Home Maruthuvam "Sam"

*உடலின் கழிவுகளை நீக்கும் முறைகள்  -2*  *தந்த சுத்தி* 🌹வேப்பம்பட்டை, கருவேலம்பட்டை, நாயுருவி வேர் பட்டை, கடுக்காய்த் தோல...
09/07/2025

*உடலின் கழிவுகளை நீக்கும் முறைகள் -2*

*தந்த சுத்தி*

🌹வேப்பம்பட்டை, கருவேலம்பட்டை, நாயுருவி வேர் பட்டை, கடுக்காய்த் தோல், கிராம்பு ஆகிய ஐந்து பொருள்களையும் சம அளவாக எடுத்து வந்து நன்கு வெயிலில் உலர்த்தி இடித்துச் சலித்து சூரணமாகச் செய்து கொள்ளவும்.

🌸இந்த சூரணத்திற்கு நான்கில் ஒரு பங்கு இந்துப்பைப் பொடி செய்து கலந்து வைக்கவும். இதுவே தந்தாதி சூரணம் எனப்படும்.

🍀தினமும் அதிகாலையில் இந்தச் சூரணத்தைக் கொண்டு பற்களை நன்கு அழுத்தித் தேய்த்துத் துலக்குவதன் மூலமாக பற்களில் உள்ள கறைகள், கிருமிகள் நீங்கும். பற்களில் வசீகரம் உண்டாகும். முகவசீகரம் ஏற்படும். அத்துடன் பற்களின் மேல் உள்ள ஈறுகள் நன்கு இறுகும்.

🌿தந்த வாய்வு மற்றும் பற்களில் ஏற்படும் இரத்தக்கசிவு முதலியவைகள் நீங்குவதுடன் வாயில் உண்டாகும் வழுவழுப்புத் தன்மையும் மாறும்.

🌺பயிற்சியின் போது அதிக நேரம் அப்பியாசம் செய்வதால் வாயுவானது கபாலத்தை நோக்கி வரும்போது தந்தங்களின் மேலுள்ள ஈறுகளின் உட்புறத்தில் தங்க நேரிடும். அவ்வாறு நடக்கும்போது ஈறுகளில் வீக்கமும் உண்டாகும். இரத்தக்கசிவு கூட உண்டாகும்.

🍏இதனால் ஈறுகள் விரைவில் கடினத்தன்மையை இழந்து பற்கள் உதிரும். எனவே தந்த சுத்தியானது மிகவும் முக்கியமானதாகும்.

☘️இனி அடுத்ததாக மிகவும் எளிமையான அதே சமயம் மிகவும் அரிய பலனைக் கொடுக்கும் நேத்திரசுத்தி என்னும் கண்களின் கழிவுகளையும், கண்களின் அழற்சியையும் நீக்கும் அற்புத முறையைக் காண்போம் .

படித்ததில் பிடித்தது...

*உடலின் கழிவுகளை நீக்கும் முறைகள்  -1* 🧘உடலின் கழிவுகளை அன்றாடம் நீக்குவதன் மூலமாகத்தான் யோக சாதனையினை எவ்விதத் தடங்கலும...
08/07/2025

*உடலின் கழிவுகளை நீக்கும் முறைகள் -1*

🧘உடலின் கழிவுகளை அன்றாடம் நீக்குவதன் மூலமாகத்தான் யோக சாதனையினை எவ்விதத் தடங்கலும் இல்லாமல் சிறப்பாகச் செயல்பட முடியும்.

🧘‍♂️அவ்வாறு தினமும் உடலின் கழிவுகளை நீக்கி தூய்மையான உடலுடன் யோக சாதனையினை செய்யும் பொருட்டு சில செய்முறைப் பயிற்சிகளை பார்ப்போம் .

🧘‍♀️இவ்வாறு தினமும் உடலின் கழிவுகளை நீக்கும் முறைக்கு நித்திய சுத்தி என்று பெயர். இதை 5 விதமாகப் பிரிக்கலாம். அவை 1. தந்த சுத்தி 2. கப சுத்தி 3. நேத்திர சுத்தி 4. குடல் சுத்தி 5. உடல் சுத்தி என்பனவாகும்.

