Town News - No 1 Neighbourhood Newspaper

Town News - No 1 Neighbourhood Newspaper Know Your Neighbourhood

TOWN NEWS, Ambattur OT Edition, Sunday, November 2, 2025
03/11/2025

TOWN NEWS, Ambattur OT Edition, Sunday, November 2, 2025

 #ஆசிரியர் தகுதி தேர்வு - ஹால் டிக்கெட் வெளியீடு... #ஆசிரியர் தகுதி தேர்வு நவ.15, 16ம்  தேதிகளில் நடைபெறுகிறது. #ஹால் டி...
03/11/2025

#ஆசிரியர் தகுதி தேர்வு - ஹால் டிக்கெட் வெளியீடு...

#ஆசிரியர் தகுதி தேர்வு நவ.15, 16ம் தேதிகளில் நடைபெறுகிறது.

#ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேர்வு அணையம் அறிவிப்பு.

03/11/2025

#488 பேருந்து சாலைகளில் ஆக்கிரமிப்புகளை அகறற திட்டம்...

#சென்னையில் போக்குவரத்து நெரிசல நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு தீர்வு காண 488 பேருந்து சாலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலைகளை அகலப்படுத்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடங்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

03/11/2025

#வானகரம் சுங்கச்சாவடியை நீக்கிவிட்டு
திருநீர்மலை அருகே புதிய சுங்கச்சாவடி...

#சென்னை பைபாஸ் சாலையில் வானகரத்தில் சுங்கச்சாவடி செயல்படுகிறது. வானகரம் பகுதியில் நகரமயமாக்கல் அதிகரித்து உள்ளதால் அங்கிருந்து சுங்கச்சாவடி அகற்றப்பட உள்ளது. அதற்குப் பதிலாக திருநீர்மலை அருகே ரூ.63.23 கோடியில் புதிய சுங்கச் சாவடி அமைக்கப்பட உள்ளது. இந்த புதிய சுங்கச்சாவடி 6 வழித்தடங்களை கொண்டதாக இருக்கும்.
மேலும் சூரப்பேட்டை சுங்கச்சாவடியில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. அம்பத்தூர் டெக்லத்தான் பகுதியில் புதிதாக பாதசாரிகளுக்கான நடை மேம்பாலம் கட்டப்பட உள்ளது. இதன்மூலம் சென்னை பைபாஸ் சாலையில் விபத்துகள் குறையும். போக்குவரத்து நெரிசல் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

03/11/2025

#இசிஆர் விரிவாக்க பணி ஜனவரியில் நிறைவடையும்...

#கிழக்கு கடற்கரை சாலை 4 வழிச்சாலையாக உள்ளது. இதில் கொட்டிவாக்கம் முதல் அக்கரை வரையிலான 8.6 கி.மீ. நீளத்துக்கு 6 வழிச் சாலையாக விரிவுபடுத்தும் பணி நடைபெற்று வருகிறது. வரும் ஜனவரி மாதத்துக்குள் பணிகள் நிறைவடையும் என்று நெடுஞ்சாலைத் துறை தெரிவித்துள்ளது.

 #கூடுதலாக 26 ஆதார் சேவை மையங்கள்... #தமிழகம் முழுவதும் 4,056 ஆதார் சேவை மையங்கள் செயல்படுகின்றன. அடுத்த ஆண்டு மார்ச் மா...
03/11/2025

#கூடுதலாக 26 ஆதார் சேவை மையங்கள்...

#தமிழகம் முழுவதும் 4,056 ஆதார் சேவை மையங்கள் செயல்படுகின்றன. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் புதிதாக 26 ஆதார் சேவை மையங்கள் அமைக்கப்படும். இந்த தகவலை மதுரை உயர் நீதிமன்றத்தில் ஆதார் ஆணையம் (யுஐடிஏஐ) தெரிவித்துள்ளது.

 #வில்லிவாக்கம்- அண்ணா நகர் சாலையின் அவலம்... #வில்லிவாக்கத்தில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் வில்லிவ...
03/11/2025

#வில்லிவாக்கம்- அண்ணா நகர் சாலையின் அவலம்...

#வில்லிவாக்கத்தில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் வில்லிவாக்கம் பகுதி சாலைகள் மோசமான நிலையில் காணப்படுகின்றன. வில்லிவாக்கம் முதல் அண்ணாநகர் மேற்கு வரையிலான சாலை மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது. சாலை பெயர்ந்து ஆங்காங்கே பெரிய பள்ளங்கள் உருவாகி உள்ளன. பருவமழை தீவிரம் அடைவதற்கு முன்பாக சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 #மாதனாங்குப்பத்தில் சுகாதாரக்கேடு... #மாதனாங்குப்பம் பகுதி, திருமால் நகர் தெருமுனையில் 4 குப்பைத் தொட்டிகள் அமைக்கப்பட்...
03/11/2025

#மாதனாங்குப்பத்தில் சுகாதாரக்கேடு...

#மாதனாங்குப்பம் பகுதி, திருமால் நகர் தெருமுனையில் 4 குப்பைத் தொட்டிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இங்கு குப்பைகள் மலைபோல குவிந்து கிடக்கிறது. இவை அகற்றப்படாததால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. சுகாதாரக்கேடு பிரச்சினையும் எழுந்திருக்கிறது. மேலும் குப்பை தொட்டிகள் அருகே மாடுகள் சுற்றித் திரிகின்றன. குப்பைத் தொட்டிகளை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும். குப்பைகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Address

Chennai

Opening Hours

Monday 9:30am - 6:30pm
Tuesday 9:30am - 6:30pm
Wednesday 9:30am - 6:30pm
Thursday 9:30am - 6:30pm
Friday 9:30am - 6:30pm
Saturday 9:30am - 6:30pm

Telephone

+918012080120

Alerts

Be the first to know and let us send you an email when Town News - No 1 Neighbourhood Newspaper posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Town News - No 1 Neighbourhood Newspaper:

Share

Category