Arasiyalin Puthiya Pathai

Arasiyalin Puthiya Pathai அரசியலின் புதிய பாதை மாதமிருமுறை இதழ்..

26/09/2022

"இங்குள்ள சில நச்சு அரசியல் சக்திகளுக்கு அரசியல் அறம், மானம், நேர்மை துளியும் இல்லாத நிலையில் அவர்களுடன் நாம் தொடர்ந்து போராடி வரவேண்டிய நிலை உள்ளது!" - தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.

இனி யாரும் பசியுடன் இருக்கக்கூடாது என்று வெண்டிங் இயந்திரங்களை நிறுவிய துபாய் அரசு: சமூக வலைதளத்தில் குவியும் பாராட்டுக்...
21/09/2022

இனி யாரும் பசியுடன் இருக்கக்கூடாது என்று வெண்டிங் இயந்திரங்களை நிறுவிய துபாய் அரசு: சமூக வலைதளத்தில் குவியும் பாராட்டுக்கள்!

யாரும் பசியுடன் இருக்கக்கூடாது என்ற நோக்கத்தில் துபாய் முழுவதும் பல்வேறு இடங்களில் இலவச ரொட்டி அளிக்கும் வெண்டிங் இயந்திரங்களை நிறுவியுள்ளது அந்நாட்டு அரசு. துபாயில் பணிபுரிவோர் பலர் மூன்று வேளையும் சாப்பிடாமல் பணிபுரிந்து வருவதால், அந்நாட்டு பிரதமர் ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தோம் இந்த திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். துபாய் அரசின் இச்செயலுக்கு, சமூக வலைதளத்தில் பலரும் பாராட்டி வருகின்றனர்.

உத்தரபிரதேசத்தின் சட்டம் ஒழுங்கு இந்தியா மட்டுமின்றி உலகத்திற்கே எடுத்துக்காட்டாக திகழ்கிறது என்று, உ.பி. முதல்வர் யோகி ...
20/09/2022

உத்தரபிரதேசத்தின் சட்டம் ஒழுங்கு இந்தியா மட்டுமின்றி உலகத்திற்கே எடுத்துக்காட்டாக திகழ்கிறது என்று, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறிய நிலையில்,

தேசிய குற்றவியல் ஆவண காப்பகத்தின் அறிக்கையின் படி பெண்களுக்கு எதிரான குற்றப்பட்டியலில் 59.1 சதவீதத்துடன் உத்தரப்பிரதேசம் நாட்டிலேயே முதலிடத்தில் இருக்கிறது. இது தேசிய சராசரியான 26.6 சதவீதத்தைவிட இருமடங்கு அதிகமாகும். இந்த தகவலை சமூக வலைதளத்தில் அதிகமானோர் பகிர்ந்து, யோகி அரசை நோக்கி கேள்வி எழுப்பி வருகின்றனர்.

18, 196 குஜராத் கலவரம் - நினைவுகள்!!!செப்டம்பர் 18, 1969 அன்று, குஜராத்தி முஸ்லிம்கள் மிகப்பெரிய இனப்படுகொலையை சந்தித்தன...
19/09/2022

18, 196 குஜராத் கலவரம் - நினைவுகள்!!!

செப்டம்பர் 18, 1969 அன்று, குஜராத்தி முஸ்லிம்கள் மிகப்பெரிய இனப்படுகொலையை சந்தித்தனர். இந்தியப் பிரிவினைக்குப் பிறகு குஜராத்தி முஸ்லிம்கள் மிகக் கொடிய முஸ்லிம் எதிர்ப்பு வன்முறையை எதிர்கொள்ள நேரிட்டது. 1969 செப்டம்பர் மற்றும் அக்டோபர் ஆகிய இரண்டு மாதங்களுக்கு குஜராத்தில் உள்ள 16 மாவட்டம் வகுப்புவாத வன்முறையால் பாதிக்கப்பட்டது.

1. 18, 1969 அன்று தொடங்கிய கலவரம் அக்டோபர் மாதம் வரை நீடித்தது.

2. இரண்டு மாதங்கள் நீடித்த கலவரம் 16 மாவட்டங்களுக்கு பரவியது.

3. இரண்டு மாதங்கள் நடந்த கலவரத்தில் மட்டும் 660 முஸ்லிம்கள் உயிரிழந்தனர். 1074 பேர் படுகாயமடைந்தனர். 48,000 பேர் தங்களுடைய சொத்துக்களை இழந்து நிர்கதியற்ற நிலைக்கு ஆளாயினர்.