🧘உடலின் கழிவுகள் வெளியேற்றப் பட்டுக் கொண்டிருந்தாலும் வெளியேற்றப்படாத கழிவுகள் தங்கும் இடங்களாக வாய், தொண்டையின் மேல்பகுதி, கண், குடல் போன்ற இடங்கள் உள்ளன. இங்கு தங்கும் கழிவுகளே மனித உடலின் ஆரோக்கியத்தைக் கெடுத்து பல நோய்களை உருவாக்கக் காரணமாக அமைகின்றன.

🧘‍♀️எனவே இந்தக் கழிவுகளை முறைப்படி நீக்குவது மிகவும் அவசியமாகும். காயம் என்னும் உடலைப் பற்பல அபூர்வ மூலிகைகளாலும், பாஷாண மருந்துகளாலும், மிகவும் உயர்வான பல கற்ப ஒளஷதங்களாலும் அழியாத தூய உடலாக மாற்றும் இந்த நித்திய சுத்தி முறைகள் மிகவும் அவசியமாகும்.

🧘‍♀️இவ்வாறு பல ஆண்டுகள் மிகவும் கடுமையான பல கட்டுப்பாடுகளுடன் நித்திய சுத்தி முறைகளையும், ஒளஷத முறைகளையும் கடைப்பிடித்து உடலை சித்தி செய்து கொண்ட பின் இந்த முறைகள் தேவையில்லை.

🧘எனவே அந்நிலையை அடைந்த சித்தபுருஷர்களின் நடவடிக்கைகளையும் அவர்களின் வாழ்க்கை முறைகளையும் கண்டு இவர்களெல்லாம் தினமும் இந்த முறைகளை கடைப்பிடிப்பதில்லையே என்ற குழப்பம் உன் மனதில் எழக்கூடாது. ஏனெனில் அவர்கள் முழுவதும் தூய்மை அடைந்தவர்கள்.

🧘எனவே அந்நிலையினை அடையும் வரையில் கண்டிப்பாக இந்த நித்திய சுத்தி முறைகளை கடைப்பிடித்தே ஆக வேண்டும்.

🧘‍♀️இனி நித்திய சுத்தி முறைகளை கடைப்பிடிக்கும் போது கையாள வேண்டிய பொருள்களைப் பற்றித் தெளிவாகக் காண்போம் .

🧘முதலில் தந்த சுத்தி என்னும் பல்லினைத் தூய்மை செய்யும் முறையையும் அதற்குரிய பொருள்களையும் பார்ப்போம் .

🧘‍♂️இந்த முறையினை யோகிகள் அல்லாதவர்களும் கடைப்பிடிப்பதால் நலமே கிட்டும்.

படித்ததில்பிடித்தது...

07/07/2025

வெங்காயத்தின் 50 மருத்துவக் குணங்கள் ...
***********************

வெங்காயத்தை ஆங்கிலத்தில் ஆனியன் என்கிறார்கள். இது யூனியோ என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து தோன்றியது. இதற்கு பெரிய முத்து என்று அர்த்தம்.

வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம் அதில் இருக்கும் அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்ற எண்ணெயாகும். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும் நமது கண்களில் பட்டு கண்ணீர் வரவும் காணமாக இருக்கிறது. சிறிய வெங்காயம், பெல்லாரி வெங்காயம் இரண்டும் ஒரே தன்மையை உடையன. ஒரே பலனைத்தான் தருகின்றன.

வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் நிறைந்துள்ளது . எனவே நம் உடலுக்கு இது ஊட்டச்சத்து தருகிறது.

பல நாடுகளில் வெங்காயத்தை மருந்துப் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள். நமது பாரம்பரிய பாட்டி வைத்தியத்திலும், வெங்காயம் முக்கிய இடம் வகிக்கிறது. விஞ்ஞானிகள் கூட வெங்காயத்தின் மகிமையைப் பாராட்டுகிறார்கள்.

