
15/01/2025
உள்ளும் தகைமை இனிப் பிறவேறுளவே
உழை மான் மறிக்கன்று
துள்ளும் கரத்தார் அணி பணியின்
சுடர் சூழ் மணிகள் சுரநதி நீர்
தெள்ளும் சடையார் தேவர்கள்
தம்பிராட்டி உடனே சேரமிசைக்
கொள்ளும் சின மால் விடைத் தேவர்
குலம் அன்றோ இச் சுரபி குலம்.
சிறிய பெண்மானின் கன்று துள்ளிடும் திருக் கைகளை உடையவரும், அழகிய பாம்பின் மணிகளைக் கங்கை நீரானது எற்றிட விளங்கிடும் சடையை உடையவருமாய சிவ பெருமான், தேவர்களுக்குத் தலைவியாய பெருமாட்டியுடனே எழுந்தருளும் ஆனேற்றின் குலம் அன்றோ இப்பசுக்கள் குலம்? இவ்வகையில் எண்ணத்தக்க சிறப்புகள் வேறு பிறவும் உளவோ? இல்லை.