தில் 'குடும்பன்' என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள ஏராளமான நிலங்கள், நாம் வெறும் விவசாயக் குடிகள் மட்டுமல்ல, இந்த மண்ணை நிர்வகித்த அதிகாரமிக்க நிலவுடைமையாளர்கள் என்பதை உறுதிப்படுத்துகின்றன.

​பரந்து விரிந்த நில உரிமை குடும்பமார்களிடம் இருந்தது தெளிவாக தெரிகிறது

ச. ஆறுமுகம் குடும்பன், வெ. கருப்பன் குடும்பன், ச. சிலம்பன் குடும்பன் எனப் பல்வேறு பெயர்களில் கிராமம் முழுவதும் நிலங்கள் பரவிக் கிடக்கின்றன.

​'குடும்பன்' என்ற பட்டம், நம் முன்னோர்கள் இந்த மண்ணின் மீது கொண்டிருந்த ஆளுமையையும், பரம்பரை நில உரிமையையும் குறிக்கிறது.

​இது 2005-ம் ஆண்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட அதிகாரப்பூர்வமான 'உண்மை நகல்' ஆகும்.
​பல்வேறு கிராமங்களில் இன்றும் நீடிக்கும் இந்த நிலவுடைமை வரலாறு, தேவேந்திரகுல வேளாளர்கள் இந்த மண்ணின் பூர்வீக ஆட்சியாளர்கள் என்பதற்குப் பெரிய சான்று.
​வரலாற்றை அறிவோம்... !

நமது சமூகத்தின் இந்த உன்னத வரலாற்றுத் தரவுகளைத் தேடி எடுத்து Devendrakulavelalar.com க்கு அளித்த அருமைச் சகோதரர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

குறிப்பு: இது போன்ற ஆவணங்கள் உங்களிடம் இருந்தால் எங்களுக்கு அனுப்பவும்.

​ #தேவேந்திரகுலவேளாளர் #நிலவுடைமைச்சமூகம் #பூர்வீகக்குடிகள் #வரலாற்றுச்சான்று"

தமிழகத்தின் நெற்களஞ்சியங்களை உருவாக்கிய மண்ணின் மைந்தர்கள், தேவேந்திர குல வேளாளர்கள். இச்சமூகத்தைப் பற்றிப் பேசும் போது ...
26/01/2026

தமிழகத்தின் நெற்களஞ்சியங்களை உருவாக்கிய மண்ணின் மைந்தர்கள், தேவேந்திர குல வேளாளர்கள்.

இச்சமூகத்தைப் பற்றிப் பேசும் போது தவிர்க்க முடியாத இரண்டு விஷயங்கள்: அவர்களின் நில உரிமை மற்றும் அந்த நிலத்தைக் காக்க அவர்கள் காட்டும் வீரம்.

தமிழகத்தில் பெரும்பான்மை நில உடமையாளர்களாக தேவேந்திர குல வேளாளர்கள் இருப்பதாலேயே, அவர்களுக்குள் நிலத்தகராறுகள் மற்றும் பங்காளிச் சண்டைகள் ஏற்படுவது ஒரு தொடர்கதையாக உள்ளது.

"என் நிலம்.. என் உரிமை"
என்ற அந்தப் பிடிவாதம் தான் இன்றும் அவர்களை நிலத்தின் உரிமையாளர்களாக நிலைநிறுத்தியுள்ளது. ரத்த உறவுகளுக்குள் சண்டையிட்டுக் கொண்டாலும், தங்கள் மண்ணை ஒருபோதும் விட்டுக்கொடுக்காத குணம் இவர்களுக்கே உரித்தானது!