வெங்காயத்தை எப்படி பயன்படுத்தினால், என்ன பலன்கள் கிடைக்கும்?

1. நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.

2. சமஅளவு வெங்காயச் சாறு, வளர்பட்டை செடி இலைச் சாற்றை கலந்து காதில் விட காதுவலி, குறையும்.

3. வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்து சூடாக்கி இளம் சூட்டில் காதில்விட, காது இரைச்சல் மறையும்.

4. வெங்காயத்தைத் துண்டுகளாக நறுக்கி, சிறிது இலவம் பிசினைத்தூள் செய்து சேர்த்து, சிறிது கற்கண்டு தூளையும் எடுத்து, அனைத்தையும் பாலுடன் சேர்த்து சிறிது சாப்பிட எல்லா மூலக்கோளாறுகளும் நீங்கும்.

5. வெங்காய நெடி சில தலைவலிகளைக் குறைக்கும். வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்

6. வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து, பிசைந்து மீண்டும் லேசாக சுடவைத்து உடையாத கட்டிகள் மேல் வைத்துக்கட்ட கட்டிகள் உடனே பழுத்து உடையும்.

7. வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் விட்டுக் குடிக்க இருமல் குறையும்.

8. வெங்காயச் சாற்றையும், வெந் நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.

9. வெங்காயத்தை சமைத்து உண்ண உடல் வெப்பநிலை சமநிலை ஆகும். மூலச்சூடு தணியும்.

10. வெங்காயத்தை அவித்து தேன், கற்கண்டு சேர்த்து சாப்பிட உடல் பலமாகும்.

11. வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

12. வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு, பின் பசும் பால் சாப்பிட ஆண்மை பெருகும்.

13. படை, தேமல் மேல் வெங்காயச் சாற்றை பூசிவர அவை மறைந்துவிடும்.

14. திடீரென மூர்ச்சையானால் வெங்காயத்தை கசக்கி முகரவைத்தால் மூர்ச்சை தெளியும்.

15. வெங்காயச் சாற்றையும் தேனையும் கலந்து அல்லது வெங்காயச் சாற்றையும், குல்கந்தையும் சேர்த்து சாப்பிட்டால் சீதபேதி நிற்கும்.

16. வெங்காய ரசத்தை நீர் கலந்து குடிக்க நன்கு தூக்கம் வரும்.

17.பனைமர பதநீரோடு வெங்காயத்தை நறுக்கிப் போட்டு சூடுபடுத்தி குடித்து வர மேகநோய் நீங்கும்.

18. வெங்காயம், அவரை இலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து சாப்பிட மேகநோய் குறையும்.

19. வெங்காயம் குறைவான கொழுப்புச்சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தைப் பயன்படுத்தலாம்.

20. பச்சை வெங்காயம் நல்ல தூக்கத்தை தரும். பச்சை வெங்காயத்தை தேனில் கலந்து சாப்பிடுவது நல்லது.

21. வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்துக்கும் உதவுகிறது.

22. வெங்காயம் இழந்த சக்தியை மீட்கும்.

23. தொடர்ந்து புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்றுவேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.

24. வெங்காயச் சாற்றுடன், கடுகு எண்ணெய் கலந்து கீல் வாயு காரணமாக மூட்டுக்களில் ஏற்படும் வலி நேரத்தில் தடவிவர வலி குணமாகும்.

25. நறுக்கிய வெங்காயத்தை முகப்பரு உள்ள இடத்தில் தேய்த்தால் முகப்பரு நீங்கும்.

26. வெங்காயச் சாற்றோடு சிறிது உப்பு கலந்து அடிக்கடி சாப்பிட்டுவர, மாலைக்கண் நோய் சரியாகும்.

