அக்னி சிறகுகள் கடைகள் மற்றும் நிறுவன தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம்

  • Home
  • India
  • Chennai
  • அக்னி சிறகுகள் கடைகள் மற்றும் நிறுவன தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம்

அக்னி சிறகுகள் கடைகள் மற்றும் நிறுவன தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் We believe there are 5-Ps' to creating a great advertising agency. People
Passion
Persuation
Professionalism
Profit

கருத்து OF THE DAY 🖤
10/04/2024

கருத்து OF THE DAY 🖤

*100 ஆண்டுகளாகதோற்று கொண்டே இருக்கும் திராவிட எதிர்ப்பு அரசியல் இனியும் வெற்றி பெற முடியாது*கோபிநாத் நேர்காணல் செய்த வீட...
08/04/2024

*100 ஆண்டுகளாகதோற்று கொண்டே இருக்கும் திராவிட எதிர்ப்பு அரசியல் இனியும் வெற்றி பெற முடியாது*

கோபிநாத் நேர்காணல் செய்த வீடியோ ஒன்றைப் பார்த்தேன்..அந்த ஆய்வாளர் மிகப்பெரிய தொழிலதிபர் சுரேஷ் சம்பந்தம்..அவர் தமிழகத்தின் தனித்தன்மையை நான்கு பாயிண்டுகளில் ஆதாரங்களோடு விளக்கியிருந்தார்..

1. தமிழகத்தில்தான் இந்தியாவிலேயே தொழிற்சாலைகள் அதிகம்..பலரும் நினைப்பது போல் குஜராத்திலோ , மஹாராஷ்டிராவிலோ அல்ல.. இங்கு கிட்டத்தட்ட 38,000 தொழிற்சாலைகள் உள்ளன..அடுத்த இடத்தில் இருக்கிற மஹாராஷ்டிரத்தில் 28,000..(பத்தாயிரம் குறைவு.) தமிழ்நாட்டின் தொழிற்சாலைகள் சிறிய தொழிற்சாலைகளுமல்ல; 23 லட்சம் பேர் அவற்றில் பணியாற்றுகின்றனர்..மஹாராஷ்டிர மாநிலத்தில் 18 லட்சம் பேர்..ஒரு மாநிலத்தில் எட்டு விமான நிலையங்கள் இருப்பதும் தமிழ் நாட்டில் தான்..

2. தமிழகத்தில் காமராஜர் காலத்தில் 40 கல்லூரிகள் என்றால் இப்போது 1000 க்கும் மேற்பட்ட கல்லூரிகள் உண்டு.. உயர்கல்வி பயில்வோர் சதவீதம் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகம்.. 49% ..( மிகக்குறைந்த மக்கள்தொகை கொண்ட சில யூனியன் பிரதேசங்களின் சதவீதத்தை தமிழகத்துடன் ஒப்பிட முடியாது ) 2030 ல் இந்திய அரசு அரும்பாடுபட்டாவது அடைய வேண்டும் என்று நினைக்கிற இலக்கை ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாகவே தமிழகம் சர்வசாதாரணமாகத் தொட்டிருக்கிறது..நாம் பதினைந்து ஆண்டுகள் இந்தியாவை விட முன்னோக்கி இருக்கிறோம்..

3. சுகாதாரத்தை எடுத்துக் கொண்டால் அதற்கான அளவீடு குழந்தை இறப்பு விகிதம் தான்..இந்திய அளவில் 1000 க்கு 34 குழந்தைகள் இறந்தால் இங்கே 1000 க்கு 17 குழந்தைகள் மட்டுமே ..( 100% குறைவு)நாட்டின் தலைநகரமான டெல்லியை விட இந்த சதவீதம் குறைவு..

4. மனித மகிழ்ச்சிக் குறியீட்டிற்கான அளவீடாக பொருளாதார நிபுணர்கள் கருதுவது தனிநபர் பொருளாதார வேறுபாடு குறைவாக இருப்பதுதான்..இந்திய அளவில் ஒப்பீடே இல்லாமல் தமிழ்நாடு முன்னணியில் இருக்கிறது..இங்குதான் நடுத்தர மக்கள் 80 % இருக்கிறார்கள்..கல்வி மற்றும் தொழில்துறையில் நிகழ்ந்த துரித வளர்ச்சியாலேயே இது சாத்தியமாகியிருக்கிறது.(எல்லோருடைய வாழ்க்கைத் தரமும் கூடியிருப்பதால்தான் இங்கு சாதாரண வேலைகளைச் செய்ய ஆட்கள் கிடைப்பதில்லை..வட மாநிலத்தவர்கள் குறிப்பாக இந்தி பேசும் மாநிலத்தவர்கள் இங்கே கூலி வேலை செய்ய வருகின்றனர்)

கண்டிப்பாக இதற்கு காமராஜர் ,கலைஞர் , எம்ஜிஆர் , ஜெயலலிதா ஆகிய ,நான்கு முதல்வர்களும் , இங்கு நிலைபெற்றிருக்கிற சமூக நீதிக் கொள்கையும்தான் காரணம்..நீதிக்கட்சி போட்ட அடித்தளம் , பெரியார் , அண்ணா விதைத்த சிந்தனைகள், அதன் தொடர்ச்சியாக தமிழக அரசியல் சூழலை சரியான திசையில் கலைஞர் நகர்த்திச் சென்றது ஆகியவை வரலாற்றின் அதிசயம்தான்..