4. சுதந்திர இந்தியாவில் பெரும்பாலான இழப்புகளை முஸ்லிம் சமூகம் சந்தித்தது இந்த கலவரத்தின் மூலம்.

5. இந்த கலவரத்தில் இந்து மகா சபா, ஆர்.எஸ்.எஸ்., ஜன் சங் உள்ளிட்ட அமைப்புகள் தீவிரமாக இயங்கின. முஸ்லிம்களை அழித்தொழிப்பதில் தீவிரம் காட்டின.

6. குஜராத் மாநிலம் 1969 கலவரத்தை தொடர்ந்து, முஸ்லிம் அழித்தொழிப்பு நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபடுவதற்கு வழிவகுத்தது.

2021 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி இந்திய சிறைகளில் உள்ள கைதிகளில் கிட்டத்தட்ட 30% முஸ்லிம்களாக உள்ளனர்: சமூகத்தின் மக்க...
19/09/2022

2021 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி இந்திய சிறைகளில் உள்ள கைதிகளில் கிட்டத்தட்ட 30% முஸ்லிம்களாக உள்ளனர்:

சமூகத்தின் மக்கள்தொகை சதவீதம் 14.2% மட்டுமே என கணக்கெடுப்பு கூறுகிறது. (2011 வரை).

இந்தியாவில் உள்ள கைதிகளில் நான்கு வெவ்வேறு வகையான கைதிகள் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன: குற்றவாளிகள் (குற்றம் நிரூபிக்கப்பட்டு நீதிமன்றத்தால் தண்டனை பெற்றவர்கள்), விசாரணைக் கைதிகள் (தற்போது சட்ட நடவடிக்கைகளில் உள்ளவர்கள்), தடுப்புக் காவலில் உள்ளவர்கள் (சட்டப்பூர்வமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள். ), மற்றும் இந்த மூன்று வகைகளில் எதிலும் அடங்காதவர்கள், இவர்கள் மொத்த சிறையில் உள்ளவர்களில் ஒரு சிறிய பகுதியினர் தான்.

நாட்டில் சிறுபான்மையினரான முஸ்லிம்கள் மாநிலத்தின் மக்கள் தொகையில் 34% சதவீதம் உள்ளனர், அசாமின் மரண தண்டனை கைதிகளில் 61% பேர் உள்ளனர். அவர்களில் விசாரணைக்கு காத்திருப்பவர்களில் 49% முஸ்லிம்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் விகிதாச்சாரத்தில் அதிக முஸ்லிம் கைதிகள் உள்ள மாநிலங்களில், குஜராத், உ.பி., ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகும். மக்கள் தொகையுடன் ஒப்பிடும்போது சிறையில் உள்ள முஸ்லிம் கைதிகளின் எண்ணிக்கை அதிக விகிதத்தைக் கொண்டிருக்கிறது.

ஜம்மு காஷ்மீர், உ.பி., குஜராத், ஹரியானா, தமிழ்நாடு மற்றும் நாகாலாந்து ஆகிய மாநிலங்களில், ஒட்டுமொத்தமாக அதிக எண்ணிக்கையிலான முஸ்லிம் கைதிகள் சிறையில் உள்ளனர். குஜராத், உ.பி., ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர், இவற்றில் முஸ்லீம் மக்கள் தொகையை விட சிறையில் இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. இந்த தகவலை சிறைத்துறையின் அதிகாரப்பூர் இணையதளம் கூறுகிறது.

அரசியலின் புதிய பாதைஇந்த மாதம் செப்டம்பர் 16 -30 / 2022 இதழில்....-----------------------------👉சென்னையை குலுங்க வைத்த S...
19/09/2022

அரசியலின் புதிய பாதை
இந்த மாதம் செப்டம்பர் 16 -30 / 2022 இதழில்....
-----------------------------
👉சென்னையை குலுங்க வைத்த SDPI கட்சியின் கருஞ்சட்டைப் பேரணி? புகைப்படங்களுடன் விரிவான செய்தி...

👉சித்தீக் காப்பனுக்கு பிணை? நீதிக்கு விடுதலை....

👉 உயர் கல்வியில் நீட் தேர்வை விட, ஆபத்தான மற்றொரு வரைவுத்திட்டம்?

