04/09/2025
தேவன் விரும்பும் தலைமைத் தன்மைகள்”
(How a Leader Should Be – Biblical Model)
I. தலைவன் தேவனுக்குப் பயப்படுகிறவராக இருக்க வேண்டும்
II. ஞானம் & ஆலோசனை
III. தலைவன் சோதனைகளில் உறுதியாய் நிற்பவன்.
IV. தலைவன் எளிமையுடனும், சுயலாபமின்றியும் இருக்க வேண்டும்
V. தலைவன் மக்களை தேவனிடமே நடத்த வேண்டும்
---
I. தலைவன் தேவனுக்குப் பயப்படுகிறவராக இருக்க வேண்டும்
📖 யாத்திராகமம் (Exodus)18:21 –
ஜனங்கள் எல்லாருக்குள்ளும் தேவனுக்குப் பயந்தவர்களும் உண்மையுள்ளவர்களும் பொருளாசையை வெறுக்கிறவர்களுமான திறமையுள்ள மனிதரைத் தெரிந்துகொண்டு, அவர்களை ஆயிரம்பேருக்கு அதிபதிகளாகவும், நூறுபேருக்கு அதிபதிகளாகவும், பத்துபேருக்கு அதிபதிகளாகவும் ஏற்படுத்தும்.
யாத்திராகமம் 18:21
👉 ஒரு நல்ல தலைமை தேவபயத்திலிருந்தே தொடங்குகிறது.
---
II. ஞானம் & ஆலோசனை
📖 நீதிமொழிகள் 11:14 –
ஆலோசனையில்லாத இடத்தில் ஜனங்கள் விழுந்துபோவார்கள்;: அநேக ஆலோசனைக்காரர் உண்டானால் சுகம் உண்டாகும்.
நீதிமொழிகள் 11:14
“ஆலோசனையின்மையால் ஜனங்கள் விழுந்துபோகிறார்கள்.”
📖 2 நாளாகமம் 1:10
இப்போதும் நான் இந்த ஜனத்திற்கு முன்பாகப் போக்கும் வரத்துமாயிருக்கத்தக்க ஞானத்தையும் அறிவையும் எனக்குத் தந்தருளும், ஏராளமாயிருக்கிற இந்த உம்முடைய ஜனத்தை நியாயம் விசாரிக்கத்தக்கவன் யார் என்றான்.
சாலொமோன் தேவனிடம் ஞானமும் & அறிவும் கேட்டான்.
👉 தலைவன தேவ ஞானத்தின்படி ஆலோசனை தருவான்.
---
III. தலைவன் சோதனைகளில் உறுதியாய் நிற்பவன்.
📖 தானியேல் 6:10 – தடை இருந்தாலும் தானியேல் ஜெபம் செய்வதை விடவில்லை .
தானியேலோவென்றால், அந்தப் பத்திரத்துக்குக் கையெழுத்து வைக்கப்பட்டதென்று அறிந்தபோதிலும், தன் வீட்டுக்குள்ளேபோய், தன் மேல் அறையிலே எருசலேமுக்கு நேராகப் பலகணிகள் திறந்திருக்க, அங்கே தான் முன் செய்துவந்தபடியே, தினம் மூன்று வேளையும் தன் தேவனுக்கு முன்பாக முழங்காற்படியிட்டு ஜெபம்பண்ணி, ஸ்தோத்திரம் செலுத்தினான்.
தானியேல் 6:10
📖 யாக்கோபு 1:12 – சோதனையில் நிலைத்திருப்பவன் பாக்கியவான்.
சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான். அவன் உத்தமனென்று விளங்கினபின்பு கர்த்தர் தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணின ஜீவகிரீடத்தைப் பெறுவான்.
யாக்கோபு 1:12
---
IV. தலைவன் எளிமையுடனும், சுயலாபமின்றியும் இருக்க வேண்டும்
📖 1 சமுவேல் 15:17 – “நீ சிறியவனாய் இருந்தபோது தேவன் உன்னை ராஜாவாக்கினார்.”
அப்பொழுது சாமுவேல்: நீர் உம்முடைய பார்வைக்குச் சிறியவராயிருந்தபோது அல்லவோ இஸ்ரவேல் கோத்திரங்களுக்குத் தலைவரானீர். கர்த்தர் உம்மை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம் பண்ணுவித்தாரே.
1 சாமுவேல் 15:17
📖 பிலிப்பியர் 2:3-5 – “சுயலாபத்தினாலும் வீண்பெருமையினாலாவது செய்யாதீர்கள்.”
ஒன்றையும் வாதினாலாவது, வீண்பெருமையினாலாவது செய்யாமல், மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள்.
பிலிப்பியர் 2:3
அவனவன் தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவைகளையும் நோக்குவானாக.
பிலிப்பியர் 2:4
கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது.
பிலிப்பியர் 2:5
உண்மையான தலைமைக்கு அழகு பணிவும் எளிமையும் தான்.
V. தலைவன் மக்களை தேவனிடமே நடத்த வேண்டும்
📖 1 கொரிந்தியர் 11:1 – “நான் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறதுபோல நீங்கள் என்னைப் பின்பற்றுங்கள்.”
📖 எபிரெயர் 13:17 – “உங்கள் தலைவர்களுக்கு கீழ்ப்படியுங்கள்; உங்களை நடத்துகிறவர்கள், உங்கள் ஆத்துமாக்களுக்காக உத்தரவாதம்பண்ணுகிறவர்களாய் விழித்திருக்கிறவர்களானபடியால், அவர்கள் துக்கத்தோடே அல்ல, சந்தோஷத்தோடே அதைச் செய்யும்படி, அவர்களுக்குக் கீழ்ப்படிந்து அடங்குங்கள். அவர்கள் துக்கத்தோடே அப்படிச் செய்தால் பிரயோஜனமாயிருக்கமாட்டாதே.
எபிரேயர் 13:17
உண்மையான தலைவன் மக்களைத் தன்னிடமல்ல, தேவனிடமே நடத்துகிறவன்.
✝️ முடிவுரை
தேவபயம் → அடிப்படை
ஞானம் → ஆலோசனை தரும் தன்மை
விசுவாசம் → சோதனையில் உறுதியாக நிற்பது.
பணிவு → சுயலாபமின்றி
எளிமையாக இருப்பது.
மேய்ப்பன் மனம் → மக்களை தேவனிடமே நடத்துவது.
இயேசு கிறிஸ்துவே சிறந்த தலைவர். அவருடைய வழியைப் பின்பற்றினால், நம்முடைய தலைமை ஆசீர்வாதமாகவும், சாட்சியாகவும் இருக்கும்.