25/07/2025
வடசென்னையில் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் நடைப்பெற்ற மதுரை மாநாட்டின் தீர்மான விளக்க கூட்டம்
வடசென்னை மேற்கு மாவட்டம் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் பெரம்பூர் பகுதியில் உள்ள எம்கேபி நகரில் “மதுரை மாநாட்டின் தீர்மான விளக்ககூட்டம்” ஆனது மாவட்ட தலைவர் குணங்குடி முஹைதீன் தலைமையிலும், மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையிலும் நடைப்பெற்றது.
கூட்டத்தினை பெரம்பூர் பகுதி தமுமுக துணை செயலாளர் ஹாபிழ் அப்துல் கரீம் கிராத் ஓதி துவங்கி வைத்தார். மமக மாவட்ட செயலாளர் கொளத்தூர் நசீர் வரவேற்புரை ஆற்றினார். மதுரை மாநாட்டின் தீர்மானத்தை மமக மாவட்ட துணை செயலாளர் வியாசை அனிபா, மாவட்ட துணை செயலாளர் ஜாகீர் உசேன், மாவட்ட துணை தலைவர் கொடுங்கை நாகூர், தமுமுக மாவட்ட துணை செயலாளர் சௌக்கத் அலி, மாவட்ட துணை செயலாளர் மாஷா அல்லா பாரூக், மாவட்ட SMI செயலாளர் ஆஷிக், மாவட்ட துணை செயலாளர் தாம்பரம் ஹமீது, தகவல் தொழில் நுட்ப அணி மாவட்ட செயலாளர் ஊடகதுறை இம்ரான் கான், தமுமுக மாவட்ட செயலாளர் கொளத்தூர் சாகுல், மாவட்ட பொருளாளர் (பொ) ஜமாலியா அப்துல் காதர் உள்ளிட்டோர் வாசித்தனர்.
மேலும் மமக தலைமை நிலைய செயலாளர் வழக்கறிஞர் ஜெய்னுல் ஆபிதீன் மற்றும் தலைமை கழக பேச்சாளர் கோவை செய்யது ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். அதனை தொடர்ந்து மனிதநேய ஜனநாயக கட்சியினரான அப்துல் ரசீது தாய்கழகமான தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தில் மாநில நிர்வாகிகள் முன்னிலையில் தன்னை இணைத்துக் கொண்டார்.
மேலும் தலைமை நிலைய செயலாளர் மற்றும் தலைமை கழக பேச்சாளருக்கு பெரம்பூர் பகுதி 35-வட்டம் சார்பில் நினைவு பரிசு வழங்கப்பட்டது. மேலும் 37-வட்டத்தின் சார்பில் தலைமை நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இறுதியாக பெரம்பூர் பகுதி தலைவர் பஷீர் அஹமது நன்றியுரையுடன் கூட்டம் இனிதே நிறைவடைந்தது.
இந்நிகழ்வில் மாநில அணி நிர்வாகிகளான வண்ணை ஜாகிர் மற்றும் பொதக்குடி ரியாஸ், மாநில செயற்குழு உறுப்பினர் தமீம் அன்சாரி, வடசென்னை கிழக்கு மாவட்ட தலைவர் இராயபுரம் அலி உள்ளிட்ட கிழக்கு மாவட்ட நிர்வாகிகள், வடசென்னை மேற்கு மாவட்டத்தின் அனைத்து நிலை நிர்வாகிகள், பகுதி மற்றும் வட்டங்களின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
✍🏻
இம்ரான் கான்.H,
மாவட்ட செயலாளர்,
மமக தகவல் தொழில்நுட்ப அணி,
வடசென்னை மேற்கு மாவட்டம்.
Date:25/07/2025