👉 லோன் ஆப்-கள் வழியாக காத்திருக்கும் ஆப்புகள்?

இன்னும் பல்வேறு தகவல்களுடன்...
--------------------------
அரசியலின் புதிய பாதை மாதமிருமுறை இதழ்...
(ஒடுக்கப்பட்டோரின் அரசியல் எழுச்சிக்காக...)
தொடர்புக்கு - 4/7, இப்ராஹிம் சாஹிப் தெரு, மண்ணடி, சென்னை - 01, தொலைபேசி - 044 2523 0126

இஷ்ரத் ஜஹான் என்கவுண்டர் போலியானது என விசாரணை அறிக்கை அளித்த ஐ.பி.எஸ். அதிகாரி சதீஷ் வர்மா ஒய்வுக்கு ஒரு மாதம் முன்பாக ப...
14/09/2022

இஷ்ரத் ஜஹான் என்கவுண்டர் போலியானது என விசாரணை அறிக்கை அளித்த ஐ.பி.எஸ். அதிகாரி சதீஷ் வர்மா ஒய்வுக்கு ஒரு மாதம் முன்பாக பணி நீக்கம்! - உள்துறை அமைச்சகம் நடவடிக்கை

புதுடெல்லி: 2004ல் இஷ்ரத் ஜஹான் என்கவுன்ட்டர் வழக்கை விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழுவில் (எஸ்ஐடி) இருந்த ஐபிஎஸ் அதிகாரி சதீஷ் வர்மா ஓய்வு பெறுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு ஆகஸ்ட் 30 அன்று உள்துறை அமைச்சகத்தால் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

15 ஜூன் 2004 அன்று, மகாராஷ்டிராவைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி இஷ்ரத் ஜஹான் மற்றும் மூன்று பேர் அகமதாபாத்தின் புறநகர்ப் பகுதியில் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். அந்த நால்வரும் அப்போதைய முதல்வர் நரேந்திர மோடியைக் கொல்லத் திட்டமிட்டிருந்த லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் என்று போலீஸார் கூறினர். ஆனால், இந்த என்கவுன்டர் குறித்து விசாரிக்க குஜராத் உயர்நீதிமன்றம் எஸ்ஐடியை அமைத்தது.

மூன்று உறுப்பினர்களில் ஒருவராக வர்மாவைக் கொண்ட எஸ்ஐடி, 2011-ம் ஆண்டு தனது அறிக்கையில் இஷ்ரத் ஜஹான் என்கவுன்டர் ‘போலி’ என்று கூறியிருந்தது. பின்னர், 2014ல், வர்மா குஜராத்திலிருந்து மாற்றப்பட்டார். அவர் சிஆர்பிஎஃப் இன்ஸ்பெக்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டு திரிபுராவில் நியமிக்கப்பட்டார்.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, மேகாலயாவின் ஷில்லாங்கில் உள்ள நார்த் ஈஸ்டர்ன் எலக்ட்ரிக் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் (NEEPCO) இன் தலைமை விஜிலென்ஸ் அதிகாரியாக (CVO) நியமிக்கப்பட்டார்.

இஷ்ரத் ஜஹான் வழக்கு குறித்து ஊடகங்களுக்கு பேச நீப்கோ வளாகத்தை பயன்படுத்தியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அவருக்கு எதிராக உள்ளன.

இந்நிலையில் தான் பணியிலிருந்து ஒய்வு பெறுவதற்கு ஒரு மாதம் முன்பாக வர்மா பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பணிநீக்கம் செய்யப்பட்ட உத்தரவை எதிர்த்து வர்மா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

குஜராத் கலவரத்தின் போது காவல்துறை கைகள் கட்டப்பட்டதாக கூறி பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்த ஐ.பி.எஸ். அதிகாரி சஞ்சீவ்பட் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது இங்கு கவனிக்கத்தக்கது.

இன்று சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து முஸ்லீம் ஆயுள் சிறைவாசிகள் மற்றும் ஆறு தமிழர்களை உடனே விடுதலை செய்ய வலியு...
08/09/2022

இன்று சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து முஸ்லீம் ஆயுள் சிறைவாசிகள் மற்றும் ஆறு தமிழர்களை உடனே விடுதலை செய்ய வலியுறுத்தி எஸ்டிபிஐ கட்சி சார்பில் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது.

