
17/07/2025
4K Dolby Atmos ஸில் 30 வருடத்துக்கு பின் பாஷா உங்கள் அபிமான அரங்குகளில்
அருளாளர் ஐயா ஆர்.எம். வீரப்பன் உருவாக்கிய சத்யா மூவீஸ்-ன் மரபை அதே கலை நுணுக்கத்துடனும், வீரியத்துடனும் முன்னெடுத்துச் செல்வதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்.
மக்களால் கொண்டாடப்பட்ட பாட்ஷா திரைப்படம் ஜூலை 18 2025 அன்று அற்புதமான புதிய வடிவத்தில் திரையரங்குகளுக்குத் திரும்ப வர இருக்கிறது. இன்றைய பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத சினிமா அனுபவத்தை இது வழங்கும், Atmos இல் முழு ஒலிப்பதிவையும் மீண்டும் உருவாக்கி முழுமையாக மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது.