Peer Mohamed

Peer Mohamed Journalist and Media Entrepreneur. Founder, https://ippodhu.com/. Information created democracy.

அண்ணலைப் போற்றுவோம்
02/10/2024

அண்ணலைப் போற்றுவோம்


மொழி என்பது நம்பிக்கை; சமூகம் என்பது பாதுகாப்பு. இந்த வாழ்வியலின் அடையாளம் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்! முரசொலிக்கும் ந...
29/09/2024

மொழி என்பது நம்பிக்கை; சமூகம் என்பது பாதுகாப்பு. இந்த வாழ்வியலின் அடையாளம் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்! முரசொலிக்கும் நண்பர் நீரை மகேந்திரனுக்கும் கோடானுகோடி நன்றிகள்! Shuba Desikan Thiru Chitrarasu

இந்தியா டுடே இதழின் வரவேற்புத் திண்ணை அது.  சுருட்டி வைத்திருந்த கேன்வாஸைத் தூக்கிப் போட்டார் நடேஷ் முத்துசாமி. அழகாய் வ...
21/09/2024

இந்தியா டுடே இதழின் வரவேற்புத் திண்ணை அது. சுருட்டி வைத்திருந்த கேன்வாஸைத் தூக்கிப் போட்டார் நடேஷ் முத்துசாமி. அழகாய் விரிந்த கித்தானில் மானுட உடலின் தீரா நடனங்களை அள்ளிச் சேகரித்த கோடுகளைப் பார்க்க முடிந்தது. அதைப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே இன்னொரு கேன்வாஸையும் தூக்கிப் போட்டார். அது நீர்மையின் நெகிழ்வான வரிகளைத் தாங்கியிருந்தது. இரண்டையுமே இலக்கிய மலர் தாங்கி வந்தது. தீர்க்கமான மனிதர். தீவிரமாக கலையை அணுகியவர். இன்று அவர் இல்லை என்பதும் உண்மையே. Shuba Desikan


இற்றைப்படுத்துதல் என்றால் அப்டேட் செய்தல்; ஆயம் என்றால் நீதிமன்ற பெஞ்ச்; வைரஸ் என்றால் நச்சுநுண்மி; பாக்டீரியா என்றால் க...
09/09/2024

இற்றைப்படுத்துதல் என்றால் அப்டேட் செய்தல்; ஆயம் என்றால் நீதிமன்ற பெஞ்ச்; வைரஸ் என்றால் நச்சுநுண்மி; பாக்டீரியா என்றால் குச்சிநுண்மி. இப்படிச் செல்கிறது டாக்டர் சங்கர சரவணனின் கலைச்சொல்லாக்கம். இந்தத் தமிழ்த் திருப்பணியை நகைச்சுவை கலந்த எளிய நடையில் இரண்டாயிரத்தாம் ஆண்டு இளந்தளிர்களுக்கு நடுவில் வைகறை வாசகன் என்ற புனைபெயரில் செய்து வருகிறார் சங்கர சரவணன். புத்தாயிரமாண்டின் தளிர்களைப் பார்த்தால் அவர்களை அழகாகத் தமிழுக்கு ஆட்படுத்தி விடும் கலகல உரையாடல் பாணி இவருடையது. விகடன் பிரசுரம் வெளியிட்டிருக்கும் வைகறை வாசகன் பதிவுகள் என்ற நூல், படிப்பின் பெருமையை வரிக்கு வரி, பக்கத்துக்குப் பக்கம் குட்டிக் கதைகளாகச் சொல்லிச் செல்கிறது. நாட்டின் நிர்மாணத்தில் நேரு ஆற்றிய பெரும் பங்கு தொடங்கி நயன்தாரா தமிழ்த் திரையுலகிற்கு செய்த பங்களிப்பு வரை மக்களை ஈர்க்கும் விறுவிறு மொழி நடையில் பேசுகிறது இந்தப் புத்தகம். இதைப் படித்த இளையவர்கள் 'Engaging. Unputdownable' என்கிறார்கள். இதுதானே ஓர் எழுத்தாளரின் வெற்றி!
Sankara Saravanan Shuba Desikan