ஆயுள் சிறைவாசிகள் விடுதலை கோரிக்கை... என்ன செய்யப்போகிறது தமிழக அரசு?இரா.செந்தில் கரிகாலன்(பில்கிஸ் பானு வழக்கில் சிறையி...
07/09/2022

ஆயுள் சிறைவாசிகள் விடுதலை கோரிக்கை... என்ன செய்யப்போகிறது தமிழக அரசு?

இரா.செந்தில் கரிகாலன்

(பில்கிஸ் பானு வழக்கில் சிறையிலிருக்கும் குற்றவாளிகளையே பா.ஜ.க அரசு விடுதலை செய்துவிட்டது. ஆனால், குற்றமே செய்யாத பலர் விசாரணைக் கைதிகளாக நீண்ட காலமாகச் சிறையில் இருக்கிறார்கள்.)

“10 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகச் சிறைகளில் வாடும் சிறைவாசிகளை, அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு சாதி, மத, வழக்கு பேதமின்றி முன் விடுதலை செய்ய வேண்டும்’’ என்கிற கோரிக்கை வலுத்துவருகிறது. எஸ்.டி.பி.ஐ., மனிதநேய ஜனநாயக் கட்சி, நாம் தமிழர் உள்ளிட்ட அமைப்புகள் இந்தக் கோரிக்கையை முன்வைத்து தொடர்ச்சியான போராட்டங்களையும் அறிவித்துள்ளன.

நீண்டகாலம் சிறைவாசம் அனுபவித்துவரும் கைதிகளில் 700 பேரை நல்லெண்ண அடிப்படையில் விடுவிக்கவிருப்பதாக, கடந்த ஆண்டு அண்ணா பிறந்தநாளையொட்டி சட்டப்பேரவையில் அறிவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அடுத்த அண்ணா பிறந்தநாளே (செப்.15) வந்துவிட்டது. எதுவும் நடக்கவில்லை. காரணம், கடந்த ஆண்டு முதல்வரின் அறிவிப்புக்குப் பிறகு. `முன் விடுதலை’ சலுகையைப் பெறுவதற்குத் தகுதியுள்ள சிறைவாசிகள் குறித்த அரசாணையும் வெளியிடப்பட்டது. அதில், பயங்கரவாதம், மத மோதல், பாலியல் வன்கொடுமை, சாதி மோதல், ஊழல் உள்ளிட்ட 17 குற்றங்களில் தண்டனை பெற்றவர்களை விடுதலை செய்வதற்கு வாய்ப்பில்லை என அறிவிக்கப்பட்டது. அந்தவகையில், பல ஆண்டுகளாகச் சிறையிலிருக்கும் 37 இஸ்லாமியச் சிறைவாசிகள், ராஜீவ் கொலை வழக்கில் சிறையிலிருக்கும் ஏழு பேர் உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட வில்லை. பேரறிவாளன் மட்டும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து விடுதலை ஆகியிருக்கிறார்.

இது தொடர்பாக, வரும் செப்டம்பர் 10-ம் தேதி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முடிவுசெய்திருக்கிறது மனிதநேய ஜனநாயகக் கட்சி. அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரியிடம் பேசினோம். ``ஆயுள் தண்டனை என்பது 14 ஆண்டுகள் என்பது பொதுவான வரையறை. ஆனால், அ.தி.மு.க ஆட்சியில், தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கில் தண்டனை பெற்றவர்களும், தி.மு.க ஆட்சியில் மதுரை லீலாவதி படுகொலையில் தண்டனை பெற்றவர்களும் 14 ஆண்டுகளுக்கு முன்பாகவே விடுதலை செய்யப்பட்டனர். காந்தியைப் படுகொலை செய்த கோட்சேகூட முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். சமீபத்தில் சுதந்திர தின பவளவிழா ஆண்டை முன்னிட்டு, குஜராத்தில் பில்கிஸ் பானு கற்பழிப்பு வழக்கில் சிறையிலிருந்த கலவரக்காரர்களையும் விடுதலை செய்திருக்கிறார்கள். ஆயுதமேந்திப் போராடிய நக்சலைட்டுகளை தெலங்கானா, மேற்கு வங்க அரசாங்கங்கள் விடுதலை செய்திருக்கின்றன.

