
29/03/2025
சென்னையில் மணிச்சுடர் 40-வது ஆண்டு மற்றும் சிராஜுல் மில்லத் நூற்றாண்டு மணிச்சுடர் ரமளான் மலர் வெளியீடு
கே.நவாஸ் கனி எம்.பி. வெளியிட தொழிலதிபர் அப்துல் காதர் பெற்றுக் கொண்டார்
சென்னை, மார்ச். 29-
மணிச்சுடர் தமிழ் நாளிதழ் சார்பில் வருடந்தோறும் ரமளான் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு தலைப்புகளிலும் மலராக வெளியிட்டு வருகிறோம். அந்த வகையில் இந்த வருடத்தின் ரமளான் மலராக சிராஜுல் மில்லத் நூற்றாண்டு விழா - மணிச்சுடர் நாளிதழ் 40-ம் ஆண்டு சிறப்பு ரமளான் மலர் 2025 வெளியிட முடிவு செய்யப்பட்டது. இச் சிறப்பு மலர் சிறந்தோங்கும் மலராக திகழ்வதற்கு வேலூர் எழுத்துச் சிற்பி வி.எஸ். முஹம்மது பஸ்லுல்லாஹ், மணிச்சுடர் நாளிதழ் மூத்த ஊடகவி யலாளர் திருச்சி எம்.கே. ஷாகுல் ஹமீது ஆகியோரிடம் பொறுப்பு அளிக்கப்பட்டது. இவர்களுக்கு துணையாகவும் இணையாகவும் தூர்தர்ஷன் டிடி தமிழ் செய்திப் பிரிவு ஆசிரியர் எஸ்.ஏ. அப்துல் அஜீஸ் ஆகியோர் இந்த மலரை வெளியிடுவதற்காக ஈடுபட்டனர்.
தலைவர் பேராசிரியரிடம் மணிச்சுடர் ரமளான் மலரை பொறுப்பாசிரியர் எம்.கே. ஷாகுல் ஹமீது வழங்கி வாழ்த்து பெற்றார்.
பன்மொழிப் புலவர் எம். அப்துல் லத்தீப் நினைவாக ஏழை - எளிய மக்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கும் விழா சென்னை இராயபுரம் ஃபாரூக் மஹாலில் இன்று (29-03-2025) சனிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் ரமளான் சிறப்பு மலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு மணிச்சுடர் ஆசிரியரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமை வகித்தார்.
மணிச்சுடர் நாளிதழின் வெளியீட்டாளரும், மாநில பொதுச் செயலாளருமான கே.ஏ.எம். முஹம்மது அபூபக் கர், முனைவர் சேமு.மு. முகமது அலி, மாநில சிறுபான்மை நல ஆணைய துணைத் தலைவர் இறையன்பன் குத்தூஸ், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த மலரை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத்தலைவரும், தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவருமான கே.நவாஸ்கனி எம்.பி. வெளியிட முதல் பிரதியை ஜமால் முகமது கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் சென்னை மாவட்ட செயலாளர் மற்றும் தொழிலதிபருமான டாக்டர் பி. அப்துல் காதர் பெற்றுக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் மலர் பொறுப்பேற்ற பொறுப்பாசிரியர்கள் வேலூர் வி.எஸ். முஹம்மது பஸ்லுல்லாஹ், மணிச்சுடர் மூத்த ஊடகவியலாளர் திருச்சி எம்.கே. ஷாகுல் ஹமீது, தூர்தர்ஷன் டிடி தமிழ் செய்திப் பிரிவு ஆசிரியர் எஸ்.ஏ. அப்துல் அஜீஸ், மலரை வடிவமைத்த ஆர். பால் சார்லஸ் ஆகியோருக்கு பொன்னாடை போர்த்தி பொற்கிழி வழங்கப்பட்டது.
இவ்விழாவில் மாநில தலைமைநிலையச் செயலாளர்
கே.எம். நிஜாமுதீன், மாநில துணைச்செயலாளர் ஆப்பனூர் ஜபருல்லாஹ், சென்னை வடக்கு மாவட்டத் தலைவர் கமுதி சம்சுதீன், சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் கோதர்ஷா, மாநில யூத் லீக் துணைத்தலைவர் பழவேற்காடு அன்சாரி, சென்னை மாநகர மீலாது கமிட்டி கொள்கைபரப்புச் செயலாளர் மௌலவி எஸ். ஷாகுல் ஹமீது ரஹ்மானி, லஹ்ரியா பெண்கள் அரபிக் கல்லூரி முதல்வர் நூருதீன் சக்காபி, துறைமுகம் கனி, எஸ்.டி.யூ. மாநில செயலாளர் முஹம்மது ஷெரீப், மணிச்சுடர் தலைமை நிருபர் ஆர். நி.ஆர். கண்ணன், எஸ்.டி.யூ. மாவட்டச் செயலாளர் முஹம்மது ரஃபி, மணிச்சுடர் அலுவலக உதவியாளர் முஹம்மது ஜலால் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் நிர்வாகிகள், தனவந்தர்கள் பலர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீனிடம் ரமளான் மலரை பெற்றுக் கொண்டார்கள்.