எம்ஜிஆர் , ஜெயலலிதாவும் கூட அரசின் நிர்வாகம் மற்றும் கொள்கைகளில் அவர் உருவாக்கிய பாடத்திட்டத்தையே பின்பற்ற வேண்டிய சமூக அழுத்தத்தை கலைஞர் உருவாக்கி வைத்திருந்தார்..

காமராஜரை மட்டும் உயர்வாகப் பேசிவிட்டுப் பிறரை எந்த ஆதாரமும் இல்லாமல் தவறாகச் சித்திரிப்பது உள்நோக்கம் கொண்ட திரிபு..சொல்லப்போனால் அவருடைய காலத்தில் அடித்தளம் மட்டுமே போடப்பட்டிருக்கிறது..மாபெரும் மாளிகையைக் கட்டி எழுப்பியது திராவிட இயக்கம்தான்..

தமிழ்நாட்டை ஐரோப்பிய யூனியன் நாடுகளுடன் மட்டுமே ஒப்பிட முடியும்..இவ்வளவு தெளிவான புள்ளிவிபரங்களுக்குப் பிறகும் இளைஞர்களில் சிலர் ' திராவிடத்தால் வீழ்ந்தோம் ' வகைப் பொய்ப் பிரச்சாரங்களை நம்புவது வருத்தத்திற்குரிய விஷயம்..

' காமராஜர் ஆட்சி அமைப்போம்' ' திராவிடத்தால் வீழ்ந்தோம் ''சிஸ்டம் சரியில்லை' , 'மாற்று வேணும்' , 'திராவிடக் கட்சிகளே ஆண்டுகிட்டு இருக்காங்க' ,' நா வலதும் இல்ல..இடதும் இல்ல மய்யமா சிந்திப்போம்' இவை எல்லாமே அறிவும் , விழிப்புணர்வும் நிரம்பிய இந்த மண்ணில் கால்பதிக்கவே துப்பில்லாத ஒரு பாடாவதி கம்பெனி மாறுவேடத்தில் அனுப்பியிருக்கும் டம்மி நடிகர்களின் குரல்கள்தான்..

நீட் தேர்வு , இட ஒதுக்கீட்டைக் காலி செய்தல் , ஹிந்தித் திணிப்பு , மதவாத அரசியல் , புதிய கல்விக்கொள்கை ஆகிய அனைத்துமே தமிழகத்தை வடமாநிலங்களைப் போல் மாற்றி விடும்..

அன்பார்ந்த இளைஞர்களே!..வரலாற்றையும் , புள்ளி விபரங்களையும் சரியாகத் தெரிந்து கொண்டு அரசியல் பேசுங்கள்..வாட்ஸ்அப் வதந்திகளை நம்பாதீர்கள்..
மிகப்பெரிய வளர்ச்சி கண்ட மாநிலத்தின் எதிர்காலத்தை சாதி , மத உணர்வுகளில் சிக்கி வீணாக்கி விடாதீர்கள்..

தமிழகத்தின் அரசியல் இதுவரை ஆக்கப்பூர்வமான அரசியலாகவே இருந்திருக்கிறது..'மாற்று ' என்பதே மிகப்பெரிய வலை ..அதில் சிக்கிக் கொண்டால் நாம் இன்னொரு உத்திரப்பிரதேசமாக மாறி விடுவோம்..

தமிழக அரசியலே இந்தியாவின் வழமையான அரசியலுக்கு எதிரான மாற்று அரசியல்தான் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள...

Address

Valasaravakkam
Chennai
600087

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm
Sunday 9am - 12pm

Telephone

+919884008979

Website

Alerts

Be the first to know and let us send you an email when அக்னி சிறகுகள் கடைகள் மற்றும் நிறுவன தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to அக்னி சிறகுகள் கடைகள் மற்றும் நிறுவன தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம்:

Share

Designing and Printing Services

We offer consistent quality Designing and Printing Services which include Flex Banner Printing Services, Digital Flex Banner Printing Services, etc with best material such as Normal 250 GSM, 270 GSM, Star White, Star Black, Star Back Light, Zest Vinyl types of materials. We apply appropriate methods, technology in the process of providing valuable services to our clients. Our Flex Banner Printing, Digital Flex Banner Printing, & Vinyl Printing are successfully achieved by our team of experienced proffessionals . These services are strictly followed with industry guidelines during process. Further, we use progressive printing machines and tools to implement the services in an adequate manner.


  • Flex Banner Printing in Chennai

  • Vinyl Printing in Chennai