அதேபோல, மாநில அரசுக்கு உரிய சிறப்பு அதிகாரமான, 161-ஐ பயன்படுத்தி தமிழ்நாட்டில் நீண்ட நாள்களாக சிறையிலிருக்கும் 37 இஸ்லாமியச் சிறைவாசிகள், சங் பரிவாரங்களைச் சேர்ந்த நான்கு பேர், வீரப்பன் தேடுதல் வேட்டையில் கைதுசெய்யப் பட்டவர்கள், தென்மாவட்டங்களில் சாதிக் கலவரங்களால் பாதிக்கப்பட்டு சிறையிலிருப்பவர்களை சாதி, மத வழக்கு பேதமில்லாமல் விடுதலை செய்ய வேண்டும் என்று கடந்த ஏழு ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம். சட்டமன்றத்திலும் இது குறித்துப் பலமுறை பேசியிருக்கிறேன். ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்வதாக, தேர்தல் நேரத்தில் கோயம்புத்தூருக்கு வந்த முதல்வர் வாக்குறுதி கொடுத்திருந்தார். அதை நிறைவேற்றச் சொல்லித்தான் போராட்டம் அறிவித்திருக்கிறோம் என்றார்.

இதே கோரிக்கைக்காக எஸ்.டி.பி.ஐ. கட்சியும் சட்டமன்றத்தை நோக்கி கருஞ்சட்டைப் பேரணி நடத்தப்போவதாக அறிவித்திருக்கிறது. இதுக்குறித்து அக்கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் பேசும்போது, ``700 ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்வது தொடர்பாக ஆய்வுசெய்ய நியமிக்கப்பட்ட ஆதிநாதன் குழு, என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது என்று எந்தத் தகவலும் இல்லை. குறிப்பிட்டவர்களை மட்டும் விடுதலை செய்யாமல் பாரபட்சம் காட்டும் தமிழக அரசின் அரசாணை ஆபத்தானது. பொது மன்னிப்பின் வழியாக ஒருவரை விடுதலை செய்யும்போது அவர்களின் தண்டனைக் காலம், குடும்பச் சூழல், அவர்கள் அடைந்த துயரங்கள், சிறையில் அவர்களின் நடத்தை ஆகியவற்றைத்தான் பார்க்க வேண்டுமே தவிர, அவர்கள் என்ன குற்றம் செய்தார்கள் என்று பார்க்கக் கூடாது. 85 வயதுக்கு மேற்பட்ட இஸ்லாமியச் சிறைவாசிகள், தங்களின் மரணமாவது வீட்டில் நடக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். முந்தைய அரசு நடந்து கொண்டதைப்போலவே தி.மு.க அரசும் நடந்துகொள்வது அநீதியானது. 161-ன்படி விடுதலை செய்ய மாநில அரசுக்கு உரிமை இருக்கிறது, ஆளுநர் அதில் தலையிட முடியாது என உச்ச நீதிமன்றமே பலமுறை அறிவித்த பிறகும் தமிழக அரசு தாமதம் செய்ய என்ன காரணம் என்று கேள்வி எழுப்புகிறார்.

இந்த விடுதலை நடந்தால் உடனே அதை பா.ஜ.க அரசியலாக்கும் என்பதாலேயே தி.மு.க அரசு தயங்குவ தாகக் கூறுகிறது நாம் தமிழர் கட்சி. இதுகுறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் பாக்கியராசனிடம் கேட்டபோது, ``பில்கிஸ் பானு வழக்கில் சிறையிலிருக்கும் குற்றவாளிகளையே பா.ஜ.க அரசு விடுதலை செய்துவிட்டது. ஆனால், குற்றமே செய்யாத பலர் விசாரணைக் கைதிகளாக நீண்ட காலமாகச் சிறையில் இருக்கிறார்கள். `அவர்களை விடுவிப்போம்’ என்று தேர்தல் நேரத்தில் வாக்குறுதி கொடுத்து விட்டு, தற்போது பா.ஜ.க-வுக்கு பயந்து விடுதலை செய்யாமல் இருப்பது சிறுபான்மை இன மக்களுக்குச் செய்யும் துரோகம்” என்றார்.