காலம் காலமாக பெரும் நிலப்பரப்புகளை கையில் வைத்திருந்த நிலக்கிழார்களாகவும், வேளாண்மைக்குத் தலைமை தாங்கியவர்களாகவும் இருந்த ஒரு சமூகம், எப்படி பட்டியலினத்திற்குள் (SC List) வகைப்படுத்தப்பட்டது? என்பது இன்றும் ஒரு வரலாற்றுப் புதிராகவே உள்ளது.
நன்றி
Devendrakulavelalar.com

​ #தேவேந்திரகுலவேளாளர் #வேளாண்மரப

👏👏👏
16/01/2026

👏👏👏

:சங்கத்தமிழன் கொண்டாடிய உழவர் திருநாள் - தேவேந்திரகுல வேளாளர் பொங்கல் வாழ்த்துகள்! 🌾☀️மருத நிலத்தின் வேந்தர்களாக, சங்க க...
15/01/2026

:சங்கத்தமிழன் கொண்டாடிய உழவர் திருநாள் - தேவேந்திரகுல வேளாளர் பொங்கல் வாழ்த்துகள்! 🌾☀️

மருத நிலத்தின் வேந்தர்களாக, சங்க காலத்திலேயே ஏர் பிடித்து உலகம் செழிக்கச் செய்த பெருமைக்குரியவர்கள் தேவேந்திரகுல வேளாளர்கள்.

அன்று சங்க இலக்கியங்கள் போற்றிய 'இந்திர விழா'வே இன்று நாம் கொண்டாடும் பொங்கல் திருவிழாவின் ஆதி வடிவம்.

மழையைத் தரும் வேந்தனுக்கும், உழைப்பிற்கு உறுதுணையாய் நின்ற கதிரவனுக்கும் நன்றி செலுத்தும் விதமாக, சங்க காலத்தில் இந்த நிலத்தின் மைந்தர்கள் புத்தரிசி இட்டு, கரும்பு நட்டு, பொங்கலிட்டு வீரத்துடன் கொண்டாடினார்கள்.

உழவுத் தொழிலின் உயர்வையும், வேளாண்மையின் மேன்மையையும் உலகிற்கு உணர்த்திய நமது முன்னோர்களின் வழியில், இந்த இனிய பொங்கல் திருநாளில் உங்கள் இல்லங்களில் மகிழ்ச்சியும், செல்வமும், ஆரோக்கியமும் பொங்கி வழியட்டும்!
அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துகள்! 🍚🌾🐂

#தேவேந்திரகுலவேளாளர் #பொங்கல்வாழ்த்துகள் #சங்ககாலம் #மருதநிலம் #உழவர்திருநாள் #தைப்பொங்கல்

நன்றி
Devendrakulavelalar.com

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தியாகி தேவேந்திரர் இமானுவேல் சேகரனார் ஐயா மணிமண்டபம் திறப்பு விழாவையொட்டி, காவல் கண்...
14/01/2026

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தியாகி தேவேந்திரர் இமானுவேல் சேகரனார் ஐயா மணிமண்டபம் திறப்பு விழாவையொட்டி, காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்கள்.

வான் பொய்க்காது மழை தந்துவையகம் காக்கும் மள்ளர் குல தலைவன்!இந்திரனைத் தொழுது போகியைத் தொடங்குவோம்...பொங்கலைப் புதுப்பொலி...
13/01/2026

வான் பொய்க்காது மழை தந்து
வையகம் காக்கும் மள்ளர் குல தலைவன்!
இந்திரனைத் தொழுது போகியைத் தொடங்குவோம்...
பொங்கலைப் புதுப்பொலிவுடன் வரவேற்போம்!

​"மழைக்கும் உழவுக்கும் அதிபதியான இந்திரனை நம் முன்னோர்கள் வணங்கிய திருநாளே போகி. சங்க இலக்கியங்கள் போற்றும் 'இந்திர விழா'வின் எச்சமே இந்நாள். நிலத்தை ஆளும் தேவேந்திரகுல வேளாளர் மரபில், பழையன கழித்து புதிய நம்பிக்கையுடன் பொங்கலை வரவேற்போம்! 🌾🔱

அனைவருக்கும் இனிய போகி நல்வாழ்த்துகள்!"

#தேவேந்திரகுலவேளாளர் #போகி #இந்திரவிழா"

நன்றி
Devendrakulavelalar.com

Address

Chennai
600033

Website

Alerts

Be the first to know and let us send you an email when Devendrakulavelalar.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Devendrakulavelalar.com:

Share