ஆயுளில் ஒரு முறை மெக்காவுக்குப் புனிதப் பயணம் மேற்கொள்வது முஸ்லிம்களின் பெரும் கனவுகளில் ஒன்று. எங்களுக்கு வாடகைக்கு இடம...
07/09/2024

ஆயுளில் ஒரு முறை மெக்காவுக்குப் புனிதப் பயணம் மேற்கொள்வது முஸ்லிம்களின் பெரும் கனவுகளில் ஒன்று. எங்களுக்கு வாடகைக்கு இடம் கொடுத்திருந்த அம்மையார் மெக்காவுக்குப் போய் வந்தார். அங்கிருந்து வற்றாத ஜம்ஜம் நீரூற்றின் புனித நீரை எனக்கு ஒரு சின்னக் குடுவையில் தந்தார். கடந்த பதினைந்து ஆண்டுகளில் நிகழ்ந்த அன்பான தருணங்களில் ஒன்று இது. இணையரும் நானும் அதைப் பருகினோம். வெளியில் சென்றிருந்த மாமியார் அப்போதுதான் வந்தார். “என்னடி அது?” என்றார். “அம்மா! இது மெக்கா தீர்த்தம்,” என்றார் இணையர்.
பத்தாண்டுகளுக்கு முன்பு குடும்பத்தில் ஓர் இணையேற்பு நிகழ்வுக்குச் சென்றிருந்தோம். மணமகனின் தங்கை அஞ்சு ஓடி வந்து ஆரத்தழுவி வரவேற்றார். சுபாவிடம், “அத்திம்பிர் பேர் என்ன?” என்றார். “பீர்” என்று சுபா சொன்னதும், “பீர் அத்திம்பிர், வாங்கோ” என்று மேடைக்கு அழைத்துச் சென்றார். இதுபோல பல்லாயிரக்கணக்கான அழகான நினைவுகளைத் தாங்கி இந்தப் பதினேழாவது இணையேற்பு நாளில் பெருமகிழ்வு கொள்கிறோம். இந்தப் பயணத்தில் பெரும் துணையாக நிற்கும் ஒவ்வொரு சொந்தத்துக்கும் அன்பின் நன்றிகள் கோடி கோடி. Shuba Desikan

பா....பா.....(Baa....Baa...)தூத்துக்குடி புளியங்குளத்தின் வயல்களையும் வாழைத் தோப்புகளையும் தாண்டி தமிழ்ச் சமூகத்தில் இன்...
01/09/2024

பா....பா.....(Baa....Baa...)
தூத்துக்குடி புளியங்குளத்தின் வயல்களையும் வாழைத் தோப்புகளையும் தாண்டி தமிழ்ச் சமூகத்தில் இன்று ஒலிக்கும் பால்யத்தின் சப்தம் இது!
பா....பா....(Baa....Baa...)
இது குழந்தமையைத் தொலைத்த பேரிழப்பினதும் பெரும் குற்ற உணர்வினதும் சப்தமாக நம்மை வந்து சேர்ந்திருக்கிறது.
பா....பா....(Baa....Baa....)
இதயம் வெடித்து எழுகிற இந்தப் பேரோசை, ஒரு யுகத்தின் மொத்த அழுகையை அடைகாத்ததாகவும் மனதைச் சமப்படுத்துவதற்கானதாகவும் திரையில் தெறிக்கிறது.
மாரி செல்வராஜின் நாலாவது அவுட்டிங்கும் மாபெரும் கொண்டாட்டமாகவும் வெற்றியாகவும் தமிழ் மொழிக்கான இன்னொரு திரைக் காவியமாகவும் மிளிர்ந்திருக்கிறது. Divya Mariselvaraj Shuba Desikan
#வாழை
#மாரிசெல்வராஜ்



வருக! வருக!
07/08/2024

வருக! வருக!