தி.மு.க-வின் செய்தித் தொடர்பு இணைச் செயலாளரும், வழக்கறிஞருமான சிவ.ஜெயராஜிடம் பேசினோம். ``இந்தக் கோரிக்கைகளை அரசு கனிவோடு பரிசீலிக்கும். அதேவேளையில், உச்ச நீதிமன்றம் சில வழிகாட்டு விதிமுறைகளைப் பல வழக்குகளில் சுட்டிக்காட்டியிருக்கிறது. அதையெல்லாம் கணக்கில் கொள்வதோடு, தமிழக உள்துறை வகுத்துள்ள விதிமுறைகளையும் கருத்தில்கொண்டுதான் ஒரு முடிவை எடுக்க முடியும். ஆதிநாதன் குழுவின் பரிந்துரைக்காக அரசு காத்திருக்கிறது. நிச்சயம் அதை நிறைவேற்றுவோம்’’ என்றார்.

சட்டத்தடை இல்லை. மனத்தடையை விலக்குமா அரசு?!
நன்றி: ஜூனியர் விகடன் வார இதழ்

உ.பி. சிறையில் சிகிச்சை மறுக்கப்பட்டு வரும் அத்தீக்குர் ரஹ்மான்! உபி ஹத்ராஸில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு...
06/09/2022

உ.பி. சிறையில் சிகிச்சை மறுக்கப்பட்டு வரும் அத்தீக்குர் ரஹ்மான்!

உபி ஹத்ராஸில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட பெண்ணின் பெற்றோரை சந்திக்க சென்ற பத்திரிகையாளர் சித்தீக் காப்பன், கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தலைவர் அத்தீக்குர்ரஹ்மான் உட்பட நான்கு உ.பி. காவல்துறை அநியாயமான முறையில் கைது செய்து சிறையில் வைத்துள்ளது. அவர்களுக்கு ஜாமீன் வழங்குவதில் கூட அரசும், நீதிமன்றமும் பாரபட்சம் காட்டி வரும் நிலையில், இதில் அதிக்குர்ரஹ்மான் மிகவும் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு முறையான சிகிச்சை அளிப்பதில் கூட உ.பி. அரசு கடுமையான போக்கை கடைப்பிடித்து வருகிறது.

உடல்நிலை சரியில்லாமல் எய்ம்ஸ் மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், அவருக்கு முறையான கிச்சை அளிக்கப்படாமல் அவரை மீண்டும் உ.பி. சிறையில் அடைத்துள்ளது உ.பி. அரசு. அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்தும், சிகிச்சை பலனின்றி மீண்டும் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். தீவிர இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ள அதீக், உடலின் ஒரு பகுதி முற்றிலும் செயலிழந்துள்ளார். வலது கை, கால் அசைவதில்லை. அவருடைய மனைவி பிள்ளைகளை கூட அடையாளம் தெரியாத நிலையில் இருக்கும் அவருக்கு, உ.பி.அரசு முறையான சிகிச்சை அளிக்க மறுத்து வருகிறது.

உடல்நிலை மோசமடைந்தது. சிகிச்சை அளிக்க மறுத்து இறந்த ஸ்டான் சுவாமியின் அனுபவம் நம் முன் உள்ளது. யோகி அரசு தங்களுக்கு எதிராக பேசுபவர்களை மனிதாபிமானம் இல்லாமல் கொன்று வருகிறது.இதற்கெதிராக சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது. உ.பி. அரசு அவருக்கு உரிய சிக்சை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

நீதி கிடைக்கும் வரை போராடுவோம்!நான் ஸ்வேதா சஞ்சீவ் பட்,5 செப்டம்பர் 2018 அன்று, இந்த ஆட்சி சஞ்சீவை குரலை அமைதிப்படுத்த வ...
05/09/2022

நீதி கிடைக்கும் வரை போராடுவோம்!

நான் ஸ்வேதா சஞ்சீவ் பட்,

5 செப்டம்பர் 2018 அன்று, இந்த ஆட்சி சஞ்சீவை குரலை அமைதிப்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் அவரை அழைத்துச் சென்றது.... அதன்பிறகு, அவரது உறுதியை உடைக்கவும், அவரை இழிவுபடுத்தவும், அவருடைய குரலை அமைதிப்படுத்தவும் எந்த எல்லையும் செல்ல இந்த அரசுதயங்கவில்லை.
சஞ்சீவ் பொய்யான குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டு, தவறாகவும் பழிவாங்கும் விதமாகவும் சிறையில் அடைக்கப்பட்டு இன்றோடு 4 ஆண்டுகள் நிறைவடைகிறது... அரசியல் உள்நோக்கம் கொண்ட ஒரு துளியும் ஆதாரம் இல்லாமல் குற்றவாளி என அறிவிக்கப்பட்டது.

