25/05/2025
Thank you very much Siva Vathani Prabaharan🙏♥️
தாயகத்தில் ஈழத்துப் பெண் இயக்குனர் ஈழவாணியின் இயக்கத்தில் 50 க்கும் மேற்பட்ட ஈழத்துக் கலைஞர்களின் நடிப்பில், கனடாவில் வாழும் பெண் தயாரிப்பாளரான சாரா உள்ளிட்ட நம்மவர் தயாரிப்பில் உருவான ஈழத்துத் திரைப்படம் “மூக்குத்திப் பூ” இன்று நம்மவர் திரையரங்கான Woodside Cinema வில் திரையிடப்பட்டது!
பலரின் பாராட்டைப் பெற்ற சிறந்த கதை, இயக்கம், கதைத் தொகுப்பு, ஒலி, ஒளிப்பதிவு, பாத்திரப் பொருத்தம், கதையோடு ஒன்றிய நடிப்பு என நல்லதொரு படைப்பாக மூக்குத்திப் பூ இருந்தது!
இத்திரைப்பட உருவாக்கத்தில் பங்காற்றிய அனைவரிற்கும் இயக்குனரிற்கும் பாராட்டுக்கள்!
கொஞ்சம் சிரிக்கவும், நிறையவே சிந்திக்கவும் காலத்திற்குத் தேவையான சிறப்பான விழிப்புணர்வூட்டும் இத்திரைப்படம் சமகால சமூக அவலங்களை அடையாளம் காட்டியுள்ளமைக்கும் பாராட்டுக்கள்!
எமது கலைஞர்களை நாம் தட்டிக் கொடுத்து, ஊக்குவித்து எம்மவரின் திரைத்துறையையும் வளர்ப்பது எம் கடமைகளில் ஒன்று!
வாழ்த்துகள் அனைவரிற்கும்!
குறிப்பாகத் தடைகளைத் தாண்டி உயரும் சாதனைப் பெண்களான சாரா, ஈழ வாணி இருவரிற்கும்!