பென்னிகுக் என்பது தமிழின் அடையாளச் சொல்.  பெரியாற்று நீரை எதிர்த் திசையில் திருப்பி வைகையை வளப்படுத்திய பென்னிகுக்கின் அ...
29/07/2024

பென்னிகுக் என்பது தமிழின் அடையாளச் சொல். பெரியாற்று நீரை எதிர்த் திசையில் திருப்பி வைகையை வளப்படுத்திய பென்னிகுக்கின் அழகிய கதையைப் புதினமாக்கியுள்ளார் நண்பர் பொ. கந்தசாமி! வந்திருந்து வாழ்த்துங்கள்!


சிறுமி சுடர்வெயில் மறைத்துக் கொள்ளும்நட்சத்திரங்களில் சிலவற்றைஇரவில் பூப்போல கொய்து கொண்டாள்சிறுமி சுடர்அதை நூலில் கோத்த...
28/07/2024

சிறுமி சுடர்

வெயில் மறைத்துக் கொள்ளும்
நட்சத்திரங்களில் சிலவற்றை
இரவில் பூப்போல கொய்து கொண்டாள்
சிறுமி சுடர்
அதை நூலில் கோத்து கழுத்து ஆபரணமாக்கியவள்
வெயிலெரியும் தெருவில் சென்று
எல்லோரிடமும் காட்டினாள்
நட்சத்திரத்தைப் பகலில் அணிந்தவளை
தெருக்கூடி அதிசயித்த வேளையில்
வெட்கப்பட்டு மேகத்திற்குள் சென்று
மறைந்து கொண்டது வெயில்.
- கரிகாலன், 2004 Karikalan R
அன்பு நண்பர் கரிகாலன், Praying to God that you may get more love, peace, health, and prosperity now and in the coming years. நீங்கள் எல்லா வளமும் நலமும் பெற இந்த நன்னாளில் ஆண்டவனைத் தொழுகிறேன்.

வாழ்க பல்லாண்டு! பொலிக! பொலிக!!

தம்பி சத்ய ஜெயந்த் பேசினார். முன்னணியில் இருக்கும் செய்தி சேனல் ஒன்றில் உடனடிச் செய்திகளுக்குப் பொறுப்பு வகிப்பதாகச் சொல...
28/07/2024

தம்பி சத்ய ஜெயந்த் பேசினார். முன்னணியில் இருக்கும் செய்தி சேனல் ஒன்றில் உடனடிச் செய்திகளுக்குப் பொறுப்பு வகிப்பதாகச் சொல்லி மகிழ்ந்தார். தம்பி சிவசங்கரனும் அங்கு இணைந்திருப்பதாக ஒரு நற்செய்தியைப் பகிர்ந்து கொண்டார். மாநிலம் முழுக்க உள்ள நூறு தமிழ்ப் பிள்ளைகளுக்காக கட்டணமில்லாமல் ஊடகவியல் சான்றிதழ்ப் படிப்பை திராவிட மாடல் அரசு ஒழுங்கு செய்தது. அதில் சுமார் 60 பேர் தமிழ், ஆங்கில ஊடகங்களில் பதவிகளைப் பெற்றிருக்கிறார்கள். நம் நாட்டின் மாபெரும் மனித வளத்தை ஆற்றுப்படுத்தி மக்களுக்குப் பயன்படச் செய்யும் கலை இது. நம் கனவுகளுக்கான இடங்களை உருவாக்கும் பெரும் பணி இது. இதைப்போல பல அதிசயங்களைச் சத்தமின்றி நிகழ்த்தி எண்ணற்ற தலைமுறைகளை வெற்றிக்கு அழைத்துச் செல்கிறது மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் சமூக நீதி அரசாங்கம். தமிழ் வெல்லும்!



Vilasini Ramani Sankara Saravanan Ramya Kannan Thirumavelan Padikaramu Kuyil Mozhi Arulmozhi Ezhilan Naganathan Arul Ezhilan Elayaperumal Sugadev

சாதனாவுக்கு பிரியாணி என்றால் ரொம்பவே பிடிக்கும். பல நாட்களாகவே அவள் பிரியாணி சாப்பிட வேண்டுமென்று ஆசைப்படுகிறாள். ஒரு கட...
29/06/2024