27. வெங்காயச் சாறையும், தேனையும் சம அளவு கலந்து கண்வலிக்கு ஒரு சொட்டுவிட கண்வலி, கண் தளர்ச்சி நீங்கும்.

28. ஜலதோஷ நேரத்தில் வெங்காயத்தை முகர்ந்தால் பலன் கிட்டும்.

29. வெங்காயத்தை அரைத்து தொண்டையில் பற்றுப்போட ஏற்படும் தொண்டை வலி குறையும்.

30. பாம்பு கடித்துவிட்டால் நிறைய வெங்காயத்தைத் தின்னவேண்டும். இதனால் விஷம் இறங்கும்.

31 ஆறு வெங்காயத்தை ஐநூறு மில்லி நீரிலிட்டு, கலக்கிப் பருக சிறுநீர் கடுப்பு, எரிச்சல் நீங்கும்.

32. வெங்காயம் சோடா உப்பு இரண்டையும் சேர்த்து அரைத்து நாய் கடித்த இடத்தில் தடவி, வெங்காய சாறை குடிக்க நாய் விஷம் இறங்கும். பிறகு டாக்டரிடம் செல்லலாம்.

33. வெங்காயச் சாறோடு சர்க்கரை சேர்த்துக்குடிக்க மூலநோய் குணமாகும்.

34. காலரா பரவியுள்ள இடத்தில் பச்சை வெங்காயத்தை மென்றுதின்ன காலரா தாக்காது.

35. ஒரு பிடி சோற்றுடன் சிறிது உப்பு, நான்கு வெங்காயம் இவற்றை சேர்த்து அரைத்து, ஒரு வெற்றிலையில் வைத்து நகச்சுற்றுள்ள விரலில் காலை, மாலை வைத்துக்கட்ட நோய் குறையும்.

36. சிறிய வெங்காயத்தில் இன்சுலின் உள்ளது. நீரிழிவு நோயாளிகள் இதை அதிகமாகப் பயன்படுத்தலாம்.

37. தலையில் திட்டுத்திட்டாக முடி உதிர்ந்து வழுக்கை விழுந்திருந்தால் சிறு வெங்காயத்தை இரு துண்டாக நறுக்கி தேய்த்துவர முடிவளரும்.

38. காக்காய் வலிப்பு நோய் உள்ள வர்கள் தினசரி ஓர் அவுன்ஸ் வெங்காயச் சாறு சாப்பிட்டுவர வலிப்பு குறையும்.

39. வெங்காயத்தை தயிர் சேர்த்து பச்சடி செய்யும்போது வெள்ளரியும் சேர்த்து செய்தால் சிறுபிள்ளைகள் விரும்பி சாப்பிடுவர். உடலுக்கு குளிர்ச்சி.

40. வெங்காயச் சாற்றோடு சர்க்கரை சேர்த்து சாப்பிட வாதநோய் குறையும்.

41. தேள்கொட்டிய இடத்தில் வெங்காயத்தை நசுக்கித் தேய்க்க விஷம் இறங்கும்.

42. வெங்காயத்தை பசும் தயிருடன் சேர்த்து சாப்பிட்டுவர தாது பலமாகும்.

43. வெங்காயம் சாப்பிட தொண்டை கரகரப்பு நீங்கி குரல் வளமாகும்.

44. தினமும் மூன்று வெங்காயம் சாப்பிட்டுவர பெண்களுக்கு ஏற்படும் உதிரச் சிக்கல் நீங்கும்

45. வெங்காயத்தை துண்டு துண்டாக நறுக்கி விளக்கெண்ணெயில் வதக்கி சாப்பிட, மலச்சிக்கல் குறையும்.

46. வெங்காயத்தை அரைத்து முன் நெற்றி, பக்கவாட்டு நெற்றியில் பற்றுப் போட தலைவலி குறையும்.

47. ரத்தநாள கொழுப்பு உள்ளவர்கள் சின்ன வெங்காயம் சாப்பிடுவது நல்லது.

48. சின்ன வெங்காயச் சாறு கொழுப்பை உடனே கரைக்கும்.

