27/09/2025
ஹூப்ளி - கொல்லம் சிறப்பு வார ரயில், செப்., 28(நாளை) முதல், டிச., 28 வரை இயக்கப்பட உள்ளது.
ஞாயிறு மதியம், 3:15க்கு புறப்படும் ரயில், தேவநகரி, தும்கூர், பெங்களூரு, கிருஷ்ணராஜபுரம், பங்காருப்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனுார், பாலக்காடு, திருச்சூர் வழியே, மறுநாள் மதியம், 12:55க்கு கொல்லத்தை அடையும். திங்கள் அதிகாலை, 3:07க்கு சேலம், 4:50க்கு ஈரோடு வந்து செல்லும். மறுமார்க்க ரயில், செப்., 29 முதல், டிச., 29 வரை இயக்கப்படுகிறது. இந்த ரயில், திங்கள் மாலை, 5:00 மணிக்கு கிளம்பி, அடுத்தநாள் மாலை, 6:30க்கு ஹூப்ளியை அடையும். அதிகாலை, 3:10க்கு ஈரோடு, 4:05க்கு சேலம் வந்து செல்லும்.
https://www.dinamalar.com/news/tamil-nadu-district-news-salem/hubli---kollam-special-train-announcement/4043323