சாதனாவுக்கு பிரியாணி என்றால் ரொம்பவே பிடிக்கும். பல நாட்களாகவே அவள் பிரியாணி சாப்பிட வேண்டுமென்று ஆசைப்படுகிறாள். ஒரு கட்டத்தில் அது ஏக்கமாக மாறுகிறது. நாட்கள் தள்ளிப் போகின்றன. ச. தமிழ்ச்செல்வனின் பாவனைகள் சிறுகதையில் அண்ணனும் தம்பியும் இனிப்புக்கு ஏங்குவது போன்ற தருணம் அது. கடைசியில் ஒரு நாள் அதிசயமாக சாதனாவின் ஆசை நிறைவேறுகிறது. அது எப்படி நிறைவேறுகிறது என்கிற ஒற்றைப் புள்ளியில் தான் நல்ல கதைசொல்லி என்பதை நிறுவியிருப்பார் விஷ்ணுபுரம் சரவணன். சாதனாவின் தோழி என்ற அந்தப் படக் கதையை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களாக நடந்து வருகிற சிறார் இலக்கிய மொழியாக்க முகாமுக்கு வந்த ஏறக்குறைய 40 கல்லூரி மாணவர்களுக்கும் இந்தக் கதை அவ்வளவு பிடித்திருந்தது. இருபது ஆண்டுகளாக குழந்தைகளுக்கான கலை, இலக்கிய வெளியில் இடையறாது செயல்பட்டு வரும் விஷ்ணுபுரம் சரவணன் மொழியாக்க ஆர்வலர்களுக்குச் சொன்ன குறிப்புகள் தொகுக்கப்பட வேண்டியவை. மொழியாக்கம் கதை ஓட்டத்தைப் பாதிக்கக் கூடாது என்று அவர் சொன்னது முதன்மையானது. தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் இணை இயக்குனர் தே. சங்கர சரவணன் அவர்களது வழிகாட்டுதலில் மொழியாக்கம் பற்றிய இந்தத் தொடர் முகாம் நடைபெறுகிறது. மொழிக்கும் அடுத்த தலைமுறைக்கும் பாலம் கட்டும் இந்தப் பட்டறையில் கற்றுக் கொள்ள கல்லூரி மாணவர்கள் வரவேற்கப்படுகிறார்கள்.

’sLiterature


லிங்கன் பாஸ்டின்: தமிழ்க் கடலோடிகளின் அரசியல் குரல்”நல்லதொரு ஓட்டத்தை ஓடினேன். மகிழ்ச்சியாகப் புறப்பட்டு விட்டேன்,” என்ப...
09/06/2024

லிங்கன் பாஸ்டின்: தமிழ்க் கடலோடிகளின் அரசியல் குரல்

”நல்லதொரு ஓட்டத்தை ஓடினேன். மகிழ்ச்சியாகப் புறப்பட்டு விட்டேன்,” என்பதுபோல சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் துயில் கொண்டிருந்தார் வழக்குரைஞர் லிங்கன் பாஸ்டின். பழவேற்காடு முதல் நீரோடி வரை தமிழ்நாட்டின் 1076 கிலோமீட்டர் நீளக் கடற்கரையில் வாழும் கடலோடிச் சமூகங்களின் அரசியல் அதிகாரத்துக்கான குரலாக தொடர்ந்து ஒலித்தது லிங்கனின் பேச்சும் எழுத்தும். நம் நாட்டின் நிதி சனநாயகமாக்கலில் (Financial Inclusion) இன்னமும் தொடப்படாத பெரும் சமூகம் கடலோடி மக்களுடையதுதான். இந்த மக்களுடைய பழங்குடி மரபும் போர்க் குணமும் தொழில்முனைவும் சுதந்திர சிந்தனையும் நம் நாட்டுக்கு அத்தியாவசியமாக இருக்கிற புரத உணவையும் அன்னியச் செலாவணியையும் ஒருசேர கொண்டு வந்து சேர்க்கிறது. இவற்றைப் புரிந்துகொள்ள லிங்கன் எழுதிய ’மீனவர்களும் அரசியல் பிரதிநிதித்துவமும்,’ ’பழங்குடியினர் பட்டியலும் மீனவர்களும்’ ஆகிய புத்தகங்கள் முக்கியமானவை.