49. வெங்காயத்தை ஒரு மண்டலம் தொடர்ந்து சாப்பிட்டுவர உடல் குளிர்ச்சியும், மூளை பலமும் உண்டாகும்.

50. வெங்காயத்தை வதக்கிக் கொடுத்தால் பிள்ளைகள் விரும்பி சாப்பிடுவர். ஊட்டச்சத்தும் கிடைக்கும்...

படித்ததில் பிடித்தது

*பித்தம் குறைய எளிய மருத்துவ குறிப்புகள் -1*  *பித்தத்தின் அறிகுறிகள்:* கூறிடவே பித்தமது சீறிற்றானால், கொடுங்காந்தல், உட...
04/07/2025

*பித்தம் குறைய எளிய மருத்துவ குறிப்புகள் -1*

*பித்தத்தின் அறிகுறிகள்:*

கூறிடவே பித்தமது சீறிற்றானால், கொடுங்காந்தல், உடல்வறட்சி நடுக்கமுண்டாம்,
ஏறிடவே அரோசிகந்தான் நாவறட்சி,மேலான சோபமது விக்கல் மூர்ச்சை,
தூறிடவே கிறுகிறுப்பு காதடைப்புத்,தொந்தமாங் கசப்புடனே மண்டைக்குத்து,
மாறிடவே நெஞ்செறிவு அக்னிமந்தம் மகத்தான குளிர்சுரமும்.

*பித்த வறட்சிக் குணம்*

தலை கனக்கும், உடம்பு உலரும், தாது கெடும், தீப்போல் அபானன் எரிந்து மலமிறங்கும், புத்தி மடிந்து மறதி உண்டாகும், மனதில் தோன்றாத தெல்லாம் தோன்றும். இரத்தபித்தக் குணம்; மூக்காலும், வாயாலும் இரத்தம் விழும், உடல் தனல் போல் காந்தும், வெளுக்கும், கால்கை உதறும்.

*மருத்துவ முறைகள்*

அரசமர குச்சிகளை சிறு துண்டுகளாக வெட்டி, மண்சட்டியில் வறுத்து, நீர் விட்டரைத்து, அந்த நீருடன் தேன் கலந்து பருகிவர இரத்தத்திலுள்ள பித்தம் தணியும்.

காபிதூளுக்குப் பதிலாக புளியங்கொட்டை தூளை போட்டு, டிகாஷன் எடுத்து பாலுடன் சேர்த்து சாப்பிட பித்தச்சூடு, சூட்டு நோய்கள் குணமாகும்.வீரியச் செழிப்புண்டாகும்.

சீரகம்10கிராம் லேசாக வறுத்து பொடித்து காலையில் எலுமிச்சை சாறுடன் பருகிவர பித்தம் தணியும்.

செங்கழுநீர்க்கிழங்கை தோல்நீக்கி அரிந்து பொடித்து, சிறிது சீரகம் சேர்த்து சாப்பிட்டுவர உடற்சூடு தணிந்து, பித்தம் தணியும்.

இஞ்சித்துண்டுகளை தேனில் கலந்து, வதக்கி நீர்விட்டுக் காய்ச்சி, எலுமிச்சைசாறு கலந்து பருக பித்தமயக்கம் குணமாகும்.

வேப்பம்பூ ரசம், துவையல் செய்து சாப்பிட்டுவர குமட்டல், மயக்கம், பெருஏப்பம், குணமாகும்.

வேப்பம்பூவை நீரில் ஊறவைத்து, 4 மணிக்கு 1 முறை, 4 வேளை சாப்பிட்டுவர பித்த குன்மம் தீரும்.

பப்பாளிபழத்தை அடிக்கடி சாப்பிட்டுவர பித்த நோய்கள் தீரும்.

---------------------------------------------------------
*🫀தங்கள் நலங்கருதி..*

Address

Chennai

Alerts

Be the first to know and let us send you an email when Home Maruthuvam "Sam" posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category