மற்றவர்களுக்கு வேண்டுமென்றால் வெறும் 4 வருடங்கள் என கடந்து போகலாம். ஆனால் நம்மைப் பொறுத்தவரையில் 1462 நாட்கள், 35,088 மணிநேரம் இந்த கொடிய ஆட்சிக்கு எதிராக இரவு பகலாக போராடி வருகிறோம்.

எங்கள் குடும்பம் பிரிந்து 4 வருடங்கள் ஆகிவிட்டன, 4 ஒளியற்ற தீபாவளிகள், 4 இருண்ட புத்தாண்டுகள், 16 பிறந்தநாள்கள் நீதி வழங்கப்படாத மற்றொரு வருடம் கடந்துவிட்டதை நினைவூட்டுவதாக மட்டுமே உள்ளன. 2 பட்ட்டப்படிப்புகளை கூட கொண்டாட முடியவில்லை. அர்த்தமற்றதாகவே உணாகிறோம். சஞ்சீவைக் குறித்த எண்ணற்ற காணங்கள் ஒவ்வொரு நாளும் ஓடிக்கொண்டே இருக்கின்றன.

சஞ்சீவ் சொல்வது போல், "இது இறுதிவரையான போராட்டம்", நீதி கிடைக்கும் வரை போராடுவோம்.
இன்றுடன் 4 ஆண்டுகள் ஆகிறது...

அதே சமயம் சஞ்சீவ் நிலைகுயாமல், வளைந்து கொடுக்காமல், குனிந்து நிற்காமல்... தன் உள்ளத்திலும் உறுதியிலும் எப்போதும் வலிமையாக இருக்கிறார்.. இந்த பாசிச ஆட்சிக்கு எதிராக நீதிக்கான எங்கள் போராட்டம் தொடர்கிறது. சஞ்சீவ் பட்டுக்கு நீதி கிடைக்கும் வரை போராடுவோம் என்று, அவருடைய மனைவி ஸ்வேதா பட் தனது முகநூல் பக்கத்தில் கூறியுள்ளார்.

செப்டம்பர் 5, ஆசிரியர் தினம்!கற்றுத்தரும் ஒவ்வொருவரும் ஆசிரியரே!மாணவர்களுக்கு கல்வியோடு சேர்த்து ஒழுக்கத்தையும் சமூக சிந...
05/09/2022

செப்டம்பர் 5, ஆசிரியர் தினம்!

கற்றுத்தரும் ஒவ்வொருவரும் ஆசிரியரே!

மாணவர்களுக்கு கல்வியோடு சேர்த்து ஒழுக்கத்தையும் சமூக சிந்தனையும் ஊட்டி வளர்க்கும் ஆசிரியர்களுக்கு, ஆசிரியர் தின வாழ்த்துக்களை அரசியலின் புதிய பாதை தெரிவித்துக் கொள்கிறது. இன்றைய நவீன உலகில் நாம் வாழ்ந்து வரும் தருணத்தில், ஆசிரியர்களாகிய நீங்கள் மாணவர்களுக்கு கல்வியோடு சேர்த்து ஒழுக்கத்தையும் நன்னடத்தையும் சமூக சிந்தனையையும் ஊட்டி வளர்த்து நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் பயனுள்ளவர்களாக தரவேண்டிய பொறுப்பு உங்களுக்கே அதிகம் உள்ளது.

பெற்றவர்களையும் தாண்டி மாணவர்களுடன் அதிக நேரம் செலவிடுவது ஆசிரியர்கள் தான். அந்த ஆசிரியர்களுடைய பணி என்பது அளவிட முடியாத ஒன்றாகும். அத்தகைய பொறுப்பை சுமந்திருக்கும் அனைத்து ஆசிரியர்களும் தன்னுடைய பணியை சிறப்பாக செய்து, நாட்டுனுடைய முன்னேற்றத்திற்கு வித்திடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

அரசியலின் புதிய பாதையின் சார்பாக அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்!

அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்

Address

Chennai
600001

Telephone

+914425230126

Website

Alerts

Be the first to know and let us send you an email when Arasiyalin Puthiya Pathai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Arasiyalin Puthiya Pathai:

Share

Category