கன்னியாகுமரி மாவட்டம் சின்னத்துறையில் டிசம்பர் 19, 1972இல் பிறந்த லிங்கன் பாஸ்டின் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞராகப் பணியாற்றினார். சென்னையில் முதன்முதலாக நெய்தல் இலக்கியத் திருவிழா என்ற முழுநாள் அமர்வை பெரியார் திடலில் நிகழ்த்தியவர். அந்த அமர்வில் கடலோடி மக்களால் எழுதப்பட்ட ஏறக்குறைய 200 புத்தகங்களைக் காட்சிப்படுத்தியிருந்தார். தமிழ்ப் புத்தகங்களின் சந்தை என்பதே விரிவாக்கமடையாத பின்னணியில் ஒவ்வொரு சென்னைப் புத்தகக் காட்சியிலும் மீனவ மக்களின் இதழ்களையும் சிறுகதைப் புத்தகங்களையும் அறிமுகம் செய்துகொண்டே இருந்தார். கடலோடிகளைப் புறக்கணித்ததால் நமது கப்பற் படை எப்படி அறிவையும் வலுவையும் இழந்திருக்கிறது என்பதைப் பேசினார். அது கவனிக்கப்பட்டது. தமிழ் மக்கள் மெரினா கடலோரத்தைத் தங்களுடையது என்று கொண்டாடுவதற்குப் பின்னால் மீனவ மக்களின் உயிர்த் தியாகம் இருக்கிறது என்பதை ஞாபகப்படுத்தினார்.

சென்னையில் லிங்கன் மரணமடைந்த ஜூன் 9, 2023 அன்று மாலையில் அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அவரைப் பார்ப்பதற்கு யாருமே வழி கேட்க வேண்டியிருக்கவில்லை. கறுப்பு-வெள்ளை உடையணிந்த வழக்குரைஞர் படை அவரைச் சூழ்ந்திருந்தது. வழக்குரைஞர் சமூகத்துக்கான போராட்ட அடையாளமாகவும் அவர் வாழ்ந்திருந்தார். எவ்வளவு அழகான வாழ்க்கை!

2017இல் ஒக்கி புயல் அடித்து ஒரே அதிகாலையில் கன்னியாகுமரியில் 200 பெண்கள் விதவைகளானபோது, லிங்கனுடைய களமாடுதல் காலம்தோறும் நினைவுகூரப்படும். மீனவர்களின் சவால்கள் ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தின் சவால்கள் என்பதை நினைவூட்டிக் கொண்டே இருந்தார். நம் வளர்ச்சியில் சிங்காரவேலரின் சிந்தனைப் பங்களிப்பு எத்தனை பெரியது என்பதைத் தொடர்ந்து சொல்லிக் கொண்டேயிருந்தார். பேருந்தின் நடத்துநர் மீன் சருவத்தை உதாசீனம் செய்வது அதன் நெடிக்காக அல்ல; சக மனிதர்களது வாழ்வியலை உதைக்கிற மனோபாவம் அது என்பதை ஓர்மைப்படுத்திக் கொண்டே இருந்தார் சகோதரர் லிங்கன். மானுடத்தின் பேரழகைக் கணம்தோறும் ரசிக்கிற பேராசிரியர் வறீதையா கான்ஸ்தந்தின் எழுதிய கையறுநதி புத்தகத்தைப் போற்றிப் பாராட்டியிருந்தார் லிங்கன். உங்களது நீதிக்கான வேட்கையை என்றென்றும் தமிழ்ச் சமூகம் அணையா நெருப்பாய்க் காத்து நிற்கும், லிங்கன்.


Address


Alerts

Be the first to know and let us send you an email when Peer Mohamed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Peer Mohamed:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share

INCLUSIVE JOURNALISM

I am Peer Mohamed Azees, journalist and media entrepreneur. Founder and CEO of http://ippodhu.com/. Would love to see diversity in newsrooms. A foot soldier in furthering the cause of democracy. Witness to the inner workings of politics in Tamil Nadu for over two decades. Creating newer digital spaces for independent journalism is the most passionate preoccupation.